Jey Kay - jeykay@email.com : கருத்துக்கள் ( 565 )
Jey Kay - jeykay@email.com
Advertisement
Advertisement
மே
24
2018
அரசியல் கோஹ்லி சவால் பிரதமர் ஏற்பு எதிர்க்கட்சிகள் கடும் கிண்டல்
ராகுலின் ஒவ்வொரு தொடர்ச்சியான முயற்சியும், களிமண்ணில் சிக்கிய சக்கரம் போலவே இருக்கிறது. வண்டியை (கட்சியை) என்னாதான் முடுக்கினாலும் களிமண்ணை விட்டு வண்டி வெளிவரப்போவதில்லை. ராகுல் காங்கிரஸ் வண்டியின் சக்கரமாக இருக்கும் வரை களிமண்ணிலேயே அகப்பட்டிருக்கும். மேலும் காங்கிரஸ் அற்ற பாரதமான மோடியின் கனவை சாத்தியமாக, மோடியை விட ராகுலே சிறப்பாக செய்துவருகிறார். சிறு இடங்களில் காங்கிரஸ் தப்பிப்பிழைத்தாலும், தேசிய அளவில் முக்கியத்துவத்தை காங்கிரஸ் இழந்துவிட்டது. இந்த வழுக்கை சக்கரத்தை இன்று மாற்றாவிடில் வண்டி சேரில் அகப்பட்டு வெளிவரமுடியாமல் துருபிடித்துவிடும். ராகுல் தோல்வி அடைந்துவிட்டார் என்பதை ஏற்றுக்கொண்டு அதற்கான தீர்வுகளில் இறங்கினால் காங்கிரஸ் ஓரளவிற்கு தப்பிப்பிழைக்கும். ராகுல் தான் அடுத்த பிரதமர் என்று சிலர் கர்ஜித்தாலும் ராகுலை ஒரு தகுதியான பிரதமர் வேட்பாளராக கூட பலர் இன்று அடையாளம் கண்டுகொள்ளவில்லை என்பதே எதார்த்தம். வழுக்கை சக்கரத்தின் மேல் சவாரி செய்து உயிரை பலியாக எவரும் விரும்புவதில்லை.   05:57:04 IST
Rate this:
10 members
0 members
17 members
Share this Comment

மே
24
2018
பொது பெட்ரோல் விலையை ரூ.25 வரை குறைக்க முடியும் சிதம்பரம்
பிரதமரின் வெளிநாட்டு பயண செலவை தகவல் உரிமை சட்டம் மூலம் பெற முயலலாம், அதனுடன் சேர்த்து இணையத்தில் பிரதமரின் வெளிநாட்டு பயணத்தின் பலங்களையும் தேடி தெரிந்துகொள்ளலாம்.   15:02:02 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மே
24
2018
பொது பெட்ரோல் விலையை ரூ.25 வரை குறைக்க முடியும் சிதம்பரம்
பெட்ரோல் டீசல் விலை குறைத்தால் , அரிசி பருப்பு பால் காய்கறிகள் விலை சரியும் என்பது தவறான புரிதல். பெட்ரோல் டீசல் விலை குறைந்தாலும் வணிகர்கள் தான் பயனடைவார்கள், விலை குறைப்பை மக்களுடன் பகிர்ந்துகொள்ள மாட்டார்கள். மத்திய அரசு GST விழுக்காடை சில பொருட்களுக்கு குறைத்த வேலையில், வரி வித்தியாசத்தை பொருளின் விலையின் மீது திணித்து வணிகர்கள் லாபம் பார்த்ததை இங்கு நினைவு படுத்த விரும்புகிறேன்.   11:25:17 IST
Rate this:
1 members
0 members
13 members
Share this Comment

மே
24
2018
பொது பெட்ரோல் விலையை ரூ.25 வரை குறைக்க முடியும் சிதம்பரம்
பெட்ரோல் டீசல் விலை குறைத்தால் , பொருளாதாரம் மிக கீழே சென்றுவிடும் என்று தாங்களே ரத்தின சுருக்கமாக பதிவிட்டு விட்டீர்களே விஜய். அதைவிடவா சுருக்கமாக கூற வேண்டும். உண்மையும் அதுதான்.   11:19:08 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

மே
24
2018
பொது பெட்ரோல் விலையை ரூ.25 வரை குறைக்க முடியும் சிதம்பரம்
17,95,350 கோடி ரூபாயில், பெட்ரோல் வரி, gst முதல் கொண்டு அனைத்தும் அடக்கம். சென்ற ஏப்ரல் மாதத்திற்கான gst யின் மாத வருவாய் வசூல் ரூ .1 லட்சம் கோடி. அதுவே உச்சவரம்பான மாத gst வருவாய். இருப்பினும், அது கடந்த நிதியாண்டில் நிலுவையில் உள்ள தொகைகளை செலுத்தியதும் அடங்கும். சராசரி gst மாத வருவாய் 90,000 கோடி. நாம் இன்னும் நிதி பற்றாக்குறையில் தான் இயங்கிக்கொண்டிருக்கிறோம். இதே வரி நிலை தொடர்ந்தால் வருமானம் செலவு சரிசமம் ஆக இன்னும் சில ஆண்டுகள் புடிக்கும். விரைவாக அடைய அல்லது நிதி உபரி நிலையை அடைய, புதிய தொழில் தொடங்குபவரை ஆதரிக்கவேண்டும். கடன்களை திருப்பி செலுத்த முடியாத நிறுவனங்களை கையாள வங்கிக்கு கூடுதல் அதிகாரத்தை national bankruptcy law மூலமும் Insolvency and Bankruptcy Code திருத்தம் கொண்டுவந்ததையும் அடுத்து இவர்களை எளிதில் கையாளமுடியும். 2007லில் 13.4 கோடி ரூபாயில் தொடங்கப்பட்ட பிளிப்கார்ட் நிறுவனம் 75% பங்குகளை 1,34,000 கோடிகளுக்கு விற்றது. இது அபரிதமான வளர்ச்சி. இன்றைய இளைய தலைமுறை பல துறைகளில் இதைப்போல் சாதித்தால் இந்தியாவின் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெருகும், இந்தியாவின் வரி வருமானம் பெருகும், இந்தியா விரைவாக முன்னேறும். நாமும் கார்பொரேட் நிறுவனத்திற்கு எதிரான நமது மனப்பான்மையையும் மாற்றிக்கொள்ளவேண்டும். ஐரோப்பாவில் உள்ள எஸ்டோனியா நாட்டில் ஜியோ தனது சேவையை விருத்தி செய்வதை போல், வெளிநாடுகளிலும் பல துறைகளிலும் நாம் கால்பதிக்க வேண்டும்   10:29:16 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

மே
24
2018
பொது பெட்ரோல் விலையை ரூ.25 வரை குறைக்க முடியும் சிதம்பரம்
பெட்ரோலில் இருந்து பெறப்படும் வரி வருவாய் மத்திய மற்றும் மாநில அரசின் பல்வேறு திட்டங்களில் செலவழிக்கப்படுகிறது. நீண்ட காலமாக இந்திய அரசாங்கம் கடன் வாங்கிய பணத்தில் காலம் தள்ளிவந்தது. உலகின் பெரும்பாலான அரசாங்கங்களைப் போலவே, இந்திய அரசாங்கமும் வரி வருவாய்க்கு மீறிய அளவில் செலவு செய்து வந்தது. 2014ஆம் ஆண்டின் நிதி பற்றாக்குறை GDP (மொத்த உள்நாட்டு உற்பத்தியில்) 4.5% பிறகு கட்சா எண்ணெய் விலை குறைந்தும் இந்திய அரசு பெட்ரோல் விலையை குறைக்காததால் 2016றில் நிதி பற்றாக்குறை GDPயில் 3.5 சதவிகிதமாக குறைந்தது. அதாவது நிதி பற்றாக்குறை 1 லட்சம் கோடிக்கு மேல் குறைந்தது. 2017லில் நிதி பற்றாக்குறை GDPயில் 3.25 சதவிகிதம். நாம் செலுத்தும் வரி பணத்தை அரசு வீணடிக்கிறது என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். 2017-2018 நிதியாண்டில் இந்திய அரசின் வரி வருவாய் 17,95,350 கோடி இந்திய மக்களின் என்னிக்கை 132.4 கோடி. இந்திய அரசின் செலவுகளை தனி மனிதனுக்கு நிகராக பார்ப்போம். சராசரியாக ஒருவர் செலுத்தும் வரி வருடத்திற்கு 13,017 ரூபாய், மாதத்திற்கு 1,193 ரூபாய். இதில் 310 ரூபாயை (26% வரி வருவாய்) இந்தியாவின் கடனை அடைக்க பயன்படுகிறது, 202 ரூபாய் (17% வரி வருவாய்) ராணுவம், போலீஸ், தேசிய தொலை தொடர்பு பாதுகாப்பிற்கு செலவழிக்கப்படுகிறது. 83 ரூபாய் (7%) பொது விநியோக சேவையின் மூலம் ஏழை மக்களுக்கு உணவு மானியமாக (ரேஷன்) வழங்கப்படுகிறது. 71 ரூபாய் (6%) மாநில அரசு ஊழியர் ஊதியங்களுக்கு ஒதுக்கப்படுகிறது. 60 ரூபாய் (5%) அரசாங்க ஊழியர்களின் ஓய்வூதியங்களாக செலவழிக்கப்படுகிறது. 53 ரூபாய் (4.5%) விவாசகிகளின் யூரியா மானியமாக செலவழிகிறது. 24 ரூபாய் (2%) கெரோஸீன் மற்றும் சமையல் எரிவாயுவிற்கு ஒதுக்கப்படுகிறது. எஞ்சியுள்ள 388 ரூபாயை (32.5%) வைத்தே மக்கள் நல பணிகளை அரசு செய்யவேண்டும். 15 ரூபாய் (1.25%) வானியல் துறை, அணு ஆராய்ச்சி, இஸ்ரோ, சுற்றுச்சூழல் துறை, நீர்ப்பாசனம், வேளாண்மை போன்ற பொருளாதார சேவைகளுக்கு ஒதுக்கப்படுகிறது. 15 ரூபாய் (1.25%) பள்ளி மற்றும் கல்லூரி (ஐஐடி, ஐஐஎம், ஐஐஎம்எஸ், யுஜிசி) மானியமாகவும் அரசாங்கம் தூர்தர்ஷன் (டிவி), ஆல் இந்தியா ரேடியோ, சுகாதார, விளையாட்டு வசதிகள், வீட்டு மானியங்கள், ஏழைகளுக்கான சமூக பாதுகாப்புத் திட்டங்களிலும் செலவாகிறது. 20 ரூபாய் (1.7%) உலகம் முழுவதும் உள்ள நமது தூதரகத்திற்கும், தேர்தல் ஆணையம் தேர்தல்கள் நடத்தவும் செலவாகிறது. 20 ரூபாய் (1.7%) ரயில் பயணம் மற்றும் தபால் நிலையம் இயக்கும் மானியத்திற்கும், பேரழிவு நிவாரணம் மற்றும் யூனியன் பிரதேசங்களை இயக்கவும் செலவாகிறது. பிறகு எஞ்சியுள்ள 317ரூபாயை (26.6%) வைத்தே நமது எதிர்கால திட்டங்களுக்கு செலவழிக்க வேண்டியுள்ளது. 56 ரூபாய் (4.7%) சாலை உள்கட்டமைப்பு பணிகளான நெடுஞ்சாலைகள் மற்றும் பாலங்கள் போன்றவை அமைக்க செலவாகிறது. 50 ரூபாய் (4.25%) கிராமபுற திட்டங்களுக்கு செலவாகிறது. 50 ரூபாய் (4.25%) இயற்கை மற்றும் எண்ணெய் வள ஆராய்ச்சிக்கு செலவாகிறது. 40 ரூபாய் (3.5%) மின் ஆற்றல் உற்பத்தி தொடர்ப்புடைய பணிகளுக்கு (அணு மின் நிலையம் உட்பட) செலவாகிறது. 24 ரூபாய் (2%) பல்வேறு கல்வியறிவுத் திட்டங்களுக்கும் ஏழை குழந்தைகளுக்கு மதிய உணவு திட்டத்திற்கும் செலவாகிறது. எஞ்சி இருக்கும் 94 ரூபாய் (8%) தொலைத்தொடர்பு, கப்பல் துறைமுகங்கள், விவசாயம், நீர்ப்பாசனம், குடிநீர், நீர்வழிகள், பழங்குடி மக்களின் சேவைகள், உடல் ஊனமுற்ற சேவைகள், விளையாட்டு, அறிவியல் அண்டை நாடுகளுக்கு உதவுதல் போன்ற பணிகளில் செலவழிக்கப்படுகிறது. நமது நாட்டை நிர்வகிக்கவும், வழி நடத்தவும், பெட்ரோல் வரி வருவாய் இந்திய அரசிற்கு மிகவும் முக்கியம். இதுதான் எதார்த்தம். ஆதாரை கட்டாயப்படுத்தி மானியத்தை தவறான வழிகளில் பயன்படடுத்தி வந்தவர்களை கலைந்ததன் மூலம், பல கோடிகளை மிச்சப்படுத்தியத்தைப் போல் செயல்திறனை மேம்படுத்துத்தி ஊழலைக் குறைத்தால் பணம் விரயமாவதை மேலும் இந்திய அரசாங்கம் தவிர்க்கலாம்.   08:53:31 IST
Rate this:
7 members
0 members
46 members
Share this Comment

மே
22
2018
பொது உள்ளூர் விமான பயணத்தில், போர்டிங் பாஸ் இனி... தேவையில்லை! டிஜி - யாத்ரா திட்டத்தை விரிவுபடுத்த அரசு முடிவு
சுந்தரம் ஜி, சென்ற 10ஆம் தேதி 5 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் ஆதார்ஆதாருக்கு எதிரான பெட்டிஷன்களை பரிசீலனை செய்து வழக்கை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. தீர்ப்பை கோடை விடுமுறை முடிந்த பிறகு ஜூலை முதல் வாரத்தில் எதிர்பார்க்கலாம். தகவல் பாதுகாப்பு சட்டம் அல்லது முழுமையான தனியுரிமை சட்டத்தை மத்திய அரசை அறிமுகப்படுத்தக் கூறி நீதிமன்றம் ஆதாரை தொடரக்கூறலாம். தவிர்க்கமுடியாத சூழ்நிலைகளில் ஆதார் இல்லாத பட்சத்திலும் (at exceptional cases only) குடிமகனின் அடிப்படை உரிமை பாதிக்காதவாறு பார்த்துக்கொள்ளுமாறு கூறினாலும், உச்சநீதிமன்றம் ஆதாரை தொடரவே அறிவுறுத்தும். நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு தேர்தல் ஆணையமும் எஞ்சியுள்ள வாக்காளர் அடையாள அட்டைகளில் குறிப்பிடப்பட்ட மின்னணு புகைப்பட அடையாள அட்டை எண்னை (EPIC Database) ஆதாருடன் இணைக்கும் வேலையை தொடரும், 2019 லோக் சபா தேர்தல் ஆதாரை அடிப்படையாக கொண்ட வாக்காளர் அடையாள அட்டைகளை அடையாளமாக கொண்டு நடக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த விவரம் எனக்கு தெரிந்த உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பகிர்ந்து கொண்ட தகவல்.   15:49:10 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மே
22
2018
பொது உள்ளூர் விமான பயணத்தில், போர்டிங் பாஸ் இனி... தேவையில்லை! டிஜி - யாத்ரா திட்டத்தை விரிவுபடுத்த அரசு முடிவு
நாம் புரியும் பல்வேறு பரிமாற்றங்களை உறுதிப்படுத்த மட்டுமே ஆதார் தகவல்கள் பயன்படுத்தப்படுகிறது, நமது எந்த ஒரு பரிமாற்றமும் ஆதார் பதிந்துகொள்வதில்லை. ஒருவரை பற்றிய கூடுதல் விவரங்களையும் ஆதார் பதிவு செய்துகொள்வதில்லை. டிஜி -யாத்ராவில் உங்களது விவரம் உங்களது பயணசீட்டுடன் இணைக்கப்படும். இதுவே வித்தியாசம்   09:23:12 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

மே
22
2018
பொது உள்ளூர் விமான பயணத்தில், போர்டிங் பாஸ் இனி... தேவையில்லை! டிஜி - யாத்ரா திட்டத்தை விரிவுபடுத்த அரசு முடிவு
ஆதாரினால் பல நன்மைகள் உள்ளது. முறையற்று மானியத்தை தவறான வழியில் பயன்படுத்தி வந்ததை தவிர்த்ததன் மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பை நீர்த்துப்போக செய்துள்ளது. ஆதாரை சிம் கார்டுடன் இணைப்பதன் மூலம் குற்றவாளிகளை எளிதாக கண்டறியலாம். தேசியப் பாதுகாப்பும் வலுப்பெறும். பிற்காலத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பதன் மூலம் போலி வாக்காளர்களையும், போலி வோட்டுகளையும் களைய முடியும். வாக்காளர் அடையாள அட்டைகளில் குறிப்பிடப்பட்ட மின்னணு புகைப்பட அடையாள அட்டை எண்னை (EPIC Database) ஆதாருடன் இணைக்கும் வேலையே ஏற்கனவே தேர்தல் கமிஷன் தொடங்கிவிட்டது. கடந்த மாதம் வரை 32 கோடி வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைத்துள்ளது. privacy காரணங்களை சிலர் முன்னிறுத்தியதால் தற்காலிகமாக இந்த பணி நிறுத்தப்பட்டுள்ளது. ஜூலை மாதம் இந்த வழக்கில் தீர்ப்பு வரவுள்ளது. நிறுத்தப்பட்டன பணி ஜூலை மாதம் தொடங்கும் என்று நம்பலாம். எஞ்சியுள்ள 54.5 கோடி வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைக்கப்படும். தனியுரிமை (privacy) காரணத்திற்காக ஆதாரை எதிர்ப்பவர்கள் தனது கைபேசியை unlock செய்ய தனது கை ரேகையை பயன்படுத்த தயங்குவதில்லை. தனியார் கைபேசி நிறுவனங்கள் தனது கை ரேகைகளை சேகரிப்பதை பற்றி இவர்கள் கவலை கொள்வதில்லை. கூகிள், முகநூல் போன்ற தளங்கள் நமது ஒவ்வோர் இணைய அசைவையும் கண்காணிக்கிறது, நாம் இணையத்தில் பகிர்ந்துள்ள பெரும்பாலான தகவல்கள் நமது பாதுகாப்பை கேள்விக்குறியாகும் நிலையில் உள்ளன, நமது தகவல்கள் சீன serverகளில் சேமிக்கப்பட்டுவருகிறது. நமது தகவல்களை கூகிள், முகநூல் போன்ற நிறுவனங்கள் விற்று வருகிறது. இதனை பற்றிய கவலைகளும் அவர்களுக்கு இல்லை. நமது மின்னஞ்சல்களை அமெரிக்கா உட்பட பிற நாட்டு உளவுத்துறைகளால் இடைமறித்து படிக்க முடியும், இதை பற்றியும் அவர்கள் கவலைகொள்வதில்லை. ஆனால் தன்னை பற்றிய அடிப்படை தகவலைகளை ஆதாரில் இந்திய அரசு பதிந்துகொள்வதில் கவலைகொள்கின்றனர். நாம் புரியும் பல்வேறு பரிமாற்றங்களை உறுதிப்படுத்த மட்டுமே ஆதார் தகவல்கள் பயன்படுத்தப்படுகிறது என்றும் பரிமாற்றங்கள் எதுவும் பதியப்படவில்லை என்றும் UIDAI பலமுறை எடுத்துக்கூறியும் கண்மூடித்தனமாக எதிர்ப்பதை மட்டுமே இவர்கள் தொழிலாகக் கொண்டுள்ளனர்.   09:11:38 IST
Rate this:
2 members
0 members
11 members
Share this Comment

மே
22
2018
சம்பவம் தூத்துக்குடியில் வன்முறை வெறியாட்டம்9 பேர் பலி
இது துயரமான நிகழ்வு, அதிலும் பள்ளி மாணவி குண்டடி பட்டு இறந்தது வருத்தத்திற்கு உரியது, கட்சிகள் இதை வைத்து அரசியலில் இறங்காமல், மக்களின் பிரச்சனையாக மட்டுமே காணவேண்டும். சமூக ஊடகங்கள் அனைவர் கையிலும் வந்த பிறகு நல்ல மாற்றங்கள் பல நாட்டில் நடந்தாலும், வதந்திகளும், சித்தாந்தங்களும், இணைய பிரச்சாரங்களும், போராட்டங்களும் கடந்த தலைமுறையை விட இந்த தலைமுறையில் அதிகரித்துவிட்டது. தகவல் தொழில்நுட்பம் இன்று மக்களை பீதியிலேயே வைத்துள்ளது. செய்தியில் குறிப்பிட்டுள்ள பல கட்சிகளும், இயக்கங்களும் தமிழகத்தில் இயங்குவது இன்று தான் பலருக்கு தெரியவருகிறது. மக்களின் நியாமான போராட்டங்களிலும் இந்த கட்சிகளும் இயக்கங்களும் ஏதாவது ஒரு குறிக்கோளுடன் வன்முறையில் இறங்கி மக்களுக்கு குந்தகம் விளைவிக்கிறது. கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட எவருக்கும் பொது சொத்தை நாசமாக்குவதற்கு எந்த உரிமையும் கிடையாது. போலீஸ் துப்பாக்கியை கையில் எடுக்கவில்லை என்றல் ஊர்திகளை கொளுத்திய வன்முறையாளர்கள் அடுத்ததாக போலீசாரின் உயிரையும் குடித்திருப்பார்கள். வன்முறையின் உந்துதலே போலீஸ் துப்பாக்கியை கையிலெடுக்க காரணம். வன்முறை சூழ்ந்த வேளையில் 20,000 மக்களை (அனைவரும் காரணம் அல்ல என்ற போதிலும்) சில நூறு போலீஸ் கையாள்வது என்பது சாத்தியப்படாது. மக்களின் நியாமான பிரச்சனைகளை கண்டு, சுற்றுப்புறத்திற்கு கேடு விளைவிப்பதாக நீதிமன்றம் 'ஸ்டெர்லைட்' ஆலைக்கு தடை விதிக்கிறது, பிறகு தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆலையை நடத்த அனுமதி அளிக்கிறது. தடையை நீக்க ஆலை உரிமையாளர் நீதிமன்றத்தில் வாதாடி வழக்கை வென்றிருக்கிறார். இந்த போராட்டத்திற்கான தீர்வை நீதிமன்றம் மூலம் பெற்றிருக்கவேண்டும். நீதிமன்றம் மூலம் 'ஸ்டெர்லைட்' ஆலையின் மூடுவிழாவிற்கு வழிகண்டிருக்க வேண்டும், தேசிய பசுமை தீர்ப்பாயதின் முடிவு தவறானது என்று கருதினால், அவர்கள் மீதும் வழக்கு தொடுத்திருக்கவேண்டும். ஆலை உரிமையாளரை எதிர்த்து மக்களால் நீதிமன்றத்தில் வாதிடமுடியாது என்று கருதினால், மக்களின் பின்னால் இன்று அணிவகுத்து நிற்கும் கட்சிகளும், பிரபலங்களும் மக்களின் மீது உண்மையான அக்கறை இருந்தால் மக்களின் சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கவேண்டும். அதை விடுத்தது பிரச்சனை பெரிதானவுடன் ட்விட்டரில் கருத்து பதிவிடுவதுடனும், போலீசாரையும் அரசையும் கண்டிப்பதுடனும் தனது பணி முடிந்துவிட்டது என்று நினைப்பதே இவர்களின் வாடிக்கை, இம்மாதிரி ஆட்களுக்கு நேற்று ஒரு பிரச்சனை, இன்று ஒன்று நாளை மற்றொன்று என்கிற அளவிலேயே போய்க்கொண்டிருக்கிறது. மக்களும் இம்மாதிரியான ஆட்களை அடையாளம் கண்டு ஒதுக்கவேண்டும்.   05:27:29 IST
Rate this:
2 members
0 members
24 members
Share this Comment