பார்ப்பவர்கள் முட்டாள்கள் அல்ல. புரியாமல் பேசுபவர்கள் முட்டாள்கள். சூதாட்டம் என்பது எல்லா விளையாட்டுகளிலும்
எல்லா நாடுகளிலும் உள்ளன. அதை தடுக்க நடவைடிக்கை எடுப்பது அவசியம். i p l கிரிக்கெட் விளையாடும் .
பலருக்கும் வாய்ப்பை அளிக்கிறது., இளைஞர்கள், அனுபவ வீரர்கள் ,வெளிநாட்டு வீரர்கள் என்று பலரும்
ஒரே அணியில் இடம் பெறுவதால் அனுபவம், பயிற்சி, வருமானம் , ஒற்றுமை ஆகியவை கிடைக்கின்றன.
நாளை ஒரு நாட்டுடன் இன்னொரு நாடு விளையாடும் பொழுது விரோத மனப்பான்மை வளராது. எல்லா விளையாட்டுக்களையும் இது போல் செய்யலாம். கிரிக்கெட்டை பார்ப்பவரெல்லாம் முட்டாள்கள்
அல்ல. பார்க்காதவர்கள் எல்லாம் மேதாவிகளும் அல்ல .
21-மே-2013 19:02:58 IST
எந்த மொழியில் கல்வி கற்க வேண்டும் என்பது மாணவர்கள் முடிவு செய்ய வேண்டியது. அரசியல்வாதிகள் அல்ல.
ஒவ்வொரு பள்ளியிலும் இரண்டு மீடியமும் இருக்கலாம். மாணவர்களின் விருப்பப்படி படிக்கட்டும். அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை இதனால் அதிகரிக்கும். தனியார் பள்ளி மோகம் குறையும்.
17-மே-2013 11:45:49 IST
ஸ்ரீசாந்த்தை நினைத்தால் வருத்தமாக உள்ளது. மீண்டும் தன இடத்தைப் பிடிக்க முயன்று இருக்கல்லாம். அதனைத் தொடர்ந்து விளம்பரங்கள் மூலம் கோடிகோடியாக சம்பாதிக்கலாம். இளம் வயதில் எதிர்காலத்தைப் பாழாக்கிக்
கொண்டார்.
16-மே-2013 16:24:15 IST
ஊழல் வாதிகள் பேரம் பேசியது உங்கள் வீட்டில். மாமாவிடம் சொல்லிவிட்டேன் என்றார் உங்கள் மருமகன்.
இதற்கு என்ன அர்த்தம். தவறு என்பது தவறி செய்வது .தப்பு என்பது தெரிந்து செய்வது. தவறு செய்தவன்
திருந்தப் பார்க்கணும். தப்பு செய்தவன் வருந்தியாகணும். எனவே நீங்கள் வருந்துங்கள்.
13-மே-2013 20:00:57 IST
2001 வரை டி.ஆர்.பி. தேர்வுகளுக்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப் படவில்லை. செலவை அரசே ஏற்றுக்கொண்டது. அதன்
பிறகு இந்த நிறுவனத்தின் பரிந்துரைப்படி அரசு கட்டணம் வசூலிக்க ஆரம்பித்தது. கட்டணம் அதிகம். வருமானத்தை அடிப்படையாகக் கொண்டது. கட்டணம் உடனடியாகக் குறைக்கப் படவேண்டும்.
13-மே-2013 13:15:31 IST
பௌர்ணமி விழா நடத்தியதுடன் நிறுத்தி இருந்தால் நன்றாக இருந்து இருக்கும். 11 மணி வரை பேசுவேன். கைது
செய்து பார் என்று சவால் விடுவதும் , வன்முறையை தூண்டுவதும், மரத்தை வெட்டி போடுவதும், பஸ்களை
கொளுத்துவதும் சரியா .
12-மே-2013 07:06:14 IST
கட்சத் தீவை தாரை வார்த்த போது முதலமைச்சராக கருணாநிதி இருந்தார். அத்தீவு ராமநாதபுர ராஜாவிற்கு சொந்தம்
என்று தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியபோதும் கலைஞர் தடுக்கவில்லை. இது நடந்தது 1974 ல் , தி.மு.க. காங்கிரஸ்
கட்சியை எதிர்க்க ஆரம்பித்தது 1975ல். அன்று கலைஞர் நினைத்திருந்தால நிச்சயமாக தடுத்திடுக்க முடியும்.
11-மே-2013 16:18:01 IST