muthu Rajendran : கருத்துக்கள் ( 1039 )
muthu Rajendran
Advertisement
Advertisement
ஜூலை
20
2017
சினிமா குற்றவாளி பெயரில் ஆட்சி : அமைச்சருக்கு சாருஹாசன் சூடு...
ஊழல் என்றால் குறிப்பிட்டு சொல்லுங்கள் என்கிறார் அமைச்சர். நேற்றுக் கூட தாம்பரத்தில் ஒரு கோட்டாட்சியர், வட்டாச்சியர், ஒரு வருவாய் ஆய்வாளர் லஞ்சம் வாங்கியதாக கைது. என்று செய்தி வந்துள்ளது.   18:01:11 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
20
2017
அரசியல் இந்தி படத்தில் நடித்தது ஏன்? கமலுக்கு தமிழிசை கேள்வி
சிவாஜிக்கு பிறகு கமல்தான் ஒரு சிறந்த நடிகராக உள்ளார். ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு வித்தியாசமான பாத்திரங்களை மிகவும் மெய் வருத்தப்பட்டு செய்கிறார். அவர் தொடர்ந்து அவரது கலைப்பயணத்தில் பயணிக்கட்டும் புதிய புதிய படைப்புகள் வரும். அவரே பொதுவாக சொன்னதை ஊதி ஊதி பெரிசாக்கி ஒரு நல்ல கலைஞனை அரசியலுக்கு இழுத்து பாழாக்கி விடாதீர்கள். கமல் ரஜினி இருவருமே இதுவரை கெட்டிக்காரத்தனமாக அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்து விட்டீர்கள். இனியும் அவ்வாறே இருங்கள். அரசியலுக்கு வந்தால் கலைத்துறையில் சாதனை செய்யவிடாமல் உங்கள் முழு நேரத்தையும் அரசியல் எடுத்துக் கொள்ளும் மேலும் அரசியலுக்கு வருபவர்களுக்கு பல நல்லவிஷயங்களும் கூடவே ஒரு மாதிரியான நெளிவு சுளிவுகளை செய்யவேண்டும். அதெல்லாம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லாமல் கலையுலகில் உங்கள் பயணத்தை தொடருங்கள். தூர இருக்கும் வரை தான் அரசியல் பசுமையாக தெரியும். அருகில் வந்தால் அது சுட்டெரிக்கும் வெட்பம் போட்டி பொறாமை வேண்டாமே   17:55:08 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
20
2017
அரசியல் இந்தி படத்தில் நடித்தது ஏன்? கமலுக்கு தமிழிசை கேள்வி
கமல் தான் பாதிக்கபட்டதால் ஊழல் பற்றி பொதுவாக பேசினார். அதனால் காயம்பட்ட அதிமுக அமைச்சர்கள் அவரவர் பாணியில் விமர்சனம் செய்கிறார்கள். இதெல்லாம் மீண்டும் தாங்கள் இனி ஆட்சிக்கு வரமுடியாத நிலையில் கமலை வம்புக்கு இழுத்து அரசியலுக்கு கொண்டு வந்தால் அவர்களுக்கு எதிராக உள்ள பிரதான கட்சிகளுக்கு குழப்பம் ஏற்படுத்த செய்யும் தந்திரமாக கூட இருக்கலாம். அது இருக்கட்டும். அதிமுகவின் கோபத்தில் ஒரு நியாயம் இருக்கிறது. இந்த பி ஜெ பிக்கு என்ன வந்தது. ரஜினி என்றால் வரவேற்கிறார்கள். கமல் என்றால் ஒவ்வொரு வார்த்தைக்கும் விமர்சனம் ஏன்? அவர் இந்தி எதிர்ப்பு போராட்ட காலத்திலேயே விவரம் அறியாத வயதில் அதில் கலந்து கொண்டதன் மூலம் அரசியலுக்கு வந்து விட்டதாக சொன்னார். அதே எதிர்ப்பை அவர் பின்னால் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் அல்லது மாற்றி கொள்ளாதிருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அவரை பொறுத்த வரை ஒரு நடிகர் . எந்த மொழியில் வாய்ப்பு வந்தாலும் நடிப்பார் சொல்லப்போனால் அவர் தமிழ் படங்களில் சரியாக கால்ஊன்றி நிற்குமுன் மலையாள படஉலகு தான் கைகொடுத்தது. விபூதி பூசி நடிக்க மாட்டேன் என்று ஒரு காலகட்டம் வரை சொன்ன எம் ஜியார் ஒரு படத்தில் உபன்யாசமே செய்தார். அது அவர் நடிப்பு தொழில்   17:44:06 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
17
2017
அரசியல் கிணற்றை கிராம மக்களுக்கே அன்பளிப்பாக தர தயார் ஓபிஎஸ்
இதே ஓ பி எஸ், ஜெ இருக்கும்போது கமலை குழப்ப பிசாசு என்று நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டார்..குறைகள் யாரும் சொன்னால் வழக்கு போடுவோம் மிரட்டுவது என்பது ரொம்ப நாளைக்கு எடுபடாது என்பதற்கு இது ஒரு சான்று   11:47:57 IST
Rate this:
2 members
0 members
13 members
Share this Comment

ஜூலை
17
2017
அரசியல் கமலுக்கு முட்டுக் கொடுக்கும் திமுகஜெயக்குமார்
உண்மைதான் ஜெ இருக்கும் வரை அமைச்சர்கள் கூடதான் பேசவில்லை. அவர்கள் துறை அறிவிப்புக்களைக்கூட ஜெ தான் விதி என் 110 ன் கீழ் அறிவித்தார். இப்போது தானே அமைச்சர்கள் பேட்டி கொடுக்கிறீர்கள் சட்டமன்றத்தில் தெளிவாக பேசுகிறீர்கள் ஹெட் மாஸ்டர் மாதிரி ஏன் எல்லோரையும் அடக்கி வைத்திருந்ததை சர்வாதிகாரம் என்று சொல்லாமல் இரும்பு கோட்டை போல வைத்திருந்தார் என்கிறீர்கள். எதையும் நியாயப்படுத்தலாம் என்பதற்கு இதெல்லாம் சான்று   10:41:28 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜூலை
15
2017
அரசியல் ரூ.6 கோடிக்கு பன்னீர் நிலத்தை வாங்க கிராமத்தினர் முடிவு
எல்லாம் சரி . தண்ணீர்க்குக்காக கிணறை கேட்டது சரி. நாற்பது ஏக்கர் நிலத்தை அதுவும் ஆறு கோடிக்கு வாங்க எந்த ஊர் மக்களிடம் பணம் இருக்கிறது. ? இதற்கு பின்னால் யார் இருப்பார்களோ ? ஆண்டவர்களுக்கே வெளிச்சம்   17:26:35 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஜூலை
15
2017
அரசியல் பிக் பாஸ் விமர்சன சர்ச்சையால் தமிழக பா.ஜ.,வுக்கு நெருக்கடி
இருக்கும் இடம் அல்ல இதயம் தான் முக்கியம் மனிதம் பேணுவோம் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்   17:21:32 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜூலை
16
2017
அரசியல் கமலை விடாமல் விளாசித் தள்ளும் தமிழக அமைச்சர்கள்
கமல் சில நடிகர்களை போல் உணர்ச்சி வசப்பட்டு பேசக்கூடியவர் இல்லை. யதார்த்தமாக கூறிய செய்திகளுக்கு ஏன் அமைச்சர்கள் இப்படி சீறி பாய்கிறார்கள். தமிழ் நாட்டில் ஊழல் என்று பொத்தாம்பொதுவாக சொல்லக்கூடாது என்கிறார் ஒரு அமைச்சர் . ஒரு அமைச்சர் மீது வருமான வரி சோதனை அளவிற்கு வந்தது ஒரு ஆதாரமாக எடுத்துக்கொள்ளலாமா ? சில நடிகர்கள் படங்கள் வெளியிடவே குறிப்பாக கமல் , விஜய் படங்கள் வெளியிடவே பிரச்சனைகள் தமிழ் நாட்டில் சிலர் எழுப்ப வில்லையா ? பாதிக்கபட்டவர்கள் பேசத்தான் செய்வார்கள் .ஏன் ஆர் கே நகர் தொகுதி தேர்தல் பரப்புரையின்போது கங்கை அமரன் பையனூர் பங்களா பற்றி பேசவில்லையா ? எப்படியோ ரஜினி அரசியலுக்கு வருவாரோ இல்லையோ ஆனால் அதிமுகவினர் இப்படி பேசி பேசி கமலை அரசியலுக்கு கொண்டு வந்துவிடுவார்கள் போலும். . அரசு அலுவலகத்தில் போய் ஒரு சாதாரண சான்றிதழ் வாங்கக்கூட மக்கள் எப்படி அலைக்கழிக்க படுகிறார்கள் என்பதை தாலுகா அலுவலகம் முன் போய் பார்க்கட்டும் . நடிகர்களும் அவர்கள் ரசிகர்கள் கூட்டமும் ஆண்டது போதும் அய்யா போதும்   16:45:22 IST
Rate this:
3 members
0 members
7 members
Share this Comment

ஜூலை
13
2017
சினிமா ரஜினி அரசியலிலும் வெற்றி பெற வேண்டும் : லாரன்ஸ்...
ஏற்கனவே நடிகர்கள் ஆண்டது போதும் இனியுமா   22:04:18 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
10
2017
அரசியல் ஆட்சியை கலைக்கும் எண்ணமில்லை வெங்கையா
இருக்கும் அடிமைகளில் எந்த அடிமையை தேர்வு செய்யலாம் என்று திணறும் நிலையில் இருக்கும்போது ஏன் கலைக்க வேண்டும். பால் குடம் வேண்டுமா இல்லை காவடி எடுக்குனுமா மண் சோறு சாப்பிடணுமா என்ன சார் செய்யணும் சட்டுன்னு சொல்லுங்கள்   17:22:59 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment