Advertisement
தினமலர் முதல் பக்கம் » சிவஸ்ரீ. விபூதிபூஷண் அவரது கருத்துக்கள்
சிவஸ்ரீ. விபூதிபூஷண் : கருத்துக்கள் ( 31 )
சிவஸ்ரீ. விபூதிபூஷண்
Advertisement
மே
11
2013
விவாதம் பாங்க் மூலம் மான்யம் பலன் தருமா?
நேரடி மானியம் என்பது எதற்கும் பயன் தராது. அதனை எதற்காகப் பெறுகிறார்களோ அதற்காக அவர்கள் பயன்படுத்துவார்கள் என்று சொல்ல முடியாது. உணவுக்குக் கொடுக்கப்படும் மானியம் கணவனால் குடிக்கப் பயன்படுத்தப்படலாம்.   10:05:07 IST
Rate this:
1 members
0 members
44 members
Share this Comment

மே
6
2013
பொது கடிகாரத்தை ஓடவைக்கும் பசு கோமியம்
பசுவின் கோமியத்திலிருந்து மின்சாரம் தயாரிக்கும் முறையை கண்டுபிடித்த டாக்டர் பாராட்டுக்குறியவர். இதனை அதிகரிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள், செலவு வருவாய் விகிதம் ஆகிய ஆய்வுகளுக்கும் உட்படுத்தி மக்களுக்கு குறைந்த விலையில் மின்சாரம் அளிக்க முடியுமா என்று பார்க்கவேண்டும். இந்த கோமியம் நாட்டுப்பசு கோமியமா சீமைப்பசு கோமியமா என்பதும் தெளிவு படுத்தவேண்டும். இரண்டில் சிறந்தது எது என்றும் கண்டறியப்படவேண்டும்.   08:49:07 IST
Rate this:
1 members
1 members
7 members
Share this Comment

ஏப்ரல்
18
2013
விவாதம் கூட்டுறவு சங்கத் தேர்தல் தேவையா?
கூட்டுறவு சங்கங்கள் அரசு நிறுவனங்கள் அன்று. அவை மக்களின் சங்கங்கள்.அரசு ஒரு உறுப்பினர் அவ்வளவுதான்.மக்கள் நிறுவனங்கள் தேர்தலின்றி அரசு அதிகாரிகளால் நடத்தப்படலாம். என்பது சட்டமன்றத்திற்கும் பாராளுமன்றத்திற்கும் தேர்தல் தேவை இல்லை என்பதைப்போன்ற அறிவீனம். புரிந்துகொள்ளவேண்டும்..தேவை நேர்மையான, ஒழுங்கான,முறையான வன்முறையற்ற த்தேர்தல் தான்.   08:13:05 IST
Rate this:
3 members
0 members
5 members
Share this Comment

ஏப்ரல்
18
2013
விவாதம் கூட்டுறவு சங்கத் தேர்தல் தேவையா?
கூட்டுறவின் அடிப்படை க்கொள்கைகளில் ஒன்று மக்களாட்சி. ஒரு ஆளுக்கு ஒரு வாக்கு என்பது. ஜனனாயகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் தான் கூட்டுறவு நிர்வாகத்தினை நடத்தவேண்டும் என்பது உலகளாவிய கூட்டுறவு விதி கோட்பாடு. கூட்டுறவு சங்கங்களில் தேர்தல் நடக்காமல் இருந்தால் அதிகாரிகள் கொள்ளை அடிப்பார்கள். நடந்தால் அரசியல் வாதிகள் அதனை செய்வார் கள் என்றாலும் ஜன நாயக அணுகுமுறை உறுப்பினர்களுக்கு மக்களுக்கு பெரிதும் நலன் பயக்கும். பிரச்சினைகள் இதில் இரண்டு. ஒன்று சம்பந்தமில்லாதவர்களை கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக்குவது. விவசாயக்கூட்டுறவு சங்கங்களில் விவசாயமே செய்யாதவர்களை உறுப்பினர் ஆக்கி தலைவரும் ஆக்குவது. இரண்டாவது அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்துதல். கட்சிகளுக்கிடையில் போராட்டாம் சச்சரவு. இதில் இரண்டாவதை இப்போதைக்குத்தவிர்க முடியாது. ஆனால் சம்பந்தமில்லாதவர்களை கூட்டுறவில் சேர்க்கும் அனியாயத்தினை தவிர்க்கவேண்டும். தேர்தல்கள் காலந்தோரும் முறைப்படி நடத்தப்படவேண்டும். வன்முறை யாளர்கள் ஒடுக்கப்படவேண்டும். இந்த வன்முறை க்கலாச்சாரத்தினை அன்னியரைக்கூட்டுறவில் ஆதிக்கத்திற்கு கொண்டுவரும் போக்கினை முற்றிலும் நீக்கவேண்டும்.    08:02:00 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

ஏப்ரல்
19
2013
பொது ஜெய ஜெய ராம் ஜெய ரகுராம்: இன்று ராமநவமி
ராம் என்ற வடமொழிச்சொல்லின் பொருள் குளிர்ச்சியான சந்திரன் என்பது சரியான பொருளாகத்தெரியவில்லை. ஸ்ரீ ராமச்சந்திரன் என்பதே ராமபிரானின் முழுமையான பெயர். ராம் என்றால் அழகு என்பதே சரியான பொருள். அபிராமி என்றால் மேலான அழகு என்பதும் பொருள்.எனக்குத்தெரிந்த தனித்தமிழ் பெரியவர் ராமசாமி என்ற தனது சமஸ்கிருதப் பெயரை இறைஎழிலன் என்று மாற்றிக்கொண்டார். ஆகவே ராமன் என்றால் எழிலன் என்பதே சரியாக இருக்கும். பெருமாளாம் ஸ்ரீ ராமபிரானின் அடியார்கள் அனைவருக்கும் ஸ்ரீ ராம நவமி வாழ்த்துக்கள். சிவஸ்ரீ.   07:56:23 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஏப்ரல்
15
2013
அரசியல் அண்ணாமலை பல்கலை கழக இணைவேந்தரின் அதிகாரங்கள் பறிப்பு! பல்கலை நிர்வாகத்தில் அரசு முழுமையாக தலையிட புது சட்டம்
அண்ணாமலை ப்பல்கலைக்கழகம் மானிலப்பல்கலைக்கழகம் அது நாட்டின் பொது சொத்து. ஒரு குடும்ப சொத்து அன்று. அதனை ஸ்தாபிதம் செய்ததைப்பாராட்டி நிறுவனருக்கு அவரது வாரீசுகளுக்கு சில நிர்வாகப்பொறுப்புக்கள் சட்டத்தில் வழங்கப்பட்டிருந்தன. அதனை நிறுவனர் குடும்பம் எல்லையில்லாத அளவில் துஸ்பிரயோகம் முறைகேடு செய்தது உண்மை சிதம்பரத்தில் ஏன் கடலூர் மாவட்டத்தில் உள்ளோர் அனைவரும் அறிவர். ஆகவே அரசின் நடவடிக்கை நூற்றுக்கு நூறு சரி. அந்த ஊழல் குடும்பத்தினை ஆதரிப்போர் பலன் பெற்ற கமிசன் ஏஜண்டுகள் மட்டுமே. அவர்களை ஆதரித்து நீங்களும் சீட்டுவிற்ற ஆசிரியர் அலுவர் பணிகளை கூறு போட்டு விற்ற கமிசன் ஏஜண்டுகளின் கேடுகெட்ட க்கூட்டத்தில் சேராதீர். மாண்புமிக்க எம் தாயே அண்ணாமலைப்பல்கலைக்கழகமே மீண்டும் நெடிதுயர்ந்து நீடுவாழி.    08:42:57 IST
Rate this:
3 members
0 members
12 members
Share this Comment

ஏப்ரல்
15
2013
அரசியல் மோடிக்கு நிதிஷ் சான்றிதழ் தர வேண்டிய அவசியம் இல்லை: பாரதிய ஜனதா பாய்ச்சல்
இந்த நிதீஷ்குமார் காட்டுவது வெறும் பூச்சாண்டி மட்டுமே. பாரததேசம் முழுவதும் மோதி அலை வீசத்தொடங்கிவிட்டது. அதற்கு எதிராக நிதீஸ்குமார் நீச்சல் போட்டால் அவர் காணாமல் போவது நிச்சயம். ஸ்ரீ மோதி யை விட சிறந்த வேட்பாளர் யாரும் இல்லை. காங்கிரசுக்கு மாற்று பாஜக என்றாலும் தேசம் இப்போது எதிர் நோக்குவது துணிச்சலால பலமான திறமையான பிரதமர். அதற்கு ஸ்ரீ மோதிஜி மட்டுமே தகுதியானவர்.   08:34:40 IST
Rate this:
17 members
0 members
76 members
Share this Comment

ஏப்ரல்
13
2013
அரசியல் துணைவேந்தர் தேர்வில் அரசியல் : மத்திய அமைச்சர் ஆதங்கம்
ஐயா கருப்புத்தமிழரே அரசின் நிர்வாகத்தின் கீழ்தான் பல்கலைக்கழகம் இருக்கிறது இருக்கவேண்டும். ஏன் எனில் பல்கலைக்கழகங்கள் அரசு நிறுவனங்கள் அரசு நிதியினைப்பெற்று இயங்கு பவை. ஆனால் அரசு நிர்வாகம் வேறு அரசியல் தலியீடு வேறு.பல்கலைக்கழகங்க்கள் எதற்காக உருவாக்கப்பட்டனவோ அந்த உயரிய நோக்கங்களை அடைய அவை இயங்கவேண்டும். அவை சட்ட விதிகளின் படி இயங்கவேண்டும். அதுவே நிர்வாகம். மாறாக விதிகளை மீறி தகுதியின் அடிப்படையில் இல்லாமல் பணத்தின் அடிப்படையில் சொந்த பந்தங்களுக்கு பதவிகள் வழங்கப்படுமானால் சீட்டுகள் விற்கப்படுமானால் அது அதிகார துஷ்பிரயோகம, தலையீடு முறைகேடு எல்லாம். அதுவே தவறு என் கிறோம்.   08:27:20 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
15
2013
அரசியல் அண்ணாமலை பல்கலை கழக இணைவேந்தரின் அதிகாரங்கள் பறிப்பு! பல்கலை நிர்வாகத்தில் அரசு முழுமையாக தலையிட புது சட்டம்
ஆம் அரசு புகுந்து விளையாடும் தான். அண்ணாமலைப்பல்கலைக்கழம் தனியார் பல்கலைக்கழகம் அன்று. ஆனால் தனியாரின் ஆளுகையில் இருந்தது. அண்ணமலை அரசர், முத்தைய செட்டியார் காலங்களில் தலை சிறந்து விளங்கிய இந்தப்பல்கலைகழகம் இப்போது மோசமான வியாபார நிலையமாகிவிட்டது. மாணவர் சேர்க்கை ஆசிரியர் அலுவலர் நியமனம் ஆகியவற்றில் பணம் மட்டுமே பங்கு வகிக்கும் நிலைக்கு தரம் தாழ்ந்தது அந்த தனியார் ஆளுகையின் விளைவே. அரசுப் பல்கலைகழகங்களில் பணி நியமனமும் அப்படித்தான் என்றாலும். அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழ் பல்கலைக்கழகம் வருவதால் ஆசிரியர் அலுவர் எல்லாவற்றிற்கும் மேலாக மாணவர் நலங்கள் பாதுகாக்கப்படும். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தினை மீட்டெடுத்த அம்மையாருக்கு ஒரு பெரும் பாராட்டு விழாவினை தில்லையில் விரைவில் எதிர்பார்க்கலாம். வெல் டன் அம்மா வெல் டன் வாழ்க.    08:19:08 IST
Rate this:
4 members
0 members
13 members
Share this Comment

ஏப்ரல்
13
2013
அரசியல் துணைவேந்தர் தேர்வில் அரசியல் : மத்திய அமைச்சர் ஆதங்கம்
மத்திய அமைச்சரின் கருத்து நியாயமானது. துணைவேந்தர் நியமனத்தில் திறமையை விட அரசியல் தான் முக்கிய பங்கு வகிக்கிறது. சாதியும் முக்கிய இடம் வகிப்படது. மக்கள் தொகையில் குறைவான் எண்ணிக்கையைக் கொண்ட எந்த ஒரு சாதியினரும் தமிழகத்தில் துணைவேந்தர் ஆகமுடியாது என்பது நிதர்சனம். இது மானிலப் பல்கலைக்கழகங்களில் மட்டுமல்ல மக்த்தியப் பல்கலைக்கழகங்களிலும் அதுதான் நடக்கிறது. மத்தியப்பல்கலைக்கழகங்களில் முதலில் இவர்கள் வெளிப்படையான த்துணைவேந்தர் நியமனத்தை செய்யட்டும். தேர்வுக்குழுக்களை நியமிப்பதில் இருந்து வெளிப்படையான அணுகுமுறை இல்லை. யார் யார் தேர்வுக்குழுவால் தேர்வு செய்யப்படுகிறார்கள். அவர்கள் பங்களிப்பு என்ன என்ன ? என்பதெல்லாம் வெளிப்படையாக த்தெரிவதில்லை. இணையம் இருக்கிறக்காலத்தில் அதனை செய்யவேண்டும்.சும்மனாச்சிக்கும் கூட்டத்தில் சொன்னால் போதாது. மத்திய அமைச்சரவைக்கூட்டத்திலும் இதை இவர் பேசவேண்டும்.   11:12:03 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment