தேவை இல்லா பேச்சு. சட்டசபையில் கண்ணியம் தேவை.சினிமாப்பாடல் தேவை இல்லை. இப்பேச்சை ஜெயலலிதா ரசித்திருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை.
16-மே-2013 21:09:22 IST
கருத்துக்கு பொருத்தமான, நாட்டுக்குத்தேவையான படமாக எடுக்க தெரியாதா அல்லது பிடிக்காதா. எல்லா பாட்டுக்கும் ஒரே மாதிரி காலை ஆட்டிக்கொண்டிருந்தால் மட்டும் போதுமா?. பொழுது போக்குடன் நல்ல கருத்தையும் சொல்லுவதுதான் சிறந்த படம்.
16-மே-2013 20:33:20 IST
ஆளு ஆளுக்கு சூப்பர் ஸ்டார், பவர் ஸ்டார், உலகநாயகன் என்று சொல்லிக்கொள்ளுங்கள். யாருக்கும் ஒன்றும் நஷ்டமில்லை.விளம்பரம்தானே படித்து வாங்கும் பட்டமா?
14-மே-2013 22:23:43 IST
திரைப்படத்துறையில் உள்ளவர்களுக்கு ஆண்கள் பெண்கள் சகவாசம் சர்வ சாதாரணம். தாகம் எடுத்தால் தண்ணீர் குடித்துவிடுவார்கள். சினிமாவில்தான் இவர்கள் கற்பைப்பற்றி பாடல், வசனமெல்லாம் எழுதுவார்கள். இப்படி எதாவது பேசினால்தானே நீங்களும் அவரைப்பற்றி எழுதுவீர்கள் என்பதற்காகவே ‘பிளாஷ் பேக்’ சொல்லுகிறார். அது உண்மையோ அல்லது கற்பனை காதலியா என்பது அவருக்குத்தான் தெரியும்.
14-மே-2013 20:45:29 IST