rajaram avadhani : கருத்துக்கள் ( 106 )
rajaram avadhani
Advertisement
Advertisement
மார்ச்
25
2017
அரசியல் சரத்குமார் கட்சி வேட்பாளர் மனு தள்ளுபடிசந்தோஷத்தில் கட்சித் தொண்டர்கள்
கரடியா கத்தினாலும், விடமாட்டாங்க. ஜாதிகள் ஒழிய வேண்டும் என்று ஓலமிடும் அரசியல்வியாதிகள் ஜாதிகளை நம்பி இருக்கிறார்கள். பிராடு நம்பர் ஒன்.   12:04:55 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
24
2017
அரசியல் ஜீன்ஸ், டி - ஷர்ட் அணிய ஆசிரியர்களுக்கு தடை
கலாச்சாரம் ஒரு புறம் இருக்கட்டும். பெரும்பாலும் மாணவர்களும் மாணவிகளும் இன்று ஜீன்ஸ் பரவலாக உபயோகிக்கின்றனர். இன்றைய உலகில், அவர்கள் பேருந்து மற்றும் ரயில் போன்ற வாகனங்களில் பயணிக்க இது மிகவும் சவுகரியமான உடை. ஒரு காலத்தில் அமெரிக்காவில் மெக்கானிக் மற்றும் தொழிலாளர்கள் மட்டும் பயன்படுத்திய பருத்தி ஆடை தான் ஜீன்ஸ். குளிருக்கு இதமானதாகவும் வெயிலுக்கு உறுத்தாமல், அழுக்கு தெரியாமலும் சிக்கனமான ஆடையுமானதால், இது பெரும் வரவேற்பை பெற்றது. அமெரிக்காவில் உடை பற்றிய கலாச்சாரம் என்று ஒன்றில்லை. அங்கு அலுவலகங்களிலேயே அரை நிஜார் மற்றும்இ டி ஷார்ட் அணிந்து வருவது மிகவும் சகஜம். ஆனால், நாம் தொன்று தொட்டு ஆசிரியர்களை மிகவும் மரியாதைக்கு உரியவர்களாக எண்ணி போற்றி வணங்குகிறோம். ஆசிரியர் பணி, ஒரு சேவை அன்றி லாபகரமான தொழில் அல்ல. எவ்வளவுதான் முயன்றாலும் ஒரு ஆசிரியரால், அம்பானி ஆக முடியாது, மேலும் உண்மையான ஆசிரிய அதுபோன்ற எண்ணம் கொண்டவராக இருக்க மாட்டார். எளிமையாகவும், சுத்தமானதாகவும் ஆன, தனித்தன்மை பெற்ற, உடைகளை ஆசிரியர்கள் பயன்படுத்தும் போது, மாணவர்களிடையே அவருடைய மதிப்பும் மரியாதையும் கேட்காமலேயே தானாகவே ஏற்படுகிறது. ஒருவேளை ஆசிரியரும் மாணவனைப்போல ஜீன்ஸ் பேண்ட் அணிகிறார் என்று வைத்துக்கொண்டால், ஆசிரியருக்கும் மாணவருக்கும் தோற்ற வேறுபாடு தெரியாமல் போக வாய்ப்பு உண்டு. இதனால் மாணவர்களுக்கு ஆசிரியரிடம் ஏற்படும் நெருக்கம் மரியாதை நிமித்தமானதாக இருக்காமல், அவர் மாணவனுக்கு இணை என்ற எண்ணத்தினால் ஏற்பட வாய்ப்பு உண்டு. கல்வியின் பயனே மாணவனை பணிவும் நல்லொழுக்கமும் மிக்கவனாக ஆக்குவதுதான். இதில் ஆசிரியரின் பணி சொல்லுதற்கு அளப்பரிது. எங்கே தியாகம் இருக்கிறதோ அங்கே மரியாதை தானாகவே உருவாகும். கோட் சூட் போட்ட நேருஜிக்கு இருந்த மரியாதையை விடவும் முழங்கால் அளவு வேட்டி அணிந்த காந்திஜிக்கு இருந்ததன் காரணம் இதுதான். மேலும், பெருந்தலைவர் காமராஜ் அவர்கள் சீருடை என்ற அருமையான கலாச்சாரத்தை பள்ளிகளில் ஏற்படுத்தியது, அவர்களுக்குள் இருக்கும் பொருளாதார வேற்றுமையை அகற்றத்தான். இன்றும், நாம், நம்முடைய பள்ளி ஆசிரியரை [அவர் குடையை பிடித்துக்கொண்டு, சாதாரண காதர் வேட்டி, காதர் ஜிப்பா வுடன் நடந்து செல்லுவதை] கண்டால் மரியாதையுடன் பணிகின்றோம். நான் ஏன் எளிமையாக இருக்க வேண்டும்? உடை எப்படி இருந்தால் என்ன? போன்ற கேள்விகள் அனாவசியம். ஒவ்வொரு தொழிலுக்கும் ஒரு உடை கலாச்சாரம் [ட்ரஸ் கோட்]என்பது அவசியம். வேட்டி சட்டை அணிந்த டாக்டரிடம் நீங்கள் வைத்தியம் செய்துகொள்வீர்களா? கருப்பு கோட்டு, காலர் பேண்ட் அணியாத வக்கீல் கோர்ட்டில் அனுமதிக்க படுவாரா? என். சி.சி. யுனிபாம் அணிந்தவுடனேயே மாணவனுக்கு வீர உணர்வும் விறைப்பான நடையும் தானாக வருவது உடையினால்தான். எனவேநடந்து ஆசிரியர்கள் இந்த வேண்டுகோளின் பின்புலத்தில் உள்ள கருத்தினை அறிந்து அதன்படி பின்பற்றினால் அவர்களின் நன்மதிப்பு கூடும். ஆசிரியர்கள் நாட்டின் எதிர்காலத்தின் சிற்பிகள். கருத்தில் தவறு இருந்தால் மன்னிக்கவும்   10:38:03 IST
Rate this:
3 members
0 members
15 members
Share this Comment

