| E-paper

 
Advertisement
Ilakkuvanar Thiruvalluvan : கருத்துக்கள் ( 86 )
Ilakkuvanar Thiruvalluvan
Advertisement
Advertisement
பிப்ரவரி
24
2015
அரசியல் மத மாற்றத்திற்கு வழிகோரிய தெரசா சேவை ஆர். எஸ்.எஸ்., தலைவர் பேச்சுக்கு எதிர்ப்பு
ஆர்.எசு.எசு. என்னும் அமைப்பு மதவெறி பிடித்த அமைப்பு என்பதில் ஐயமில்லை. அதற்காக அது சொல்வதெல்லாம் தவறாக இருக்க வேண்டும் என்று இல்லை. உண்மையிலேயே தெரசா முதலான அனைத்துக் கிறித்துவர்களின் தொண்டும் கிறித்துவத்தைப் பரப்புவதை அடிப்படையாகக் கொண்டவையே. அதில் போற்றுவதற்கு ஒன்றும் இல்லை. சமய நோக்கம் இல்லாமல் தொண்டாற்றும் ஒற்றைக் கிறித்துவரைக்கூடக் காண இயலாது. என்றாலும் தொண்டு மூலம் தங்கள் சமயத்தைப் பரப்பும் கிறித்துவர்கள் போல் இந்து சமயத்தினரும் மக்களிடம் தொண்டாற்றித் தம் கருத்தைப் பரப்ப வேண்டும். அயல் சமயங்கள் நம் பண்பாட்டை அழிப்பன. அவற்றில் உள்ள நல்ல கருத்துகளை எடுத்துக் கொள்ளலாம். ஆனால், அதற்காக மதம் மாறவேண்டியதில்லை.   05:08:39 IST
Rate this:
4 members
4 members
22 members
Share this Comment

பிப்ரவரி
11
2015
சிறப்பு கட்டுரைகள் கோடையில் வேண்டாமே போர்வெல் சே.ஜெபாஸ்தியார் பிரிட்டோ ராஜ்
< நிபுணர்களை புறந்தள்ளிவிட்டு உள்ளூர்காரர்களால் நீரோட்டம் பார்த்து,துளைக்கிணறுகள் அமைக்கப்பட்டன. இதனால் பூமிக்கடியில் உள்ள தண்ணீர் உறிஞ்சப்பட்டுவிட்டது. > என்ற தவறான தகவல் தரப்பட்டுள்ளது. மரபுவழியிலான வல்லுநர்களும் சரியாக ஆனால் குறைந்த கட்டணத்தில் நீரோட்டம் பார்க்கின்றனர். நல்ல தகவலைத் தெரிவிக்கும் பொழுது இப்படிப்பட்ட காழ்ப்புணர்ச்சித் தகவல்களை வெளியிடக் கூடாது.   06:10:13 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
9
2015
பொது தமிழகத்தில் 2000 அரசு பள்ளிகள் விரைவில் மூடல்? மாணவர் சேர்க்கை சரிவால் புது நெருக்கடி
தாய்மொழிவழிக்கல்வி வழங்கப்படாமையால் தான் அறிஞர்களும் அறிவியலாளர்களும் பண்பாட்டாளர்களும் உருவாகாமல் கல்வி வணிகர்கள் பெருகி வருகின்றனர்.அம்மா பெயரில் பல நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தும் அரசு, அம்மா - தாய்த்தமிழ் கல்வியகங்களை நடத்தலாம். அரசால் இப்பள்ளிகளை நடத்த இயலாவிடில், தாய்தமிழ்ப்பள்ளி நடத்துவோரிடம் ஒப்படைக்கலாம்.   05:58:19 IST
Rate this:
2 members
0 members
44 members
Share this Comment

டிசம்பர்
19
2014
உலகம் அமெரிக்கா- கியூபா 56 ஆண்டு பகைமை அவுட் அதிபர் ஒபாமா, ரால் காஸ்ட்ரோ முயற்சிகள் வெற்றி
ஈழத்தமிழர்களைக் கொன்றொழிப்பதில் சிங்களத்திற்குத் துணை நின்ற நாடுகளில் அமெரிக்காவும் கியூபாவும் அடக்கம். எனவே, இவர்கள் இணைவதில் ஒன்றும் வியப்பில்லை. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் தமிழே விழி தமிழா விழி   04:19:57 IST
Rate this:
17 members
1 members
38 members
Share this Comment

டிசம்பர்
17
2014
சிறப்பு கட்டுரைகள் யாதும் ஊரே... யாவரும் கேளீர் இன்று உலக புலம்பெயர்ந்தோர் தினம்
சரியான நாளில் வந்துள்ள கட்டுரை. எனினும் தமிழ்நாட்டிலிருந்து பிற நாடுகளுக்குப் புலம் பெயர்ந்த தமிழர்கள் நிலைபற்றியும் ஈழத்திலிருந்து பேரளவுப்படுகொலைகளில் தப்பி உலகமெங்கும் புலம்பெயர்நதுள்ள தமிழர்கள் நிலை பற்றியும் இந்திய அரசு புலம் பெயர்ந்து வருவோரில் தமிழர்களை மனித நேயத்துடன் நடத்தாத குறைபாடு பற்றியும் புலம் பெயர்ந்தோர் முகாம்களைப் பெயரளவிற்கே நடத்தி, அவர்கள் இங்கும் துயரத்தில் மூழ்கும் நிலையை உருவாக்கிய தமிழக அரசின் செயலபாடுகள் குறித்தும் ஒன்றும் தெரிவிக்கவில்லை. இவற்றையெல்லாம் குறிப்பிட்டாலதான் கட்டுரை நிறைவாகும்.   04:37:04 IST
Rate this:
0 members
0 members
124 members
Share this Comment

டிசம்பர்
13
2014
சிறப்பு கட்டுரைகள் பாதை மாறிய பழமொழிகள்...
பொதுவாக நன்றாக எழுதியிருந்தாலும் தவறாகப் புரிந்து கொண்டும் பழமொழிகள் விளக்கங்கள் இங்கே தரப்பட்டுள்ளன. சூடடித்தல் என்பது நெல்லிலிருந்து நெல்மணிகளை அடிக்கும் செயலாகும். ஒரு முறை சூடடிக்கும்பொழுது ஏறத்தாழ 95% நெல்மணி உதிர்ந்து விடும். நல்ல மாடாக இருப்பின் இதற்கு ஒரு முறை பயன்படுத்தினால் போதுமானது. இல்லையேல் திருமபத்திரும்பச் சூடடிக்க வேண்டும். நல்ல மாட்டிற்கு ஒரு சூடு என்பதுபோல் நல்ல திறமையுடையவன் ஒரே முயற்சியிலேயே வேலையை முடித்து விடுவான். இதைக்குறிப்பதுவே நல்ல மாட்டிற்கு ஒரு சூடு என்னும் பழமொழி. பாத்திரமறிந்து பிச்சையிடு என்பதில் தகுதியுள்ளவர்க்கு உதவ வேண்டும் என்ற கருத்து உள்ளது. நமக்குள்ள உதவும எண்ணத்தினாலோ இரக்கத்தினாலோ யாருக்கும் உதவக்கூடாது. " உதவி வரைத்தன்று உதவி, உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து "என்னும் தெய்வப்புலவர் திருக்குறளைப் பின்பற்றி உதவி தேவைப்படுபவருக்கே உதவ வேண்டும். பழந்தமிழ் மக்கள் புலவர்களை அவர் என்பதுபோல் மதிப்பாகவும் மன்னர்களை அவன் என ஒருமையிலும் குறித்தனர். அத்தகையோர் புலமையை மதிப்பதைப் பிச்சயைிடுவதாகக் கருதுவரோ? எனவே தந்துள்ள விளக்கம் தவறு.   04:17:40 IST
Rate this:
0 members
1 members
62 members
Share this Comment

டிசம்பர்
5
2014
சிறப்பு கட்டுரைகள் பறவைகளே... உங்கள் சொந்த ஊர் என்ன?
பிற நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்து இங்கு வரும் பறவைகள், இங்கிருந்து பிற நாடுகளுக்குப் பெயர்ந்து செலலும் பறவைகள், இங்கேயே தங்கியிருக்கும் பறவைகள்( வதிபறவைகள் ) என மூவகையாகப் பறவைகள் இடப்பெயர்ச்சி குறித்து வகைப்படுத்தும் பறவை அறிவியலில் பழந்தமிழர்கள் சிறந்திருந்தனர். சங்க இலக்கியங்கள் மூலம் இதை நாம் அறியலாம்.   05:21:42 IST
Rate this:
0 members
0 members
43 members
Share this Comment

நவம்பர்
24
2014
சினிமா அவர் அப்படித்தான் - ஸ்பெஷல் ஸ்டோரி...
‘அவள் அப்படித்தான்’ படக்கதை கற்பனையல்ல. மதுரையில் உள்ள திருநகரில் வாழும் ஒரு பெண்ணின் காதல் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. சென்னைத் தொலைக்காட்சியில் தில்லி கணேசைக் கதைத்தலைவனாகக் கொண்டு ‘பிரார்த்தனை’ என்னும் தொலைக்காட்சித்திரைப்படத்தை இயக்கிய திருநகர் திருவேங்கடம் என்னும் இலக்கியச் செல்வன் இதனைப் படமாக்கும் எண்ணத்தில் சிலரிடம் பகிர்ந்துள்ளார். அப்பொழுது (உ)ருத்ரையா இனி, இக்கதையை வேறு யாரிடமும் கூற வேண்டாம் என்றும் தானே படம் எடுக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார். குடும்பச்சூழல் காரணமாக இவர் கோடம்பாக்கத்திலிருந்து வெளியேறி மதுரை வந்து விட்டார். இரண்டு ஆண்டுகள் கழித்து ‘அவள் அப்படித்தான்’ படம் வந்த பின்னர் (உ)ருத்ரையா தன்னை ஏமாற்றி விட்டதாகக் கோபம்கொண்டார். தொலைபேசி மூலம் சென்னையில் உள்ள தன் நண்பர்களிடம் தொடர்பு கொண்டார். (உ)ருத்ரையா, படம் எடுக்க முடிவெடுத்ததுமே இவரைப் பல இடங்களில் தேடியதாகவும் ஆனால் விவரம் அறிய முடியவில்லை என்றும் அதன் பின்னரே படத்தை எடுத்ததாகவும் கூறினர். ( இவ்வாறு கூறியவர்களில் ஒருவர் ஒளிப்பதிவாளர் நாகராசன் என்பவராக இருக்கலாம்.) தான் யாரிடமும் தெரிவிக்காமல், கோடம்பாக்கத்திலிருந்து வெளியேறியதால்தான் (உ)ருத்ரையாவால் தன்னைத் தொடர்பு கொள்ள இயலவில்லை என்பதை அறிந்த பின்னர் இவர் அமைதியானார். பின்னர் இவர் (உ)ருத்ரையாவைச் சந்தித்த பொழுது உண்மைக்கதையில் ஏற்பட்ட ஈடுபாட்டாலும் இயக்கும் திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்ற உந்துதலினாலும் இவரைத் தொடர்பு கொள்ளும் வரை காத்திருக்காமல் படம் எடுத்து விட்டதாக அவர் கூறினார். சிறப்பாக இயக்கியுள்ளதாகப் பாராட்டித் திருநகர் திருவேங்கடம் என்ற இலக்குவச் செல்வனும் பெரிது படுத்தவில்லை. படத்தின் மூலம் ஆதாயம் வரும்பொழுது அதற்கேற்ற தொகை தருவதாகவும் (உ) ருத்ரையா கூறினாலும் பெயர் வந்த அளவிற்குப் பணம் வரவில்லை என்பது அனைவரும் அறிந்ததே   04:29:51 IST
Rate this:
1 members
0 members
120 members
Share this Comment

நவம்பர்
22
2014
சிறப்பு கட்டுரைகள் நமீதா தமிழும் அமலா பாலும்
தமிழ் நலனுக்கு எதிரான கருத்துகளை விதைக்கும் இவரைத் தமிழ் ஆர்வலர் எனச் சொல்வது தவறு. ஊடகங்களால் பலரால் அறியப்படும் வாய்ப்பு கிட்டியிருக்கலாம். அதனால் இவர் அறிஞர் என்று பொருள் இல்லை. இவர் போன்றவரையும் தமிழ் உலகம் மதிக்கின்றதே என்ற வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்   06:04:54 IST
Rate this:
4 members
0 members
154 members
Share this Comment

