முன்பெல்லாம், திரு. பன்னீர் செல்வம் என்றால் ஒரு மரியாதை இருந்தது... ஏனென்றால், அவர் அமைதியானார், அடக்கமானவர், மற்றவர்களை கொச்சைபடுத்தி பேச தெரியாதவர், அனைவருக்கும் பொதுவானவர், எதிர்கட்சியினர் கூட அவரை மதித்தனர்.... ஆனால் சமீப காலமாக அவரின் நடவடிக்கைகள், "நாருடன் சேர்ந்த பூவும் நாறிவிட்டது" என்பது போல் இருக்கிறது..... குறிப்பாக அம்மாவிடம் அவர் நல்ல பெயர் எடுப்பதற்காக எதிகட்சிதலைவரை அவர் இழிவுபடுத்திபேசியது, நடு நிலையாளர்களையும், அவரது அபிமானிகளையும் முகம் சுழிக்க வைத்தது...இனி இவரும் பத்துடன் பதினொன்று....அவரின் பேச்சுக்களை பொருட்படுத்த வேண்டாம்.....
16-மே-2013 11:44:54 IST
திரு.ராஜன் சார், எங்கே வளர்ச்சிப்பணிகள்?.....சரி வளர்ச்சிப்பணிகள் இருக்கிறது என்றே வைத்துக்கொண்டாலும், பல பேரை சாகடித்து ,பல குடும்பங்களை காவு கொடுத்து யாருக்காக இந்த வளர்ச்சிப்பணிகள்?.....
16-மே-2013 11:31:58 IST
மூத்த தலைவரும், தேமுதிக உருவாக காரணகர்த்தாவுமான,பண்ருட்டியாரை உதாசீனப்படுத்துவது தேமுதிகவின் வளர்ச்சிக்கு உகந்ததல்ல, அதே நேரம், தன்னை அதிமுகவிலிருந்து வெளியேற்றிய செல்வி ஜெயலலிதாவை விவர்சிப்பது அவருக்கு பிடிக்கவில்லை என்பதற்காகதான் சண்டை என்பது உண்மையுமல்ல...
15-மே-2013 01:54:40 IST
நம் தாயைப்போல் மதிக்க வேண்டும் என்பதற்காகவே, நம் முன்னோர்கள், தாய் நாடு என்றும், அன்னை பூமி என்றும், பாரத மாதா என்றும்,தாய் மொழி என்றும், தமிழ்த்தாய் என்றுமெல்லாம் குறிப்பிட்டார்கள்...அதுபோலவே நதிகளுக்கெல்லாம் பெண்கள் பெயரை மொழிந்தார்கள்.... இதையெல்லாம் உணர்வுபூர்வமாக பார்க்காமல், உருவகப்படுத்திப்பார்பது முட்டாள்தனம்... மக்களின் தலையாய பிரட்சினைகளை மறந்து, உணர்வுபூர்வமாக பார்க்கவேண்டியதை நூறு கோடி செலவு செய்து உருவகப்படுத்துவது என்பது.., வாசலில் இருக்கும் பிச்சைக்காரனை தாண்டிப்போய், கோயிலில்போடும் பணத்தைப்போன்று உபயோகமில்லாதது...
15-மே-2013 01:44:13 IST
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக்கேட்ட தாய்.... தன் முயற்சியால், சாதனை படைத்த சகோதரி பிரேமாவின் தாய்தந்தையருக்கு அதுபோன்றதொரு ஆனந்த தருணமிது.... அந்த சந்தோசம் ஆயுள் வரை நீடித்திருக்க, எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.....
13-மே-2013 12:12:26 IST
pal123 மற்றும் t ...C .. அவர்களே வன்முறை, தீவிரவாதம் இதையெல்லாம் யார் செய்தாலும் தவறுதான் ...அதில் நானென்ன, நீயென்ன எல்லோரும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே....
02-மே-2013 14:25:51 IST
சாதியை தூக்கி வைத்து, மனிதத்தை மறந்த முட்டாள்கள்... பொது மக்களுக்கும், பொது சொத்திற்கும் பங்கம் விளைவிக்கும் இவர்களுக்கெல்லாம் ஆட்சி ஒரு கேடா? இவர்களையெல்லாம்,ஆட்சியில் அமரவிட்டால் நாடு சுடுகாடாகிவிடும்... இப்படிப்பட்ட ஜாதி வெறியர்களை மக்கள் இனம் காண வேண்டும்...இதில் சம்பத்தப்பட்டவர்களை குண்டர் சட்டத்தில் உள்ளே தூக்கிப் போட்டு, ஆயுள்வரை வெளிச்சத்தையே பார்க்க விடாமல் செய்யவேண்டும்....
02-மே-2013 01:37:55 IST
தேர்தல் நெருங்கிவிட்டது....இதோ நானும் இருக்கிறேன்....அன்பை போதிக்கவேண்டிய தலைவர், அரிவாளை கையில் கொடுக்கிறார்.... தொண்டர்களை, குண்டர்களாக்கி அரசியலில் அறுவடை செய்ய பார்க்கிறார்... நல்லது விதத்திருந்தால் தானே நல்லது கிடைக்கும்.... நல்லது என்ற போர்வையில் தீமையை விதைத்திருக்கிறார்.... அதனால் அறுவடையும் அதுபோலவே இருக்கும்......
01-மே-2013 01:50:56 IST