Advertisement
தினமலர் முதல் பக்கம் » Saran அவரது கருத்துக்கள்
Saran : கருத்துக்கள் ( 104 )
Saran
Advertisement
ஜூன்
17
2013
அரசியல் காங்கிரஸ் கட்சியிடம் துருப்புச்சீட்டு கனிமொழி கரை சேருவாரா?
திமுகவுக்கு நிறைய பண பலம் உள்ளதால் அவர்கள் வெற்றி பெறுவார்கள். கனிமொழி, கடந்த 5 ஆண்டுகளில் செய்தது என்ன என்பது இந்தியாவுக்கே தெரியும். அவர் வெற்றி பெரும் பட்சத்தில் தமிழ்நாட்டின் 2G பெருமை இந்தியா முழுவதும் போற்றப்படும். கனிமொழிக்கு ஒட்டு போடும் கட்சிகள் மக்களிடத்தில் செல்வாக்கு இழப்பர். கனி வெற்றி பெறும் பட்சத்தில், அதை, அதிமுக தேர்தலில் நன்றாக பயன்படுத்திக்கொள்ளும். தயவு செய்து திமுகவை, கருணா குடும்பத்தில் இருந்து காப்பற்றுங்கள்.   13:29:35 IST
Rate this:
1 members
0 members
25 members
Share this Comment

ஜூன்
10
2013
விவாதம் மோடிக்கு முக்கிய பதவி பா.ஜ.,வுக்கு...?
செயலற்ற அரசியல்வாதிகள் மத்தியில், மோடி செயல் வீரராக தெரிகிறார். மோடி ஒரு மாற்றத்தை கொண்டுவருவார் என்பதை மக்கள் எதிர்பார்க்கின்றனர். காலம் பதில் சொல்லும். மோடி வருகிறாரோ இல்லையோ , காங்கிரஸ் திரும்ப வரக்கூடாது.   11:27:56 IST
Rate this:
5 members
0 members
29 members
Share this Comment

ஜூன்
11
2013
சம்பவம் இழுத்து மூடுங்கய்யா., டாஸ்மாக்கை ., திருச்சியில் ஆவேசம்., போலீஸ் திணறல்
மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டிய காவல் துறை சாராய கடைக்கு பாதுகாப்பு கொடுப்பது, நாட்டின் நிலையை நன்றாக உணர்த்துகிறது.   13:27:42 IST
Rate this:
0 members
0 members
127 members
Share this Comment

ஜூன்
10
2013
அரசியல் அத்வானி ராஜினாமா கடிதம் கிளப்பியது புயல் "லட்சியத்தில் இருந்து பாதை மாறுகிறது பா.ஜ.,
மோடி பிரதமராக வரவேண்டும் என்ற எண்ணம் கொண்டவன் நான். இருந்தபோதிலும், அத்வானி எழுப்பி உள்ள கேள்விகள் மிக முக்கியமானவை. பாஜக தலைவர்கள் அதுபற்றி சிந்திக்க வேண்டும். மோடி-யை, காங்கிரஸ் நன்றாக பிரச்சாரத்திற்கு பயன்படுத்திகொள்ளும். வழக்கம் போல் மதச்சார்பின்மை பெரிய பிரச்சனையாக மாறி, ஊழல் பின் தள்ளப்படும். மோடி பற்றிய செய்தி, ஊடகங்கள் அதிகமாக மக்கள் மீது திணிக்கப்படுகிறது என்றே நான் கருதுகிறேன். தான் பிரதமராக ஆகமுடியாது, என்ற காரணத்தால், அத்வானி மோடியை எதிர்க்கிறார் என்று நான் கருதவில்லை. இதில் எதோ ஒரு உள் குத்து இருப்பதாகவும் நான் கருதுகிறேன். காங்கிரஸ் உட்பட,எல்லோரும் இப்போது அத்வானி பற்றி நேர்மறையான கருத்து கூற ஆரம்பித்துள்ளனர் . எனவே மோடி பிரசார குழு தலைவராகவும் அத்வானி பிரதம வேட்பாளராகவும் ஆக்கினால் நான் ஆச்சர்யபடமட்டேன். இந்த மாதிரி உத்திகள் காங்கிரஸ்-இடம் பாஜக கற்றுக்கொண்டது போல் தோன்றுகிறது. இந்த உள் கட்சி சண்டையில் மீண்டும் மௌன சிங் வராமல் பார்த்துகொள்ளுங்கள். அதை தாங்கும் சக்தி எனக்கு இல்லை.   10:37:11 IST
Rate this:
2 members
0 members
17 members
Share this Comment

ஜூன்
9
2013
பொது தமிழகம் முழுவதும் 900 நர்சரி பள்ளிகள் மூடல் கல்வித் துறை கெடுபிடியால் குழப்பம்
இந்த மாதிரி நடவடிக்கை தொடரவேண்டும். ஆனால் கல்வி ஆண்டு இறுதியில் இதை செய்து இருந்தால் நல்லது. பள்ளிகள் தொடங்கவில்லை எனினும், சேர்க்கை முடிந்து விட்டது. அங்கு செர்துள்ள மாணவருக்கு மற்று ஏற்பாட்டை அரசு செய்ய வேண்டும்.   13:12:13 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜூன்
9
2013
பொது ஓயாத மக்கள் அலை
இது போன்ற நற் செயல்கள் தமிழகம் முழுக்க நடை பெற வேண்டும். நான் இருக்கும் ஊரில் எனது பங்களிப்பை செய்ய நான் தயாராக இருக்கிறேன்.   13:06:26 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

ஜூன்
7
2013
அரசியல் தமிழகத்திற்கு 134 டி.எம்.சி., தண்ணீர் வழங்க முடியாது கர்நாடக அரசு முடிவு
அணைகள் எல்லாம் நிரம்பிய பிறகு தண்ணீர் கொடுத்தவர்கள் இப்போது அணையில் நீர் குறைவாக உள்ளபோதும் 97TMC கொடுப்பதாக கூறி உள்ளனர். இதை நல்ல மாற்றமாகவே பார்க்கிறேன். இருக்கும் நீரை நமக்குள் பங்கிட்டுக்கொள்ளவேண்டும். நடுவண் அரசின் கட்டுப்பாட்டுக்கு காவேரி பாசன அணைகள் செல்ல வேண்டும். அதுவே நல்ல தீர்வாக இருக்கும்   17:17:16 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
4
2013
அரசியல் மாநில முதல்வர்கள் மாநாடு ஜெயலலிதா புறக்கணிப்பு
நடுவண் அரசு உரிய மரியாதை கொடுக்கவில்லை என முதல்வர் நினைத்தால் அவருக்கு பதில் அமைச்சர்களை அனுப்புவதில் தவறு இருப்பதாக தெரியவில்லை. இதே பிரச்னை முன்னர் எழுப்பியபோது நடுவண் அரசு ஒன்றும் செய்யவில்லை. முதல்வர்களுக்கு , மாநிலங்களுக்கு காங்கிரஸ் ஆட்சியில் உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படுவது இல்லை என்பது ஒரு குற்றச்சாட்டு. மரியாதையை கொடுங்கள் என்று கெஞ்சுவதை விட, அதற்கு முதல்வர் கொடுக்கும் முக்கியத்துவத்தை இது போல் குறித்தல் அவர்களாகவே சிந்திப்பார். இவர் எது செய்தாலும் குறை கூறுவது சரியல்ல.   14:24:23 IST
Rate this:
39 members
0 members
11 members
Share this Comment

ஜூன்
3
2013
பொது அரசு பெண்கள் பள்ளிகளில் இனி ஆசிரியைகள் மட்டும்தான் பாலியல் புகார்களை தடுக்க ஆசிரியர்கள் நியமனத்துக்கு தடை
நீங்கள் கூறுவது மிக சரி. ஒன்றுக்கு தீர்வு மற்ற ஒன்று அல்ல. இருக்கும் குறைகள் களையப்பட வேண்டும். அதுவே அக்கப்பூர்வமான வழி.சமூகத்தில் அனைவரும் கண்ணியமாக பழக வழி வேண்டும். தவறு நிரூபிக்கப்பட்ட ஆசிரியருக்கு கடுமையான தண்டனை போன்ற வழிகள் யோசிக்க வேண்டுமே ஒழிய ஒட்டு மொத்தமாக அனைவரையும் தடை செய்வது சரி இல்லை.   15:38:33 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜூன்
3
2013
பொது அரசு பெண்கள் பள்ளிகளில் இனி ஆசிரியைகள் மட்டும்தான் பாலியல் புகார்களை தடுக்க ஆசிரியர்கள் நியமனத்துக்கு தடை
மிகவும் பிற்போக்கான ஒரு முடிவு. ஆண்-பெண் கலந்ததுதான் சமூக அமைப்பு. இவ்வாறு படிக்கும் பெண்கள் மேற்படிப்பில் உளவியல் ரீதியான நிறைய பிரச்சனைகளை சந்திப்பார்கள்.   14:01:24 IST
Rate this:
5 members
0 members
23 members
Share this Comment