Advertisement
Radhakrishnan Muthukumar : கருத்துக்கள் ( 10 )
Radhakrishnan Muthukumar
Advertisement
Advertisement
நவம்பர்
30
2014
பொது உலகின் மிகவும் மாசுபட்ட நகரம் புதுடில்லி முன்பிருந்ததை விட மோசம் என கண்டுபிடிப்பு
கார்களுக்கு கடன் 8 சதம் வட்டி. வேளாண் கடனுக்கு 12 சதம் வட்டி. மாதம் சம்பளம் இருபது ஆயிரம் வாங்கினால் போதும் வங்கிகள் கார் கடன் கொடுக்க தயார். ஒரு வருடத்திருக்கு 12 முதல் 15 லட்சம் கார்கள் விற்றால் காற்று மாசுபடாமல் என்ன செய்யும்? அரசும் கார் கம்பனிகளும் ஒருவித கூட்டணியுடன் செயல்படுவதுபோல தோன்றுகிறது. பெட்ரோல் விலை குறைவது, டெல்லியில் 15 வருடத்திற்கு மேற்பட்ட கார்களை தடை செய்வது இவற்றை ஆராய்ந்து பார்த்தால், கடந்த இரண்டு ஆண்டுகளாக உள்ள கார்கள் விற்பனை சரிவை மீட்க வேண்டும் என்று அரசே விரும்புவது போல தோன்றுகிறது. 15 வருடத்திற்கு மேற்பட்ட அரசு பேருந்துகள் மற்றும் மற்ற அரசு வாகனங்கள் தடை செய்யப்படுமா? 15 வருடத்திற்கு மேற்பட்ட கார்களை டெல்லியில் ஓட்டகூடாது என்றால், அவற்றை கிராமங்களில் ஓட்டலாமா? கிராமங்கள் அல்லது மற்ற சிறு நகரங்களில் உள்ள மக்கள் பற்றி யாரும் கவலைபட்டதாக தெரியவில்லையே? டெல்லியில் இருபது லட்சம் கார்கள், டெல்லியின் புற நகர் பகுதிகளுக்கு விற்பனை செய்யப்பட வேண்டி வருமே. இது போல மும்பை, சென்னை, பெங்களுரு, ஹைதரபாத், அஹமடபாத், கோவை, கொல்கத்தா மற்ற நாட்டின் மாநகர் அனைத்திற்கும் வந்தால் சுமார் அறுபது கோடி கார்கள் கிராமங்களுக்கு தள்ளப்படும் வாய்ப்பு உள்ளதே? இது உண்மையில் காற்றை மாசுபடாமல் இருக்க செய்யப்படும் நடவடிக்கை போல தெரியவில்லையே ? உண்மையில் அரசு வாகனங்களை பரிசோதிக்க வேண்டும். யார் செய்வது?   09:56:48 IST
Rate this:
0 members
0 members
25 members
Share this Comment

நவம்பர்
27
2014
பொது 65 ஆண்டு காலம் ஆகியும் தீராத அவலம் தலைமை நீதிபதி தத்து வேதனை
இந்த செய்தியில் வந்துள்ள அனைத்து அடிப்படை உரிமைகளும் ( உணவு, கல்வி, சுகாதாரம் மற்றும் தண்ணீர் ) சந்தைமயமாகி ரொம்ப நாள் ஆகிடுச்சு. காற்று மட்டும் இன்னும் சந்தை மயமாகவில்லை. ஆனால் அது மாசடைந்து விட்டது. விரைவில் பிராண வாயு பார்லர்கள் வந்துவிடும் போல் இருக்கிறது.   10:54:40 IST
Rate this:
0 members
0 members
17 members
Share this Comment

ஜனவரி
21
2014
பொது கெஜ்ரிவால் நடத்தும் போராட்ட முறை சரிதானா? வாசகர்களே எழுதுங்கள்
தலைநகர் தில்லி காவல்துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது சரியல்ல. தில்லிக்கு மாநில தகுதிநிலை தரப்பட வேண்டும். அப்போது காவல்துறையும் முற்றிலும் மாநில அரசு கட்டுப்பாட்டுக்கு வரும். அவ்வாறு வருவது ஒன்றுதான் இதற்கு தீர்வு. கடிதம் எழுதுவதால் என்ன பயன் என்று கேள்வி கேட்கலாம். ஆனால் இங்கு அடிப்படை விவாதம் அல்லது இன்று தில்லி முதல்வர் தெருவில் இறங்கி போராடுவதற்கு காரணம் சட்டம் ஒழுங்கை தனக்கு கீழ் கொண்டுவர வேண்டும் என்று நினைப்பதுவே. அவர் போராடுவதில் தவறு இல்லை. இன்னும் சொல்ல போனால் காவல் துறையை லோக்பால் போன்ற ஒரு அமைப்பின் கீழ் கொண்டு வந்தால் பல குற்றங்கள் அல்லது விசாரணைகள் விரைந்து தீர்க்கப்படும் எனது என் கருத்து.   13:49:42 IST
Rate this:
3 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
10
2014
சிறப்பு பகுதிகள் சொல்கிறார்கள்
இதற்கு மின்சாரம் யார் தருவார்கள்....? இந்த மின் சதனககளை எப்படி மறு சுழற்சி செய்ய போகிறோம் ?   08:32:23 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

ஜனவரி
3
2014
அரசியல் " 3 வது முறை நான் பிரதமராக இருக்க மாட்டேன் ” மன்மோகன் பிரதமர் வேட்பாளர் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்
இரண்டு லட்சம் கடன் வாங்கி திருப்பி செலுத்த இயலாமல் விவசாயி தற்கொலை செய்துகொள்ள....இரண்டாயிரம் கோடி கடன் வாங்கிய மல்லய்யா உல்லாசமாக பெண்களுடன் போடோவுக்கு போஸ் கொடுக்க...... நல்ல ஆட்சி இது. இதை பற்றி வேறு என்ன கருத்து சொல்ல. அய்யா வயிறு எரிந்து ஏழைகள் விடும் சாபம் ஏழு தலைமுறையை பாதிக்கும். திக்குவாய் சிங்க், நாறவாய்சாமி போன்ற மங்குனி மந்திரிகள் அவ்வப்போது பேசி மக்களை கடுப்பேத்துவது போதாது என்று நீங்கள் வேறு.   13:35:33 IST
Rate this:
4 members
1 members
167 members
Share this Comment

டிசம்பர்
19
2013
அரசியல் விஜயகாந்த் மகனுக்கு ரசிகர் மன்றம் மாவட்ட செயலர்களுக்கு புது நெருக்கடி
எருமைபாண்டி ரசிகர் மன்றம். தலைவர் காட்டெருமை. உப தலைவர்: வீட்டு எருமை. செயலாளர் : எருமை கிடா. நாடு விளங்கிடும்.   10:16:15 IST
Rate this:
0 members
0 members
22 members
Share this Comment

நவம்பர்
26
2013
அரசியல் தமிழகத்தை இருளில் தள்ள மத்திய மின் நிலையங்கள் சதியா? 2,500 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை என ஜெ., புகார்
மக்கள் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள். அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.   12:28:02 IST
Rate this:
1 members
0 members
24 members
Share this Comment

நவம்பர்
3
2013
உலகம் மோடி மேஜிக் - மிக்சர் தயார், தயார் நமோ , நமோ என மணம் பரப்புகிறது
தமிழக கட்சியினர் மிக விரைவில் ராகுல் காந்தி சார்பாக இலவசமாக மக்களுக்கு மொட்டை அடித்து விடுவார்கள்....கையில் ராகுல் பூந்தி என்ற லட்டை கொடுத்து செல்வார்கள்.   13:36:11 IST
Rate this:
0 members
1 members
34 members
Share this Comment

ஏப்ரல்
14
2013
சம்பவம் நிதி ஒதுக்கியும் பலன் இல்லை: சாலை விபத்துகளை குறைக்க மாற்று வழி தேவை
பத்தாயிரம் ரூபாய் கொடுத்தால் செத்து போனவனுக்கு ஓட்டுனர் உரிமம் கொடுப்பார்கள் நமது வட்டார போக்குவரத்து அலுவலர்கள். குறைந்தது நான்கில் ஒரு பங்கு தொகை கையூட்டு கொடுத்தே சாலைகள் அமைக்கும் உரிமை கிடைக்கிறது. பலரும் இரு சக்கர வாகனம் ஓட்டும்போது விமானத்தில் பறக்கிற உணர்வில் பறக்கிறார்கள். கார்களில் இருந்தால் தங்களை கடவுளுக்கு நிகராக நினைத்து கொண்டு ஓட்டுகிறார்கள். சாலை விதிகளை பற்றி பத்து சதவீதம் பேருக்கு மட்டுமே ஓரளவுக்கு தெரியும். குறிஈடுகள் பற்றி பலருக்கு தெரியாது. அல்லது அதில் நமது தலைவரின் / தலைவியின் / நடிகரின் பிறந்த நாள் வாழ்த்து இருக்கும். சாலைகள் பொதுவானது அதை நாம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைக்காமல், காட்டுக்கு சிங்கம் ராஜா இந்த ரோட்டுக்கு நானே ராஜா என்று வாகனத்தை செலுத்துவது மிக முக்கிய காரணம். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.   04:09:42 IST
Rate this:
1 members
0 members
31 members
Share this Comment

மார்ச்
4
2013
அரசியல் டில்லியில் "டெசோ' கருத்தரங்கு: காங்., முடிவு என்ன?
ஒரு புள்ளையை அனுப்பி பரிசு இன்னொரு புள்ளையை வைத்து முற்றுகை மற்றுமொரு புள்ளையை வைத்து மத்திய அமைச்சில் பதவி .....இதில் அதுக்கு விளம்பரம் இல்லை என்ற குறை .....உஸ்ஸ்ஸ்...அப்பா இப்பவே கண்ணை கட்டுதே.....   11:32:53 IST
Rate this:
0 members
0 members
16 members
Share this Comment