அவர் சொல்லியது தவறு இல்லை..முற்றிலும் மறுக்க கூடியது இல்லை. ஏனெனில் நம் தமிழ்நாட்டை பொறுத்தவரை சுதந்திரம் வாங்கியதில் இருந்து காங்கிரஸ் கட்சி அதாவது காமராஜர் முதலமைச்சர் ஆக இருந்தவரை லஞ்சம் என்பது இங்கு இல்லை என்னும் அளவுக்குத்தான் இருந்தது என்பது பெரியவர்கள் சொல்லி நான் அறிந்தது. அதேபோல் இங்கு திராவிட கட்சிகளில் அண்ணா அவர்கள் இருந்தவரை லஞ்சம், ஊழல் எல்லாம் இங்கு இல்லை. அதற்க்கு பிறகுதான் கொஞ்சம் கொஞ்சமாக அன்பளிப்பு எனவும், டிப்ஸ் எனவும் ஆரம்பித்த இந்த லஞ்ச ஊழல் அரக்கன் இன்று வேருன்றி தழைத்து, மனிதாபிமானம் கொன்று, தன் சுயநலத்துக்காகவும், பேராசைனாலும் நம் நாட்டை கெடுத்து வருகிறான். சரி இந்த லஞ்சம் எங்கே இருக்கிறது? அரசு அலுவலகங்களில் மட்டுமே இருக்கிறது. இன்று பெரும்பான்மை அரசு ஊழியர்கள் யார்? எல்லோருக்கும் தெரியும். ஆசிஷ் நந்தி சொன்னவர்கள்தான். அதேபோல் வருமானவரி, வங்கிகள், போன்ற தேசிய அரசு அலுவலகங்களில் எல்லா வகுப்பினரும் பங்கு வகிக்கின்றனர். அங்கு இந்த லஞ்ச பேய் மிகவும் கொடியவன். ஆனால் அங்கு வருபவர்கள் பணம் படைத்த முதலைகள். சாதாரண அரசு அலுவலகங்களில் லஞ்சம் படுத்தும் பாடு ரொம்ப அதிகம். கூலிகாரர்களிடமும், சாதாரண வெகு ஜனத்திடமும் லஞ்சத்தின் கோரம் படு மோசம். ஆக லஞ்சத்தின் நுழைவு, கோரதாண்டவம் எல்லாவற்றிலும் இன்று யார் இருக்கிறார்கள் என்றால் ஆசிஷ் சொன்னது உண்மைதான். அதேபோல் இன்றைய அரசு அதிகாரிகள் பெருபான்மையானோர் குறைந்த வேலை, நிறைந்த சம்பளம், சலுகைகள், லஞ்சம் இவற்றையே விரும்பி அரசு வேலைகளுக்கு வருகின்றனர். இதை யாரும் மறுக்க முடியாது. இன்று நம் குடியரசு நாளில் நாம் இதற்கு ஒரு நல வழி தேடவேண்டும். அதை விடுத்து அவரின் கருத்தை விமர்சனம் சொல்லகூடாது. ஜெய் ஹிந்த்.
26-ஜன-2013 19:44:12 IST
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை செல்வா. நாம் அனைவரும் ஒற்றுமையுடன் நம் தாய்திருநாடு, தாய் மதம் காக்க ஒன்றுபட்டால் இந்த உலகமே நாற்புறமும் நம்மை எதிர்க்க வந்தாலும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது. நம் மக்களுக்கு என்று இது புரியபோகிறதோ. ஆனால் இந்த நிகழ்வு நம் ஒற்றுமைக்கு ஒரு நல்ல துவக்கமாக இருக்க வேண்டும். மற்றவர்கள் எவ்வாறு ஒற்றுமையுடன் உள்ளார்கள். நாமும் இனிமேல் அவ்வாறு இருந்தால் மட்டுமே இந்த உலகத்தில் வாழ முடியும் என்பதை நம் சகோதர்கள் உணர வேண்டும். ஜெய் ஹிந்த்.
26-ஜன-2013 15:51:16 IST
சர்ச்சையே இல்லை அப்புறம் எதற்கு அதில் சர்ச்சை உள்ள கட்சிகளை நீக்கிவிட்டு திரையிட வேண்டும். நாம் இருப்பது இந்தியாவிலா? அல்லது ஆப்கனிலா? சர்ச்சை வேறு.... வீண் வதந்தி வேறு. கமலுக்கு திரையுலகமே நன்றி சொல்லவேண்டும். தனி மனிதனாக போராடி வருகிறார்.
26-ஜன-2013 15:42:07 IST
எந்த கட்சி நல்ல வேட்பாளரை நிறுத்துகிறது, இல்லை எந்த கட்சில நல்ல வேட்பாளர் இருக்கிறாரு? நல்ல வேட்பாளருக்கு ஓட்டு போட. எரியிற கொள்ளியில நல்ல கொள்ளி எதோ அத எடுன்னு பழமொழி உண்டு. அதே போல் இந்த 5 வருஷம் இவங்க சரியில்லைன அவங்களுக்கு ஓட்டு. அவங்க சரியில்லைன இவங்களுக்கு ஓட்டு. இதுதான் நம் தாரக மந்திரம். இதை நல்ல புரிஞ்சு வச்சுக்கிட்டு அவங்க ஆடுறாங்க ஆட்டம். மக்கள் என்னைக்கு பணம் வாங்கிட்டு ஓட்டு போட்டங்களோ அன்னைக்கே முடிஞ்சு போச்சு ஜனநாயகம். இப்ப எல்லாம் பண நாயகம், பதவி நாயகம்...... மக்கள் திருந்தினால் தான் தீர்வு.....
29-டிச-2012 14:40:24 IST
எல்லாம் முடிந்தது ........ கதம்....கதம்... இன்னும் எத்தனை அரசு அலுவகங்களில், எத்தனை ரூம்களில் தீ எரிய போகுதோ.... அது அந்த அக்கினி பகவானுக்கே தெரியாது....
28-டிச-2012 14:58:06 IST
கருணை இருந்திருந்தால் அவரை ஏன் ரத்தவெள்ளத்தில் விட்டுவிட்டு சென்றார்? இவருக்கு தக்க தண்டனையும் கொடுக்க வேண்டும். வாழ்க தேவந்தர் போன்ற நல்ல உள்ளங்கள். இவர் போன்றோரால் தான் நாட்டில் மழை பெய்கிறது.
27-டிச-2012 13:16:08 IST
இந்தியாவில் இரண்டே மதம். ஒன்று ஹிந்துக்கள். மற்றவர் ஹிந்துவிலிருந்து மாற்றப்பட்ட ஹிந்துக்கள். அவ்வளவுதான். ஆனால் போலி மத சார்பின்மை, ஓட்டுக்காக மத சார்பின்மை பேசுவது, ஓட்டுக்காக சிறுபான்மையினரை உபயோகிப்பது, பின்னர் அவரை கலட்டி விடுவது , பிற மத துவேஷம் (முக்கியமாக ஹிந்து மத துவேஷம்)போன்றவை தான் இன்றைய இந்தியாவின் சிக்கல்கள். அக்பர், போன்ற சில மொகலாய மன்னர்கள் ஹிந்துக்களை ஒரு போதும் துவேஷம் பண்ணியது இல்லை. இது போன்று ஆங்கிலேய ஆட்சியாளர்களில் சிலர் இருந்துள்ளனர். மற்றவர் தங்கள் சுய லாபத்துக்காக ஹிந்து முஸ்லீம் ஒற்றுமையில் வேட்டு வைத்துள்ளனர். நாம் தான் சரி செய்து பிறந்த நம் பாரத நாட்டை ஆபத்துக்களை களைந்து முன்னேற்ற வேண்டும். பிற மதம் மதிப்போம். நம் ஹிந்து மதம் காப்போம். ஜெய் ஹிந்த்.
25-டிச-2012 16:20:15 IST
ஆரூர் ரங். மிகவும் சரியான கருத்துக்கள். கோடான கோடி வருடங்களாக இந்தியாவில் வாழ்ந்துவரும் இந்தியர்களுக்கு, இந்தியாவில் இன்று எத்தனை நெருக்கடிகள்? இவை எதனால் வந்தன? போலி மத சார்ப்பின்மையால் வந்தது. போலி மதவாதம் பேசி எங்களை புறக்கணிக்கும் செயல் இந்தியாவில் நடப்பதுதான் எங்கள் மனம் கொதிக்கும் செயல். இதனை கேட்டால் நாங்கள் ஹிந்து மதவாதம் பேசுகிறோம் என்கிறார்கள் எங்கள் தாய்த்திருநாட்டில். நாங்கள் என்ன இளிச்ச வயர்களா. எல்லோருக்கும் சம நீதி என்றால் நாங்கள் பொருத்துகொள்வோம். ஆனால் ஓட்டுக்கு அரசியல் செய்வதை நாங்கள் பொறுக்க மாட்டோம்.... ஹிந்துக்களுக்கு ஒரு நீதி. மற்ற சமுதாய மக்களுக்கு ஒரு நீதியா? இந்தியாவின் பாராளுமன்றத்தை திட்டம் திட்டி தகர்க்க வந்தவர்களை தூக்கில் போட எத்தனை யோசனை? எல்லாம் ஒட்டு என்ற ஒன்று செய்யும் வேலை. இதுதான் போலி மத வாதம் என்பது. உலகில் எங்கேயாது ஹிந்துக்கள் தங்களையும் தங்கள் மதத்தையும், தங்கள் அடையாளத்தையும் காக்க போராடுகிறார்களா? ஆனால் கோடான கோடி வருடங்களாக வாழ்ந்துவரும் தங்கள் தாய்த்திரு நாடு இந்தியாவில் இந்த போராட்டம் நடந்து வருகிறது. ஏன்? எதனால் இந்த அவல நிலை. சொந்த நாட்டில் அகதிகளாய் மாறும் நிலை ஏன்? ஒவ்வொரு இந்தியனும் யோசிக்க வேண்டிய காலம் இது. இன்று யோசித்து நம்மை நாம் காக்கும் வழியை ஆராயாவிட்டால் வரும் நாம் தலை முறை நம்மை தூற்றுவார்கள். பிற மதம் மதிப்போம். நாம் தாய்மதம் காப்போம்.
25-டிச-2012 13:29:30 IST
தலைவரை பொறுத்தவரை முஸ்லீம் லீக் மத வாத கட்சி இல்லை. ஆனால் பிஜேபி மத வாத கட்சி. என்ன ஒரு சுயநலம். ஓட்டுக்காக என்ன வேணாலும் செய்யும் இவர் போன்றோரை என்னவென்று சொல்வது. மத வாத பிஜேபி-யின் ஆட்சியில் இவருக்கு பங்கு இல்லையா. இல்லை முரசொலி மாறன் அவர்களுக்குத்தான் பங்கு இல்லை என சொல்வாரா. அப்போது பிஜேபி ஆட்சி பிடித்தது. இப்போது கசக்கிறதோ. பச்சோந்தி தனம் என்றால் இதுதானோ? நல்ல தலைவர். நல்ல இயக்கம். வாழ்க இயக்கம். மக்கள் எப்படி போனால் என்ன? "மத்தியில் இருக்கும் மின்சாரத்தை, தென்கோடியில் உள்ள ஒரு மாநிலத்திற்குக் கொண்டு வருவதென்றால், அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்யப்பட்டிருக்க வேண்டும். அந்த ஏற்பாடுகளை, உடனடியாக செய்து விட முடியாது.தமிழகத்தின் நலனுக்காக, மத்திய அரசிடம், இந்த ஏற்பாடுகளை செய்யுமாறு வலியுறுத்த, தி.மு.க., தயாராக இருக்கிறது". அப்ப இன்னும் பத்தி மத்திய அரச இதுவர ஒரு கோரிக்கையும் வைக்கல என்பது தெளிவாக தெரிகிறது. இது மரியா அல்போன்ஸ் போன்றவருக்கு புரிகிறதா? இல்லை எப்போதும் போல் புரிந்தாலும் நங்கள் புரியாதது போல்தான் இருப்போம் என சொல்வாரா?
14-டிச-2012 11:09:46 IST