இவ்வாறு சுவர்களில் மேற்கோள் எழுதுவதும் மிகப்பெரிய கொள்கைப்பரப்புப் பணியாகும். இத்தகைய சிறப்பான பணிகளில் முன்னோடியாக மதுரையில் தமிழக எண்ணெய் பலகார நிறுவனராக இருந்த மறைந்த தேவசகாயத்தைக் குறிப்பிடலாம். பொதுஅறிவு சார்ந்த, பகுத்தறிவு சார்ந்த, மொழி சார்ந்த, இனம் சார்ந்த என பல்வகைத் தகவல்களை அவர் சுவர்களில் எழுதச் செய்வதையே தம் கடமையாகக் கொ்ணடிருந்தார். மதுரையில் நான் அவருக்கு விளம்பரத் தமிழ் ஆர்வலர் என்னும் விருதை அளித்ததும், இத்தகைய விருதை எதிர்பார்க்காத, இப்படி எல்லாம் விருது தருவார்களா என்று எண்ணியிராத அவர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டமையும். விருது வழங்கிய அப்போதைய அமைச்சர் அரங்கநாயகம், எதிரணியில் இருந்தாலும் இவரது தொண்டிற்கு கிடைத்த அறிந்தேற்பாக மனமுவந்து பாராட்டியமையும் நினைவிற்கு வருகிறது. தொடரட்டும் பசுபதியின் பணி. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி தமிழா விழி எழுத்தைக் காப்போம் மொழியைக் காப்போம் இனத்தைக் காப்போம்/
26-ஏப்-2013 05:22:43 IST
ஒரு சொல் காலமாற்றத்தில் மேம்பட்ட பொருளையோ கீழான பொருளையோ அடைவதே உலக மொழிகளின் இயற்கை. தாசி என்றால் தொண்டு புரியும் பெண்ணைக்குறித்து, அடுத்துப் பணிமகளைக் குறித்தது. இன்று விலை மகளைக் குறிக்கிறது. இன்று, பழம் பொருள் அடிப்படையில் ஒருவர், தன் வீட்டுப் பணிப்பெண்ணைத் தாசி என்று கூறிவிட முடியாது. இந்து என்பதற்குக் கரி, கரடி, சந்திரன் கருப்பூரமரம் மிருகசீரிடம் இந்துப்பு சிந்துநதி இந்து மதத்தான், கௌரி பாடாணம் எட்டி எனப் பல பொருள்கள் இன்றும் உள்ளன. ஆனால், இந்து என்ற பெயர்க்காரணம் திருடன் என்ற பொருளில் வந்ததாகவே பழம் நூல்கள் கூறுகின்றன. கழக வெளியீட்டின் வினா-விடை நூல் ஒன்றிலும் அவ்வாறுதான் குறிக்கப்பட்டுள்ளது. இந்த வரலாற்று உண்மையைக் கலைஞர் சொல்லியிருந்தால் தப்பில்லை. ஆனால், இதன் அடிப்படையில் இந்துக்கள் அனைவரும் திருடர்கள் என்று சொல்லியிருந்தால் குற்றம்தான். இந்துக்களிடையே வாழ்ந்து கொண்டு அவ்வாறு சொல்லியிருக்க மாட்டார் என எண்ணுகிறேன்..அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி தமிழா விழி எழுத்தைக் காப்போம் மொழியைக் காப்போம் இனத்தைக் காப்போம்/
20-ஏப்-2013 05:29:46 IST
