தமிழ் நெஞ்சங்களே,
உங்கள் துயில் நாடகம் கலையுங்கள்
நம்மினம் அழிக்கப்படும் அவலத்தை கண்டு துடித்தெழுங்கள்
சிங்களனின் ரத்தவெறிக்கு நம் இனம் காக்க போராடிய
மாவீரனின் புதல்வனாம் இப்பாலகனின் மரண கொடூரம் பாருங்கள்
கீழ் நோக்கி ஏந்தினாலும் "தீ" மேல் நோக்கி தான் தகிக்கும்
அது போல் தான் நம் தமிழினமும்..,
நம் இந்த்தை கீழே அழுத்தி தள்ளிட முயலும் சிங்களன் அறிந்திருக்கவில்லை
நம்மினத்தின் குணம் மேல் நோக்கி தகிக்கும் "தீயின்" குணம் என்று.
பேசாவிட்டாலும் சாகத்தான் போகிறோம் ஆகையால்
எதையாவது பேசிவிட்டு செத்து போகிறேன் என்று
புரட்சியாளன் ஃபனான் சொன்னான்
இப்போது அதை நினைவில் வையுங்கள்
இப்போது பேசாவிடின் எப்போது பேச போகிறீர்கள்?
தமிழீழம் என்கிற தேசத்திற்கான விடியலும் விடுதலையும்
உங்கள் பேச்சிலிருந்து வலுப்படட்டும்
இன்றே பேச தொடங்குங்கள்,
உங்கள் நண்பர்களிடத்தில், உறவுகளிடத்தில், பணியிடத்தில்,
என்று இன்றே பேச தொடங்குங்கள்
ஈழத்தில் அரங்கேறியவை எல்லாம் "போர்க்குற்றங்கள்" மட்டுமல்ல
அவையாவும் "இனப்படுகொலைகள்" என்று...,
20-பிப்-2013 03:42:33 IST
Foreign Direct Investment (FDI) in retail, will hurt Manmohan Singh too....,
Wal-Mart spent 125 crores to our Indian MPs to get the "ENTRY PASS" through our Parliment and Rajyasabha.
Indian enforcement department already registered plenty of fraudulent record about Wal-Mart in other FDI segments but unfortunately our Government still ready to bring them in to retail market. Why? Simple, because our ruling UPA government remain as “superior power” in the same “fraudulent record”.
Yes...., Our population almost nearing to 125 Crores..., So our government sold us for just Rupee.1/per citizen.
Why FDI in retail is not good for India?
Why the common man from India opposing Foreign Direct Investment (FDI) in retail?
It (FDI) must have been quite successful in developed countries such as the United States of America and some part of Europe, but it would not serve its purpose in India. If FDI comes, biggies would eat into the share of small fries, which would be against the idea of social welfare.
In the early 17th Century, back then, a foreign company known as the East India Company was allowed in India to do business. What it did is known to everyone, so we (common man) rightfully oppose it.
Since Indepence, the Congress party has governed the country for the maximum period of time. This is the reason why we today have maximum unemployment, illiteracy, scams and health issues in India.
UPA government could crumble anytime because was an “anti-poor establishment” that had hiked the price of essential commodities several times – making life miserable for the common man.
10-டிச-2012 01:13:36 IST
உங்கள் உண்மையான பெயரில் எழுதினால் "உள்விஷயம்" என்னவென்று தெரிந்து விடும் என்பதால் "மோடி இல்லா தேசம்" என்று எழுதுகிறீர்கள் என்பது எங்களுக்கு புரிகிறது. மோடி இல்லாத தேசம் "காங்கிரஸ் எனும் கேடிகள்" வாழும் தேசமாகி, நாசமாகி விடும் என்பதை நாங்கள் உணர்கிறோம். குஜராத்_ல் மோடியின் வெற்றியை அம்மக்கள் முடிவு செய்து விட்டார்கள். தேர்தலுக்கு பின் செய்தி வரும். காங்கிரசுக்கு மரண அடியும் கிடைக்கும்.
08-டிச-2012 15:40:16 IST
தாயகம் சுரேஷ், பக்ரைனிலிருந்து, நாஞ்சில் சம்பத் வெளியேறியதால் இவ்வியக்கம் பாதாளத்திற்க்கு சென்று விடும் என்கிற எழுத்திலும் பேச்சிலும் எனக்கு நம்பிக்கையில்லை. அதற்கான அவசியமுமில்லை. வெற்றிடத்தை நிரப்பும் தகுதி காற்றிற்க்கு உண்டு.., காற்று தானே சுவாசம்.., ஆம் மறுமலர்ச்சி கூட்டத்தின் சுவாசமே வை.கோ என்கிற மையப்புள்ளி என்றிருக்கும் போது அந்த "வெற்றிடத்தையும்" வை.கோ அவர்கள் நிரப்பிவிடுவார் என்பதில் நம்பிக்கை உண்டு.
கருணாநிதியின் ஆட்சியின் போது அதிமுக_விலிருந்து, அனிதா ராதாகிருஷ்ணன், முத்துசாமி, சின்னசாமி, செல்வகணபதி,சேகர்பாபு என்று தொடர் தொடராக பலர் ஒடினார்களே அப்போது இத்தகைய "கிண்டலான" கட்டுரையை தினமல்ர் வெளியிடவில்லையே? அப்படி ஒடிய கூட்டத்தினால் அதிமுக_தான் அழிந்து போய்விட்டதா என்ன? அதே போல் தான் இந்த சம்பத் ஓட்டத்தால் நாங்கள் தொய்ந்து விடவில்லை. எங்கள் தாய்(வை.கோ) உழைத்து எங்கள் வீட்டிற்க்குள்(தாயகம்) உட்கார வைத்து ஊட்டி விடும் "பழங்கஞ்சியே" எங்களுக்கு போதும் என்ற எண்ணம் உள்ள தொண்டர்கள் வை.கோ_வோடு இருக்கிறோம். ஆனால் பக்கத்து வீட்டுக்காரனின் "பிரியாணி"க்கு ஆசைப்பட்டு எஞ்சில் ஊற நாக்கை தொங்கப் போட்டு கொண்டு ஓடுபவர்களை பற்றி எங்களுக்கு கவலையில்லை. எத்தனை சுவையான உணவெனினும் தாய் ஊட்டி விடும் "பழங்கஞ்சி"க்கு உள்ள சுவையை நேர்மையான மனிதன் மறக்கவே மாட்டான். வை.கோ_வின் தொண்டர்களாகிய நாங்கள் நேர்மையான மனிதர்கள்.
எவர் போயினும் யாம் வை.கோ_வோடிருப்போம்........,
வை.கோ மேல் நாங்கள் கொண்டிருக்கும் இந்த நம்பிக்கை மட்டுமே எங்கள் "மூலதனம்"....,
மறுமலர்ச்சி பயணத்தின் எல்லை வரை வர விழையும் இயக்க விசுவாசி.
04-டிச-2012 23:06:36 IST
யார் துரோகி என்று கண்டு கொண்டோம்.........,
"சத்தமின்றி சாரை பாம்பு போல் என்னை கொத்தி கொண்டிருக்கிறார் வை.கோ" என்று பித்த வார்த்தைகளை சித்தம் சிதைந்த நிலையில் விஷமுமிழ்ந்து கொண்டிருக்கும் மாஜி"சகா" சம்பத் அவர்களுக்கு தகுந்த பதிலை வை.கோ_வின் தொண்டன் தரவேண்டிய கட்டாயத்துடனும் கடமையுடனும் இதை எழுதுகிறேன்.
இக்கடிதத்தை நான் எழுத வேண்டிய அவசியம் நிச்சயம் இருக்கிறது. ஆம் கடந்த செவ்வாய் கிழமை, இந்த இயக்கம் மீண்டும் யாரையும் (துரோகிகள் தவிர்த்து) இழந்து விட கூடாது என்கிற ஆதங்கத்தில் கடைக்கோடி தொண்டனின் மனநிலையுடனும் ஆதங்கத்துடனும் எழுதியிருந்தேன் அதை பல தொண்டர்கள் ஆமோதித்தனர் சிலர் மாறுப்பட்டனர்..., ஆனால் இன்று அதே தொண்டனின் ஆதங்கம் ஆவேசமாக மாறியிருக்கிறது என்பதற்கான வெளிப்பாடு தான் இந்த கட்டுரை...,
யார் சாரை பாம்பு?
இந்த இயக்கத்தின் இயக்கமாம் எங்கள் தலைவனை சீண்டி பார்க்கும் இந்த துணிச்சலை எந்த "சமரசம்" உங்களுக்கு தந்தது?
தலைவன் பேசுகின்ற மேடையில் பேசுகிறவன் எல்லாம் "நானே தலைவன்" என்கிற மமதை கொண்டிருந்தால் அது "செறுக்கு" மட்டுமல்ல "சீரழிவும்" தான்.
19 ஆண்டுகாலமாக முட்கள் மண்டி கிடந்த பாதையை நம் தலைவன் செப்பனிட்டு கொண்டே முன்னேறுகிறார். அந்த பயணத்திலே பலர் புறமுதுகிட்டு ஒடினர் ஆயினும் எந்த சலனமும் இந்த இயக்கத்திலே ஏற்படவில்லை காரணம் அடிப்படை தொண்டனுக்கும் "எதிர்ப்பார்ப்புக்கள்" இல்லை அவனை வழிநடத்தும் தலைவனுக்கும் "எதிர்ப்பார்ப்புக்கள்" இல்லை.
கோழைகள் விலகினார்கள்,
சபலக்காரர்கள் மாற்றானால் ஈர்க்கப்பட்டார்கள்.
வியாபாரிகள் விலை போனார்கள்..,
ஆயினும் எந்த விரிசலும் எங்கள் தாயக கோட்டையில் விழவில்லை காரணம் இது “எஃகு கோட்டை” மட்டுமல்ல "எழுச்சி நாயகன்" கட்டிய “இலட்சியக்கோட்டை”.
கைப்பற்றி வழி நடத்தி "இது வனம்" "இது வசிக்கும் பூமி" என்று காட்டி வளர்த்த தலைவனின் கைகளை உதறி விட்டு செல்லும் மனம் உங்களுக்கு வந்து விட்டது என்பதற்காக எந்த கடைக்கோடி தொண்டனும் உங்களுடன் வந்து விடப்போவதில்லை...,
காலமெல்லாம் உதவும் குணம் மட்டுமே கொண்ட என் தலைவனின் கரத்தை உதறிவிட்டு இப்போது நீங்கள் புதிதாய் பற்றிக்கொண்டு பரவ துடிக்கும் கரம் எது தெரியுமா? ஆம் அது இனத்தை காட்டி கொடுத்த, காவு கொடுத்த "ஈழத்து கருணா"_வின் கரத்தை காட்டிலும் மோசமான துரோகக்கறை படிந்துள்ள கரம்...........,
உங்களை போன்ற "சொல்லாடல்" என்னிடம் இல்லாமல் இருக்கலாம் ஆனால் என் தலைவன் கற்று தந்த வீரமெனும் "வில்லாடல்" எனக்கு இருக்கிறது. மானமும் வீரமும் மனிதர்க்கு அழகு என்றானே வெண்தாடி வேந்தன், அந்த வீரப்பரம்பரையின் வழியில் மிச்சமிருக்கும் திராவிட இயக்கத்தின் இரும்பு மனிதனான என் தலைவனை களங்கப்படுத்தி விட துடிக்கும் உமது முயற்சிக்கு எமது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன்.
எட்டினால் தொட்டு விடும் உயரத்தில் செல்வம் கொட்டி கிடந்தாலும் அதை விரும்பாது, வீழ்ந்து கிடக்கும் தாய்த்தமிழ் இனத்திற்காக தன்னை வருந்தி கொண்டு நித்தம் புதுப்புது களங்களில் தளராது களமாடும் எங்கள் சரித்திர தலைவன் எங்கே?
"களங்கத்தின் கலங்கரை விளக்கம்" என வாழ்ந்து கொண்டிருக்கும் உங்கள் புதிய கண்டுபிடிப்பான ("அரை நூற்றாண்டு தமிழகத்தின் தலைப்பு செய்தி கலைஞர்(?) ") தரித்திர தலைவன் எங்கே?
இயக்கத்தில் வளர துடிக்கும் தளிர் இது என்று இனம் கண்டு கொண்டு அத்தளிருக்கு நீருற்றி வளர்க்கும் குணம் கொண்ட என் தலைவன் எங்கே?
சுயம்பாய் வளர்ந்த எத்தனையோ தளிர்களை மட்டுமல்ல தன்னிகரில்லா தலைமை பண்புக்கு உகந்த குணம் கொண்டோர் மீது "வாரிசு மோகத்தால்" திராவகம் ஊற்றிய உங்கள் புதிய(துரோக)த்தலைவன் எங்கே?
கொள்ளை கூட்டத்திடமிருந்து தப்பித்த மனநிலையில் உற்சாகத்தோடு இருக்கிறேன் என்றீர்கள்.., உங்களுக்காக நான் வருந்துகிறேன் ஆம் மகள் மீது ஆணையிட்டீர்கள் மதிமுக_ வை விட்டு விலகுவதில்லை என்று. ஆனால் இன்று? ஆம் கொள்ளை அடிப்பதையே குலத்தொழிலாக்கி கொண்ட கூட்டத்தின் கூடாரத்தில் தானே இப்போது ஒண்ட போகிறீர்கள். ஆம் தமிழகத்தின் முதல் பணக்கார குடும்பம்,இந்தியாவின் 20_வது பணக்கார குடும்பம், உலகில் 464_வது பணக்கார குடும்பம்..., இது தான் நீங்கள் கரம் பற்ற போகும் தானைத்தலைவனின் குடும்ப கொள்(கை)ளை வரலாறு...,
இன்னொரு குற்றச்சாட்டாக இயக்கத்திலே "வாரிசு அரசியல்" உருவாகி வருகிறது என்று நீங்கள் சொன்னீர்கள் அதை நம்பி விட என்னை போன்ற தொண்டர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல...,
உங்களுக்காக நான் பரிதாபப்படுகிறேன்..,
இல்லாத வாரிசு அரசியலை காரணம் காட்டி கொண்டு நீங்கள் கரையேறி சேர துடிக்கும் இடம் எது என்பதை நீங்கள் வசதியாக மறந்து வீட்டிர்களா? அல்லது மறைக்கீறீர்களா?
