நாடு முழுவதும் இதை போல 12 திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதில் 2 திட்டங்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது.. ஒன்று குஜராத்தில் மற்றொன்று மத்திய பிரதேசத்தில். மத்திய அரசின் திட்டமே ஆனாலும், மாநிலத்தில் ஆளும் கட்சி என்ன செய்கிறது என்பதை பொறுத்து தான் வேகம் இருக்கும் என்பது இதில் இருந்து புரிகிறது..
31-மே-2013 06:48:31 IST
என்னதான் போலீசார் ரோந்து சென்றாலும், ஒரு ஏட்டைய்யா பஸ்சிலேயே பயணித்தாலும், வன்முறை கும்பலுக்கு அதெல்லாம் தூசு.. கும்பல் கும்பலாக தீப்பந்தங்களும் பெட்ரோல் குண்டுகளும் ஏந்தி வரும் வன்முறை கும்பலை தடுப்பது என்பது கடினமே.. சாதி அரசியல் செய்யும் பா ம க, விடுதலை சிறுத்தைகள் மற்றும் ஏனைய சாதி சங்கங்கள் எல்லாவற்றையும் தடை செய்ய வேண்டும்.. அதுவே நிரந்தர தீர்வு..
03-மே-2013 08:20:55 IST
வரிசைப்படுத்தி கேள்வி கேட்டு, பா.ம.க-வினர் செய்த, செய்து கொண்டிருக்கிற தவறுகளை மறைக்க வேண்டாம்.. அரசின் மீது தவறாகவே இருக்கட்டும்.. அதை எதிர்த்து போராட வேறு மன்றங்கள் உள்ளன.. பொது மக்கள் பயணிக்கின்ற பேருந்தின் மீது பெட்ரோல் குண்டு போடுவதை என்ன சொல்வது? அவர்கள் என்ன தவறு செய்தார்கள்? யாரேனும் தீக்கரை ஆனால் யார் பதில் சொல்வது? அவர்கள் குடும்பங்களின் கதி? அறவழி போராட்டம் என்றார் ஒருவர் நேற்று... பெட்ரோல் குண்டு போடுவது அறவழி என்று காந்தி சொன்னாரா?
02-மே-2013 15:07:55 IST
முதல்வர் இவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். மக்கள் வேண்டுவதும் அதுவே. அரைவேக்காடு அன்புமணி சொன்ன அறவழி போராட்டம் இதுதானா? இந்த லட்சணத்தில் தமிழ் குடிதாங்கி, அம்பேத்கர் சுடர் என்று அடைமொழி வேறு அந்த ஆளுக்கு..
02-மே-2013 14:56:38 IST
வேறு எதை வைத்து தேர்தலை சந்திப்பது என்று தெரியாமல் இலங்கை பிரச்சனையை எடுத்து கொண்டுள்ளார்.. தேவைப்பட்டால் கூட்டணியில் இருந்து வெளியேற இது உதவும்.. எங்களை இன்னும் நீங்கள் இவ்வளவு மடையர்களாக எடை போடுகின்றீர்களா? அடுத்த தேர்தலிலும் பட்டை நாமம் சாத்தப்பட வேண்டும் இவர்களுக்கு.. No Fire zone பார்த்த பின்னரும் மக்கள் நீங்கள் சொல்வதை எல்லாம் நம்பிக்கொண்டு இருப்பார் என்று நினைக்காதீர்.. அந்த காலம் எல்லாம் மலை ஏறி விட்டது..
08-மார்-2013 09:11:54 IST
நிவாரணம் என்பது ஒரு தற்காலிக நடவடிக்கை.. இதன் பொருளாதார தாக்கத்தை கூர்ந்து கவனிக்க வேண்டும்.. நிவாரணம் கொடுத்தால் அரசுக்கு கடன் சற்று அதிகமாகும்.. அதே சமயம் சந்தையில் விவசாய பொருட்கள் வரத்து ஏற்கனவே குறைந்திருக்கும்.. இது இரண்டும் சேர்ந்தால் பணவீக்கம் அதிகமாகும்.. இந்த தற்காலிக நடவடிக்கைகள் அவசியம் தான்.. ஆனால் அது மட்டும் போதுமா? தொலைநோக்கு பார்வை வேண்டாமா? விவசாய உற்பத்திதிறன் அதிகரிக்க, செவ்விய நீர்பாசன முறைகளை நடைமுறைபடுத்த, என்று பல்வேறு திட்டங்கள் வேண்டாமா? இது போன்ற திட்டங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக உள்ளன.. ஆனால் எதுவுமே உருப்படியாக நடைமுறைபடுத்த படவே இல்லை..
13-பிப்-2013 12:14:30 IST