| E-paper

 
Advertisement
Nagai Nagarajan Swaminathan : கருத்துக்கள் ( 739 )
Nagai Nagarajan Swaminathan
Advertisement
Advertisement
மார்ச்
1
2015
அரசியல் நிறுவனங்களுக்கு சாதகமான பட்ஜெட்டா? மறுக்கிறது மத்திய அரசு
மிகுந்த புத்திசாலித்தனத்தோடு தயாரிக்கப்பட்ட, பாராட்டக்கூடிய பட்ஜெட் தான். ஆனாலும் ஏழை, நடுத்தர மக்கள், அரசு, வங்கி ஊழியர்கள் பயன் பெரும் வகையில் வருமானைவரி உச்ச வரம்பை ரூ 3 லக்ஷமாக உயர்த்தி இருக்கலாமே? சேமிப்பின் உச்ச வரம்பை ரூ 2 லக்ஷமாக உயர்த்தி இருக்கலாமே?   09:29:36 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
1
2015
அரசியல் ஜம்மு - காஷ்மீரில் முதல் முறையாக பா.ஜ., கூட்டணி அரசுபல முரண்பாடுகளுடன் துவங்கும் ஆட்சி நிலைக்குமா?
49 நாட்கள் ஜனாதிபதி ஆட்சி முடிவுக்கு வந்து, ஜம்மு-காஷ்மீரில் பிடிபி, பாஜக கூட்டணி அரசு பதவியேற்றதை வரவேற்கிற அதே நேரத்தில் டெல்லியில் முந்தைய கேஜரிவால் அரசு 49 நாட்களில் ஆட்சியை கலைத்து ஜனாதிபதி ஆட்சிக்கு வழிவகுத்தது போல நடக்காமல் இருகட்சிகளும் விட்டுக்கொடுத்து, சிறு சிறு பிரச்னைகளை பெரிதாக்காமல் தொடர்ந்து ஆறு வருடங்கள் ஆட்சி செய்ய வேண்டும். ஆனால் அப்படி நடக்குமா என்ற சந்தேகம், ஆட்சி ஏற்ற முதல் நாளிலேயே ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சுமுகமான முறையில் தேர்தல் நடந்ததற்கு பாகிஸ்தானும், பயங்கரவாதிகளுமே காரணம் என்று பிடிபி தலைவர் முஃப்தி முகமது சயீது தெரிவித்த கருத்தால் சர்ச்சை ஏற்பட்டிருக்கிறதே? இது எதில் போய் முடியுமோ ? முதலில் இரண்டு கட்சிகளும் முரண்பாடான கருத்துக்களை வெளியிடுவதை நிறுத்தினாலே ஆட்சிக்கும் மாநிலத்திற்கும் நல்லது.   09:26:43 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
28
2015
அரசியல் பட்ஜெட்டில் ஏழைகள் குறித்து அதிக கவனம் ரவிசங்கர் பிரசாத்
ஆஹா அதனால் தான் வருமான வரி உயர்வை ஏற்றவில்லையோ? மாதச்சம்பளம் வாங்கும் மத்திய தர நடுத்தர மக்களுக்கு தேவையான எந்த அறிவிப்பும் இல்லை இந்த பட்ஜெட்டில். மோடி தலையிட்டு, இந்த மக்கள் பயன் பெரும் வகையில் வருமான வரி உச்ச வரம்பை குறைந்தது 3 லட்சம் ரூபாயாக உயர்த்தி, சேமிப்பு உச்சவரம்பை 2.5/3 லட்சம் ரூபாயாக உயர்த்தினால் நன்றாக இருக்கும்.   08:11:19 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
1
2015
சம்பவம் கள்ளக்காதலர்கள் திடீர் தலைமறைவு கணவன், மனைவி போலீஸில் புகார்
ஆஹா என்னே இவர்களின் தமிழ் கலாசாரம்? பேசினால், எழுதினால், திரைப்படமோ, டிவி சீரியலோ இந்த நிகழ்ச்சியை போல வந்தால் இந்த தமிழக அரசியல் வியாதிகளும், சமூக, சமுதாய இயக்கங்களும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்களே அவர்கள் இதற்கு என்ன சொல்லப்போகிறார்களோ?   08:03:42 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
1
2015
அரசியல் நாங்க தயார் ஆகலீங்கோ... பிறகு பேசுறோம் முன்னுரிமையை தாரைவார்த்த அ.தி.மு.க.,
அம்மாவிடம் இருந்து ஆணை வராததால் பேச முன்வர வில்லையோ என்னவோ ? ஒரு நல்ல சந்தர்ப்பத்தை இழந்தது அதிமுக. ஆனாலும் இதில் பேசி என்ன ஆகிவிடும் மிடியாவிலும் செய்தி தாள்களிலும் பேசியவர்களின் பெயர் தான் வரும். அதனால் எந்த மாற்றமும் வராது.   07:41:07 IST
Rate this:
1 members
1 members
208 members
Share this Comment

