Advertisement
Vasu Murari : கருத்துக்கள் ( 354 )
Vasu Murari
Advertisement
Advertisement
ஏப்ரல்
22
2014
பொது கோழிக்கறி வியாபாரியின் தேர்தல் விழிப்புணர்வு ஆர்வம்
கோழிக்கறி வியாபாரியின் விழிப்புணர்வு பிரச்சாரம் பாராட்டுதல்களுக்கு உரியது. இது போன்று (விற்பனையில் அதிகமாகக் கொழிக்கும்) இதர சிற்றுண்டி வியாபார நிறுவனங்களும் (உதாரணம் சரவண பவன், கிராண்ட் ஸ்வீட்ஸ், கிருஷ்ண ஸ்வீட்ஸ், அடயார் ஆனந்த பவன், டொமினோஸ், கே.எப் சி.) பின் பற்றலாமே. ஒருநாள் தள்ளுபடி அவர்களுக்கு பெரிதளவு நஷ்டத்தை ஏற்படுத்தி விடாது. மாறாக விழிப்புணர்வு வாக்குப் பதிவை அதிக சதவீதமாக உயர்த்தி நாட்டை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு சேர்க்கும்.   04:03:11 IST
Rate this:
3 members
0 members
44 members
Share this Comment

ஏப்ரல்
17
2014
எக்ஸ்குளுசிவ் ஆழ்துளை கிணறுகளை முறைப்படுத்துவதில் பெங்களூரு வழியை பின்பற்றுமா தமிழகம்?
ஆழ்துளைக் கிணறுகளை அமைத்துத் தரும் ஒப்பந்தக்காரர்கள் அவைகளை இலவசமாகவோ அல்லது தருமமாகவோ அமைத்துத் தருவதில்லை. ஒரு பெரும் தொகையினை விலையாகப் பேசிய பிறகுதான் வேலையில் இறங்குவார்கள். அவ்வளவு பெரும் தொகை பெறும் அவர்கள், கிணறு அமைக்கும் பகுதியைச் சுற்றி ஒரு தடுப்பு வேலையினை அமைப்பதினால் வெளி ஆட்கள் அங்கு வருவதைத் தடுத்திட முடியுமே? இது தவிர, ஒரு காவலாளியும் 24 மணி நேரமும் பணிக்கு அமர்த்துவதன் மூலம் இது போன்ற விபத்துகள் ஏற்படாமல் தடுத்திட இயலுமே? ஆனால் அந்தக் காவலாளி குடி போதையில் இல்லாமல் இருக்கிறாரா என்று பாத்துக்கொள்ள ஒரு மேஸ்திரியும் போட வேண்டும். மேலும் அவர்கள் இருவரும் சேர்ந்து கூட்டணி அமைத்துக் குடிக்காமல் இருக்கிறாரா என்று முதலாளியும் பார்த்துக் கொள்ள வேண்டும். இவைகளுக்காக ஆகும் செலவுகள், ஏதாவது விபத்து ஏற்படும்போது அவர்கள் சந்திக்கும் செலவைவிட குறைவாகவே இருக்கும்.   01:45:51 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
24
2014
உலகம் தென் இந்திய கடல்பகுதியில் மலேசிய விமானம் விபத்துக்குள்ளானது
விமானம் காணமல் போனது இருக்கட்டும். நவீன யுகத்தில் அதைக் கண்டு பிடிக்க முடியாமல் இருக்கும் மனித குலத்தின் மானமும் அல்லவா சேர்ந்து காணமல் பொய் விட்டது.   03:37:04 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

மார்ச்
24
2014
கோர்ட் மத்திய அரசின் ஆதார் திட்டத்துக்கு மூடுவிழா சுப்ரீம் கோர்ட் வைத்தது ஆப்பு!
மக்கள் வரிப்பணம் மேலும் சேதாரம் ஆகாமல் இருக்க, ஆதார் அட்டை வழங்குதல் மூடுவிழா காணும் தருணம் வந்து விட்டது. இதனால் நாட்டு மக்கள் பயன் அடைந்தார்களோ இல்லையோ யாரோ ஒருவர் குருவி சேர்ப்பதுபோல் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்த பணம் ரூபாய் 7,700 கே(கோ)டி என்ற செய்தி சற்று மனத்திற்கு நெருடலாகத்தான் இருக்கிறது.   03:20:23 IST
Rate this:
4 members
0 members
31 members
Share this Comment

மார்ச்
23
2014
சிறப்பு பகுதிகள் சொல்கிறார்கள்
இரண்டு நாட்களுக்கு முன்பு டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் செய்தி ஒன்றை படித்தேன். பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஒரு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அவர்கள் வங்கிக் கணக்கில் இருந்து எவ்வாறு ஆறு லட்ச ரூபாய்கள் லவட்டப்பட்டு விட்டது என்று அந்தச் செய்தியில் விவரமாக எழுதி இருந்தது. அதையும் இதையும் சேர்த்து படிக்கும்போது ஞாபகத்திற்கு வரும் பாட்டு என்னவென்றால் 'திட்டம் போட்டு திருடர கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது. அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்குது. திருடனாய்ப் பார்த்து திருடா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. திருடாதே பாப்பா திருடாதே.' என்பது தான் அப்பாட்டு.   02:32:31 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
22
2014
சம்பவம் திறந்தவெளி சிறை கைதிகள் மூவர் ஓட்டம் இருவர் கைது
அவர் தேனியைபோல் பறந்து போய் விட்டாரோ என்னவோ?   05:17:15 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
22
2014
அரசியல் திகார் ஜெயிலில் கைதிகள் அடிதடி சண்டை
சண்டையில் எத்தனை மண்டைகள் உடைந்தன என்ற விபரம் தரப்படவில்லையே?   04:48:16 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
22
2014
பொது ரூ.2,400 கோடி விற்பனை வரி பாக்கி நோக்கியா நிறுவனத்துக்கு தமிழக அரசு நோட்டீஸ்?
தமிழ் நாட்டில் மதிப்புக் கூட்டுவரி கேட்டால் 'நோ' என்பார்கள். டெல்லியில் இருந்து வருமானத் துறை வரி கேட்டால் 'கியா?' என்பார்கள். இப்போ ரெண்டையும் சேர்த்து வாசகர்கள் படியுங்கள். 'no' + கியா?= (என்ன வருது?) நோக்கியா(க்=சந்தி). இப்போ கணக்கு சரியாப் போச்சா? சிரிக்காதீங்க. இதுதான் இன்றைய இந்தியாவில் நிலவும் இழி நிலை.   04:39:44 IST
Rate this:
1 members
0 members
31 members
Share this Comment

மார்ச்
22
2014
பொது தக்காளிக்குள் செடி வியாபாரிகள் அதிர்ச்சி சாப்பிட வேண்டாம் என நிபுணர்கள் எச்சரிக்கை
இன்னும் என்னெல்லாம் நடக்கப்போகிறதோ? இளநீரில் தென்னை மரம் கூட தோன்றும் போல் இருக்கிறதே. பேராசை பிடித்த மனிதர்கள் எல்லாவற்றையும் (விளை பொருட்கள் மிகக் குறைந்த காலத்தில் மகசூல் தருவதில் இருந்து தொடங்கி, தவறான வழியில் அதிக அளவில் பொருள் ஈட்டுவதில் தொடந்து குழந்தைகள் பெற்றுக்கொள்வது வரை எதையும்) மிகக் குறுகிய காலத்தில் அடைந்துவிடத் துடிக்கிறார்கள். ஆனால், மரணம் என்ற சத்தியத்தை எந்த ஒரு மனிதனும் எப்போதுமே விரும்புவதில்லை. முடிந்தால், யாயதி போன்று பல ஆயிரம் ஆண்டுகள் வாழவே துடிக்கிறான். ஆனால், காலமும், காலனும் சும்மா இருப்பதில்லையே. அவரவர் பணிகளை செவ்வனே செய்து கொண்டு வருவதால் தான் பூமி சம நிலையில் உள்ளது.   05:14:18 IST
Rate this:
0 members
1 members
38 members
Share this Comment

மார்ச்
11
2014
சினிமா அதென்ன, செளந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின்.? கோச்சடையான் பிரஸ்மீட்டில் விளக்கிய செளந்தர்யா...
எந்த டிடர்ஜெண்ட் பவுடரும் இல்லாமல் சும்மா சூப்பரா வெளுத்துக் கட்டீட்டிங்கோ திருமதி சௌ.ர.அ. அவர்களே. வாழ்த்துக்கள். அப்பா பேச்சைக் கேட்டு நடங்கோ.   05:25:24 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment