அதிமுக வுடன் கூட்டணி அமைத்தால் பாஜக தமிழகத்தில் சில MP சீட் வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்று நினைப்பது சரிதான். ஆனால் இரண்டு விசயங்களை பாஜக யோசிக்கவேண்டும்.
1. மத்தியில் பஜக செல்வாக்கு கூடும் நிலையில் உள்ளது. இப்போது பஜகாவை நாடிவரும் மாநில கட்சிகளை ஏற்றுகொள்வது மத்தியில் குறிப்பிடும்படியான MP க்களை பெற்று கூட்டணி கட்சிகளின் நிர்பந்தங்களுக்கு அடிபணியாமல் தப்பிக்கலாம். மேலும் திரு மோடி அவர்கள் பிரதமராக முன் நிறுத்தப்பட்டால் நிச்சயமாக மத்தியில் பாஜக ஒரு வலுவான கட்சியாக பிரதிபலிக்கும்.
2. அதிமுக வை நம்பினால் எப்போது வேண்டுமானாலும் காலை வாரிவிடும். இதற்கு பஜகாவிற்கே அனுபவம் உள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை தேமுதிக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்தால் பல இடங்களை பாஜக கைபற்றும்.
16-மே-2013 09:36:29 IST
காமெடிதான். ஆங்கங்கே இருக்கும் காவல்துறையும் உளவுத்துறையும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள். கடமையை செய்ய தவறிவிட்டு வெட்டித்தனமான யோசணைகள். அரசுக்கு ஓட்டுனர் மட்டும்தான் முக்கியமா. நடத்துனரும் பயணிகளும் சும்மாவா.
11-மே-2013 11:34:33 IST
It is too late Any way all the best.
இவருக்கென்ன ஓராண்டு ஜெயில் வாசம் முடிதுவிட்டால் கட்சி தலமையிடம் மேலும் செல்வாக்கு அதிகரிக்கும்.
வன்முறைகள் நடக்கிறது என்று தெரிந்தும் நீண்ட நாட்கள் அரசு அமைதியாக இருந்தது ஏனோ? வட மாவட்டங்களில் பல்வேறு மாவட்ட காவல் துறை மற்றும் இராணுவத்தின் துணை கொண்டு ஒரு பேரேடு நடத்தியிருந்தால் பயம் இருந்திருக்கும். இவ்வளவு பெரிய சம்பவங்களை தவிர்த்திருக்கலாம். 100 க்கனக்கான பேருந்துகள் நொறுக்கப்பட்டதும், பலர் படுகாயம் அடைந்ததும் மற்றும் கலவரத்தால் இறந்தவர்களின் குடும்பங்கள் பாதிக்கபடுவதும்தான் மிச்சம்.
இனிமேலும் சாதி கலவரங்கள் மட்டுமல்ல எத்தகைய வன்முறைக்கும் தமிழக அரசு இடம் அளிக்க கூடாது. தண்டனைகள் கடுமையாக்கப்படுவது மட்டும் போதாது. தண்டனை நிறைவேற்றப்படுவதை உறுதிபடுத்தப்பட வேண்டும். .
11-மே-2013 10:55:31 IST
வன்முறையை தூண்டும் வகையில் நீங்கள் பேசினீர்களா இல்லையா?
அது ஒருபுறம் இருக்கட்டும். ஒரு கேஸில் ஜாமீன் கிடைத்தால் எப்போதோ பல ஆண்டுகளுக்கு முன் நடந்த பிரச்சனையில் கைது செய்து உள்ளேயே இருக்க வைக்க பார்கிறார்களே. இதை பழிவாங்கும் நடவடிக்கையே தவிர வேறு என்னவென்று சொல்வது?
11-மே-2013 10:22:34 IST
வெற்று விளம்பரம் தானே ஒழிய இதனால் ஒருபயனும் இல்லை. 10 பேர் குழுவாக எப்போது செல்வார்கள்? டூர் போகும்போதும், திருமணம் போன்ற விசேஷங்களுக்கு போகும்போதும் மட்டுமே இது பயன்படும். ஆண்டுக்கு ஒருமுறை அல்லது மிஞ்சிபோனால் இருமுறை.
ஏஜெண்டுகள் கமிஷன் பார்க்க வேண்டுமானால் இது பயன்படும். பொதுஜனத்திற்கு? - "0"
11-மே-2013 10:12:17 IST
எடியூரப்பாவின் தனிப்பட்ட செல்வாக்கு குறையவில்லை என்றே தெரிகிறது. காங்கிரஸின் வெற்றிபெற்ற வேட்பாளர்களின் வித்தியாச ஓட்டை எடியூரப்பாவின் ஓட்டோடு ஒப்பிட்டால் இதன் உண்மை நிலை விளங்கும். அதை பற்றி கவலை படவேண்டியது பஜக தான்.
08-மே-2013 15:40:11 IST
முதலில் ஜாதி என்ற வார்த்தை அரசு பயன்படுத்துவதை நிறுத்தவேண்டும். அதைவிட்டுவிட்டு மற்றவர்களை குறை கூறுவதில் பயனில்லை. அதற்கு, பள்ளியில்/கல்லூரியில்/ பணியிடத்தில் ஜாதி சான்றிதல் கேட்க்க கூடாது. ஜாதி ரீதியில் இல்லாமல் பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்களுக்கு முன் உரிமை கொடுக்கப்படவேண்டும்.
அதே நேரத்தில் தங்களின் குடும்ப நிகழ்ச்சிக்காக உதாரணம் திருமணம் போன்றவற்றிற்கு ஜாதி சங்கங்களை பயன்படுத்துவதை தடை செய்ய தேவையில்லை.
06-மே-2013 11:00:23 IST
பெரும்பாலான வன்முறைகள், விபத்துக்கள் ஏற்படுவது மது அருந்தியவளால் தான் என்பதை யாராயினும் மறுக்க முடியுமா? அது உண்மை என்று ஆட்சியாளர்கள் நம்பினால் மதுக்கடைகளை ஏன் திறக்கிறார்கள்?
வன்முறையை தூண்டும் வசனங்களை தடை செய்யவேண்டும். காழ்ப்புணர்ச்சிக்கு இதுவும் ஒரு காரணம்.
30-ஏப்-2013 10:09:43 IST
"அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்பா".....
தேமுதிக நிச்சயமாக அதிமுக ஓட்டை பிரிக்கும். இது திமுகாவிற்கு சாதகமாகும் என்று உணர்ந்தால் மீண்டும் அதிமுக கூட்டணி உருவாக சாத்தியம் உண்டு. முதலில் முதல்வர்தான் தேமுதிக எம் எல் ஏக்களை கத்துக்குட்டிகள் என்று பிரிவினையை தோற்றுவித்தார். அவரே அதை முடிவுக்கு கொண்டுவரவும் வாய்ப்பு உள்ளது.
மேலும் மத்தியில் மோடி அவர்களை பிரதமர் வேட்பாளராக அறிவித்தால் நிச்சயம் தேமுதிக அந்த (பாஜக, அதிமுக,மதிமுக) அணியில் இடம்பெற துடிக்கும். அப்போது இந்த கூட்டணி சாத்தியமே.
சும்மா ஒரு கற்பனை.... அதிமுக 27, தேமுதிக 7, பாஜக 3, மதிமுக 2, இதரம்.. 1.
30-ஏப்-2013 09:40:45 IST