பிப்ரவரி
28
2015
அரசியல் நேரில் அழைத்து பாராட்டு
அது சரி சேர்ந்த உறுப்பினர்கள் பிஜேபிக்கு தான் ஓட்டளிப்பார்களா என்ன ?   07:21:28 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
1
2015
அரசியல் தொழில் வளர்ச்சி, முதலீடுகளை ஈர்க்க பட்ஜெட்டில் அதிரடி திட்டம்
தனி நபர் வருமான வரி விலக்கை குறைந்த பக்ஷம் ரூ 3 லக்ஷமாக உயர்த்தி இருக்கலாம். சேமிப்பின் உச்சவரம்பை அதிக பட்சமாக ரூ 3லக்ஷம் உயர்த்தி இருந்தால் அரசுக்கு ஏற்படும் பற்றாக்குறையை ஓரளவு சீர் செய்யலாமே? பற்றாக்குறையைக் குறைப்பதற்கான வழிவகைகள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை. பற்றாக்குறையைக் குறைக்க வளர்ச்சியை மட்டுமே அரசு சார்ந்துள்ளது. இது விவேகமான அணுகுமுறை அல்ல.   07:15:44 IST
Rate this:
4 members
0 members
51 members
Share this Comment

பிப்ரவரி
27
2015
கோர்ட் ஜெ., வழக்கு பவானி சிங்கை நீக்க தி.மு.க., மனு
திமுக வேண்டுமென்றே வழக்கை 2016 தேர்தல் வரை நீட்டிக்க முயல்கிறதோ?   16:20:47 IST
Rate this:
0 members
0 members
20 members
Share this Comment

பிப்ரவரி
27
2015
அரசியல் பொருளாதார வளர்ச்சி நன்றாக இருக்கும் லோக்சபாவில் ஆய்வறிக்கை தாக்கல்
சீதாரம் எச்சூரி போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு அரசின் திட்டங்களையும் செயல்களையும் எதிர்த்துக்கொண்டே இருக்க வேண்டும். வேறொன்றும் தெரியாது. உண்மையான ஆய்வறிக்கையை நிதி அமைச்சரிடமிருந்து வாங்கி இந்த மேதாவிகள் படித்தால் தெரியும் எது பொய் எது உண்மை என்று. வெளிநாட்டு இறக்குமதி குறைந்து உள்நாட்டு பொருட்களின் ஏற்றுமதி அதிகரித்தால் நாட்டின் பொருளாதாரம் மேம்படும் என்ற அரிச்சுவடி கூட தெரியாதவர்களா இவர்கள்.சரியான பருவமழை பொழிவு இல்லாததால் வேளாண் வளர்ச்சி குறைந்துள்ளது அனைவரும் அறிந்ததே? ஆனாலும் தேவையான அளவுக்கு மேல் வேளாண் உற்பத்தி இருக்கிறதே   16:15:31 IST
Rate this:
1 members
0 members
16 members
Share this Comment

பிப்ரவரி
26
2015
அரசியல் பிரதமர் மோடிக்கு பா.ஜ., பாராட்டு
முடிவு சரிதான். ஆனால் மாநில அரசுகள் மத்திய வருவாயை தங்களது சொந்த பந்தங்களுக்கும், கட்சிகளின் அடிவருடிகளுக்கும், தேர்தலை முன்னிட்டு இலவச பொருட்களுக்கும், செலவு செய்யாமால் ஒழுங்காக மாநில திட்டங்களுக்கு மட்டுமே செலவு செய்யவேண்டும். அந்த செலவை மத்திய அரசு கண்காணிக்க வேண்டும். வருடத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை செய்யும் செலவுக்கு கணக்கு காட்டவேண்டும்.   08:00:10 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment