Advertisement
தமிழ் சிங்கம் : கருத்துக்கள் ( 2818 )
தமிழ் சிங்கம்
Advertisement
Advertisement
மே
28
2015
பொது சல்மான் வழக்கு பைல்கள் தீ விபத்தில் நாசம்
ரொம்ப நல்லது. நாடு உருப்பட்டு விடும்.   01:19:50 IST
Rate this:
1 members
0 members
40 members
Share this Comment

மே
28
2015
அரசியல் இதுக்கொரு நியாயத்தை நீங்க தான் சொல்லணும்
மக்களால் தேர்ந்தேடுக்கபட்டவருக்கு தான், அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் கொடுக்க வேண்டும். கவர்னர் மத்திய அரசின் எடுபிடி. அவருக்கு கேஜ்ரிவாலை விட அதிக அதிகாரம் கிடையாது.   01:18:34 IST
Rate this:
16 members
0 members
66 members
Share this Comment

மே
28
2015
அரசியல் கவர்ச்சி திட்டங்களை அறிவித்து மக்களை முட்டாளாக்க விரும்பவில்லை பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு பேட்டி
பத்துக்கும் மேற்பட்ட சிறு சிறு திட்டங்களை போட்டு, குழப்படி செய்து, கெட்ட பெயர் வாங்கி கொள்வதை விட, மோடி ஒரு சில நல்ல திட்டங்களை குழப்பமின்றி தெளிவாக செய்யவேண்டும். இந்தியாவில் நிறைய இளைஞர்கள் இருக்கிறார்கள் என்று பெருமையுடன் சொல்லும் நாம், அவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் வரவேண்டும். இல்லையென்றால், இந்தியாவின் நிலைமை தலைகீழாகிவிடும். வேலை வேலை வேலை. இவைகள் தான் வேண்டும். இதற்காக கார்பரேட் நிறுவனங்கள் சொல்வதை எல்லாம் செய்ய தேவை இல்லை. ஒரு கம்பெனியை ஆரம்பிக்க இருக்கும் தடைகளை அகற்ற வேண்டும். அவற்றை மாதகணக்கில் காத்திருக்க வைத்து இருக்க கூடாது. அதற்காக அரசு இயந்திரம் சீக்கிரம் இயங்க என்ன செய்ய வேண்டுமோ? அதை மோடி செய்ய வேண்டும். அதற்காக புது சட்டங்கள் தேவை இல்லை. அரசு இயந்திரத்தை சரி செய்ய, அதிகாரிகள் தான் சிறப்பாக பணிபுரிய வேண்டும். அவர்களுக்கு தகுந்த பயிற்சி அளிக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் வேலை முடியவேண்டும். ரெண்டாவது, நாட்டின் சாலைகள், ரயில் போக்குவரத்து, துறைமுக மற்றும் ஏர்போர்ட் வசதிகளை சீரமைக்க வேண்டும். அந்நிய நாட்டு சரக்குகள் துறைமுகத்தில் மாதகணக்கில் தேங்கி கிடக்க கூடாது. இந்த ரெண்டிற்குமே, எந்த வித புது சட்டங்களும் மோடிக்கு தேவை இல்லை. ஊழல் இருக்க கூடாது என்ற நிலை தான் வேண்டும். இவற்றை செய்தாலே, உலக கம்பெனிகள் இந்தியாவை நோக்கி படையெடுக்கும். அதைவிட்டு, கம்பெனிகள் சொல்பவற்றை மோடி செய்தால், மக்கள்தான் பாதிக்கபடுவார்கள். கம்பெனிகள் சொல்பவை யாவும் அவைகளின் தற்கால லாபத்திற்காக மட்டுமே. நூறு பேருக்கு மேல் வேலை செய்யும் கம்பெனிகளில், அவர்களை உடனடியாக வேலையை விட்டு தூக்க, கம்பெனிகளுக்கு அதிகாரம் வேண்டும். அப்படி இருந்தால் தான், நாங்கள் வளர்வோம் என்றெல்லாம் அவர்கள் கதை விடுவார்கள். கம்பெனிகளுக்கு இலவச மின்சாரம் வேண்டும். டாக்ஸ் தள்ளுபடி வேண்டும் என்றெல்லாம் கதறுவார்கள். ஆனால் அவையெல்லாம் உண்மையில்லை. உலக அளவில் உள்ள, சராசரியான வரியை விதிக்க வேண்டும். எந்தவித சலுகையும் கொடுக்க தேவை இல்லை. இளைஞர்களுக்கு தொழில் முறை கல்வி கொடுக்க வேண்டும். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இன்னமும் தொழில் முறை கல்வி வரவில்லை. மேற்கத்திய கல்வி முறை முற்றிலும் வித்தியாசமாக உள்ளது. மேற்கத்திய எந்தந்த கல்லூரியில் இருந்து வெளிவரும் மாணவன், அந்தந்த தொழில் சிறப்பாக கற்று தான் வருகிறான். நம் நாட்டில் தான், வேலைக்கும் போகும் வரை, தொழில் தெரியாது. வேலையில் சேர்ந்தபிறகே, நம் மாணவர்கள் தொழில் கற்று கொள்கிறார்கள். அந்த நிலை தொடர கூடாது. இவற்றையெல்லாம் செய்ய, புது புது சட்டங்கள் தேவை இல்லை. இருக்கும் சட்டங்களை ஒழுங்காக பின்பற்றி, ஊழல் இல்லாத ஆட்சி செய்து, போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தி, போக்குவரத்து விதிகளை முறைபடுத்தி, அரசு இயந்திரத்தை முடுக்கி விட்டாலே போதும். இந்தியா வல்லரசாகிவிடும்.   01:15:47 IST
Rate this:
0 members
1 members
9 members
Share this Comment

மே
28
2015
அரசியல் ஆர்.கே.நகர் தொகுதியில் களமிறங்குகிறார் டிராபிக் ராமசாமி அனைத்து கட்சி தலைவர்களிடமும் ஆதரவு கேட்க முடிவு
டிராபிக் ராமசாமி பொது வேட்பாளராக நிறுத்தபட்டால், நிச்சயம் ஜெயிப்பார். தவறாக கணக்குபோட்டு கொடுக்கப்பட்ட தண்டனை சரியாகும். மன்னன் அன்றே கொல்வான். தெய்வம் நின்று கொல்லும் என்பது மெய்படும்.   00:55:18 IST
Rate this:
45 members
1 members
177 members
Share this Comment

மே
27
2015
அரசியல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க., போட்டியில்லை கருணாநிதி அறிவிப்பு
திமுக நிற்கவில்லை என்றாலும், வேறொரு பொது வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க, மற்ற கட்சிகளுடன் கருணாநிதி பேச்சு வார்த்தை நடத்தி இருக்கலாம்.   01:39:19 IST
Rate this:
95 members
1 members
20 members
Share this Comment

மே
27
2015
அரசியல் மீனவர்களின் உரிமையை பறிக்க மத்திய அரசு முயற்சி ராகுல்
அறுபது ஆண்டுகளாக காங்கிரஸ் தூங்கி வந்தது. ஏழைகளின் துன்பம் புரியவில்லை. கண்ணுக்கு தெரியவில்லை. இப்போது ராகுலால் விழித்து விட்டது. இனி காங்கிரஸ் நல்லாட்சி கொடுக்கும் என்று நம்புவர்கள் இருந்தால், அவர்களை இந்தியாவில் தேட முடியாது. செவ்வாய் கிரகத்தில் தான் இருப்பார்கள். அதனால், ராகுல் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் இருக்கிறார்களா? என்று ஆராய்ச்சியில் இறங்கினால் நல்லது.   01:35:54 IST
Rate this:
2 members
0 members
23 members
Share this Comment

மே
27
2015
பொது காஸ் மானியம் வேண்டாம் என்ற அரசின் திட்டத்துக்கு வரவேற்புதமிழகத்தில் 21,000 பேர் தாமாக முன்வந்து வழிகாட்டினர்
பணக்காரர்களுக்கு மானியம் ஏன்? இந்த வேலையை அரசே செய்யாமல், நீங்களே செய்யுங்கள் என்று அரசு கூறுவது முட்டாள்தனமானது. அம்பானிக்கு ஐம்பது ரூபாய் ஒரு ஏழை கொடுத்தாலும் வாங்கி கொள்வார். அது அவரின் தவறல்ல. முட்டாள் ஏழையின் தவறு. அது போன்று தான் அரசின் வேலை இருக்கிறது.   00:55:38 IST
Rate this:
2 members
0 members
9 members
Share this Comment

மே
26
2015
பொது ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் தேதி அறிவிப்பு
ஏன் அதற்குள் இன்னொரு தேர்தல்? R K மக்களுக்கு லாட்டரியா? திமுக மேல் முறையீடு செய்ய இருக்கிறது. அதற்குள் எதற்காக இன்னொரு தேர்தல்? மக்களின் வரிப்பணம் வீணாகிறது.   00:17:12 IST
Rate this:
44 members
0 members
195 members
Share this Comment

மே
26
2015
அரசியல் மத்திய அரசுடன் டில்லி முதல்வர் கெஜ்ரிவால் போர்க்கொடி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி கண்டனம்
நல்லாட்சி புரிய நினைக்கும் கேஜ்ரிவாலிற்கு, காங்கிரஸ் மற்றும் பிஜேபி கட்சிகள் சேர்ந்து தொல்லைகள் கொடுக்கின்றன. அவரை பதவியில் இருந்து, ஓட வைக்க அத்தனை முயற்சிகளும் எடுக்கிறார்கள். கேஜ்ரிவலை ஒரு கை பொம்மை போன்று ஆட்டி வைக்க நினைக்கிறார்கள்.   00:15:05 IST
Rate this:
23 members
2 members
248 members
Share this Comment

மே
27
2015
அரசியல் மன்மோகன் சிங் மிரட்டினார் மாஜி புத்தகத்தில் திடுக்
பேசதெரியாத மன்மோகன் மிரட்டினார் என்று சொன்னால், கேட்பதற்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால் உண்மையில், குறைக்காத நாய் தான் கடிக்கும். அது போன்று, மன்மோகன் தான் பதவியில் ஒட்டிக்கொண்டு இருப்பதற்காக, அத்தனை தில்லுமுல்லுகளையும் ஒன்றும் தெரியாத படிக்காத குருவம்மா போன்று சகித்து கொண்டு ஆட்சியை நடத்தினார். அப்பேற்பட்ட அவர், மிரட்டி இருக்க மாட்டாரா என்ன? பதவிக்காக, கண்டிப்பாக மிரட்டி இருப்பார்.   00:12:03 IST
Rate this:
11 members
0 members
56 members
Share this Comment