அரசின் இந்த அறிவிப்பால், ஒரு சில கயவர்களுக்கு மட்டுமே கிடைக்க வேண்டிய "கெட்ட பெயர்" ஒட்டு மொத்த ஆசிரியர் சமுதாயத்திற்கே தடையில்லாமல் கிடைக்கும்.... ஆசிரியர்கள் என்றாலே அருவெறுப்புடன் பார்க்கப்படுவார்கள்.....எனக்கு தெரிந்து, தானுண்டு தன் வேலையுண்டு சம்பளத்தை பார்க்காமல் அறிவு புகட்டும் கடமை எனக்குண்டு... என தன் தொழிலில் ஆத்தமார்த்தமாக பணியாற்றும் எத்தனையோ ஆசிரியர்கள் இருக்கிறார்கள்... அதுபோன்ற ஆசிரியர்களுக்கு இது மனவேதனை அளிக்கும்....பாலியல் தொல்லைகளுக்கு இதுவல்ல தீர்வு... சட்டம்.... அந்த சட்டம் தன் கடமையை சரியாக செய்யவேண்டும்... அதற்க்குரிய தண்டனை தாமதமில்லாமல் கிடைக்க வேண்டும்... அந்த சட்டத்தை சரியாக பயன்படுத்த அரசாங்கம் நினைத்தால் முடியாதா? இன்று கொலை, கொள்ளை போன்ற அனைத்து குற்றங்களையும் செய்வது அதிகபட்சமாக ஆண்கள்தான்... அதற்காக மக்களை அவர்களிடமிருந்து காக்க, அனைத்து ஆண்களையும் நாடு கடத்திவிடலாமா?.... சட்டத்தால் ஒடுக்க முடியாத ஒரு குற்றத்தை இதுபோன்ற திட்டத்தால் ஒழிக்க முடியுமா?
04-ஜூன்-2013 13:11:40 IST
முன்பெல்லாம், திரு. பன்னீர் செல்வம் என்றால் ஒரு மரியாதை இருந்தது... ஏனென்றால், அவர் அமைதியானார், அடக்கமானவர், மற்றவர்களை கொச்சைபடுத்தி பேச தெரியாதவர், அனைவருக்கும் பொதுவானவர், எதிர்கட்சியினர் கூட அவரை மதித்தனர்.... ஆனால் சமீப காலமாக அவரின் நடவடிக்கைகள், "நாருடன் சேர்ந்த பூவும் நாறிவிட்டது" என்பது போல் இருக்கிறது..... குறிப்பாக அம்மாவிடம் அவர் நல்ல பெயர் எடுப்பதற்காக எதிகட்சிதலைவரை அவர் இழிவுபடுத்திபேசியது, நடு நிலையாளர்களையும், அவரது அபிமானிகளையும் முகம் சுழிக்க வைத்தது...இனி இவரும் பத்துடன் பதினொன்று....அவரின் பேச்சுக்களை பொருட்படுத்த வேண்டாம்.....
16-மே-2013 11:44:54 IST
திரு.ராஜன் சார், எங்கே வளர்ச்சிப்பணிகள்?.....சரி வளர்ச்சிப்பணிகள் இருக்கிறது என்றே வைத்துக்கொண்டாலும், பல பேரை சாகடித்து ,பல குடும்பங்களை காவு கொடுத்து யாருக்காக இந்த வளர்ச்சிப்பணிகள்?.....
16-மே-2013 11:31:58 IST
மூத்த தலைவரும், தேமுதிக உருவாக காரணகர்த்தாவுமான,பண்ருட்டியாரை உதாசீனப்படுத்துவது தேமுதிகவின் வளர்ச்சிக்கு உகந்ததல்ல, அதே நேரம், தன்னை அதிமுகவிலிருந்து வெளியேற்றிய செல்வி ஜெயலலிதாவை விவர்சிப்பது அவருக்கு பிடிக்கவில்லை என்பதற்காகதான் சண்டை என்பது உண்மையுமல்ல...
15-மே-2013 01:54:40 IST
நம் தாயைப்போல் மதிக்க வேண்டும் என்பதற்காகவே, நம் முன்னோர்கள், தாய் நாடு என்றும், அன்னை பூமி என்றும், பாரத மாதா என்றும்,தாய் மொழி என்றும், தமிழ்த்தாய் என்றுமெல்லாம் குறிப்பிட்டார்கள்...அதுபோலவே நதிகளுக்கெல்லாம் பெண்கள் பெயரை மொழிந்தார்கள்.... இதையெல்லாம் உணர்வுபூர்வமாக பார்க்காமல், உருவகப்படுத்திப்பார்பது முட்டாள்தனம்... மக்களின் தலையாய பிரட்சினைகளை மறந்து, உணர்வுபூர்வமாக பார்க்கவேண்டியதை நூறு கோடி செலவு செய்து உருவகப்படுத்துவது என்பது.., வாசலில் இருக்கும் பிச்சைக்காரனை தாண்டிப்போய், கோயிலில்போடும் பணத்தைப்போன்று உபயோகமில்லாதது...
15-மே-2013 01:44:13 IST
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக்கேட்ட தாய்.... தன் முயற்சியால், சாதனை படைத்த சகோதரி பிரேமாவின் தாய்தந்தையருக்கு அதுபோன்றதொரு ஆனந்த தருணமிது.... அந்த சந்தோசம் ஆயுள் வரை நீடித்திருக்க, எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.....
13-மே-2013 12:12:26 IST
pal123 மற்றும் t ...C .. அவர்களே வன்முறை, தீவிரவாதம் இதையெல்லாம் யார் செய்தாலும் தவறுதான் ...அதில் நானென்ன, நீயென்ன எல்லோரும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே....
02-மே-2013 14:25:51 IST