குடும்பத்தினரைப் பாராட்டுவோம். எனினும் இத்தகைய செய்திகளைப் படிக்கும் பொழுது் பின்வரும் ஐயங்கள் ஏற்படுகின்றன. 1. உண்மையிலேயே மூளைச்சாவு வந்தபின்தான் அறிவிக்கின்றார்களா? அல்லது பணத்திற்காக உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் பொழுதே மூளைச்சாவு என்கின்றார்களா? 2. பொதுவாக இதுவரை உடலுறுப்புகளைத் தானமாகப் பெறும் மருத்துவமனைகள் பணம் கொழிக்கும் மருத்துவமனைகளே கொடை யுள்ளத்துடன் அளிக்கப்படும் உடலுறுப்புகள் விலையடிப்படையில் தரப்படுகின்றனவா? 3. உடலுறுப்பு தானமாகப் பெற்று ஏழை ஒருவர் நன்மை அடைந்ததாக இதுவரை செய்தி வந்ததில்லையே பணம் உள்ளவர்களுக்குத்தான் உடல் உறுப்புதானமா? 4. அதிகப் பணம் அளிப்பவருக்கு முதலிடம் என்ற முறையில் வழங்குவதுபோல் தோன்றுகின்றது. அவ்வாறில்லாமல் தேவை ஏற்பட்ட காலத்தின் அடிப்படையில் கொடுக்கலாமே இவ்வாறு செய்தால் , ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடில்லாமல் வழங்கலாமே 5. அரசு இதில் கருத்து செலுத்தி ஏன் முறைப்படுத்தாமல இருக்கின்றது. 6. ஊழல்களை எல்லாம் வெளிக்கெபாணரும் ஊடகங்கள் இவை பற்றி இனியாவது சிந்திக்குமா? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி தமிழா விழி எழுத்தைக் காப்போம் மொழியைக் காப்போம் இனத்தைக் காப்போம்/
20-ஏப்-2013 05:19:24 IST
பீகிங் தமிழ்ச்சங்கம் சிறப்பான தமிழ்த் தொண்டாற்ற வாழ்த்துகள். மிகத் தொன்மைக்காலத்திலிருந்தே தமிழுக்கும் சீனாவிற்கும் தொடர்பு உள்ளது. இரு மொழிகளின் உறவு குறித்தும் இரு மொழி இலக்கியங்கள் மொழிபெயர்ப்பிலும் கருத்து செலுத்தித் தொண்டாற்ற வேண்டும். தொல்லுறவை மறந்தும் தமிழ்நாடு வழியாகவே புத்த சமயம் பரவியதை மறந்தும் தமிழகத்திற்குச் சீனர்கள் வருகை தந்த முன் வரலாறு மறந்தும் புத்தர் பேசிய மொழி தமிழ் என்பதை மறந்தும்
புத்த நெறிக்கு மாறாக இனப்படுகொலைகளில் தொடர்நது ஈடுபடும் சிங்களத்திற்கு உடந்தையாக இருப்பது தவறு என்பதைச் சீனர்கள் உணர்ந்து திருந்தித் தமிழ் ஈழத்தை ஏற்கும் வகையிலும் கலை பண்பாட்டு உறவினை வளர்க்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி தமிழா விழி எழுத்தைக் காப்போம் மொழியைக் காப்போம் இனத்தைக் காப்போம்/
15-ஏப்-2013 05:45:20 IST
ஆசிரியருக்குப் பாராட்டுகள்.
எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்குத் தமிழ்நாட்டில் பொற்காசுகள் மிகுதியாகப் பயன்பாட்டில் இருந்துள்ளன. மக்களுக்கு உவமையாகக் கூறும் அளவிற்கு அனைத்து நிலைகளிலும் பயன்பாட்டில் இருந்துள்ளமை அக்கால மாழை (உலோக)ப் பயன்பாட்டையும் செல்வச் செழிப்பையும் நமக்கு உணர்த்துகின்றன.