சேர சோழ பாண்டிய பல்லவ மெளரிய முகலாய என்று வாரிசுகளும் சமஸ்தான ராஜாக்களும் இருந்த அந்த மன்னர் காலத்திற்க்கு கொஞ்சம் குறைவின்றி இப்போதும் "வம்சாவழி" ராஜாக்குடும்பம் போல் நடத்தப்பட்டு கொண்டிருக்கும் இயக்கத்திற்க்குள் நீங்கள் போக துணிந்து வீட்டீர்கள் என்று நேரிடையாக குற்றம் சாட்டுகிறேன்.
ஆனால் ஒரு சந்தேகம்,
தமிழகத்தில் மட்டுமல்ல உலகிலேயே "கோஷ்டி" என்கிற வார்த்தைக்கு பிரபலம் காங்கிரஸ் தான். ஆனால் அதை காட்டிலும் மோசமான "கோஷ்டி" உள்ள கட்சி தான் நீங்கள் இப்போது தேர்ந்தெடுத்துள்ள கட்சி.
முக கோஷ்டி
அழகிரி கோஷ்டி
ஸ்டாலின் கோஷ்டி
கனிமொழி கோஷ்டி என்று அங்கீகரிக்கப்பட்ட கோஷ்டிகளுடன் இன்னும் எத்தனையோ அங்கே இருக்கின்ற நிலையில், நீங்கள் இதில் எந்த கோஷ்டி?
முக_வை நீங்கள் காயடித்தது போல் வேறு எவரும் காயடித்திருக்க வாய்ப்பில்லை ஆயினும் முக உங்களை ஏற்று கொள்வார் காரணம் அவர் கோஷ்டியில் ஆட்கள் குறைவு.
அழகிரி_கோஷ்டி_க்கு செல்ல முடியுமா? என்று நீங்கள் சிந்திக்கவே மாட்டீர்கள் பாவம் அங்கே "அட்டாக் பாண்டி" இருக்கிறான்.
ஸ்டாலின் கோஷ்டி எப்படி உங்களை ஏற்று கொள்ளும் அல்லது நீங்கள் தான் எப்படி ஸ்டாலினை ஏற்று கொள்ள முடியும்? "கோணவாயும் குருவிக்கூடு தலையும் அரவாணி நடையும்" என ஸ்டாலினை நீங்கள் வர்ணித்தை அவர் அறியாமலா இருப்பார்? பிறகு எப்படி ஏற்கப்படுவீர்கள்?
கனிமொழி_கோஷ்டிக்கு போகலாம் என்றால் அதிலும் சிக்கல். "திமுக_வில் இருந்திருந்தால் எம்.எல்.ஏ, எம்.பி, மந்திரி ஆகியிருக்காவிட்டாலும் குறைந்த பட்சம் கருணாநிதியின் மருமகனாக கனிமொழிக்கு ஒரு ராசா இருக்கிற இடத்திலாவது நான் இருந்திருப்பேன்" என்று நீங்கள் நீட்டி முழக்கிய வரிகள் ஞாபகம் வராதோ?
போகிற இடத்தில் கொஞ்சம் சூதானமாக இருந்து கொள்ளுங்கள் இல்லையேல் குஷ்பு_வோ, குமரிமுத்து_வோ கூட உங்களை காயடித்து விடுவார்கள்....,
குடிசைக்குள் வாழ்வது அவமானம் என்று எங்களை பார்த்து நகைத்து கொண்டே, பாவம் நீங்கள் குப்பைமேட்டின் மேல் ஏறி கொண்டீர்கள் என்பதை நாங்கள் உணர்ந்து கொண்டோம் ஆனால் உங்களுக்கு அந்த அழுகிய வாடை வாசம் தான் பிடித்திருக்கிறது போலும்….,
குடிசைக்குள் வாழ்ந்தாலும் லட்சிய ஓட்டத்தில் நாங்கள் கோடீஸ்வரர்களே..,
கோடீஸ்வர கூடாரத்திற்க்குள் சென்றாலும் கொள்கையில் நீங்கள் இனி பஞ்சபரதேசி தான்...,
இன்று பூனைக்கு மீசையாய் இருப்பதை நீங்கள் விரும்புகிறீர்கள்,
அதைவிட புலியின் காலில் ரோமமாய் இருப்பதிலேயே எங்களுக்கு பெருமை...,
கடைசியாக "சாரை பாம்பு" என்று நீங்கள் நஞ்சை கக்கியிருக்கும் என் தலைவன் "சர்வநோய் தீர்க்கும் வேம்பு" என்பதை இந்த நாடறியும். வேம்புக்கொடியை பாம்பு என்று பதறி போய் உதறி விட்டு இப்போது உண்மையான "கரு(ணா) நாகத்தை" பற்றி கொண்டு இருக்கிறீர்கள். அந்த கருநாக புற்றுக்குள் செல்ல இருக்கிறீர்கள்.
