E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
இரா. சந்திரன் : கருத்துக்கள் ( 55 )
இரா. சந்திரன்
Advertisement
Advertisement
ஜனவரி
16
2015
அரசியல் தி.மு.க.,வை அனைத்து கட்சிகளும் ஆதரிக்க வேண்டும் கருணாநிதி கோரிக்கை
எம்.ஜி.ஆர் மறைவுக்குப்பின் 1996 ம் ஆண்டிலிருந்து திமுக வலுவான கூட்டணி இல்லாமல் சொந்தக்காலில் நின்று வெற்றி பெற்றதாய் இன்றுவரை சரித்திரம் இல்லை.. எனவேதான் பெருசு எல்லோரையும் கூவிக்கூவி அழைக்கிறது..   06:59:19 IST
Rate this:
3 members
0 members
54 members
Share this Comment

ஜனவரி
10
2015
உலகம் இலங்கையின் புதிய அதிபரானார் மைத்ரிபால சிறிசேன வெற்றி
கும்புடுறேன் சாமி.. வித்தியாசமாத்தான் யோசிக்கிறீங்க.. நீங்க சொன்னா மாதிரி அவுங்க பொழப்பு கொஞ்சம் கஷ்டம்தான்.. ஆனா கொஞ்சம் வெயிட் பண்ணி பாக்கலாம். ஆடுன காலும் பாடுன வாயும் ஓயாது... ஏதாவது நொட்டை... நொள்ளை கெடைக்காமலா போயிடும்?   04:42:22 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
10
2015
உலகம் இலங்கையின் புதிய அதிபரானார் மைத்ரிபால சிறிசேன வெற்றி
உதவாவிட்டாலும் பரவாயில்லை.. குரல் கொடுக்கிறேன் எனச்சொல்லி.. காசு பறிக்காமல் (புலம் பெயர்ந்த வெளிநாடு வாழ் தமிழர்களிடம்) இருந்தாலே போதுமானது.   04:39:46 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
31
2014
சினிமா சல்மான்கான் படத்துக்கு இனிமேல் தமிழ்நாட்டில் சிக்கல்...
அரசாங்கமும் அரசியல்வாதியும் செய்யவேண்டிய வேலைகளை சினிமாக்காரர்களிடம் எதிர்பார்க்கும் நம் தமிழக மனப்பாங்கு மாறவேண்டும்..   07:40:25 IST
Rate this:
0 members
1 members
36 members
Share this Comment

டிசம்பர்
31
2014
சம்பவம் தாக்காதீங்க... தாக்காதீங்க... இந்தியாவின் பதிலடியில் கதிகலங்கிய பாகிஸ்தான் வெள்ளைக்கொடி காட்டி கதறல்
தென்னிந்தியாவில் இந்த வேலையை ஆரம்பிப்பதற்கு முன்னாள் நம் மீனவர்கள் உண்மையிலேயே எல்லை தாண்டுகிறார்களா என்பதை உறுதிப்படுத்தவேண்டியது மிக அவசியம்.. கடலில் எல்லையை அறிவது கடினமானது. இதை அமல்படுத்த எல்லா மீனவர்கள் படகிலேயும் GPS பொருத்தப்பட வெண்டும்.. அதை கடலோர கண்கானிப்பு மையம் கண்காணிக்கவேண்டும். இது ஒன்றும் அவ்வளவு விலை உயர்ந்த கருவியும் அல்ல.. ஆனால் நம் மீனவர்கள் ஏனோ GPS க்கு உடன்பட மறுக்கிறார்கள்..   07:24:17 IST
Rate this:
6 members
0 members
22 members
Share this Comment

டிசம்பர்
31
2014
சம்பவம் தாக்காதீங்க... தாக்காதீங்க... இந்தியாவின் பதிலடியில் கதிகலங்கிய பாகிஸ்தான் வெள்ளைக்கொடி காட்டி கதறல்
@Consciousram Ram - chennai,யூ.எஸ்.ஏ ===> படிக்கும்போது மிகவும் புத்திசாலித்தனமான கேள்வி போலத் தோன்றுகின்ற ஒரு கேள்வி.. அதுக்கு முன்னாடி சீனா இதுவரை எந்த இந்திய ராணுவ வீரர்களை கொன்றுள்ளது என்று பதிலுக்கு ஒரு சாதாரண கேள்வியை கேட்கத்தோன்றுகிறது.   07:17:09 IST
Rate this:
2 members
0 members
10 members
Share this Comment

டிசம்பர்
24
2014
அரசியல் நரசிம்ம ராவுக்கு பாரத ரத்னா சுப்ரமணிய சாமி கோரிக்கை
சுவாமி சொல்வது சரி.. நேருவின் சோஷலிஸ பொருளாதாரத்தினை பின்பற்றி நாடு வளர்ச்சி பெரிதாக சொல்லிக்கொள்ள முடியாத நிலை பல வருடங்களாக நீடித்து வந்த சமயத்தில் துணிச்சலாக சந்தை பொருளாதாரத்தினை கொண்டுவந்து , இந்தியாவை "பாம்பாட்டி நாடு" என வெளி நாடுகள் கருதி வந்ததை மாற்றி இன்று நாம் அனைத்து துறைகளிலும் முன்னேறுவதற்கு காரணமாக இருந்தவர் திரு.நரசிம்ம ராவ் என்பது அறிவுள்ளவர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதே. அவர் பாரத ரத்னாவிற்கு பொருத்தமானவர்தான்.   05:14:20 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

டிசம்பர்
22
2014
அரசியல் காங்கிரஸ் தலைவர்கள் எவர் மீதாவது வழக்கு உண்டா? பா.ஜ., தலைவர் அமித் ஷாவுக்கு இளங்கோவன் கேள்வி
வழக்கு இனிமேல் வரும்.. சு.சுவாமி சோனியாவின் மீது வழக்கு தொடர ம.மோ.சிங்கிடம் அனுமதி கேட்டார் (அவர் எம்.பி ஆக & கேபினெட் அந்தஸ்துடன் இருப்பதால் அனுமதி தேவை). அது கொடுக்கப்படவில்லை. வாத்ரா மீது பல புகார்கள் இருப்பினும் ஹரியான மாநில அரசு வழக்கு பதிவு செய்யாததுடன் அதை வெளிச்சத்திற்க்கு கொண்டு வந்த இ.ஆ.ப அதிகாரி அசோக் கேம்கா வை எப்படி பந்தாடியது என்பதும் தெரிந்ததே. ஆட்சி மாற்றம் அடைந்து விட்டது. இனி 2G, நிலக்கரி மற்றும் அனைத்து ஊழல்களிலும் பயனடைந்த காங்கிரஸ் தலைமை, மற்றும் தலைவர்கள் வழக்குகளை கண்டிப்பாக சந்திப்பார். இளங்கோவன் இப்பொழுதே மார் தட்டிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை...   05:03:41 IST
Rate this:
10 members
1 members
11 members
Share this Comment

டிசம்பர்
13
2014
அரசியல் பா.ஜ.,வுக்கு இடம் பெயரும் திராவிட தலைகள் அமித் ஷா முன்னிலையில் இணைப்பு படலம்
@Vanavaasam - dallas,fort worth,யூ.எஸ்.ஏ ===> எல்லாம் சரி.. உங்க கிட்டே இவ்ளோ ஆதாரங்கள் இருக்கு. 2003 ல் பாஜக மத்தியில் பதவியிலிருந்து போயாகி விட்டது. 10 வருடம் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. சி.பி.ஐ எப்படி காங்கிரசின் கைப்பாவையாக செயல் பட்டதென்பது வெட்ட வெளிச்சம். இந்த காங்கிரசின் பத்து வருஷத்துல நீங்க சொன்ன அவ்ளோ கொலைகள் குற்றச்சாட்டுகள் எல்லாம் ஏன் விசாரணை கட்டத்திலேயே உள்ளது.. நீங்க போய் இங்க சொன்ன வாக்கு மூலங்களை எல்லாம் சொல்லி எல்லாருக்கும் குறைந்த பட்சம் தூக்கு தண்டணையே வாங்கி குடுக்கலாம் போல இருக்கே.. சீக்கிரம் கெளம்புங்க ஆதாரத்துடன். அமெரிக்காவுல ஃபீனிக்ஸ் & கலி ஃபோர்னியா ல தான் வெயில் அதிகம் என்று கேள்விபட்டிருக்கேன். டெக்சாஸ் ல யுமா?   08:53:25 IST
Rate this:
5 members
0 members
1 members
Share this Comment

டிசம்பர்
13
2014
அரசியல் பா.ஜ.,வுக்கு இடம் பெயரும் திராவிட தலைகள் அமித் ஷா முன்னிலையில் இணைப்பு படலம்
பா.ஜ.க விற்க்கு ஒரு விண்ணப்பம். திராவிட கட்சிகளில் இருந்து வரும் பிரதிநிதிகள் நாட்டு நலனுக்காக உங்கள் கட்சியில் வந்து சேர்பவர்கள் இல்லை என்பதை தீர்க்கமாக மனதில் கொண்டு அணுகவும். சுயலாபத்திற்க்காக ஆயிரம் பேர் இருப்பதை விட தேச நலனுக்காக 10 பேர் இருந்தாலே போதுமானது. இவர்களை நம்பாமல் 2016க்குள் தமிழக மற்றும் அதன் மூலம் இந்திய நலனை பிரதானமாக முன்னெடுத்துச்செல்லும் திட்டகளை நிறைவேற்றுங்கள். அதுதான் தேர்தலில் உங்களுக்கு உதவும். 5 மீனவர்கள் பிரச்சினையில் தீர்வு கண்டது போல, மீனவ பிரச்சினையில் நிரந்தர தீர்வு, ராஜ பக்ஷே உடன் ராஜரீதியாக இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு சம உரிமை போன்றவற்றை முதலில் கையாண்டு, நதிகளை தேசியமயமாக்கி அவற்றை இணைப்பதன் மூலம் இங்கிருந்துகொண்டு புலி துதி பாடி வேறு எந்த தமிழக பொருளாதார முன்னேற்றம் குறித்து ஒரு தெளிவான திட்டங்கள் மற்றும் சிந்தனைகள் இல்லாத, தொலைநோக்கற்ற, தமிழ் ஒன்றை மட்டுமே தங்களது பிழைப்பிற்க்காக பயன் படுத்தும் தேமுதிக, மதிமுக, பாமக போன்ற கட்சிகளை அன்னியப்படுத்தவும். இதுவரை தமிழக மக்கள் தேர்தலில் தவிர்த்து போல இந்த கட்சிகளை நீங்களும் தவிர்க்கவும். தமிழக/இந்திய முனேற்றம் சார்பான திட்டங்களை அமல் படுத்தி செயல் படுத்தினால் 2016ல் இல்லாவிட்டாலும் கண்டிப்பாக ஆட்சியில் விரைவில் அமரலாம். தமிழை மையப்படுத்தி அரசியல் பிழைப்பு நடத்தும் இவர்களுக்கு, ஒரு கட்சியை ஆட்சியில் அமரவைக்கும் வாக்காளர்கள் மத்தியில் கண்டிப்பாக ஆதரவு இல்லை என்பதை புரிந்து கொள்ளவும்.47 வருடமாக இந்த திராவிட இயக்கங்களே ஆட்சியில் இருந்து கொண்டு, மத்தியில் அமைச்சரவையில் பங்கு கொண்டு, இன்னும் தமிழன் வஞ்சிக்கப்படுகிறான் எனக்கூறும் முரண்பாட்டினையும் தமிழர்கள் பிரச்சினையில் நிரந்திர தீர்வு காண முன்வராமல், அந்த தீ அணையாமல் பாதுகாத்து அதன் மூலமே அரசியல் பிழைப்பு நடத்தும் எல்லா கழகங்களின் சுய ரூபத்தினை மக்கள் மத்தியில் கொண்டு சென்றாலே போதுமானது.   01:10:27 IST
Rate this:
35 members
0 members
25 members
Share this Comment