ஆதார் அட்டை எவ்வாறு பெறுவது என்று அரசாங்கமோ அல்லது தின மலர் போன்ற பத்திரிகைகளோ ஒரு செய்தி வெளியிட்டால் மக்களுக்கு உபயோகமாக இருக்கும்,.
22-மே-2013 05:07:21 IST
ஐய்யே. என்ன இது ஒருத்தருக்கும் சரியாவே புரியலையே. கிரிகெட் விளையாட்டில் ஊழல் என்றால் ஸ்ரீசாந்த் போன்ற கிரிகெட் வீரர்கள்தான் ஈடுபட வேண்டும் என்று எந்தவித சட்டமும் கிடையாது. மல்யுத்த வீரர், ஹாக்கி வீரர், கால்பந்து வீரர் என்று எவர் வேண்டுமானாலும் ஊழலில் ஈடுபடலாம். வேளை சரி இல்லாதவன் மட்டும் மாட்டிக்கொள்கிறான். மற்ற ஊபெக்கள் (ஊழல் பெருச்சாளிகள்) நாட்டில் வலம் வந்து கொண்டு தான் இருக்கும். இதனால் நாட்டின் வளமும் குறைந்து கொண்டுதான் இருக்கும்.
22-மே-2013 05:04:19 IST
அவர் பெயர் பிரசாதா அல்லது பிரசாந்தா? ஒரு செய்தி அவர் தென் ஆப்பிரிக்காவிற்கு சென்று விட்டதாக சொல்கிறது.இப்போது அவர் சரண் அடைந்து விட்டதாக சொல்கிறது. ஒருவேளை அவரைப்போல பலர் இருக்கிறார்களோ என்னவோ. எல்லாம் இருட்டுக்குளே வெளிச்சம்.
21-மே-2013 04:30:04 IST
சித்தப் பிரமை பிடித்த இன்னொருவர் கர்நாடகத்தின் முதல்வர் ஆகிவிட்டார். இவர் இன்னும் எத்தனை நாட்களுக்குத் தாக்குப் பிடிப்பாரோ என்பது அந்த டில்லியில் இருக்கும் பாதி பராசக்திக்கே தெரியும். அதற்குள் அவரோட பினாத்தல்கள் ஆரம்பித்து விட்டன. அதையும் கேட்டுதான் தொலைப்போமே.
21-மே-2013 04:22:41 IST
செய்தி படிக்க நல்லா இருக்கு. ஆனால் தப்பான வழிகளுக்கும் (காதல், மிரட்டல் SMS ,. கொலை போன்றவை) விபத்துகள் உண்டாகவும் மொபைல் போன்களின் பங்களிப்பு எவ்வளவு என்ற புள்ளி விபரங்களையும் தந்தால் வாசகர்கள் அதையும் ஐயம் திரிபுர தெரிந்து கொள்வார்களே.
17-மே-2013 05:50:17 IST
பான் மசாலா போன்ற புகையிலை சேர்ப்புப் பொருள்கள் மக்களின் உடல் ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிப்பதால் தடை செய்யப்படுகின்றதா அல்லது வேறு ஏதாவது காரணங்களுக்காகவா என்று தெரியவில்லை. அப்படியே, (வெற்றிலை, சீவல்/ பாக்குடன் சேர்த்து) நேரடியாக உபயோகிக்கப்டும் புகையிலை மற்றும் பன்னீர் புகையிலை போன்ற வஸ்துகளுக்கும் சிகரெட், சுருட்டு மற்றும் பீடி போன்ற பொருட்களின் விற்பனை மற்றும் உபயோகத்திற்கு ஒரு சட்டத்தின் மூலம் தடை விதித்தால் அவைகளின் உபயோகத்தால் உயிர் இழக்கும் மனித இனத்தை காப்பாற்றலாமே. அக்குடும்பங்களும் அரசை வாழ்த்துமே..
17-மே-2013 05:05:23 IST
நல்ல காலம். வேறே எதையாவது நடத்திக் காட்டுன்னு பிரகாஷ் ராஜ் சொல்லி அதுவும் அரங்கேறி இருந்தால் நிகழ்ச்சி இன்னும் மோசமா இல்லே இருந்திருக்கும். இது போன்ற மோசமான கேள்வி பதில்களையும், நடவடிக்கைகளையும் தவிர்ப்பது நிகழ்ச்சி அமைப்பளர்களுக்கு நல்லது. ஏனென்றால், இது போன்ற அறிவு சார்ந்த நிகழ்ச்சியை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கோடிக் கணக்கானோர்கள் பார்கின்றனர். ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் கலந்து விட்ட கதையாகி விடக் கூடாது.
13-மே-2013 02:26:59 IST