Advertisement
தினமலர் முதல் பக்கம் » Peria Samy அவரது கருத்துக்கள்
Peria Samy : கருத்துக்கள் ( 123 )
Peria Samy
Advertisement
மே
20
2013
கோர்ட் கன்னித்தன்மை சோதனைக்கு கைவிரல்கள்சுப்ரீம் கோர்ட் அதிருப்தி
சுலைமான்ஜி நீங்கள் ஒரு தேசபக்திமிக்க இந்தியர்தான் ஒத்துக்கொள்கிறோம்.ஒரு சந்தேகம் ,பாககிஸ்தானைப் பற்றிச் சொன்னால் உங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம் வருகிறது.?   12:26:19 IST
Rate this:
18 members
0 members
19 members
Share this Comment

மே
19
2013
அரசியல் மே. 22-ல் ரிப்போர்ட் கார்டு சமர்ப்பிக்கிறார் பிரதமர்
கூட்டணியில் இருந்து விலகியதால் தி.மு.க.இம்முறை விருந்தில் கலந்து கொள்ளாது என்று செய்தியில் கூறப்பட்டுள்ளது.நிலைமை எப்பொழுது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் மாறலாம்.நேருவின் மகளே வருக ,நிலையான ஆட்சி தருகஎன்று 1979ல் முழங்கிய கருணாநிதி மீண்டும் இந்திராவின் பேரனே வருக,இணையற்ற ஆட்சி தருக என்று கூட கர்ஜிக்கலாம்.   01:19:31 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
19
2013
அரசியல் ஒற்றுமை குலைகிறது கருணாநிதி வேதனை
நாம் நல்லவர்களாக இருந்தால் ஒற்றுமையாக இருந்தாலும் தனித்தனியாக இருந்தாலும் யாராலும் நம்மை அழிக்க முடியாது.முத்தமிழ் அறிஞருக்கு இது புரியாமல் இருக்க நியாயமில்லை.   01:05:44 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
18
2013
உலகம் ஒருங்கிணைந்த இலங்கையில் வாழவே தமிழர்கள் விரும்புகின்றனர் ராஜபக்சே
ராஜபக்சே சொல்வது நிஜமென்றால்,அவருக்கு தைரியம் இருந்தால் இலங்கைத் தமிழர்களிடையே ஐ.நா.வின் கண்காணிப்பில் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தட்டும் .அவர்கள் விரும்புவது தமிழ் ஈழமா,இல்லை ஐக்கிய இலங்கையா என்று. .தவறு செய்தது ராஜபக்சேவா இல்லை தமிழ் ஈழ ஆதரவுத் தலைவர்களா என்பது அப்பொழுது வெட்டவெளிச்சம் ஆகிவிடும். .செய்யக் கூடாததையெல்லாம் செய்துவிட்டு தவறே செய்யவில்லை என்று சாதிப்பது யார் பின்னால் இருக்கும் தைரியத்தில்?   01:17:04 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
17
2013
பொது சிறையில் ஆன்மிக புத்தகங்கள் படிக்கிறார் சஞ்சய் தத்
கண் கெட்டபி சூரியநமஷ்காரம்   11:50:52 IST
Rate this:
7 members
0 members
3 members
Share this Comment

மே
17
2013
பொது நீரிழிவு நோயை ஆரம்ப நிலையில் கண்டறிவோர் குறைவு ஆய்வில் அதிர்ச்சி தகவல்
சர்க்கரை நோயைக் கண்டறிந்து தொடர் சிகிச்சை பெற்றால் தான் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.இதற்காக குறைந்த பட்சம் மாதம் 300 ரூபாயாவது செலவு செய்யவேண்டியுள்ளது.இது ஏழைகளுக்கு மிகவும் சிரமமான ஒன்று. நீரழிவு நோய் மருத்துவர்கள் பலர் 200 ரூபாயை சிகிச்சைக் கட்டணமாக வசூல் செய்கிறார்கள்.தமிழக அரசு ஏழை சர்க்கரை நோயாளிகளின்பால் அக்கறைகொண்டு அவர்களின் நலனுக்காக இலவச மருத்துவத்திற்கு ஏற்பாடு செய்யவேண்டும்.அம்மா உணவகங்களைப் போல அம்மா மருந்தகங்களும். ஆங்காங்கே உருவாவேண்டும்.   10:14:20 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மே
17
2013
பொது 1,200 ஆண்டுகளுக்கு முந்தைய அய்யனார் சிறபம் கண்டெடுப்பு
நமது முன்னோர்களின் நாகரீகத்துக்கும் சிற்பக் கலை நிபுனத்துவத்துக்கும் இந்த அய்யனார் சிற்பம் அற்புத சாட்சி. துவிபங்கம்,திரிபங்கம் என்றால் என்ன?விபரம் தெரிந்தோரே விளக்கம் சொல்லுங்கள்.   10:02:44 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மே
18
2013
சம்பவம் வேலியே பயிர‌ை மேய்ந்தது ரூ.7 லட்சம் லஞ்சம் வாங்கிய சிபிஐ அதிகாரி கைது
வேலியே பயிரை மேய்ந்தால் விளைவது எப்படி? வரங்களே சாபங்களானால் தவங்கள் எதற்காக? எந்தெந்த புற்றில் எத்தனை எத்தனை நச்சுப் பாம்புகள் இருக்கின்றனவோ? நேர்மையாக உழைப்பவர்கள் வறுமையின் கோரப்பிடியில் அல்லல்படுவதும் , குறுக்குவழியில் செல்பவர்கள் கோடிகளுக்கு அதிபதிகளாய் சொகுசு வாழ்வதும் கலியுகத்தின் கட்டாயமோ? பலநாள் திருடர்கள் ஒருநாள் அகப்படலாம்,ஆனால் எல்லோருமே மாட்டிக்கொள்வதில்லை.இதுதான் நிஜம்.   09:54:20 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மே
16
2013
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
15
2013
அரசியல் மதுக்கடைகளுக்கு முதல்வர் பெயர் வைக்கும் போராட்டம் விஜயகாந்த் ஆலோசனை
மதுவிலக்கை தமிழ்நாட்டில் கருணாநிதி ரத்துசெயதபோது ராஜாஜி அன்றய முதல்வரின் வீடுதேடிச் சென்று தயவு செய்து மதுவிலக்கை ரத்து செய்ய வேண்டாம் என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டார் என்று கேள்வி.அந்த மூதறிஞரின் வேண்டுகோளுக்கு அன்றே செவிசாய்த் திருந்தால் இன்றைக்கு இந்த அவல நிலை ஏற்பட்டிருக்காது.பெரியவர்கள் உயிரோடிருக்கும் போது அவர்களின் வார்த்தைகளை உதாசீனம் செய்வதும் ,பின் அவர்கள் இறந்துவிட்டால் அவர்களுக்கு சிலை வடித்து மணிமண்டபம் கட்டுவதும் நமது கலாச்சாரம் ஆகிவிட்டது.வாழ்க நீ எம்மான்.   16:30:39 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment