Baranidharan Kalastri : கருத்துக்கள் ( 5 )
Baranidharan Kalastri
Advertisement
Advertisement
அக்டோபர்
26
2016
பொது உள்ளாட்சிகளின் நிர்வாகப் பொறுப்பு கைமாறியதால் மக்கள் நிம்மதி! தனி அலுவலர் திறம்படச் செயல்படுவார் என நம்பிக்கை
துணிந்து உண்மையை சொன்னதற்கு நன்றி. ஊராட்சி சொத்துகளை காக்க வேண்டியது ஊராட்சி தலைவர்களின் தலையாய பொறுப்பு. ஆனால், காக்க வேண்டிய தந்தையே பெற்ற பெண்ணை சீரழிப்பதற்கொப்பாக அரசு புறம்போக்கு நிலங்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ கபளீகரம் செய்து நீர்நிலைகளை காணமல் போக செய்த ஊழல் நிர்வாக அமைப்புக்கு ஒரு இடைகாலத்தடை ஏற்பட்டுள்ளது. தற்போது பொறுப்பேற்றுள்ள தனி அலுவலர்கள் பொறுப்பு மிகக்கடினமானது. உள்ளாட்சி நிர்வாக நிதியினை சுத்தமாக துடைத்து விட்ட நிலையில் நிதிச்சுமை ஒரு பெரும் சவாலாக இருக்கும். மேலும், ஊழல் பெருச்சாளிகளுடன் கைகோர்த்து உண்டு கொழுத்த எட்டப்பர்கள் தூய்மையான நிர்வாகத்திற்கு பெரும் முட்டுக்கட்டையாக இருப்பார்கள். பார்போம். என்ன நடக்கின்றது என,   11:30:48 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜூலை
25
2016
சம்பவம் வக்கீல்கள் போராட்டத்தால் உயர் நீதிமன்ற பணிகள்... ஸ்தம்பிப்பு! போலீசாருடன் தள்ளுமுள்ளு போக்குவரத்தும் பாதிப்பு
அடுத்த கட்டமாக சாதி ரீதியில் இந்த போராட்டம் மாறினாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. நாடு முழுமைக்குமாக வெளியிடப்பட்ட ஒரு நடைமுறையை தமிழகத்தில் மட்டும் இந்த அளவுக்கு உக்கிரமாக வக்கீல்கள் எதிர்பது என்பது விசித்திரமாக உள்ளது. அவர்களின் வாதப்படி ஒழுங்கு படுத்தும் பணி பார் கவுன்சிலுக்கு மட்டுமே இருக்கவேண்டும் என்றால் தனியார் மற்றும் அரசு ஊழியர்களை ஒழுங்கு படுத்துவது அந்தந்த ஊழியர் சங்கங்கள் பணிதான் , அந்தந்த நிறுவன மேலாண்மையோ அல்லது அந்தந்த அரசுதுறை அதிகாரிக்கோ ஓழுங்குபடுத்தவும் தண்டிக்கவும் அதிகாரம் தேவையில்லை தானே. ஆட்டோ ஓட்டுநர்களை போலிஸ்காரர்கள் ஒழுங்கு படுத்தக்கூடாது ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கங்களே தங்களை ஒழுங்கு படுத்திகொள்ளலாம் என்பது போல உள்ளது வழங்கறிஞர்களின் வாதம். பொறுத்திருந்து பார்ப்போம்,   15:25:50 IST
Rate this:
0 members
1 members
8 members
Share this Comment

ஜூன்
9
2016
பொது 10 ஆயிரம் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்காமல் கல்வித்துறை மவுனம்! பெற்றோருக்கு என்ன பதில் சொல்வது என நிர்வாகத்தினர் தவிப்பு கேள்விக்குறியாகிறது பல லட்சம் மாணவர்களின் எதிர்காலம்
தேர்வு எழுதி அரசு ஆசிரியர்பணிக்கு தேர்வாகத ஆசிரியர்களை கொண்டு பணி வாந்தியெடுக்கும் கல்விதான் தனியார் பள்ளிகளில் வழங்கப்படுகின்றது என்று தெரிந்தும் அடிப்படை கட்டமைப்புகள் இருக்கின்றனவா என்பதை பற்றி அறிந்து கொள்ளாமல் மார்க் பைத்தியம் பிடித்து தங்களது பிள்ளைகளை சேர்த்து கடனாளியாகும் பேராசை பிடித்த பெற்றோர்களின் செயலால்தான் மாணவர்களின் எதிர்காலம் கேள்வி குறியாகின்றது. தரமற்ற நிலையில் உள்ளதால்தான் அங்கீகாரம் உடனே வழங்காமல் அரசு தாமப்படுத்த இயலும். கும்பகோணம் சம்பவம் அதற்குள் யாருக்கும் மறந்து இருக்காது. தனியார் பள்ளிகள் இலாப நோக்கில்தான் நடத்தப்படுகின்றன. அவை ஒன்றும் சேவை செய்ய வரவில்லை என்ற நிதர்சனம் யாவரும் அறிந்ததே. ஏன் அரசை மட்டுமே குற்றம் சொல்லவேண்டும். நாடெங்கும் அரசு அனைத்து வசதிகளுடன் பள்ளிகள் இருக்கின்றபோது தனியார் பள்ளிகளை நாடுவது பெற்றோரின் பொறுப்பற்ற பேராசையே. பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் சுமாராக இயங்கும் பள்ளிகள் நல்ல நிலையில் இயங்கி மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெறுவது ஊடகங்களால் மறைக்கப்பட்டாலும் அனைவரும் அறிந்த உண்மையே. எனவே அரசுபள்ளிகளை சிறப்பாக இயங்கிட அனைவரும் தமது பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்து பெற்றோர் ஆசிரியர் கழக நடவடிக்கையில் பங்கெடுத்து கொண்டாலே போதும். தனியார் கொள்ளையும் தவிர்கப்படும். அரசு பள்ளிகளில் தரம் உயர்ந்து சமூதாயம் பயன்பெறும்.   12:57:21 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஏப்ரல்
27
2016
அரசியல் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பயப்பட போவதில்லை சோனியா
ஏற்கனவே ஃபோபர்ஸ் ஊழல் குற்றச்சாட்டையே போட்டுத் தள்ளிட்டோம். இது இத்தாலி சம்மந்தப்பட்ட ஊழல். இதெல்லாம் சும்மா.   14:50:26 IST
Rate this:
4 members
0 members
26 members
Share this Comment

ஏப்ரல்
28
2015
அரசியல் கல்வி காவியமாகவில்லைஸ்மிருதி இரானி பார்லி.,யில் தகவல்
ஏற்கனவே சிலுவைமயமாக்கப்பட்டுள்ளது நம் நாட்டு கல்வி. இன்னும் அதிலிருந்தே வெளியேறவில்லை நாம். இதற்கிடையில் காவி மயமாக்கல் என்பது அபாண்டமான குற்றச்சாட்டோகவே இருக்கும்.   15:41:44 IST
Rate this:
4 members
0 members
7 members
Share this Comment