நவம்பர்
19
2014
பொது செய்தி துறைக்கு யார் முதல்வர்? இணையதளத்தில் குழப்பம்
இது போன்ற செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், அதற்காக நாம் கருதும் காரணம் உண்மையல்ல. ஏனெனில் அரசின் இணையத் தளங்களின் நிலையே இதுதான். ஒவ்வொரு முறை ஆட்சி மாறும் பொழுதும் உடனுக்குடன் தகவல்கள் புதுப்பிக்கப்படுவதில்லை. சான்றுக்குச் சில கூறுகிறேன். கடந்த முறை கலைஞர் பொறுப்பேற்றபின் ஒரு திங்கள் வரையில் மாவட்டத் தளங்களில் முதல்வர் படமாக முந்தைய முதல்வர் படம்தான் இருந்தது. செய்தித்துறையிலும் இதே நிலைதான். நான் முதல்வரின் செயலருக்கு மடல்வழியாகத் தெரிவித்தேன். அவர் விரைந்து நடவடிக்கை எடுத்ததால் உடன் மாற்றப்பட்டன. அதுபோல் மீண்டும் ஆட்சி மாறியதும் சிலத் தளங்களில் முதல்வர் படம் மாறாமல் இருந்தது. உடன் நான் தொலை பேசி வழியாகத் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுத்தனர். பொதுவாக அமைச்சர்கள் துறைகள் மாறும் பொழுது உரிய மாற்றங்கள் இணையத் தளங்களில் உடனுக்குடன் குறிக்கப்பெறுவதில்லை. அமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ள துறைகள் மாற்றப்பட்டாலும் உரியவாறு மாற்றம் குறிக்கப்பெறுவதில்லை. தமிழில் ஒன்றும் ஆங்கிலத்தில் வேறுமாகப் பதிவுகள் உள்ளமையும் காணப்படுகின்றன. வைகைச் செல்வன் அமைச்சராக இருந்த பொழுது இது குறித்து நேரில் தெரிவித்த பின்னர் நடவடிக்கை எடுத்து மாற்றச் செய்தார். பொதுவாக இணையத் தளங்களில் குறிக்கப் பெறும் மின்னஞ்சல் முகவரிகள் பயன்பாட்டில் உள்ளனவாக இருப்பதில்லை. இது குறித்து உரிய துறையினரும் கவலைப்படுவதில்லை. தமிழ் வளர்ச்சித் துறை போன்ற சில துறைகளில் இவ்வாறு உள்ளதைச் சுட்டிக்காட்டிய பின்னரே திருத்தி உள்ளனர். ஆனால் இன்றும் மிகப்பல மின்னஞ்சல் முகவரிகள் தவறாகவே உள்ளன. நேற்றுகூட நான் தமிழ்நாடு அரசு சட்ட உதவிப்பணிகள் குழுமத்தின் மின்னஞ்சல் முகவரி தவறாக உள்ளதைத் தொலைபேசி வழி தெரிவித்தேன். உடன் நடவடிக்கை எடுப்பார்களா எனத் தெரியவில்லை. அரசின் இணையத் தளங்களில் உள்ள விவரங்கள் முழுமையாகவோ உடனுக்குடன் புதுப்பிக்கப்படுவனவாகவோ இருப்பதில்லை என்பதே உண்மை. முதல்வர் தன் அறையை மாற்றாமை, தன் பெயர்ப்பலகையை மாற்றாமை போன்றவற்றால் வழக்கமான அரசின் பணிக்குறைபாடுகளுக்கும் இவற்றின் அடிப்படையில் காரணத்தை நாம் கருதுகிறோம். இதில் சிறிதளவே உண்மை உள்ளது. இனியேனும் அரசின் துறைகளும் நிறுவனங்களும் தங்கள் இணையத் தளத்தைச் செம்மையாக வடிவமைக்க முயல வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன், தலைவர், தமிழ்க்காப்புக் கழகம் /தமி்ழே விழி தமிழா விழி   03:32:10 IST
Rate this:
2 members
0 members
90 members
Share this Comment