இது தவறான கருத்து. சீனாவில் கடுமையான தண்டனைகளை நிறுத்தினால், குற்றங்கள் இப்போது இருப்பதை விட மிக அதிகம் ஆகும் என்பதே உண்மை. இப்போது நடக்கும் குற்றங்கள் மிக சிலவே. நம்மூர் போல, எங்கும் லஞ்சம் என்று இல்லை. இங்கே தான் எந்த அரசு ஆபீசுக்கு போனாலும் லஞ்சம் இல்லாமல் ஒன்று நடக்காது. அரசு ஆஸ்பத்திரிகளில் கூட, பணியாளர்களி நன்கு கவனிக்காவிட்டால், பிணியாளர்கலுக்கு படுக்கக்கோடா இடம் கிடைக்காது. பார்வை ஆளர்கள் கூட, பணம் வெட்டாமல் நுழைவு அனுமதி கிட்டாது. ஏன் இந்த அவலம்? கடும் தண்டனை கொடுப்பது இல்லை. இப்படி இருப்பதால் தான் கோர்ட்டில் bail வாங்கிவிட்டு சர்வ சாதாரணமாக கொலை, அமில தாக்குதல் நடத்தி விட்டு வருகிறார்கள்.
13-மே-2013 04:35:52 IST
முக்கிய தகவல்களையே அமைச்சர் எடுத்து இருக்கிறார். நமது ஞான தேசிகனோ அமைச்சர் இலக்கண பிழைகளை திருத்தினார் என்று சாதிக்கிறார். எங்கு போய் முட்டி கொள்ளுவது?
07-மே-2013 18:07:37 IST
இந்த பொறியின் இயக்கத்தை பற்றி எனக்கு பல ஐயங்கள் உள்ளன. ஒரு இறக்கையில் இருந்து இன்னொரு இறக்கைக்கு ஹீலியம் வாயுவை செலுத்த பம்ப் வேண்டும், அந்த பம்பை இயக்க மின்சக்தி தேவை. என்னுடைய கருத்துப்படி, கற்றாலையில் இருந்து கிடைக்கும் மின்சக்தியை விட பல மடங்கு மின் சக்தி ஹீலியத்தை பம்ப் பண்ண தேவைப்படும். இதை ஆய்வு செய்ய வேண்டும்
18-ஏப்-2013 19:39:13 IST
இது தவறு அமெரிக்க வரித்துறை நிர்வாகம் அவ்வளவு ஏமாளி அல்ல. ஒருவர் வசிக்கும் அவருடைய சொந்த வீட்டுக்கு மட்டும் தான் இந்த சலுகை. அதுவும் வீடு வாங்க கடன் வாங்கினால், அதற்கு வட்டியும் முதலுமாக கட்டவேண்டும். அதில் வட்டி தொகையை மட்டும் தான் வரி விலக்கு. மேலும் எல்லா வரிவிலக்குகளுக்கும் சேர்த்து ஒரு லிமிட் உண்டு. மேலும் அமெரிக்காவில் வீடுவிலை குறையவும் வாய்ப்பு உண்டு. இப்போது வீடு விலை குறைந்து கொண்டே வருகிறது. அவரவர்கள் வீட்டை கிடைத்த பணத்திற்கு துண்டை காணும் துணியை காணும் என்று ஓடுகிறார்கள். நம்மூர் மாதிரி இங்கு வீட்டு விலை எப்போதும் ஏறுமுகம் இல்லை. யாரோ தவறாக சொல்லி இருக்கிறார்கள். இதை நம்பி அமெரிக்காவில் வேலை கிடைத்தவர்கள் உடனே வீடு வாங்க வேண்டாம்.
14-ஏப்-2013 06:32:02 IST
புகைப்படங்கள் பகுதியில் மதுபானக்கடைக்கு முன் ஒரு முதியவர் ஒரு குடிமகன் காலில் விழுவது போல ஒரு புகைப்படம் வந்துள்ளது. அவரின் நோக்கம் நல்லதாக இருக்கலாம். ஆனால் அதற்காக அவர் தேசியக்கொடியையும் கையில் வைத்துக்கொண்டு அவர் காலில் விழுவது மிகவும் தவறு. தேசியக்கொடியை யாருக்காகவும் சாஇக்ககூடாது என்பது மரபு, சட்டமும் கூட. அவர் மீது தேசியக்கொடியை அவமதிப்புக்காக நடவடிக்கை எடுக்கலாம். என்ன தான் தெரியாமல் இருந்தாலும், தேசியக்கொடியை இவ்வாறு அவமதிப்பு செய்யக்கூடாது. அதை போட்டோ எடுத்து இவ்வாறு பத்திரிகையில் போடுவதும் கூடாது. இதை எல்லாம் படிக்கும் பலருக்கும் இவ்வாறு செய்ய ஊக்குவிக்கலாமா?
10-ஏப்-2013 05:20:04 IST
மனித உரிமை சங்கம் கோர்ட் அல்ல. அதன் முடிவுகளை இலங்கை கடைப்பிடிக்காவிட்டால் ஒன்று செய்ய இயலாது. இலங்கை மீது நடவடிக்கை எடுக்க பாதுகாப்பு கவுன்சிலுக்குதான் அதிகாரம் உண்டு. அங்கே வல்லரசுகள் சொன்னது தான் நடக்கும். இந்தியாவால் ஒன்று செய்ய முடியாது. இது கலைஞருக்கு தெரிததுதான். ஆகவே, தி மு கவின் வெளி நடப்பு ஒரு ஸ்டன்ட் போலதான் இருக்கிறது. ஒருவேளை மதிய அமைச்சரவையில் இருந்து மந்திரிகளை குறிப்பாக அழகிரியை வெளியேற்றினால் ஸ்டாலினை சுலபமாக அரியணை ஏற்றலாம் என்ற ராஜதந்திரமோ
22-மார்-2013 06:40:43 IST
சுந்தர மகாலிங்கம் அவர்களே பெண் தெய்வங்கள் இருக்க, பெண் பூசாரி என் இருக்கக்கூடாது என்ற நீதிபதியின் கேள்வி பிழையானது. அது அவருடைய சொந்த கருத்து. ஆனால் வழக்கு என்று வந்தால் சட்டப்படி தான் தீர்ப்பு சொல்லவேண்டும். அதுவே முறை. அவர் ஒன்றும் சமுதாயத்தை சீர்திருத்த வந்த தீர்க்க தரிசி அல்ல. சட்டத்தை நிலை நிறுத்த வந்தவர். சட்டத்தை மாற்றவோ, சமுதாயத்தின் பழக்க வழக்கங்களை மாற்றவோ, அவருக்கு அதிகாரம் கிடையாது. கோவில் வழிபாடு என்பது பக்தர்களின் மத உணர்வு, பரம்பரை வழக்கங்கள் போன்றவற்றை அடிப்படையாக கொண்டது. நீதிபதியின் தனிப்பட்ட கருத்துக்களை அல்ல.
22-மார்-2013 04:42:23 IST
ஜினீவாவில் உள்ள தீர்மானம் அமெரிக்காவால் கொண்டு வரப்பட்டது. கருணாநிதியின் கோரிக்கையால் இந்திய அரசு கொண்டு வரவில்லை. டெசொவின் முயற்சியாலும் இல்லை. அமெரிக்க கொண்டு வந்த தீர்மானத்தின் அடிப்படையில் தமது கோரிக்கை இருந்ததாக கருணாநிதி கொக்கரித்து தமக்கு சுய விளம்பரம் தேட முயலுகிறார். இந்தியா எந்த தீர்மானத்தையும் கொண்டு வராதது கருணாநிதிக்கும் டெசொவிற்கும் தலை குனிவே.
20-மார்-2013 21:43:25 IST
இதை விட குடிகாரர் மனைவிக்கு அவர் சம்பளத்தை வாங்கும் உரிமையை சட்ட பூர்வமாக கொடுக்கலாம். பிறகு, அவர் மனைவியிடம் இருந்துதான் குடிக்க பணம் வாங்கவேண்டும். இப்படி செய்தால் குடிப்பழக்கம் கட்டாயம் குறைந்து விடும். இப்படிதான் என்னுடைய பேராசிரியரை அவரது மனைவி திருத்தினார்.
19-மார்-2013 08:37:38 IST
இத்தனை நாளாக யீழப்படுகொலைகளும் போரும் நடந்தபோது ஒன்றும் செய்யாத கலைஞர் இப்போது மட்டும் கூட்டணியிலிருந்து வாபஸ் என்று போர்க்கொடி தூக்க என்ன அவசியம் என்று சிந்தித்தேன். எனக்கு, இது அமைச்சர்களை குறிப்பாக அழகிரியை இந்த சாக்கை வைத்து மதிய அமைச்சர் பதவில் இருந்து நீக்கினால் பிறகு ஒருவரும் பதவியில் இருக்க மாட்டார்கள். பிறகு ஸ்டாலின் அரியணை ஏற தடங்கல் இருக்காது. இது கலைஞரின் ராஜ தந்திரமே.
19-மார்-2013 06:10:10 IST