உகாஅய்க் கனியைப் போன்று, நெல்லிக்கனியைப் போன்று, வேப்பங்கனியைப் போன்று, நடுவில் துளையுடன் வட்ட வடிவில் எனப் பலவகையில் பொற்காசுகள் பயன்பாட்டில் இருந்துள்ளன. இவை பற்றிச் சங்க இலக்கியங்களில் குறிப்புகள் பல உள்ளன. பொற்காசுகளால் பொலிந்த தமிழகம் < ://thiru-padaippugal.blogspot.in/2011/02/golden-period-of-gold-coins-andre.html> என்னும் கட்டுரையில் விரிவாகக் காணலாம். இவற்றுக்கெல்லாம் சான்று பகரும் வண்ணம் கிடைக்கும் நாணயங்களை ஆசிரியர் வேண்டுகோளுக்கு இணங்கப் பாதுகாக்க வேண்டும். தமிழக வரலாற்றையும் நாகரிகச் சிறப்பையும் ஆட்சிச் சிறப்பையும் தொன்மையையும் உணர்த்த இவை உதவும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி தமிழா விழி எழுத்தைக் காப்போம் மொழியைக் காப்போம் இனத்தைக் காப்போம்/
30-மார்-2013 06:30:49 IST
பாவம் நெருப்பாற்றில் நீந்தி வந்தவர் இன்று பதவிகளை இழந்த வெறுப்பிலும் வேதனையிலும் குமுறுகிறார். அவருக்கே தெரியும் என்பதால் விரிவாக எழுத வேண்டியதில்லை. எனினும் ஒரு கேள்வி. அப்புறம் எதற்கு அப்படிச் செய்யாவிட்டால் விலகுவோம் இப்படிச் செய்யாவிட்டால் விலகுவோம் என்றெல்லாம் வெற்று மிரட்டல்கள் அவ்வப்பொழுது? பழைய கலைஞராக இருந்திருந்தால் இதனால் என்ன நன்மை விளைந்தது என்று முதன்மையில்லை. தமிழர் நலனுக்காகச் சிறிதேனும் முடிந்ததைச் செய்தோம் என்ற மன அமைதி எங்களுக்கு என்றுதானே கூறியிருப்பார். அடிக்கடித் தொண்டரடிப் பொடியாழ்வார்கள் மூலம் அப்பொழுதும் ஒன்றும் நடந்திருக்காது எனப் பிதற்ற வைத்தவர் இப்பொழுது தானே ... எடுத்திருக்கிறார். கலைஞரே உங்களை இன்னும் பல்லாயிரவர் நம்புவதால் இனியேனும் மாறக்கூடாதா? தமிழர் வரலாற்றில் மாற்றம் ஏற்படுத்தக்கூடாதா? தமிழ் ஈழத்திற்கு உதவக்கூடாதா? உங்களுக்கு ஏற்பட்ட பழியைத் துடைக்கக்கூடாதா? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி தமிழா விழி எழுத்தைக் காப்போம் மொழியைக் காப்போம் இனத்தைக் காப்போம்/
30-மார்-2013 05:52:52 IST
எத்தனை ஆண்டுகளாகத் திருப்பதிக் கோயிலில் ஊழல் நடக்கிறது என்று தெரியாது. ஆனால், எனக்குத் தெரிந்து 40 ஆண்டுகளுக்கு முன்பே நண்பர் ஒருவர், அங்கு இறையன்பர்கள் காணிக்கையாக அளிக்கும் தரமான தங்க நகைகளைக்கூடத் தரங்குறைந்தது என்ற பெயரில் குறைந்த தொகைக்கு ஏலம் எடுப்பதுபோல் காட்டி விற்பதாகக் கூறினார். எவ்வளவு நகை வேண்டுமானாலும் மிகக் குறைந்த விலையில் வாங்கித் தருவதாகக் கூறினார். நான் சில முறை திருப்பதி சென்றுள்ளேன். எனக்கு நேர்ந்த பட்டறிவுதான் பிறருக்கும் நேர்ந்துள்ளது. என்ன வென்றால் கூட்டமே இல்லாத பொழுதும் கூட்டம் இருப்பதுபோல் செயற்கையாகக்காட்டுவதற்காக வேண்டுமென்றே மக்களை அடைத்து வைக்கின்றார்கள். சில திங்களுக்கு முன்பு சென்றிருந்தபொழுது மிக மிகக் குறைவான கூட்டம் இருந்தது. அதனால் தொடக்கத்தில் உள்ள ஆய்வு முகப்பில் ஒன்று மட்டுமே திறந்திருந்தது. ஆனால், வேண்டுமென்றே மணிக்கணக்கில் ஒவ்வொரு கூண்டாக அடைத்து வைத்தனர். காலையில் 4 மணிக்கே வந்திருந்தும் அடைத்து வைத்துப் பிற்பகல் இரண்டு மணிக்குத்தான் ஒரு கூண்டிலிருந்து மற்றொரு கூண்டிற்கு அனுப்பியதாக கட்டணமில்லாப் பார்வைக்கு வந்த ஒருவர் கூறினார். என்ற போதும், மூலவர் இடம் வந்தபொழுது வேண்டுமென்றே திமுதிமு என்று திரளாகப்போகுமாறு செய்து யாரையும் வணங்கவிடாமல் வழக்கம் போல் விரட்டி அடித்தனர். கூட்டம் இல்லை என்பதால் புகழ் குறைந்து கூட்டம் மேலும் குறையும் என்பதால் அவ்வாறு செய்கின்றனராம். அந்த இடத்தில் வரிசையாக உள்ளே செல்ல விட்டால் மணிக்கணக்கில் அல்லது நாள்கணக்கில் காத்திருந்தவர்கள் அமைதியாக இறை வழிபாடுசெய்ய வாய்ப்பிருக்கும். ஆனால், செய்வதில்லை. கழிவறைகளில் தண்ணீர் வசதியே இல்லை. இதையெல்லாம் கேட்டதற்கு, வருவோர் எண்ணிக்கையைப்போலியாக உயர்த்திக் காட்டினால்தான் இறையன்பர்களுகு்குத் தரும் பால், உணவு முதலானவற்றில் கொள்ளை அடிக்க முடியும் எனத் திட்டமிடுபவர்கள் வசதி செய்து தருவதில் கருத்து செலுத்துவதில்லை என்று அங்குள்ள ஒருவர் கூறினார். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். எனவே, திருப்பதி அன்பர்கள் சில நாளேனும் திருப்பதிக்குச் செல்வதைப் புறக்கணித்தால்தான் உண்மை உணர்ந்து தொடர்புடையவர்கள் திருந்துவர். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி தமிழா விழி எழுத்தைக் காப்போம் மொழியைக் காப்போம் இனத்தைக் காப்போம்/
22-மார்-2013 04:01:06 IST
தமிழைப்பற்றி அறியாதவர் தப்பும் தவறுமான தகவல்களை அளிக்கின்றார். ஆற்றுக்குக் கரைபோல் மொழிக்கு இலக்கணம் தேவை. அத்தகைய இலக்கணத்தைத் தேவையில்லை எனச் சொல்ல இவர் யார்? தமிழ்மொழித்தாளில் தமிழ் பற்றி இடம் பெற்றுள்ளதைப் பெருமையாகக் கூறுகிறார். அதில் கூடத் தொல்காப்பியத்தின் சிறப்பு, திருக்குறளின் உலகப்பொதுமை, வாழ்வியல் இலக்கியங்களான சங்க இலக்கியங்களின் சீர்மை, தமிழ் மூவேந்தர்கள், குறநில மன்னர்களின் ஆட்சிச் சிறப்பு, காப்பிய இலக்கியங்கள், அறநெறி இலக்கியங்கள் முதலான பிற இலக்கியங்கள் சிறப்பு இடம் பெறவில்லை. பொதுவான வரலாற்றில் தெலுங்கு மன்னர்களின் ஆட்சி பற்றி இடம் பெற்றிருப்பினும் தமிழ் மன்னர்களின் ஆட்சி பற்றி இடம் பெறவில்லை. அரசியல், வரலாறு, புவியியல் முதலான பிற தாள்களில் தமிழ் ஒரு விழுக்காடு அளவில்தான் உள்ளது. இதனைத்தான் மத்தியப் பணியாளர் தேர்வாணையமும் பின்பற்றி உள்ளதால் அதனைக் குறை