"நலமுடன் வாழுங்கள்"
என்று வாழ்த்த தான் நினைக்கிறேன்
ஆனால் அதற்கு வழியில்லை மாறாக
"நஞ்சுடன் வாழுங்கள்"
என்று முடிக்கிறேன்.
தாயகமே எம் மண்
தலைவனே எம் உயிர்
என்று சொல்லி தெளிந்த மனதுடன் பயணத்தை தொடரும்,
இயக்க விசுவாசி,
தாயகம் சுரேஷ்.
11-நவ-2012 14:52:17 IST
வை.கோ வளர்த்து விட்ட "நாஞ்சில்" இன்று "நஞ்சாக" மாறிவிட்டது. வை.கோ_விற்கு "நிகரானவன் நான்" என்று தன்னை தானே பூஜித்து கொண்டு ஒருவித போதையுடனும் ஒவ்வாத கனவுடனும் வலம் வந்த இந்த கலியுக "மமதையாளர்" இன்றைக்கு தன்னை "பரிசுத்தர்" என்று காட்டி கொள்ள முயற்சித்து தோற்றிருக்கிறார்.
இயக்கத்திலுள்ள முகமறியா தம்பிமார்கள் இவருக்கு ஆதரவாக இருக்கிறார்களாம்,
இயக்கத்தை உருவாக்கியதில் பெரும்பங்கு இவருடையதாம், இயக்கத்தை வை.கோ_வை விட அதிகம் வளர்த்தவர் இவராம், இன்னும் பல பொய்யுரைகளை புனைந்து விட்டிருக்கிறார்..,
இயக்கத்தின் தம்பிமார்கள் இவருக்கு பின் நின்றார்கள் என்றால் அதற்கு காரணம் இவர் வை.கோ_வின் பின்னால் நின்றார் என்பதனால் தான். ஆனால் இத்தனை நாளாக நீங்கள் வை.கோ_வின் பின் நின்றது சமயம் பார்த்து அவர் முதுகில் குத்துவதற்கு தான் என்பதை நாங்கள் அறிந்த பின் உங்களை துவம்சம் செய்வது தானே எங்களின் தலையாய கடமையாய் இருக்க வேண்டும்.
லட்சக்கணக்கானோர் கடவுள் தரிசனம் பெற விரும்பி கோயிலுக்கு செல்கிறார்கள். கோயிலுக்கு செல்லும் வழியிலே "குட்டி சுவர்" ஒன்று இருந்ததாம். அந்த "குட்டி சுவரை" தாண்டி அனைவரும் கோயிலுக்குள் சென்று வந்தார்கள். அவ்வாறு சென்று வந்ததில் அந்த “குட்டி சுவருக்கு” கர்வம் வந்து விட்டதாம். அந்த கர்வத்தில் அது சொன்னதாம் இங்கே வருபவர்கள் எல்லாம் என்னை தான் முதலில் கடந்து போகிறார்கள் ஆதலால் கர்ப்பக்கிரகத்திலிருக்கும் கடவுளை விட "நானே முதன்மையானவன் மேலானவன்" என்று சொல்லி கொண்டதாம். இயக்கத்தில் இவ்வொரு தொண்டனும் பூஜித்து கொண்டு இருப்பது வை.கோ என்கிற கடவுளை தான் என்று இந்த “குட்டி சுவரின்” புத்திக்கு எட்டவே இல்லை என்பது இப்போது புரிகிறது.
இந்த இயக்கத்திற்க்காக நான் தமிழகமெங்கும் சுற்றினேன் எனவே நான் வளர்த்த கட்சி இது என்று மார்தட்டி கொள்ளும் சம்பத் அவர்களே, எந்த ஊரில் எந்த கழக கூட்டத்தில் நீங்கள் "ஒற்றை பைசா" வாங்காமல் பேசினீர்கள்? என்று பட்டியல் தர முடியுமா?
மேடை தந்த கழகம் நீங்கள் பேசி முடித்தவுடன் உங்கள்
"பாக்கெட்டை" நிரப்பி தானே அனுப்பியது.
ஆம் கடவுளின் மேல் உள்ள பக்தியின் வெளிப்பாடாய் பக்தன் கடவுளுக்கு காணிக்கை தருகிறான் ஆனால் அந்த காணிக்கையை தட்டை ஏந்தி நிற்கும் பூசாரி தான் அள்ளி அனுபவிக்கிறான். அவன் அள்ளி சென்றதை கடவுள் அறியாமல் இல்லை, பிழைத்து போகிறான் என்று தான் அந்த தெய்வம் விடுகிறது ஆம் கடவுளின் கண்களில் பூசாரியும் பக்தன் தான்....., அந்த பூசாரி புத்தி சிதறி போய் "நானே கடவுள்" எனக்காக தான் பக்த கூட்டம் காணிக்கை செலுத்துகிறது என்று நினைத்தால் என்னவாகும்? அவன் தட்டில் விழும் காணிக்கை நின்று போகும். ஆம் உங்களுக்கு அந்த நிலை தான் இப்போது.
உங்களை வெளிச்சமிட்டு காட்டிய ஆதவன் வை.கோ அந்த மாமனிதனை பற்றி நீங்கள் கக்கியுள்ள வார்த்தைகளை என் ஆயுள் உள்ளவரை நான் மறக்க மாட்டேன். "அலி" என்று உங்களால் வர்ணிக்கப்பட்டவன் இப்போது "தளபதி" ஆகி போன மாயம் என்னவென்று மாற்று கருத்துள்ள அரசியல்வாதிக்கும் தெரியும்.
குமுதம் ரிப்போர்ட்டரில் என் மகள் மீது ஆணையிட்ட பின்பும் வை.கோ என்னை நம்பவில்லை என நடிக்கிறீர்கள் இப்போது. இதுதான் நடக்க வேண்டும் என்று நீங்களே திட்டமிட்டு அந்த பொய் சத்தியத்தை செய்தீர்கள். திட்டமிட்டப்படி சரியாக நடந்தது, அதே போல் அந்த சத்தியத்தை இப்போது முன் வைத்து "சாணக்யத்தனம்" காட்ட நினைக்கிறீர்கள். ஆனால் பாவம், அதிலே தோற்று போய் அவமானத்துடன் நிற்கிறீர்கள்.
இலக்கிய உலகிலே சஞ்சாரித்து இந்த உலகிலே இலக்கியத்தில் எனக்கு "இணையாக எவரும் இல்லை" என்ற நிலையை ஏற்படுத்த நினைக்கிறேன் என்று உங்கள் "ஆணவ பேச்சை" உங்களையும் அறியாமல் பதிந்துள்ளீர்கள். இந்த ஆணவம் தான் உங்களை இன்று எங்களிடமிருந்து தூக்கி தூர வீசியுள்ளது என்பதை மறந்து விட வேண்டாம்.
இயக்கம் கட்டி தந்த "உங்கள் இல்லம்" பற்றிய கேள்விக்கு உங்களிடம் பதில் இல்லை, காரணம் உங்களுக்கு மனசாட்சி இல்லை.
அதிமுக_வுடன் கூட்டணி வைப்பதை தவிர வேறு வழி வை.கோ_விற்கு இல்லை என்று தேவையற்ற கருத்தை அங்கே வைக்கிறீர்கள். எங்களை குழப்புவதாய் நினைத்து கொண்டு நீங்கள் எங்கே கரையேற போகிறீர்கள்? யாருடன் துண்டுக்குள் கைபோட்டு பேசி முடித்துள்ளீர்கள் என்பதை நீங்களே உளறி கொட்டி விட்டீர்கள்.
அதே போல் "செல்லக்குழந்தையின் அத்துமீறல் கூட என்னிடம் இல்லை, அடுத்தவரை தரம் தாழ்ந்து விமர்சிக்கும் அநாகரிக அரசியல்வாதி நான் இல்லை, நான் மனிதன்" என்று கூறினீர்கள். ஒரு நாளின் ஒட்டு மொத்த பொழுதிற்க்குள் கழகத்தின் எத்தனை நபர்களை நீங்கள் தரம் தாழ்ந்து விமர்சித்தீர்கள் என்பதை நாங்கள் அறிவோம்.குறிப்பாக நேற்று இரவு உங்கள் நிலையை அறிய உங்களிடம் தொடர்பு கொண்டு பேசிய வை.கோ_வின் தொண்டனிடம் நீங்கள் எத்தனை இழிவாக, சாக்கடை திறந்ததால் வரும் துர்நாற்றத்தை விட மோசமாக பேசீனீர்கள் என்பதற்க்கு நாங்கள் சாட்சி.
முடிவெடுத்து விட்டு காத்திருக்கிறீர்கள், வரும் போது கூடவே எதையாவது பெயர்த்து கொண்டு வரும்படி உங்களின் சமீபத்திய "ஒப்பந்தக்காரர்" நிபந்தனை விதித்திருக்கிறார் என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் உங்களால் தாயக கோட்டையின் எந்தவொரு தளகர்த்தரையும், எந்தவொரு தொண்டனையும் கூட பெயர்த்து எடுக்க முடியாது என்பதே உண்மை.
உங்கள் நிழல் கூட இனி வேதனையோடு தான் உங்களை தொடரும் காரணம் வை.கோ என்கிற நல்மனிதர் உங்களை உருவாக்கியிருக்கா விட்டால் இன்றைக்கு நீங்கம் "ஜம்பம்" அடித்து கொள்ளும் "பிம்பம்" உங்களுக்கு கிடைத்திருக்காது என்பதே உண்மை.
வை.கோ_வை இனியும் நீங்கள் சீண்ட நினைத்தால் உங்களை மதிமுக_வின் தொண்டன் விட்டு வைக்க மாட்டான். எங்களுக்கு வன்முறையை எங்கள் தலைவன் கற்று தரவில்லை ஆனால் அதே வேளையில் வீரத்தை எங்கள் தலைவன் கற்று தர மறக்கவில்லை என்பதை நீங்கள் உணர வேண்டும்.
இனியும் உங்கள் வெட்டி "வாய் வீச்சு" தொடருமேயானால்
எங்கள் மறுப்பு எனும் "வாள் வீச்சு" உங்களை பதம் பார்க்க தவறாது.
என்றும் புனித தலைவனின் வழியில்
இயக்க விசுவாசி
தாயகம் சுரேஷ்.
11-நவ-2012 14:50:42 IST
வை.கோ..............., 24 ஆண்டுகள் டெல்லியில் உரிமைக்குரல் எழுப்பி தமிழர்களுக்காக குரல் கொடுத்தார். ஊழல் கறை தன் கைகளில் படியாமல் பார்த்து கொண்டார். சேது சமுத்திர திட்டத்தை வாஜ்பாய் மூலமாய் அறிவிக்க செய்தார். தமிழ்நாட்டின் பல்லாயிரக்கணக்கான கோடி மதிப்பிலான இரயில் பாதை திட்ட்டங்களுக்காக குரல் கொடுத்ததார். 65 ஆண்டுகால இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் தேசிய நதி நீர் இணைப்பிற்காகவும் அதன் முதல் கட்டமாக தென்னக நதிகளை இணைத்திடவும் கோரி தனிநபர் மசோதா தாக்கல் செய்து வாதாடிய ஒரேயொரு உறுப்பினர் என்ற தகுதியை பெற்றவர் வை.கோ. 65 ஆயிரம் குழந்தைகளுக்கு கொடிய உயிர்கொல்லி நோயில் இருந்து பாதுகாக்க மஞ்சள் காமாலை தடுப்பு ஊசி மருந்தினை 3 அடுக்குகளாக 2 இலட்சம் ஊசிகளை இலவசமாக வழங்கியவர் மனிதநேயர் வை.கோ. நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை தனியாருக்கு விற்றுவிட கூடாது என்று நாடாளுமன்றத்தில் முழங்கி அதை நிறுத்தியவர் வை.கோ.
வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் நச்சு ஆலையை தடுத்த நிறுத்த மக்களுக்காக களம் கண்டும் போராடும் தலைவன் எங்கள் வை.கோ. கூடங்குளம் அணுமின் நிலையம் அமைக்க கூடாது என்று 1988_லேயே நாடாளுமன்றத்தில் முழங்கிய தலைவன் எங்கள் வை.கோ.., காவிரி,பாலாறு, தென்பெண்ணை ஆற்று நீரில் அண்டை மாநிலங்களின் அத்துமீறலை உடனுக்குடன் கண்டித்து களத்தில் இறங்குபவன் என் தலைவன் வை.கோ.., வளைகுடா நாடு தொடங்கி உலகின் எம்முனையிலும் சிறையில் வாடும் எம் தமிழர்களுக்காக குரல் எழுப்பி அவர்களை மீட்க போராடியவன் போராடி வருபவன் என் தலைவன் வை.கோ.., சிவகாசி நாடாளுமன்ற தொகுதியில் மட்டும் 8 ஆயிரம் உடல் ஊனமுற்ற குழந்தைகள் பெண்களுக்காக இலவச சிகிச்சை அளித்த ஈரமிக்க இதயத்திற்க்கு சொந்தக்காரன் என் தலைவன் வை.கோ.., விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு விலை நிர்ணயிக்கும் உரிமையை விவசாயிக்கே தந்திட வேண்டும் என்று மாநாடுகளின் தீர்மானம் போட்டத்தோடன்றி நாடாளுமன்றத்தில் முழங்கிய விவசாய நண்பன் என் தலைன் வை.கோ.., சில்லறை வணிகத்தை எதிர்த்து சிறுவணிகர்களை காக்க குரல் கொடுக்கும் வணிகர்களின் காவலன் என் தலைவன் வை.கோ..,கலிங்கப்பட்டி கிராமத்திலே சூறைக்காற்றிலே இடிந்து போனது கிறிஸ்துவ தேவலாயம் அதனால் அங்கே கிறிஸ்துவர்கள் இறைவனை வணங்க இடமில்லாமல் போன போது தன் வீட்டின் ஒரு பகுதியையே அக்கிறிஸ்தவர்களுக்காக தந்து தேவலாயமாக்கியவன் என் தலைவன்.., இவற்றை எல்லாம் என் தலைவன் விளம்பரமாக்கி கொள்ள விரும்பவில்லை காரணம் பொதுவாழ்வில் இருப்போருக்கு இது "கடமை" என்று எண்ணினான்.., இந்து தலித் மக்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை கிறிஸ்துவ தலித் மக்களுக்கும் வழங்கிட போராடுபவர் வை.கோ. தமிழகத்தில் சமூக நல்லிணக்கம் நிலவ, சாதி மத மோதல்களை தவிர்க்க, நதி நீரை இணைக்க தமிழர்களின் உரிமைகளை நிலைநாட்டிட, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வேண்டி, மக்களின் வாழ்வு மேம்பட 3000 கி.மீ நடந்த தமிழகம் வளம் பெற வேண்டி தமிழ்நாட்டை வலம் வந்த நற்பண்பாளர் என் தலைவன் வை.கோ. அரசியல் என்பது சொகுசு வாழ்க்கை அல்ல. அது மக்களுக்கு தியாகம் செய்வதற்கான திருவிடம் எனக்கொண்டு தாய் தமிழகத்தின் மேன்மைக்காகவும், உரிமைக்காகவும் போராடி போராடி எந்நிலையிலும் களைப்பறியாத தியாக சீலன் என் தலைவன் வை.கோ.., ஊழல் லஞ்சம் நிலப்பறிப்பு கொலை கொள்ளை என்று முக்கால்வாசி அரசியல் தலைவன்கள் சிறைக்கு சென்று கொண்டிருக்கும் காலத்தில் 28 முறை தன் மக்கள் போராட்டத்திற்காக மட்டுமே சிறைப்பிடிக்கப்பட்டு தன் வாழ்நாளில் 4 ஆண்டுகளை சிறையில் கழித்த தென்னிந்தியாவின் நெல்சன் மண்டேலா என் தலைவன் வை.கோ. நேர்மையான வழியில் நடக்கின்ற என் தலைவன் வை.கோ அவர்களின் கரங்களை வலுப்படுத்த ஆதரவு தாருங்கள் என்று கேட்பதில் எனக்கு எவ்வித உறுத்தலும் இல்லை காரணம் நாங்கள் பயணிப்பது பண்பாளரின் பின்னே.., நாங்கள் ஏந்தி கொண்டிருப்பது அவரின் தன்னிகரில்லா உரிமை எனும் வாளை.., தாழ்ந்து கிடக்கும் தமிழகத்தின் அரசியல் உலகை தூய்மைப்படுத்தும் சர்வ வல்லமையும் தகுதியும் வை.கோ_விற்கு உண்டு. ஈழம் என்கிற ஒரு உரிமைப்போருக்காக குரல் கொடுத்ததை மட்டுமே குற்றமாகி குறை சொல்லும் மனிதர்கள் வை.கோ என்கிற மாபெரும் நேர்மையாளரை "தீவிரவாதி" என்கிற வட்டத்திற்க்குள் அடைத்து வைக்க நினைப்பது அறிவீனம்.., ஆம் வரலாறு கூட நமக்கு நிறைய கற்று கொடுத்துள்ளது.., நேதாஜியும், வாஞ்சிநாதனும், வீரபாண்டிய கட்டபொம்மனும்,பகத்சிங்கும்,குமரனும்,வ.உ.சி_யும் , சுப்ரமணிய சிவாவும், அவ்வளவு ஏன் மகாகவி பாரதியும் கூட தீவிரவாதிகளாக தான் சித்தரிக்கப்பட்டார்கள்.., ஆம் அடக்குமுறையாளர்களின் பார்வையில் மட்டுமல்ல அடிமைகளின் பார்வைகளிலும் போராடுபவன் "தீவிரவாதி" ஆக தான் தெரிவான்.., ஆனால் அப்படி தீவிரவாதியாக சித்தரிக்கப்பட்டவர்களை வரலாறு தன் பொன்னெழுத்து பக்கங்களுக்குள் பொறித்து வைத்து கொண்டதுள்ளது என்பதை யாரும் மறுத்து விட முடியாது.., வை.கோ_விற்கு வாக்கு விழாமல் போயிருக்கலாம் ஆனால் வாழும் போதே வரலாறாக வாழ்ந்து கொண்டிருப்பவன் தான் என் தலைவன் வை.கோ..,
16-செப்-2012 01:23:30 IST
இந்திய அரசின் உளவு விமானம் மோதியதால் தான் "சகாயம்" இறந்தார் என்று பெரும்பான்மை ஊடகங்கள் ஒப்பு கொள்ளும் நிலையில் தினமலர் மட்டும் மூச்சு திணறல் காரணமாய் இறந்தார் என்று பொய் சொல்வது ஏன்?
15-செப்-2012 03:18:59 IST