E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
Manickam : கருத்துக்கள் ( 254 )
Manickam
Advertisement
Advertisement
ஜூலை
7
2014
அரசியல் தலைமை தேர்தல் கமிஷனர் மீது வழக்கு ஜனாதிபதிக்கு விஜயகாந்த் கடிதம்
@காசிமணி பேசிவ் ஸ்மோகிங் கேள்வி பட்டுள்ளேன். முதல் முறையாக பேசிவ் டிரிங்கிங் இப்பதான் கேள்விபடுகிறேன். எதுக்கும் கேப்டனை விட்டு கொஞ்சம் விலகியே நில்லுங்கள்.   10:23:22 IST
Rate this:
2 members
0 members
6 members
Share this Comment

மே
29
2014
பொது ஜூன் முதல் மின் தடை தளர்வு சாத்தியமா அரசு உத்தரவை செயல்படுத்துவதில் சந்தேகம்
3000MW அளவு 20 ஆண்டுகளுக்கு புதிதாக போடப்பட்ட ஒப்பந்தந்தின் அடிப்படையில் ஆகஸ்ட் முதல் வாரம் முதல் வட மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு கிடைக்க இருக்கிறது. வடக்கையும் தெற்கையும் இணைக்கும் மின் வழி பாதை கட்டுமான பணி போர் கால அடிப்படையில் முழு வீச்சில் நடைபெறுகிறது. இது ஜூலை கடைசி வாரத்தில் முடியும் என நிச்சயம் எதிர்பார்க்கபடுகிறது. ஜூன் முதல் செப்டம்பர் வரை காற்றாலை மின் உற்பத்தி அதிகம் இருக்கும். மின்வெட்டை சரி செய்ய சுமார் 2000MW முதல் 2500MW மட்டுமே தேவை. ஆகஸ்ட் முதல் வாரம் வரை காற்றாலை மின் உற்பத்தியை பயன்படுத்தி மின் வெட்டை நீக்கலாம். ஆகஸ்ட் முதல் 3000 MW கூடுதல் மின்சாரம் வர இருப்பதால் நிச்சயம் மின்வெட்டு நிச்சயமாக ஒழிக்கப்படும். இது சாத்தியமே. மேலும் காற்றாலை மின் உற்பத்தியும் சேர்த்தால் ஆகஸ்ட் முதல் தமிழகத்தில் மின் நிலைமை உபரியாக இருக்கும். தற்போது கட்டுமானத்தில் வல்லூர், வட சென்னை புதிய அலகுகளில் இருந்து மின் உற்பத்தி இந்த ஆண்டு இறுதியில் தொடங்குகிறது. ராமநாதபுரத்தில் சூரிய மின் உற்பத்தி பூங்கா மூலம் மின்சாரம் தயாரிக்கும் கட்டுமான பணி மின்னல் வேகத்தில் நடக்கிறது. கூடங்குளம் 2 வது அலகு மூலம் மின்சாரம் கிடைக்க இருக்கிறது. மொத்தத்தில் தமிழகம் மின் உபரி மாநிலமாக, தொழில் வளர்ச்சி பெருகும் மாநிலமாக திகழ போகிறது. 2014-2015, 2015-2016 ஆண்டு தமிழகத்தின் வளர்ச்சி இந்தியாவின் மாநிலங்களில் முதன்மையானதாக இருக்கும். 2016 சட்ட பேரவை தேர்தலில் அதிமுக அமோக வெற்றிபெறும். மீண்டும் ஜெயா முதல்வராவார்.   12:46:54 IST
Rate this:
24 members
0 members
24 members
Share this Comment

மே
26
2014
அரசியல் அன்புமணிக்கு அமைச்சர் பதவி இல்லை வழக்கை காட்டி தள்ளிவைத்தது பா.ஜ.,
அது சரி அன்புமணிக்கு வோட்டு கேட்டு மோடி பிரச்சாரம் செய்தபோது இந்த வழக்கு நினைவில் இல்லையா மோடிக்கு? சும்மா கதை விடாதீர்கள். என்ன இருந்தாலும் தமிழகத்துக்கு ஒரு அமைச்சர் பதவி அதுவும் இணை அமைச்சர் பதவி என்பது அசிங்கமே. மத்திய அமைச்சரவையில் எந்த கொள்கை முடிவிலும் தமிழகத்தின் உரிமை ஓங்கி ஒலிக்காது. ஒரு வேலை தமிழக உரிமை பிரச்சனைகள் தமிழக முதல்வர் அம்மாவுடன் நேரிடையாக மோடியால் தீர்க்கப்படும் என்பதால் இதை பெரிதாக எடுத்து கொள்ள தேவை இல்லையா? பொறுத்திருந்து பார்ப்போம்.   00:49:55 IST
Rate this:
39 members
4 members
56 members
Share this Comment

