ஒவ்வொருவருக்கும் தமிழ் புத்தாண்டு என்பது எது என்ற மிகபெரிய கேள்வி இருந்து கொண்டே உள்ளது.சித்திரை மாதமா அல்லது பொங்கல் திரு நாளான தை மாதமா. சித்திரை மாதத்தில் நாம் கொண்டாடும் இந்த புத்தாண்டு விழா சூரியன் மேஷத்தில் வரும் நாள். தற்போது உள்ள ஜோதிடத்தில் மேஷம் தலையாகவும் மீனம் கால்பகுதி(வால்) யாகவும் கணகிட்டதின் விளைவே இது. ஆனால் வானியல் சாஸ்திர ரீதியாக பார்த்தல் அதாவது சூரியன் தட்சிணாயன காலம் (தெற்கு நோக்கிய பயணம் ) முடிந்து உத்திராயண காலம் (வடக்கு நோக்கிய பயணம் ) எனபது சூரியன் தனுசு ராசியில் வரும் காலமே. இது தேவர்கள் என்று சொல்லகூடிய தெய்வர்களின் பகல் காலம் என்றும் கூறுவார்கள். அப்படியானால் புத்தாண்டு என்பது உத்திராயன காலத்தை அடிப்படையாக கொண்டதா அல்லது ஜோதிடத்தை அடிப்படையாக கொண்டதா என்ற கேள்வி வரும் .. யார் வேண்டுமானாலும் புத்தாண்டை எந்த மாதத்திற்கும் மாற்றட்டும் சரியான காரணத்தோடு மாற்றினால் பதில் கூற நன்றாக இருக்கும் .எது எப்படியோ வார்த்தைகளை பிடித்து கொண்டு தொங்குவதைவிட அதன் உட்பொருள் விளக்கங்களை உணர்ந்து கொண்டாலே முக்கால் வாசி பிரச்சனைகள் குறைத்து விடும்
14-ஏப்-2012 07:26:53 IST