சுலைமான்ஜி நீங்கள் ஒரு தேசபக்திமிக்க இந்தியர்தான் ஒத்துக்கொள்கிறோம்.ஒரு சந்தேகம் ,பாககிஸ்தானைப் பற்றிச் சொன்னால் உங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம் வருகிறது.?
20-மே-2013 12:26:19 IST
கூட்டணியில் இருந்து விலகியதால் தி.மு.க.இம்முறை விருந்தில் கலந்து கொள்ளாது என்று செய்தியில் கூறப்பட்டுள்ளது.நிலைமை எப்பொழுது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் மாறலாம்.நேருவின் மகளே வருக ,நிலையான ஆட்சி தருகஎன்று 1979ல் முழங்கிய கருணாநிதி மீண்டும் இந்திராவின் பேரனே வருக,இணையற்ற ஆட்சி தருக என்று கூட கர்ஜிக்கலாம்.
20-மே-2013 01:19:31 IST
நாம் நல்லவர்களாக இருந்தால் ஒற்றுமையாக இருந்தாலும் தனித்தனியாக இருந்தாலும் யாராலும் நம்மை அழிக்க முடியாது.முத்தமிழ் அறிஞருக்கு இது புரியாமல் இருக்க நியாயமில்லை.
20-மே-2013 01:05:44 IST
ராஜபக்சே சொல்வது நிஜமென்றால்,அவருக்கு தைரியம் இருந்தால் இலங்கைத் தமிழர்களிடையே ஐ.நா.வின் கண்காணிப்பில் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தட்டும் .அவர்கள் விரும்புவது தமிழ் ஈழமா,இல்லை ஐக்கிய இலங்கையா என்று. .தவறு செய்தது ராஜபக்சேவா இல்லை தமிழ் ஈழ ஆதரவுத் தலைவர்களா என்பது அப்பொழுது வெட்டவெளிச்சம் ஆகிவிடும். .செய்யக் கூடாததையெல்லாம் செய்துவிட்டு தவறே செய்யவில்லை என்று சாதிப்பது யார் பின்னால் இருக்கும் தைரியத்தில்?
19-மே-2013 01:17:04 IST
சர்க்கரை நோயைக் கண்டறிந்து தொடர் சிகிச்சை பெற்றால் தான் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.இதற்காக குறைந்த பட்சம் மாதம் 300 ரூபாயாவது செலவு செய்யவேண்டியுள்ளது.இது ஏழைகளுக்கு மிகவும் சிரமமான ஒன்று. நீரழிவு நோய் மருத்துவர்கள் பலர் 200 ரூபாயை சிகிச்சைக் கட்டணமாக வசூல் செய்கிறார்கள்.தமிழக அரசு ஏழை சர்க்கரை நோயாளிகளின்பால் அக்கறைகொண்டு அவர்களின் நலனுக்காக இலவச மருத்துவத்திற்கு ஏற்பாடு செய்யவேண்டும்.அம்மா உணவகங்களைப் போல அம்மா மருந்தகங்களும். ஆங்காங்கே உருவாவேண்டும்.
18-மே-2013 10:14:20 IST
நமது முன்னோர்களின் நாகரீகத்துக்கும் சிற்பக் கலை நிபுனத்துவத்துக்கும் இந்த அய்யனார் சிற்பம் அற்புத சாட்சி. துவிபங்கம்,திரிபங்கம் என்றால் என்ன?விபரம் தெரிந்தோரே விளக்கம் சொல்லுங்கள்.
18-மே-2013 10:02:44 IST
மதுவிலக்கை தமிழ்நாட்டில் கருணாநிதி ரத்துசெயதபோது ராஜாஜி அன்றய முதல்வரின் வீடுதேடிச் சென்று தயவு செய்து மதுவிலக்கை ரத்து செய்ய வேண்டாம் என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டார் என்று கேள்வி.அந்த மூதறிஞரின் வேண்டுகோளுக்கு அன்றே செவிசாய்த் திருந்தால் இன்றைக்கு இந்த அவல நிலை ஏற்பட்டிருக்காது.பெரியவர்கள் உயிரோடிருக்கும் போது அவர்களின் வார்த்தைகளை உதாசீனம் செய்வதும் ,பின் அவர்கள் இறந்துவிட்டால் அவர்களுக்கு சிலை வடித்து மணிமண்டபம் கட்டுவதும் நமது கலாச்சாரம் ஆகிவிட்டது.வாழ்க நீ எம்மான்.
17-மே-2013 16:30:39 IST