Bala : கருத்துக்கள் ( 8 )
Bala
Advertisement
Advertisement
ஏப்ரல்
5
2017
சிறப்பு பகுதிகள் இது உங்கள் இடம்
இளையராஜாவை ஏன் ஏ.ஆர். ரஹ்மானோடு ஒப்பிடவில்லை? ஏ.ஆர். சட்டப்படி தானே ராயல்டி பெற்றுக் கொண்டிருக்கிறார்? அது தயாரிப்பாளருக்கு மட்டும் சொந்தம் இல்லை. அதில் தயாரிப்பாளர், இசையமைப்பாளர் மற்றும் கவிஞன் ஆகியோருக்கு அவரவர்களுடைய சதவிகிதத்தில் பங்குண்டு. அதைத்தானே இசைஞானி கேட்கிறார்? அதுமட்டுமில்லை இசைஞானியின் இசையை வைத்து வர்த்தகம் பண்ணும் போது மட்டுமே இதை கேட்கிறார்.   23:40:04 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
5
2017
சிறப்பு பகுதிகள் இது உங்கள் இடம்
இந்தியாவில் இருந்து என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் பாடுபவருக்கு கல்லா கட்டவேண்டுமே. இங்கு டாலரில் டிக்கெட் வாங்குவனுக்கு இளையராஜா பாடல் இல்லை என்றால் நாம் ஏன் நிகழ்ச்சிக்கு போகவேண்டும் என்று நினைப்பவர்கள் ஏராளம்.   23:28:45 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
8
2017
அரசியல் ஓ.பி.எஸ்., முதல்வராக இருக்க தகுதியற்றவர் தம்பிதுரை
இவரிடம் உள்ள துணை சபாநாயகர் பதவியை பறிக்க வேண்டும்.   01:54:29 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

ஜனவரி
29
2017
வாரமலர் தனிமை சுகம்!
பெரும்பாலான அமெரிக்க வாழ் இந்தியர்களின் நிலைமை இதுவே. 20 வருடங்களுக்கு முன்னாள் (இந்தியாவில் ஐ.டி. துறை கால் பதித்த சமயம்) இந்தியர்களின் வாழ்வாதாரம் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. அதனாலேயே ஐ.டி யை தேர்ந்தெடுத்து படித்து பின்னர் பட்டம் வாங்கி அதில் வேலைக்கும் சேர்ந்து அப்பாடா என்று செட்டில் ஆகியாச்சு என்று நினைத்தால் அது தவறு. அங்குதான் ஐ.டி கம்பெனியின் உண்மையான முகம் தெரியவரும். ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ப்ரோமோஷன் வந்து கொண்டே இருக்கும் (நன்றாக வேலை செய்யும் பட்சத்தில்). மேனேஜர் ஆகிவிட்டால் அவ்வளவுதான் தன்னுடைய பர்சனல் லைப் என்று ஒன்று இருக்கவே கூடாது. இரவு வெகு நேரமாகியும் வீட்டிற்கு போக முடியாது. அப்படியே போனாலும் வீட்டிலிருந்து கால்ஸ் எடுக்கவேண்டும். இதற்கெல்லாம் வடிகாலாக தெரிந்தது ONSITE . இங்கே வந்தால் நிலைமை சற்றே பரவாயில்லை. ஆனால் நம்மை மட்டுமே நம்பியுள்ள அம்மா, அப்பா போன்றோர்கள் என்ன செய்வார்கள்? முதலில் இனித்தாலும் பிறகு கசந்துக் கொண்டுதான் உள்ளது. இதற்கு ஐ.டி TO அக்ரி மட்டுமே தீர்வாக இருக்கமுடியும் என்றே எண்ணுகிறேன்.   02:30:33 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

ஜனவரி
25
2017
பொது அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி பின்னலாடை துறையினர் மகிழ்ச்சி
நண்பரே சீனாவில் எப்படி தொழிற்சாலை மாசினை கையாளுகிறார்கள் ?   01:41:06 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
8
2015
விவாதம் முத்ரா வங்கி திட்டம் மூலம் பெரிய மாற்றம் ஏற்படுமா?
