Ramalingam Gurusamy : கருத்துக்கள் ( 158 )
Ramalingam Gurusamy
Advertisement
Advertisement
ஜூலை
4
2018
பொது கண்டக்டர் இல்லாமல், 231 பஸ்கள் இன்று முதல் இயக்கம்
பேருந்துகளை இயக்கும் ஓட்டுனர்களுக்குப் பணிச்சுமை அதிகரிக்கப்படுகிறது. தாளிடப்பட்ட பேருந்தில் பயணிகளின் அவசரக் கோரிக்கைகளை நிறைவேற்ற நடத்துனர் தேவை கட்டாயம் வேண்டும். ஆட்குறைப்பு செலவினம் சிக்கனம் போன்றவற்றை அலுவலகங்களில் தேவையற்ற 25 சதவீத பணி நியமனங்களை ஒழித்துவிட்டு, நடத்துனர் பணி வாய்ப்புகளை தகுந்த பயிற்சியுடன் வேலை வாய்ப்பகங்களில் பதிவு மூப்புப்பஉள்ளவர்களுக்கு வழங்கலாம். எக்காரணத்தைக் கொண்டும் அடிப்படைப் தேவைப் பணியான ஓட்டுன்ர், நடத்துனர் பணி இடங்கள் குறைக்கப்படக் கூடாது. இப்பதவிகளுக்கு முதுகலை படித்தவர்களும் போட்டியிடும் நிலையே தமிழகத்தில் தொடர்கிறது என்பதை நாம் மறக்கக் கூடாது.   02:35:42 IST
Rate this:
6 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
30
2018
சினிமா ஜாதி, மதத்தை ஒழிக்க ஒரே வழி இது தான் : கமல்...
பிறப்புச் சான்றிதழில் சாதி, மதம் குறிப்பிடலாம் அது அவர்களின் உரிமை. ஆனால் சாதி, மதம் விபரங்களை பள்ளிக் சான்றிதழ்களில் குறிக்கத்தக்க தேவை இல்லை என்பதோடு அவைகளின் அடிப்படையில் சலுகை மற்றும் ஒதுக்கீடுகள் வழங்கப்படுவது, எழுபது ஆண்டுகளாக வளர்ந்து வருகின்ற இந்தியாவிற்கு துரதிஷ்ட்டமே. அவைகளை 2019 முதல் ரத்துச் செய்துவிட்டு, தகுதி, பொருளாதாரம் என்ற அடிப்படையில் மட்டுமே சலுகை மற்றும் ஒதுக்கீடுகளை வழங்கிட வேண்டும். என்பதோடு அனைவருக்கும் பொதுவான ஒரே சிவில் சட்டம் அமலாகின்ற நாளே இந்தியாவின் இரண்டாம் சுதந்திரத்திருநாள் என்பேன். ராமலிங்கம் குருசாமி டொரொண்டோ கனடா.   18:14:34 IST
Rate this:
0 members
0 members
57 members
Share this Comment

டிசம்பர்
5
2017
கோர்ட் அரசு ஊழியர் மீது குண்டர் சட்டம் பாயுமா?
அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் ஊழல் அரிச்சுவடிப் பாடங்களையும், அவற்றில் உள்ள நெழிவு, சுழிவுகளையும் கற்றுக்கொள்ளும் கொடுத்து அவர்கள் மூலம் அரசாங்கத்தின் சொத்துக்களை அபகரிப்பு செய்வது அரசு யந்திரங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளே. கையும் களவுமாக பிடிக்கப்படுகின்ற லஞ்சப் பணியாளர்களை உடனடியாக குண்டர் சட்டத்தில் மட்டுமே கைது செய்து விசாரணை செய்ய வேண்டும் என்பதே தமிழக மக்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பாக இருக்கிறது. இதே நடைமுறைகள் அரசியல்வாதிகள் மீதும் அமல்படுத்த வேண்டும். எரிவதைப் பிடிங்கிவிட்டால் கொதிப்பது தானகவே அடங்கும். தண்டிக்கப்பட்டுள்ள லஞ்சக் குற்றவாளிகளிகள் பற்றிய விபரங்களை அவர்களின் புகைப்படத்துடன் அவர்கள் பிடிபட்ட (அ) பணிபுரிந்த அலுவலக அறிவிப்பும் பலகைகளில் தவறாமல் இடம்பெறச் செய்தால் அது மற்றவர்களுக்கு எச்சரிக்கையாக அமையும். ராமலிங்கம் குருசாமி, மதுரை.   18:35:22 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

டிசம்பர்
10
2016
அரசியல் எம்.பி.,க்களின் சம்பளத்தை நிறுத்துங்க! பா.ஜ., மூத்த தலைவர்கள் கொதிப்பு
அரசு ஊழியராகிய பாராளும் மன்றம் உறுப்பினர்கள், தொடர்ந்து அமளி செய்து, பாராளும் மன்றத்தின் இயக்கத்தினை தடை செய்து வருவது துரதிர்ஷ்டமானதாக தெரிவதால், அரசு ஊழியர்களுக்கு உரிய ' வேலை இல்லை, கூலி இல்லை ' என்ற விதிகளை அமல் செய்து, பாராளுமன்றத்தினை முடக்கி அமளியில் ஈடுபடும் அனைத்து உறுப்பினர்களது ஊதியம் மற்றும் படிகளையும் ரத்துச் செய்ய வேண்டும் என்பதே மக்களின் ஏகோபித்த கருத்து. அவைகளை அவர்களின் ஓய்வுக்கால பென்ஷனிலும் அட்டாச் செய்ய வேண்டும். பொது மக்களின் வரிப்பணத்தில் மஞ்சள் குளிக்கும் அவர்களின் செயல்கள் மன்னிக்கக் கூடியதல்ல. எரிவதைப் பிடுங்கிவிட்டால் கொதிப்பது தானாகவே அடங்கிவிடும். ஐந்து ஆண்டுகளில் முப்பது நாட்களுக்கு மேல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் பாராளுமன்றம் உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்து, அடுத்து வருகின்ற தேர்தல்களில் அவர்களை வேட்பாளராக அங்கீகரிக்கக் கூடாது.   19:36:07 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
8
2016
சிறப்பு பகுதிகள் இது உங்கள் இடம்
போதையில் கார் ஓட்டி பாதையில் எதிர்ப்படும் மனிதர்களைக் கொல்வதற்கு எவருக்கும் மன்னிப்பு மற்றும் கருணை காட்டக் கூடாது, சட்டமும் கொலையாளிக்கு துணை போனால் அவர்களை தெய்வம் நின்று கொல்லும். போதையில் விபத்து ஏற்படுத்தினால் ஐந்து வருடங்கள் சிறைத்தண்டனை, இறந்தவர் அனைவருக்கும் தலா பத்து லட்சம் நஷ்ட்ட ஈடு இவை இரண்டும் இல்லாவிடில் ஆயுள் தண்டனை என்றும், விபத்து ஏற்படுத்தினால் மூன்று ஆண்டுகளுக்கு லைசென்ஸ் ரத்து, விபத்தினால் ஏற்படும் சேதங்களுக்கு குறைந்த பட்ச நஷ்ட்ட ஈடு ஒரு லட்சம் வழக்கு செலவுகளையும் தனியாகத் தர வேண்டும் என்று சட்டங்கள் தங்களையே திருத்திக் கொள்ளுமேயானால், போதையில் வாகனம் ஓட்டுவோர் திருந்துவர். விபத்துக்கள் குறையும் நம்பலாம்.   02:01:57 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
7
2016
அரசியல் அதிரடி தாக்குதல் நடத்த பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான்... ரகசிய உத்தரவு! இந்திய ராணுவத்தின் தாக்குதலுக்கு பழிவாங்க தீவிரம்
பாகிஸ்தான் தீவிரவாதிகள் நமது எல்லைப்புற ராணுவ முகாம்களைத் தாக்க முயற்சிக்கும் பொழுது, நமது எல்லைக்கு வெளியே பாகிஸ்தான் பகுதியில் இருந்து நமது எல்லைக்கும் நடுவில் உள்ள பயங்கரவாதிகளை முப்பது கிலோ மீட்டருக்கு உட்பட்ட பகுதி நெடுகிலும் விமானப்படை மூலம் ஒரே நேரத்தில் ரிவிட் தாக்குதல் நடத்தி வேறுடன் தீவிரவாதிகளை ஸர்ஜிக்கல் ஸ்ட்ரைக் செய்து அழித்தால் நீண்ட நாள் தொல்லையும் ஒழியும். பாகிஸ்தானும் பாடம் கற்கும்.   01:40:36 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
4
2016
சிறப்பு பகுதிகள் இது உங்கள் இடம்
தமிழக அரசின் அரசு போக்குவரத்து நிறுவனங்கள் நஷ்டத்தில் மூழ்கி வருவதாக தணிக்கையாளர்களால் எச்சரிக்கை தரப்பட்டுள்ளது கவலையைத் தருவதாக உள்ளது. காரணம் பொறுப்பற்ற தன்னலம் பெரிதென செயல்படும் அதிகாரிகளும், தொழிற் சங்க பொறுப்பாளர்களும் லட்சம் வளர்ப்பதுதான். அதனால் இன்றைய நிலை என்ன ? ஏற்கனவே ஒன்றரை மடங்கு கூட்டப்பட்ட பேருந்து கட்டணங்களால் சரிந்து கொண்டிருக்கும் போக்குவரத்து கழகங்களை உயிர்ப்பிக்க இயலவில்லை என்பதற்கு நிர்வாகத்தையும், தொழிற் சங்கத்தையும் புனரமைக்க நிர்மாணம் செய்யத் தவறியதே. இதன் விளைவு இன்றளவில் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு பணப்பலன் உரிய காலங்களில் வழங்க இயலாமல் ஊழியர்களின் குடும்பங்கள் தற்கொலை முடிவை தேடி வருகின்றன. இந்த லட்சணத்தில் ஊழியர்களின் பாதிப்பையும், போக்குவரத்து கழகங்களின் நஷ்ட்டத்தையோ பற்றி கவலைப்படாத சட்டசபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் பயணங்களை அரசுப் போக்குவரத்து கழகப் பேருந்துகளில் தொடர்ந்து பயணிக்காமல் தங்களின் இலவசப் பாஸ்களை சரண்டர் செய்து தங்களின் தார்மீக பங்களிப்பை நிலைநிறுத்திடவும், தங்கள் உரிமைகளையும், கடமைகளையும் பயன்படுத்தி தமிழக அரசுப் போக்குவரத்து கழகங்ளை உயிர்ப்பிக்க போராடுவார்களா ? என்பதை காலக் கண்ணாடி தமிழக மக்களுக்கு காட்டும் என நம்புவோம்.   07:35:56 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
30
2016
சிறப்பு பகுதிகள் டவுட் தனபாலு
டெல்லி மாநில காவல்துறை மத்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டதாக இருப்பதால், மாநிலம் கட்சி சற்று கட்டுப்பாடுடன் சமயோசிதமாக நடந்து கொள்ள வேண்டி உள்ளது. ஆளுவோர் என்ற அகங்காரத்தில் சட்டமும் ஒழுங்கும் மீறப்படும்பொழுது கண்டிப்பும், தண்டனைக்கும் பயந்து தங்களைத் தற்காத்து கொள்வதில் கவனம் கொள்ளமுடிகிறது. இது போன்ற ஆளுவோரின் அத்துமீறல் செயல்களுக்கு கடிவாளம் போட அனைத்து மாநிலங்களின் காவல்துறைகளையும் மத்திய அரசின் ஆட்சிப் பொருப்பில் இருப்பது, நல்லதொரு முனமாதிரியாகவும் இருப்பதோடு, சட்டம் ஒழுங்கும் உயிர்த் துடிப்புடன் இயங்கும் உறுதிப்பாடும் பெறும் என்பதோடு முன்னாள் ராணுவ வீர்ர்களையும் அதிகளவில் மாநிலப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தலாம்.   22:39:34 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
27
2016
சிறப்பு பகுதிகள் இது உங்கள் இடம்
விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்து ஐம்பது ஆண்டுகளில் ஆசிய பணக்காரர் எனப் பட்டம் சூட்டிக் கொண்ட ஒரு தெலுங்கருக்கு வழங்கப்படுகின்ற இந்திய அரசின் பட்டங்கள்,பறக்கவிடத்தான் லாயக்கு என்று நினைத்துவிட்டனரோ என்னவோ.   07:04:40 IST
Rate this:
1 members
0 members
11 members
Share this Comment

செப்டம்பர்
22
2016
சம்பவம் ஆயுதங்களுடன் மர்ம நபர் நடமாட்டம்? மும்பை கடலோரத்தில் தேடுதல் வேட்டை
எப்பொழுது தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ளதென ஊர்ஜிதமான செய்திகள் பரவுகிறதோ, உடனடியாக பாதிப்புக்கு உள்ளாகின்ற மக்கள் வாழ்கின்ற பகுதிகளில், முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளைப்பற்றியும், அசம்பாவிதம் நிகழ்ந்த நேரத்தில், எப்படிப்பட்ட விழிப்புணர்வு கொள்ள வேண்டும் என்பதைப்பற்றியும், சம்பவத்திற்குப் பிறகு தகவல் தொடர்பு, மருத்துவமனை அனுமதி முதலியவற்றை உரிய வழிகளில் விளம்பரம் செய்தல், சந்தேகப்படுகின்ற பொருட்களின் விபரம், சந்தேகத்திற்கு உரிய நபர்களின் நடமாட்டம் போன்ற தகவல்களை தெரிவிக்க வேண்டிய மொபைல் எண்களை தெரிவித்தல், அவ்வாறு உண்மையான தகவல் தருவோரது ரகசியம் காத்தல், பெறுமானமுள்ள ரொக்கப் பரிசுகள் வழங்குதல் ஆகியவற்றை மத்திய, மாநில அரசுகள் தக்க நேரத்தில் பொது மக்களுக்கு எச்சரிக்கை செய்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது காலத்தின் கட்டாயம்.   05:46:17 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X