காவிரி விவகாரத்தில் கர்னாடக அரசு எதிர்க்கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சியினரின் கூட்டத்தை கூட்டி ,ஆலோசனை கேட்டு செயல்படுவதைப் பார்த்தும் இவர் இன்னமும் கடிதம் எழுதினால் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று மக்களை முட்டாளாக்கப் பார்க்கிறார்.....
உண்மையான அக்கறை இருக்குமானால் அத்தியாவசிய போரச்சினைகளில் அனைத்து தரப்பையும் ஒருங்கிணைத்து மத்திய அரசை எச்சரித்திருப்பார்.....
எல்லாவற்றிகும் பிறர் மீது பழிபோடும் இவரிடம் உண்மையான அக்கறையை எதிர்பார்ப்பது வீண்...
10-ஜூன்-2013 00:40:58 IST
கடலில் இந்திய எல்லையை மீனவர்கள் எப்படி தெரிந்துகொள்வது என்பதையும் சொல்லியிருக்கலாமே....
நாட்டின் குடிமக்களை பாதுகாக்கும் பணியில் இருப்பவர்கள் எல்லையில் நின்று எல்லை தாண்டி மீன்பிடிப்பவர்களை எச்சரித்தால் ஏற்றுகொள்ளும்படியாக இருக்கும்...
10-ஜூன்-2013 00:27:37 IST
நட்பு நாடு என்று உங்கள் கட்சியின் தலைமையால் கொண்டாடப் படும் ஒரு நாட்டின் அராஜக செயலால் நீங்கள் பிறந்த மாநில மக்கள் தொடர்ந்து தாக்கப் படுவதையும் சிறை பிடிக்கப் படுவதையும் தட்டிக் கேட்காத தலைமையை இன்னும் உங்களைப் போன்றவர்கள் ஏற்றுக்கொண்டிருப்பது வெட்கக் கேடு.......
கேரளா எல்லையில் இரண்டு மீனவர்கள் கொள்ளப் பட்டதும் கொலையாளிகளைப் பிடித்து சிறையில் அடைத்தவர்கள் தமிழர்களுக்கு நியாயம் கேட்க மறுப்பதும் ,அதை சரியென்று சிலர் வாதிடுவதும் தமிழன் இந்தியன் இல்லையோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.....
10-ஜூன்-2013 00:22:20 IST
Rate this:
14 members
0 members
45 members
Share this Comment
ஜனவரி
1
1900
இந்த அரசு உண்மையான அக்கறையோடு நடவடிக்கை எடுக்காமல், முந்தைய அரசு தொடங்கிய மின் திட்டங்களை கிடப்பில் போட்டு விட்டு,
மற்றவர் மீதே பழி சொல்வதில் முனைப்பாக இருப்பதால் அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு முன் மின்வெட்டு தீரும் என்ற நம்பிக்கை இல்லை.
15-ஏப்-2013 19:54:44 IST
கடந்த காலத்தில்,காவிரி நடுவர் மன்றம் அதிகாரம் இல்லாத செத்த பாம்பு ....
அதன் தீர்ப்புகளை கர்நாடகம் செயல் படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றவர் தமிழகத்தின் காவல் தேவதையா...???
சரியான காமெடி ...
அதை தமிழர்கள் சரியாக புரிந்து கொள்ளும்போது, யார் துரோகி என்பது தெரியும்....
மக்கள் நலன் சார்ந்த பிரச்சினையில்கூட தமிழர்கள் ஒன்றிணையாமல்செய்து, இழப்பிற்கு எதிரி மேல் பழிபோடும் கூட்டம் ஒருநாள் ஓட ஓட விரட்டப்படும்.....
12-ஏப்-2013 02:24:39 IST
விவசாய நிலத்தை பிளாட் போட்டு விற்பது குற்றம்தான்....
ஆனால் விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாமல்,ஏற்கனவே வாங்கிய கடன்களுக்கு வட்டி கட்டமுடியாமல்,குடும்பம் சாப்பிட வழி இல்லாமல் போகுபோது விவசாயி என்ன செய்யமுடியும்...???
ஒன்று நிலத்தை விற்கவேண்டும்...
அல்லது குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ளவேண்டும்....
இது விவசாயிகள் தவறு என்று சொல்ல முடியாது ....
ஆட்சியாளர்களுக்கு மக்கள் நலனில் அக்கறையும் தொலைநோக்கும் இருக்கவேண்டும்....
சம்பாதிப்பதற்காகவே அரசியலுக்கு வருபர்கள் இருக்கும்வரை இதை சரிசெய்வது சிரமம்....
12-ஏப்-2013 02:10:56 IST
ஹைதராபாத்தில் சமீபத்தில்கூட தீவிரவாதிகள் குண்டு வைத்தார்கள் ...
அவர்கள் நிச்சயம் மக்களோடு கலந்துதான் இருக்கிறார்கள்.....
அதனால் அந்த நகரில் இருக்கும் அனைவரையும் குண்டு வீசி கொன்றால் தவறில்லை என்பீர்களா.....???
ஒரு தீவிரவாதி சரணடைந்தால் கைது செய்து விசாரணை நடத்தி தண்டனையோ மன்னிப்போ வழங்கவேண்டும் ...
அந்த இடத்திலேயே கையை பின்னால் கட்டி சுட்டு கொன்றது மனிதாபிமானமா.......????
சிறுவர்களையும் பெண்களையும் நிர்வாணமாக்கி நாசம் செய்து கொன்றது உங்கள் ஊரில் தீவிரவாத ஒழிப்பா...???
11-ஏப்-2013 20:53:28 IST
ஈழத் தமிழர்கள் அனைவரும் விடுதலைப் புலிகள் என்று உங்களுக்கு யார் சொன்னது.....???
உயிருக்கு பாதுகாப்பு கேட்டு நிற்பவர்களை தீவிரவாதி என்று சொல்பவர்கள் தமிழர்களாக மட்டும் இல்லை
மனிதர்களாகவும் ஏற்கமுடியாது
11-ஏப்-2013 20:39:42 IST
இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களுக்காக நீங்கள் என்ன செய்தீர்கள்...???
அவர்களுக்கும் சேர்த்துதான் இப்போது இவர்கள் போராடுகிறார்கள்.....
எதோ அயல் தேசத்துக்காரனுக்காக போராடுகிறார்கள் என்று கிண்டல் செய்பவர்கள்,காவிரி பிரச்சினையிலும் முல்லை பெரியார் பிரச்சினையிலும் அரசியல் செய்யாமல் சேர்ந்து போராடிநீர்களா...???
அதிலும்தான் இவன் துரோகம் செய்தான்,அவன் தவருசெஇதான் என்று அரசியல் பேசி தமிழனுக்கு நியாயம் கிடைக்க தடையாக இருந்தீர்கள்...
ஈழத் தமிழருக்கு இவர்கள் போராட்டம் மூலம் நல்லது நடந்தால் அது நிச்சயம் தமிழர்களுக்கு ஒரு பெரிய திருப்பு முனையாக அமைந்து மற்ற விவகாரங்களிலும் நமக்கு நியாயம் கிடைக்க வழி ஏற்படும் என்பது நூறு சதவீதம் உண்மை...
11-ஏப்-2013 20:33:47 IST
எனக்கு வயிறு நிறைந்தால் போதும் என்று உங்களைப் போன்ற தமிழர்கள் சிலர் நினைப்பதால்தான் இன்னமும் காவிரி முல்லை பெரியார் விவகாரங்களில் தமிழ்நாட்டிற்கு நியாயம் கிடைக்கவில்லை...
அனைத்து பிரச்சினைகளிலும் நம் தமிழன் பாதிக்கப்படக் கூடாது என்ற உணர்வு தமிழனுக்கு வந்தால்தான் உங்களுக்கு ஒரு பாதிப்பு என்றால் அண்டை வீட்டில் இருக்கும் தமிழன் உதவிக்கு வருவான்....
அதைக்கூட புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு நம் அரசியல் வியாதிகள் தமிழனை மாற்றிவிட்டனர் என்பதுதான் வேதனையான உண்மை.....
11-ஏப்-2013 20:25:28 IST