கூறியும் பயனில்லை. பணியாளர் தேர்வுகளில் தமிழைத் துரத்துவது தமிழ்நாட்டில் இருந்தே தமிழரைத் துரத்துவதற்கு ஒப்பாகும். புதிய தலைவரேனும் செக்குமாடுபோல் இவர் வழியில் போகாமல் தமிழ்ப்புலமை மிக்க கல்வியாளர்களுடன் கலந்து பேசித் தமிழ்நாட்டுப் பணித் தேர்வுகளில் தமிழுக்கு முதன்மை அளிக்கச்செய்ய வேண்டும். இப்பாடத்திட்டங்களை மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்திற்கும் பிற மாநில அரசின் பணியாளர் தேர்வாணையங்களுக்கும் அனுப்பி அவர்களின் தேர்வுப் பாடங்களிலும் தமிழ் தனக்குரிய இடத்தைப் பெற வகை செய்ய வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி தமிழா விழிஎழுத்தைக் காப்போம் மொழியைக் காப்போம் இனத்தைக் காப்போம்/
20-மார்-2013 06:02:28 IST
கையால் ஆகாதபொழுது கானா மிரட்டுவதுபோல் எழுதுகிறீர்களே நூறாயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்ற பொழுது ஏற்படாத அச்சம் சிங்களவனுக்கு இன்னும் இருக்கும் பொழுது அவனுக்கு அச்சத்தை உணர்த்த, எதிர்ப்பு உணர்வை இயல்பாகக் காட்டுவதைத் தவறு என்கின்றீரகளே தமிழ்நாட்டிற்கும் பிற பகுதிகளுக்கும் சென்றால், சிங்களன் நிலை என்னாகும் என்ற அச்சம் அவனுக்கு இல்லையே உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரையும் ஈவிரக்கமின்றிக் கொன்றவனை நீங்கள் வரவேற்று விருந்தோம்பினால் உங்களைப் பிறர் இழிவாகக் கருதமாட்டார்களா? அல்லது அப்படிப்பட்ட உறவினரை நீங்கள் எள்ளி நகையாடமாட்டீர்களா? துயர உணர்வின் வெளிப்பாட்டைக கொச்சைப்படுத்தும் சத்தியமூர்த்தி போன்றவர்களின் கருத்துகளை வெளிப்படுத்தித் தரம் தாழ்த்திக்கொள்ள வேண்டா. துயர உணர்வில் கொந்தளித்துப் பீறிட்டு எழும் உணர்வாளர்களுக்குத் தனிப்பட்ட முறையில் அறிவுரை கூறுங்கள்.
ஆனால், இவ்வாறு அவர்களின் செயலுக்குக் களங்கம் கற்பிக்காதீர்கள் எமை நத்துவாய் என எதிரிகள் கோடி இட்டழைத்தாலும் தொடேன் என்ற பாவேந்தரின் வரிகளுக்கிணங்க நடப்பவர்களிடம் கொலைகாரனின் எச்சில் பண்டத்தை இரந்துண்டு வாழுமாறு கூறாதீர்கள் சிங்களர்களிடமிருந்து வரும் சுற்றுலாப் பணம் தேவையில்லை. சிங்கள அரசு பிற நாடுகளின் உதவியின்றித் தனித்துவிடப்பட்டு அதற்குப்பிறகேனும் கொடுங்குற்றச் செயலை உணர வேண்டு்ம். இனப்படுகொலைகாரர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். அடைந்த இன்னல்களுக்கும் இழந்த உறவுகளுக்கும் உடைமைகளுக்கும் ஈடாகவும் தமிழ் ஈழ மக்கள் விடுதலை அடைந்து தனியரசு அமைத்துக் கோலோச்ச வேண்டும். வெல்க தமிழ் ஈழம் அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி தமிழா விழி எழுத்தைக் காப்போம் மொழியைக் காப்போம் இனத்தைக் காப்போம்/
18-மார்-2013 06:03:45 IST