Advertisement
தினமலர் முதல் பக்கம் » சிவஸ்ரீ. விபூதிபூஷண் அவரது கருத்துக்கள்
சிவஸ்ரீ. விபூதிபூஷண் : கருத்துக்கள் ( 35 )
சிவஸ்ரீ. விபூதிபூஷண்
Advertisement
ஜூன்
17
2013
பொது கோவையிலுள்ள "அம்மா உணவகங்கள்யாருக்காக? "குடிமகன்களின் கூடாரமாகும் அவலம்
கோவையில் அம்மா உணவகங்கள் யாருக்குப் பயன் படுகின்றன என்பதை த்தெளிவாக எழுதிய தினமலருக்கு நன்றி. பல்வேறு நகரங்களிலும் அமல் படுத்துள்ள இந்தத்திட்டம் முறையாக அமல்படுத்தப்படுகின்றதா என்பதையும் அறிந்து எழுதினால். மக்களுக்கு பயன்படும். அரசும் தனது திட்டத்தினை மேம்படுத்த வழிவகுக்கும். இந்த செய்தி வலியுறுத்தும் கீழ்கண்ட இரண்டு மாற்றங்களை அம்மா உணவகத்திட்டத்தில் செய்ய வேண்டும். ஒன்று) அம்மா உணவகம் திட்டம் உழைக்கும் மக்களுக்கு பயன்பட வேண்டும். குடிகாரர்களுக்கு அதாவது குடித்துவிட்டு வந்திருப்பவர்களுக்கு டோக்கன் வழங்க்கப்படக்கூடாது. இரண்டு) வருகின்ற ஏழை மக்கள் எல்லோருக்கும் உணவு வழங்கப்பட வேண்டும்.   11:39:26 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
16
2013
விவாதம் நிதீஷ் பிடிவாதம் நியாயமானதா?
திரு நிதிஷ்குமார் பிரதமர் பதவிக்கு ஆசைப்படுகிறார். கூட்டணி தர்மத்திற்கு இது தகாது. திரு மோதி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் அந்த வாய்ப்பு கிடைக்காது. மூன்றாவதோ இல்லை நான்காவதோ ஒரு அணி ஆட்சிக்கு வருமானால் தனக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று அவர் நினைக்கிறார். ஆனால் முலாயம் சிங் விடுவாரா இல்லை மம்தா தான் விடுவாரா. தடியெடுத்தவரெல்லாம் தண்டல் காரர்கள் என்ற நிலையுள்ள மூன்றாவது அணிக்கு வாய்ப்பு குறைவு. திரு மோதியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தால் இருக்கிற எம்பி சீட்டுகளும் திரு நிதீஷ் கட்சிக்கு பீகாரில் கிடைக்காது. உள்ளதும் போய் இலவுகாத்தக் கிளியாய் நிதீஷ்.   11:53:37 IST
Rate this:
1 members
0 members
14 members
Share this Comment

ஜூன்
16
2013
அரசியல் முலாயம் தலைமையில் தனி அணி அமைக்க தீவிரம்
இந்த முலாயம் சிங் காங்கிரசுக்குமாற்று அல்ல. இவர் சில்லரைவர்த்தகத்தில் நாட்டை ஏமாற்றினார். இவரை ஆதரிக்கும் இடது சாரிகளும் காங்கிரசை ஆதரித்தவர்கள்தான். மீண்டும் ஆதரிப்பார்கள். காங்கிரசுக்கு ஒரே மாற்று பாஜக மட்டுமே. மற்றவை கானல் நீர். மூன்றாவது அணி நான்காவது அணியெல்லாம் காங்கிரசையே பலப்படுத்தும். திரு மோதி ஜி அவர்களையும் அவரை ஆதரிக்கும் கட்சிகளை மட்டுமே ஆதரிப்பதன் மூலம் நாடு நலம் பெறும். இல்லாவிட்டால் அன்னிய சோனியாவின் ஊழல் காங்கிரஸ் ஆட்சியே தொடரும். வெல்க பாரதம்   10:21:50 IST
Rate this:
8 members
0 members
45 members
Share this Comment

ஜூன்
10
2013
விவாதம் மோடிக்கு முக்கிய பதவி பா.ஜ.,வுக்கு...?
குஜராத் முதல்வர் மாண்புமிகு மோடி அவர்கள் பாஜகவின் தேர்தல் பிரச்சாரக்கமிட்டியின் தலைவராயிருப்பது மட்டும் போதாது. அவர் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படவும் வேண்டும். இன்றைய பாரதம் வேண்டுவது வலிமையான உறுதியான தலைமையை. அதனை திரு மோடிஜி மட்டுமே அளிக்கமுடியும். தலையாட்டி தலைவர்களோ வயதான தலைவர்களால் பெரிதாக ஒன்றும் சாதித்துவிடமுடியாது. வாழ்க பாரதம்.   13:44:25 IST
Rate this:
9 members
0 members
38 members
Share this Comment

மே
11
2013
விவாதம் பாங்க் மூலம் மான்யம் பலன் தருமா?
நேரடி மானியம் என்பது எதற்கும் பயன் தராது. அதனை எதற்காகப் பெறுகிறார்களோ அதற்காக அவர்கள் பயன்படுத்துவார்கள் என்று சொல்ல முடியாது. உணவுக்குக் கொடுக்கப்படும் மானியம் கணவனால் குடிக்கப் பயன்படுத்தப்படலாம்.   10:05:07 IST
Rate this:
1 members
0 members
44 members
Share this Comment

மே
6
2013
பொது கடிகாரத்தை ஓடவைக்கும் பசு கோமியம்
பசுவின் கோமியத்திலிருந்து மின்சாரம் தயாரிக்கும் முறையை கண்டுபிடித்த டாக்டர் பாராட்டுக்குறியவர். இதனை அதிகரிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள், செலவு வருவாய் விகிதம் ஆகிய ஆய்வுகளுக்கும் உட்படுத்தி மக்களுக்கு குறைந்த விலையில் மின்சாரம் அளிக்க முடியுமா என்று பார்க்கவேண்டும். இந்த கோமியம் நாட்டுப்பசு கோமியமா சீமைப்பசு கோமியமா என்பதும் தெளிவு படுத்தவேண்டும். இரண்டில் சிறந்தது எது என்றும் கண்டறியப்படவேண்டும்.   08:49:07 IST
Rate this:
1 members
1 members
7 members
Share this Comment

ஏப்ரல்
18
2013
விவாதம் கூட்டுறவு சங்கத் தேர்தல் தேவையா?
கூட்டுறவு சங்கங்கள் அரசு நிறுவனங்கள் அன்று. அவை மக்களின் சங்கங்கள்.அரசு ஒரு உறுப்பினர் அவ்வளவுதான்.மக்கள் நிறுவனங்கள் தேர்தலின்றி அரசு அதிகாரிகளால் நடத்தப்படலாம். என்பது சட்டமன்றத்திற்கும் பாராளுமன்றத்திற்கும் தேர்தல் தேவை இல்லை என்பதைப்போன்ற அறிவீனம். புரிந்துகொள்ளவேண்டும்..தேவை நேர்மையான, ஒழுங்கான,முறையான வன்முறையற்ற த்தேர்தல் தான்.   08:13:05 IST
Rate this:
3 members
0 members
5 members
Share this Comment

ஏப்ரல்
18
2013
விவாதம் கூட்டுறவு சங்கத் தேர்தல் தேவையா?
கூட்டுறவின் அடிப்படை க்கொள்கைகளில் ஒன்று மக்களாட்சி. ஒரு ஆளுக்கு ஒரு வாக்கு என்பது. ஜனனாயகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் தான் கூட்டுறவு நிர்வாகத்தினை நடத்தவேண்டும் என்பது உலகளாவிய கூட்டுறவு விதி கோட்பாடு. கூட்டுறவு சங்கங்களில் தேர்தல் நடக்காமல் இருந்தால் அதிகாரிகள் கொள்ளை அடிப்பார்கள். நடந்தால் அரசியல் வாதிகள் அதனை செய்வார் கள் என்றாலும் ஜன நாயக அணுகுமுறை உறுப்பினர்களுக்கு மக்களுக்கு பெரிதும் நலன் பயக்கும். பிரச்சினைகள் இதில் இரண்டு. ஒன்று சம்பந்தமில்லாதவர்களை கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக்குவது. விவசாயக்கூட்டுறவு சங்கங்களில் விவசாயமே செய்யாதவர்களை உறுப்பினர் ஆக்கி தலைவரும் ஆக்குவது. இரண்டாவது அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்துதல். கட்சிகளுக்கிடையில் போராட்டாம் சச்சரவு. இதில் இரண்டாவதை இப்போதைக்குத்தவிர்க முடியாது. ஆனால் சம்பந்தமில்லாதவர்களை கூட்டுறவில் சேர்க்கும் அனியாயத்தினை தவிர்க்கவேண்டும். தேர்தல்கள் காலந்தோரும் முறைப்படி நடத்தப்படவேண்டும். வன்முறை யாளர்கள் ஒடுக்கப்படவேண்டும். இந்த வன்முறை க்கலாச்சாரத்தினை அன்னியரைக்கூட்டுறவில் ஆதிக்கத்திற்கு கொண்டுவரும் போக்கினை முற்றிலும் நீக்கவேண்டும்.    08:02:00 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

ஏப்ரல்
19
2013
பொது ஜெய ஜெய ராம் ஜெய ரகுராம்: இன்று ராமநவமி
ராம் என்ற வடமொழிச்சொல்லின் பொருள் குளிர்ச்சியான சந்திரன் என்பது சரியான பொருளாகத்தெரியவில்லை. ஸ்ரீ ராமச்சந்திரன் என்பதே ராமபிரானின் முழுமையான பெயர். ராம் என்றால் அழகு என்பதே சரியான பொருள். அபிராமி என்றால் மேலான அழகு என்பதும் பொருள்.எனக்குத்தெரிந்த தனித்தமிழ் பெரியவர் ராமசாமி என்ற தனது சமஸ்கிருதப் பெயரை இறைஎழிலன் என்று மாற்றிக்கொண்டார். ஆகவே ராமன் என்றால் எழிலன் என்பதே சரியாக இருக்கும். பெருமாளாம் ஸ்ரீ ராமபிரானின் அடியார்கள் அனைவருக்கும் ஸ்ரீ ராம நவமி வாழ்த்துக்கள். சிவஸ்ரீ.   07:56:23 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஏப்ரல்
15
2013
அரசியல் அண்ணாமலை பல்கலை கழக இணைவேந்தரின் அதிகாரங்கள் பறிப்பு! பல்கலை நிர்வாகத்தில் அரசு முழுமையாக தலையிட புது சட்டம்
அண்ணாமலை ப்பல்கலைக்கழகம் மானிலப்பல்கலைக்கழகம் அது நாட்டின் பொது சொத்து. ஒரு குடும்ப சொத்து அன்று. அதனை ஸ்தாபிதம் செய்ததைப்பாராட்டி நிறுவனருக்கு அவரது வாரீசுகளுக்கு சில நிர்வாகப்பொறுப்புக்கள் சட்டத்தில் வழங்கப்பட்டிருந்தன. அதனை நிறுவனர் குடும்பம் எல்லையில்லாத அளவில் துஸ்பிரயோகம் முறைகேடு செய்தது உண்மை சிதம்பரத்தில் ஏன் கடலூர் மாவட்டத்தில் உள்ளோர் அனைவரும் அறிவர். ஆகவே அரசின் நடவடிக்கை நூற்றுக்கு நூறு சரி. அந்த ஊழல் குடும்பத்தினை ஆதரிப்போர் பலன் பெற்ற கமிசன் ஏஜண்டுகள் மட்டுமே. அவர்களை ஆதரித்து நீங்களும் சீட்டுவிற்ற ஆசிரியர் அலுவர் பணிகளை கூறு போட்டு விற்ற கமிசன் ஏஜண்டுகளின் கேடுகெட்ட க்கூட்டத்தில் சேராதீர். மாண்புமிக்க எம் தாயே அண்ணாமலைப்பல்கலைக்கழகமே மீண்டும் நெடிதுயர்ந்து நீடுவாழி.    08:42:57 IST
Rate this:
3 members
0 members
12 members
Share this Comment