மே
26
2014
அரசியல் மைத்துனருக்கு இல்லாவிட்டால் மனைவிக்கு பதவி காரியம் சாதிக்க விஜயகாந்த் டில்லியில் முகாம்
ஏற்கனவே ராஜ்யசபாவில் பிஜேபிக்கு வெகுவாக ராஜ்ய சபா எம்பிக்கள் பற்றாகுறை. இதுல வேலியில போற ஓணானை யாராவது வேட்டியில் எடுத்து விடுவாங்களா? தற்போது மத்திய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ள நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இராணி, அருண் ஜெட்லி இன்னும் சிலர் எம்பிக்களாக இல்லை. இவர்கள் ராஜ்ய சபா எம்பிக்களாக தேர்ந்தெடுக்க படவேண்டும். அதுக்கே பிஜேபி கூட்டணி கட்சிகளோடு முட்டி மோதணும். நிலைமை இவ்வாறு இருக்க மச்சானுக்கும், மனைவிக்கும் ராஜ்யசபா எம்பி எங்கிருந்து கிடைக்கும்?. இதை எல்லாம் அலசி ஆராய்ந்து அதற்கு வாய்ப்பில்லை என்று புரிந்து கொள்ளும் நிலையிலா விஸ்கிகாந்த் இருக்கிறார். இப்படி அரசியல் அடிப்படை அறிவு இல்லாத இந்த ஆளை நம்பியும் சிலர் வாக்களிக்கிறார்கள் என்றால் என்னத்த சொல்ல   00:40:20 IST
Rate this:
86 members
0 members
190 members
Share this Comment

மே
26
2014
பொது ரயில் விபத்து நிவாரணப் பணிகளுக்கு மோடி உத்தரவு
அதே ரயில் விபத்தில் இன்று யூ.பி யில் 21 பேர் உயிரிழந்துள்ளார்கள். பாவம் அந்த 21 பேர். நேர காலம் தெரியாம உயிரிழந்துள்ளார்கள். மோடி பதவி ஏற்கிற இன்னைக்கு போயி செத்துள்ளார்கள். ஒரு ஊடகம் கூட அதை பற்றி விரிவான செய்தி வெளியிடவில்லை. இதுவே காங்கிரஸ் அரசா இருந்தா விதவிதமான புகைப்படங்களுடன் கோர காட்சிகளுடன் தலைப்பு செய்தியாக ஓடிகொண்டிருக்கும். அதிகார போதையில் உயிர்களின் மதிப்பு அவ்வளவுதான். புது வீடு, புது பதவி ஏற்கும்போது குலதெய்வத்துக்கு ரத்த பலி கொடுப்பது போல் இந்த நிகழ்வை கருதி இனி மோடி பதவி ஏற்கலாம். என்ன கருமமோ கன்றாவியோ. மோடி பதவி ஏற்ற பிறகாவது மற்ற செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள் அய்யா   17:03:46 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
26
2014
அரசியல் ராஜபக் ஷேவுக்கு எதிர்ப்பு மோடியின் ராஜதந்திரம் புரியாமல் நடக்கும் கூத்து
ரவீந்திரன் துரைசாமி இதுநாள் வரை ஒரு திமுக எடுபிடி. டிவி நிகழ்சிகளில் கலந்து கொள்ளும்போது திமுகவை உச்ச நிலையில் வைத்து சிறுபான்மை வாக்குகள் தலித் வாக்குகள் திமுக வுக்கு சிந்தாமல் சிதறாமல் கிடைக்கும் அதன் மூலம் திமுக 20 தொகுதிகளில் வெற்றிபெறும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பையே பொய் என்று கூறி இன்று அவமான பட்டு அசிங்கப்ட்டு நிற்கிறார். தேர்தலுக்கு பிறகு பிஜேபி கூட்டணியில் திமுக சேரும். முக குடும்பத்தை காப்பாற்றி விடலாம் என்று நினைத்தார். இந்த படி காசு புலவருக்கு இன்று போக்கிடம் தெரியாமல் பிஜேபி பக்கம் சாய்ந்து பிஜேபி திமுக தேமுதிக கூட்டணிக்கு முயற்சி செய்கிறார். வாங்கின காசுக்கு கூவவில்லை எனில் வெளுத்து வாங்கிட மாட்டாங்க.   14:35:49 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

