1.விவசாய நிலங்களை மனைகளாக மாற்றுவது முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும்.
2.சோம்பேறிகளாக மாற்றப்பட்ட உழைக்கும் வர்கத்தினரை மீடடெடுக்க வேண்டும் .
3. டிவி நெடுந்தொடர்கள் ஒரு வரையறைக்குள் கொண்டுவரப்படவேண்டும்.
4. நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டம் விவசாயத்திற்கு திருப்பி விட படவேண்டும்.
5.மது அரக்கன் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும்.
6. நீராதாரங்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும்.
7.உள்நாட்டு உற்பத்தி பொருட்கள் முறையாக சந்தை படுத்தப்பட வேண்டும்.
8.நமது இயற்கை வளங்கள் சுரண்டபடுவது தடுக்கப்படவேண்டும்.
9.இலவசங்கள் யாவும் முற்றிலுமாக நீக்கப்படவேண்டும்.
10.ஊழல், லஞ்சம் ஆகியன கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.
11. தனி மனித ஒழுக்கம் பேணப்படவேண்டும்.
இதற்கு ஒவ்வொரு தமிழ் குடிமகனும் உறுதிமொழி ஏற்க வேண்டும்.அப்போது தான் நாம் நாளை பிறரிடம் கையேந்தும் அவல நிலைக்கு ஆளாகாமல் தடுக்க முடியும்.
தமிழனே தலை நிமிர்.
சுயநலத்தின் பின் செல்லும் உன் பாதை மரண பாதை.
அதுவே தமிழினத்தின் அழிவுப் பாதை.
03-ஏப்-2013 15:10:13 IST
மதுக்கடைகளுக்கு எதிரான மக்கள் போராட்டம் வரவேற்கத்தக்கது. இது அப்படியே மதுவிற்கு எதிராக மாற வேண்டும். இன்றைய இளைய சமுதாயம் மதுவிற்கு அடிமையாகும் போக்கு மிகவும் கேவலமானதாகும். குறிப்பாக தமிழர்கள் தமது பண்பாட்டை மறந்து ஒரு சமுதாய சீர்கேடு சிறிது சிறிதாக காலூன்ற தொடங்கியுள்ளது. உண்மையான அக்கறை உள்ள நல்லவர்கள் நெஞ்சம் பதைப்பதோடு நில்லாமல் மிக சரியான ஒரு வழிகாட்டுதலை வழங்கவேண்டும்.
மது ஒழிபிற்காக மக்கள் வீதிகளுக்கு வர வேண்டும். இது ஒரு தனிநபர் பிரச்சனையாக கொள்வதன் மூலம் ஒவ்வொரு குடும்பமும் இதன் தாக்கத்தை உணர வேண்டும்.
மதுவை ஒழி.
தமிழனே தலை நிமிர்.
போதையின் பின் செல்லும் உன் பாதை மரண பாதை.
அதுவே தமிழினத்தின் அழிவுப் பாதை.
03-ஏப்-2013 14:42:56 IST
சீனா கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவை தின்ன தொடங்கி விட்டது. இறக்குமதியை விட ஏற்றுமதி அதிகம் இருந்தால் மட்டுமே நமது அந்நிய செலவாணி கையிருப்பு அதிகரிக்கும். அதன் மூலம் நமது ஸ்திரத்தன்மை காப்பாற்றப்படும். இது சாதாரண குடிமகன் அறிந்த விஷயம்.ஆனால் இது கூட இந்த அரசுக்கு தெரியாதா? சீனா முழு அளவில் தனது பொருட்களை இந்திய சந்தையில் இறக்கி விட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் 75% கள்ளத்தனமாக வரி ஏய்ப்பு செய்யபடுகிறது.இதில் அரசியல் வாதிகள் வியாபாரிகள் எல்லோரும் உடந்தை.மேலும் சீனா நமது இந்திய பொருட்களை இறக்குமதி செய்வதில் கடுமையான விதிமுறைகளை அமல் படுத்தி அதன் உள்நாட்டு உற்பத்திக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் காக்கிறது. இங்கு நிலைமையோ தலை கீழ். இப்படி இருக்கையில் நாம் எப்படி வல்லரசாக முடியும்??? கொள்கையில்லாத கேவலமான இந்த அரசாங்கம் தூக்கி எறியப்படவேண்டும். உள்நாட்டு உற்பத்தி பாதுகாக்க படவேண்டும்.இதனை யார் செய்வது,??? சிவா
27-மார்-2013 13:10:16 IST