மார்ச்
19
2017
அரசியல் ஓட்டு பதிவு இயந்திரத்தில் சந்தேகம் அனைத்து கட்சி கூட்டம் நடக்குமா?
பி.ஜெ.பி. தோற்றிருந்தால் இந்தம்மா இப்படி பேசி இருக்குமா? பேப்பர் வோட்டு இருந்த போது, தோற்று போனவர்கள் எல்லாம், ரஷியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட மாயமான மை, தேர்தலில் உபயோகப்படுத்தி இருக்கிறார்கள். அதன் மூலம், ஆளும் கட்சி முதலிலேயே தன்னுடைய சின்னத்தில் வாக்குகளை பதிவு செய்து விட்டது. மக்கள் வேறு சின்னத்தில் அளிக்கும் வோட்டு சிறிது நேரத்தில் மறைந்துவிடுகிறது. ஆனால், மாயமான மை சிறிது நேரத்தில் பளிச்சென்று தெரியும். எனவே பேப்பர் வோட்டில் நம்பிக்கை இழந்து விட்டோம் என்று புலம்பினார். இதன் காரணமாகத்தான் எலெக்ட்ரானிக் வோட்டு இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போ, இரண்டுமிலலாத மூன்றாவது வகை கண்டுபிடிக்கப்படவேண்டும். மொத்தத்தில் இவங்க ஜெயிச்சா நியாயம், எதிராளி ஜெயிச்சா அழுகுண்ணி ஆட்டம். போங்கடி வேலைய பாத்துகிட்டு. சும்மா ஒப்பாரி வெச்சுகிட்டு. ...........................   11:43:37 IST
Rate this:
2 members
0 members
20 members
Share this Comment

பிப்ரவரி
22
2017
அரசியல் முதல்வர் மாவட்டத்தில் ஆள் இழுப்பு வேலை பதவி, பண ஆசை காட்டி நிர்வாகிகளுக்கு வலை
இலவசங்களுக்கு நாக்கை தொங்கபோட்டுக்கொண்டு அலையும் மக்கள் இருக்கும் வரை இதுபோன்ற அரசியல் வாதிகளின் பாடு கொண்டாட்டம் தான். தமிழனுக்கு வெட்கம், மானம், சூடு, சொரணை, சுய மரியாதை ஏது? சும்மா "நான் தமிழன்டா" னு உதார் விடுவதற்குத்தான் லாயக்கு. எல்லாவற்றுக்கும் மேலே "ஞாபக மறதி" வேறு. உருப்பட்டாப்போல தான்   12:55:29 IST
Rate this:
0 members
1 members
3 members
Share this Comment

பிப்ரவரி
23
2017
பொது அதிக டிபாசிட் விசாரணை மூத்த குடிமக்களுக்கு சலுகை
அரசு உத்தியோகமும் இல்லாமல், தனியார் நிறுவன உத்தியோகமும் இல்லாமல், சுயமாக நிரந்தர வருமானம் இன்றி, சம்பாதிக்கும் பணத்தில் எல்லா வரிகளையும் ஒழுங்காக கட்டிக்கொண்டும், சாகும்வரை உழைத்துத்தான் ஆகவேண்டும் என்ற நிலையில் மெத்த படித்தவர்கள் எத்துனை பேர் இருக்கிறார்கள் தெரியுமா? இந்த நாட்டில் எவன் அவர்களை பற்றி கவலைப்படுகிறான்?   12:51:00 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
20
2017
சினிமா வன்முறையை தூண்டுவதாக கமல் மீது புகார்...
என்ன தவறு செய்து விட்டார் கமல்? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் அநாகரீகமாக நடந்துகொள்ளலாம் வேட்டி, சட்டையை கிழித்துக்கொள்ளலாம் சட்ட சபையின் விதிகளை மீறலாம் ஆனால் மக்கள் எல்லாம் பொத்திக்கொண்டு சும்மா இருக்க வேண்டும். அப்படித்தானே? இது என்ன ஜன நாயகமா இல்லை சர்வாதிகாரமா? ஜன நாயகத்தின் மக்கள் தான் உயர்ந்தவர்கள் அவர்கள் தான் உங்களுக்கு அதிகாரத்தை வழங்கி இருக்கிறார்கள் நீங்கள் மக்களுடைய சேவகர்கள் அதிகாரிகள் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் நினைவில் கொள்ளுங்கள். உங்கள், கார், பங்களா, பண பலம் எல்லாம் ஒன்றுகூடிய மக்களின் பாலத்தின் முன் தூசு. இந்திய சுதந்திர போராட்டத்தில் உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்ததாக அன்று கருதப்பட்ட வெள்ளைக்காரர்களை ஒற்றுமையாக துவம்சம்செய்த மக்களுக்கு நீங்க எம்மாத்திரம்? ஒரு வாசகர் இங்கு கூறியது போல, நேர்மையும் தைரியம் இருந்தால் உங்கள் தொகுதிக்கு சென்று வாக்காளர்களை சந்தியுங்கள் பார்க்கலாம் கமல் என்ன சொல்வது, மக்களே கொதித்து போயிருக்கிறார்கள்.   22:32:19 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

பிப்ரவரி
20
2017
அரசியல் கார்த்தி சிதம்பரம் மோசடி சாமி ‛பகீர்
இதில் பகீர் இல்லைதான். ஆனால் ஒன்று, சுப்ரமணியம் சுவாமி, அவருக்குள்ள, தொடர்புகள் மற்றும் செல்வாக்கினால், துல்லியமாக கணக்கு எண் முதற்கொண்டு தகவல்களை அளிக்கிறார். நாம யூகத்தின்அடிப்படையில் விமரிசிக்கிறோம். அவ்வளவுதான்   22:21:42 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

பிப்ரவரி
18
2017
அரசியல் சசிகலா ஆதரவு அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு... உதறல் தொகுதியில் தலைகாட்ட முடியாமல் போகுமோ என பயம் போலீஸ் பாதுகாப்பு கேட்டு மனு கொடுக்க முடிவு
இங்கு வீரம் பேசும் அனைவரும் கோவத்தால் பேசுகின்றனர். நகராட்சித்தேர்தலில் குவாட்டரும் பிரியாணி பொட்டலமும் வாங்க முண்டியடித்து செல்லும்போது இதே எம் எல் ஏ உங்களை பார்த்து வழித்துக்கொண்டு சிரிப்பான்.   14:15:46 IST
Rate this:
3 members
0 members
8 members
Share this Comment

பிப்ரவரி
19
2017
அரசியல் அடுத்த முதல்வர் ரஜினி ரசிகர்கள் போஸ்டரால் பரபரப்பு
எல்லாரும் ஆணிய புடிங்கியாச்சு. இவருதான் பாக்கி. போதுமடா சாமி. இவரு அரசியலுக்கு வந்து ஒரு கயிறும் புடுங்க வேண்டாம். ஏதோ 68 வயசுல, டூயட் பாடுனோமா, நாலு பன்ச் டயலாக் விட்டோமா, ரெண்டு பைட் போட்டு ஜனங்களை சந்தோஷப்படுத்தினோமான்னு பொத்திகினு வேலை செய்யறதோட நிறுத்திக்கட்டும். சினிமால என்னமோ தமிழ் நாட்டு மக்களுக்கு அப்பிடியே கடன் பட்டவன் போல தன்னை காண்பிச்சிக்கறது. காவிரி தண்ணீர் பிரச்சினைன்னா மூடிக்கினு இமய மலைக்கு ஓடுறது. தூ...........   14:08:12 IST
Rate this:
1 members
0 members
14 members
Share this Comment

பிப்ரவரி
19
2017
அரசியல் பன்னீருக்கு தயாராகும் வழக்குகள் விரைவில் பழி தீர்க்கும் படலம்
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வி இருக்கிறது. தர்மம் மீண்டும் ஜெயிக்கும்.   14:00:26 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment