Ramacahandran : கருத்துக்கள் ( 33 )
Ramacahandran
Advertisement
Advertisement
ஜனவரி
16
2018
பொது ஹஜ் மானியம் ரத்து மத்திய அரசு அறிவிப்பு
நல்ல வேளை.. உச்ச நீதி மன்ற உத்தரவு படி இந்த மானியம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இல்லை என்றால் இதற்கும் இந்துத்துவா முத்திரை குத்த ஒரு கூட்டம் தயாராக இருக்கும்.   16:46:24 IST
Rate this:
14 members
0 members
51 members
Share this Comment

அக்டோபர்
19
2017
பொது ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர்
எங்களுக்கு இதை போன்ற நாடகங்கள் தேவை இல்லை. ஆறாவது சம்பள கமிஷனில் இருந்து ராணுவத்தினர் எழுப்பிய குறைபாடுகள் இன்னமும் களையப்பட வில்லை. இந்த லட்சணத்தில் ஏழாவது சம்பள கமிஷனின் குறைகளும் சேர்ந்து விட்டன. ராணுவத்தினரின் சலுகைகளை மோடி அரசை போல சுதந்திர இந்தியாவில் எந்த அரசும் பறித்ததில்லை. அதுமட்டுமன்றி இத்தனை ஆண்டுகளாக ராணுவத்தினர் பதவிகளும் சிவில் அதிகாரிகளுடன் இருந்த சமமான பதவிகளை இறக்கி எங்கள் கண்ணியத்தையும் குறைத்துவிட்டது ஒரு ரேங்க் ஒரு பென்ஷன் குறைகளை தீர்க்க ஒன்றரை வருடங்களாக முன்னாள் ராணுவ வீரர்கள் இன்னமும் டெல்லி ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களை ஒரு ஜூனியர் மந்திரி கூட இன்று வரை சந்திக்க வில்லை. . இன்றய நிலையில் தேர்தல் வந்தால் ராணுவத்தினரின் 10 சதவீதம் கூட பி ஜே பிக்கு ஓட்டு போடமாட்டோம். ராணுவத்தை தன் ஓட்டு வங்கிக்காக பயன்படுத்தும் மோடியின் நாடகங்களில் இதுவும் ஓன்று. அவ்வளவுதான்.   18:47:03 IST
Rate this:
13 members
0 members
21 members
Share this Comment

ஆகஸ்ட்
24
2017
சிறப்பு பகுதிகள் பதில் சொல்வீர்களா கமல்?
இவ்வளவு நாள் தினமலர் எங்கே போய் இருந்தது? அரசை விமர்சனம் செய்ய ஆரம்பித்ததும் பொறுக்க வில்லையா? அ தி மு கவுக்கு கொஞ்சம் கம்மியாவே ஜால்றா அடிக்கலாமே...   10:19:54 IST
Rate this:
14 members
2 members
10 members
Share this Comment

ஆகஸ்ட்
23
2017
சினிமா இவர் யார் என்று தெரிகிறதா....?...
சூப்பர். அர்ப்பணிப்பு என்றால் இதுதான்...   10:15:59 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜூலை
5
2017
பொது உடல் தகுதி இருந்தால் தான் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு இனி பதவிஉயர்வு
வெறும் மேலதிகாரிகளுக்கு மட்டுமில்லாமல் நம்ம ஊரு காவல்துறைக்கும் இந்த விதி கொண்டுவந்தால் தொப்பை தோத்தாத்திரிகள் குறைவார்கள்.   10:51:22 IST
Rate this:
0 members
0 members
14 members
Share this Comment

ஜூன்
20
2017
அரசியல் ஜனாதிபதி வேட்பாளருக்கு நேர்ந்த சோகம்
அங்கெ மட்டும் இல்லை. ஹைதராபாத்திலேயும் ஒரு மாளிகை இருக்கு. வருஷத்துக்கு வெறும் இருபது நாள் மட்டும் ஜனாதிபதி வருவார். நூறு ஏக்கர் மாளிகை. இந்த கொடுமையை எங்கே போய் சொல்ல...   16:37:37 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

மார்ச்
19
2017
பொது மத்திய அரசின் ரூ.2,750 கோடி போச்சு - பள்ளி கல்வித்துறையில் பரிதாபம்
விதிகளை பின்பற்றாமல் எங்களுக்கு கிடைக்க வேண்டிய கமிஷன் தான் முக்கியம் என்று இருந்தால் அப்படிதான்.   12:42:48 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

மார்ச்
19
2017
பொது இளையராஜா பாடல்களை பாட எஸ்பிபிக்கு தடை
அண்ணனுக்கும் தம்பிக்கும் புட்டுக்கிட்டு பல வருஷம் ஆனது உங்களுக்கு தெரியாதா?   12:40:10 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

மார்ச்
19
2017
பொது இளையராஜா பாடல்களை பாட எஸ்பிபிக்கு தடை
இளையராஜா வைரமுத்துவை கேவலமாக நடத்தி அவரது தன்மானத்தை உரசியதால் இளையராஜாவை விட்டு அவர் விலகினார். இளையராஜா ஓகோ என்று இருந்த 80 -90 களில் அவர் பண்ணிய அலப்பறைகளை நிறைய கேள்வி பட்டிருக்கிறோம். சமஸ்கிருதத்தில் வித்யா கர்வம் என்று சொல்வார்கள். அது இளையராஜாவிடம் அளவுக்கு அதிகமாகவே உண்டு.   12:36:47 IST
Rate this:
3 members
0 members
7 members
Share this Comment

மார்ச்
7
2017
பொது அடுத்தடுத்து சமூக வலைதளங்களில் வீரர்கள் புகார் ராணுவம் அதிர்ச்சி
இங்கே ராணுவத்துக்கு எதிராக . கருத்து கூறியிருக்கும் நண்பர்களே. .. முதலில் எந்த ராணுவ விதியையாவது பற்றி அறிந்திருக்கிறீர்களா? ராணுவத்தில் உள்ள எந்த பதவியில் உள்ளவர்களுக்கும் கீழ் படிதல் என்பது தலையாய குணமாக இருக்க வேண்டும். இதை ராணுவத்தில் சேரும்போதே படித்துக்காட்டி அந்த பத்திரத்தில் கையெழுத்து வாங்கப்படும். இந்த பையன் ராணுவத்தில் சேர்ந்ததே 2014 ஆண்டுதான். இத்தனை குறைந்த சர்வீஸில் இதுவரை மூன்று முறை தண்டனை வாங்கி விட்டான். விடுமுறை சென்றால் அது முடியும் அன்று மாலை ரிப்போர்ட் செய்ய வேண்டும் என்பதுதான் ராணுவ விதி. அதை மீறினால் தண்டனை என்பது ராணுவ சட்டத்தில் யிருக்கிறது. ஒரு விஷயத்தை நினைவில் கொள்ளுங்கள். ராணுவத்தில் அடிப்படை உரிமைகள் கிடையாது என்பது எழுத்து பூர்வமாக சட்டமாக இருக்கிறது. கீழ் படிதல் இல்லையென்றால் ராணுவம் இல்லை. சற்றே யோசியுங்கள். நாளை போர் நடக்கும் போது இவனை போன்ற வீரர்கள் ( இவனையெல்லாம் ராணுவ வீரன் என்று சொல்லவே என்னை போன்ற ராணுவத்தினருக்கு கேவலமாக இருக்கிறது) கேள்வி கேட்க ஆரம்பித்தால் போர் எப்படி நடத்தப்படும். ராணுவம் என்பது ஒரு வேலை அல்ல நண்பர்களே. கடினமான சூழ்நிலைகளையும் தாண்டி எத்தனையோ வீரர்கள் தங்கள் உயிரையும் கொடுத்து நாட்டை காத்து வரும் வேலையில் எந்த காலத்திலும் துப்பாக்கி ஏந்தி எல்லையில் பணி புரிய வேண்டி இல்லாத ஒரு துப்புரவு தொழிலாளியின் (ஆம் அதுதான் அவனது பணி) பேச்சை இவ்வளவு பெரிதாக்க வேண்டியதில்லை. தெரியாத விஷயத்துக்கு கருத்து கந்தசாமிகளும் கொஞ்சம் அடக்கி வாசிக்கலாம்.   18:59:08 IST
Rate this:
4 members
1 members
21 members
Share this Comment