நல்ல திட்டம் தான். ஆனால், எந்தவொரு காரணத்தைக் கொண்டும் கடன் தள்ளுபடியோ அல்லது அரசியல் குறுக்கீடுகளின் மூலமாக காரியத்தை சாதிக்க நினைப்பவர்களையோ இதில் தலைதூக்க விடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.   19:18:08 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
10
2015
அரசியல் உளவு வளையத்தில் நேதாஜி குடும்பத்தினர்
எந்த புத்தகத்தில் இதை குறிப்பிட்டுள்ளனர்....?   20:44:20 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மார்ச்
1
2015
சிறப்பு கட்டுரைகள் மனிதம் மறந்த கல்வி ப.ராம் மோகன்,எழுத்தாளர், துணை ஆணையர், மத்திய கலால் மற்றும் சேவை வரித்துறை
புலம் பெயரும் நோக்கத்தில் தொழிற்கல்வி கற்பவர்கள் பெரும்பாலும் தங்கள் இணக்கத்தை பல பன்னாட்டு நிறுவனங்களுக்கு அர்ப்பணிக்கின்றனரேயன்றி இந்த நாட்டுக்கோ, தங்கள் மொழிக்கோ, தங்கள் நன்றியுணர்வை காட்டுவது இன்று குறைந்து வருகிறது :- 1. ஒரு புறத்தில் விவசாயத்திற்கு எந்தவொரு சலுகையும் கொடுக்காமல் இருந்ததாலும் சுயமாக இருந்த விவசாயினை உரம், விதை, கனரக வாகனங்கள் போன்றவற்றின் மூலமாக கடனாளியாக தள்ளப்பட்ட ஆபத்தான நேரத்தில் ஆபாவாணனாக ஐ.டி. துறை வந்தது. அதே சமயம் அரசுத் துறையில் வேலைக்கு ஆள் எடுத்தலை நிறுத்தி வைத்திருந்தனர். ஆதலால் 90 களின் பின்னாளில் ஐ.டி. -யை தேர்வு செய்தனர். அவ்வாறு தேர்வு செய்து படித்த இளைஞர்கள் ஒரு கட்டத்தில் இந்தியாவின் உள்ளே வேலையில் இருக்கும் பட்சத்தில் பெரும்பாலும் technical ஆக நிலைத்து நிற்கமுடியவில்லை. நம் ஐ.டி கம்பெனிகள் கூட technical வேலையை outsourcing எடுப்பதைக் காட்டிலும் L1 & L1/2 (அதாவது கால்சென்டர் -ஐ போன்றது) வேலையைத் தான் outsourcing எடுப்பதில் போட்டி போடுகின்றனர். விவசாயமும் படுத்துவிட்டது, அரசாங்கமும் கைவிட்ட இந்தச் சூழ்நிலையில் (சாதீய அடிப்படையில் இட ஒதுக்கீடு வேற துரத்துகின்றது) அவர்கள் புலம் பெயர ஆரம்பிக்கிறார்கள். இதனால் அவர்கள் techi ஆகவே field இல் நிலைத்து நிற்க முடிகின்றது. இதில் தவறேதும் இல்லை. 2. இவ்வாறு புலம் பெயர்ந்த தமிழர்களின் குழந்தைகளை சோதித்து பாருங்கள் அவர்களின் தமிழ் அறிவும் நம் தமிழ்நாட்டில் மெட்டிரிக்குலேசனில் படிக்கும் குழந்தையின் தமிழ் அறிவையும் சோதித்து பாருங்கள் யார் மொழி அறிவுடன் (கூடவே இசை அறிவும்) தங்கள் குழந்தைகளை வளர்க்கிறார்கள் என்று தெரியும். 3. தொழிற் கல்வியினால் மானுடம் குறைந்துவிட்டது என்கிற வாதத்தை ஏற்க முடியவில்லை. ஆனால் ஒழுங்கீனம் எல்லா நிலையிலும் அதிகரித்துள்ளதை பார்க்கமுடிகின்றது. 4. இன்றைய நிலையிலும் பல புலம் பெயர்ந்த தமிழர்கள் விவசாயம் செய்தோ அல்லது தொழில் தொடங்கியோ அவர்களின் வாழ்க்கையினை வாழ விரும்பினாலும் தமிழகத்தில் அதற்கான சூழ்நிலைகள் பிறந்துவிட்டதா ?   08:26:30 IST
Rate this:
6 members
1 members
5 members
Share this Comment