மே
26
2014
அரசியல் நரேந்திரமோடி பதவியேற்கும் நாள் பலன் எப்படி? ஆற்காடு ஜோதிடர் கணிப்பு
அப்படின்னா உலகத்துல உள்ள எவன் ஜாதகமும் வேலை செய்யாது.மோடியின் ஜாதகம் மட்டுமே வேலை செய்யும். இதனால தெரிவிப்பது என்னவென்றால் மோடி ஜாதகம் மட்டுமே வேலை செய்யபோகிறது என்பதால் அவன் அவன் வீட்டிலேயே முடங்கி கொள்ளுங்கள். ஒபாமா, புடின், கேமரூன் இவர்களின் ஜாதகம் இனி வேலை செய்யாது. இவர்கள் எல்லாம் இடுப்புல துண்டை கட்டிக்கொண்டு மோடிக்கும் சேவகம் செய்யபோகிறார்கள். என்ன கருமமோ? இவர்களை ஆயிரம் பெரியார் வந்தாலும் திருத்தமுடியாது.   14:23:37 IST
Rate this:
8 members
0 members
33 members
Share this Comment

மே
26
2014
அரசியல் மீனவர்கள் விடுவிப்பு ஏமாற்று வேலை வைகோ
சரிதானே இன்னைக்கு 5 பேரை விடுவான். நாளைக்கு 10 பேரை பிடித்து கொண்டு போவான். இப்படியே பிடிப்பது விடுவிப்பதும் இவர்களுக்கு ஒரு பொழுதுபோக்கு விளையாட்டு. இதுக்கு இதுநாள்வரை மன்னுமோகன் ரெப்ரீ. இனிமே மோடி ரெப்ரீ. இலங்கைக்கு சீனாதான் நண்பன். நமக்கு எதிரியே.   13:34:41 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

மே
25
2014
உலகம் அழைப்புக்கு கிடைக்குது அறிய பரிசு பாக்.,- இலங்கை மீனவர்களை விடுவித்தது
இன்னும் எத்தனை நாளைக்கு ஊடகங்கள் தவறான தகவல்களை மோடிக்கு ஆதரவாக வெளியிடுவீர்கள். இலங்கை வெறும் 5 இந்திய மீனவர்களை மட்டுமே விடுவிக்க உள்ளதாக சிங்கள ஊடகங்கள் உறுதி படுத்தி உள்ளன. மோடியின் ஊடக மாயாஜாலம் இன்னும் முடியவில்லையா. இப்படியே போனால் நாடு குட்டி சுவராகி விடும். எனக்கு என்னமோ மோடி அரசை ஊடகங்கள் மூலமா நடத்த போவது போல் தெரிகிறது. பதவியே இன்னும் ஏற்று கொள்ளவில்லை. அதுக்குள்ள வெற்றியா? வடிவேல் கம்பு சண்டையில கப்பு வாங்கின கதை மாதிரி உள்ளது. இப்படியே போனால் மண்ணு மோகன் போல மோடியும் இன்னொரு கைப்புள்ள ஆகவேண்டியதுதான். ஊடகங்களும் தனது ஈரலை வெளியே எடுத்து வைத்துவிட்டு மோடிக்கு ஆதரவாக செய்தி வெளியிடுகிறீர்கள். மனித உரிமை மீறலில் மோடிக்கு துணையாக ராஜபக்சே இருப்ப்பார் என்பதில் ஐயமில்லை.   14:33:39 IST
Rate this:
43 members
1 members
27 members
Share this Comment

மே
25
2014
அரசியல் பெரியாறு அணை நீர்மட்டம் உயர்த்தும் விவகாரம் மோடியை சந்திப்பாரா ஜெ.,
எதுக்கு மோடியை சந்திக்கவேண்டும்? உச்ச நீதிமன்ற உத்தரவு படி தமிழக சார்பில் முதல்வர் ஜெயாவால் ஒரு பொறுப்பாளர் உடனடியாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் கேரளாவால் அம்மாநில அரசு நியமிக்கவேண்டும். இதுதான் உச்ச நீதிமன்ற தீர்ப்பு. இதற்கும் மோடியை சந்திப்பதற்கும் என்ன சம்பந்தம். ஒரு வேலை உச்ச நீதிமன்ற தீர்ப்பை கேரளா மதிக்கவில்லை எனில் ஜெயா மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுகவேண்டுமே தவிர மோடியை அல்ல. உடனே இகோ பிரச்னை எக்கோ பிரச்னை என்று சிலர் பினாத்த ஆரம்பித்து விட்டார்கள். அடிப்படை அறிவு இல்லாதவர்கள். காவேரி தீர்ப்பை அரசிதழில் வெளியிட செய்தது, முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுத்தது எல்லாமே ஜெயாவின் நடவடிக்கையால், சட்ட போராட்டத்தால் சாத்தியமானது. அதற்கு எந்த கேடியும் உதவாதபோது இப்போது மட்டும் மோடியை ஏன் சந்திக்கவேண்டும்.   12:03:48 IST
Rate this:
2 members
0 members
10 members
Share this Comment