"" தேர்தல் என்பது தேர்ந்தெடுப்பது எனக்கு பிடிக்காவிட்டால் நான் ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும், .....என் ஒரு ஓட்டால் எந்த ஒரு நல்ல மாற்றமும் வரப்போவதில்லை...."" இப்படி விவரமான உங்களை போன்றோர்,தேர் இழுக்க வரவில்லை.நாங்க பாமர சனங்க ஊரு நல்லா இருக்கணும், பிள்ளை குட்டிகளெல்லாம் நிம்மதியா இருக்கணும்ங்கற ஆசையும் பொறுப்பும் இருப்பதால் ஊரு கூடி முடிவெடுத்த பிறகு தேர் தெருவில் நிற்க கூடாதுன்னு ஏதோ எங்களுக்கு தெரிஞ்சவரைக்கும் இழுத்து நிலை சேர்க்கிறோம்.எல்லாம் முடிந்த பிறகு.தேர் நிலை சேர மூணு நாள், சாமி சரியில்லை,வீதி சரியில்லை,இழுக்க தெரியலைன்னு அதுவும் தேர் இழுக்க வராத நீங்க வெட்டி நியாயம் பேசினா எப்படி ? லஞ்சம் வாங்காத,திறமையான தன குடும்பம் பற்றி யோசிக்காத 24 மணி நேரமும் நாட்டிற்காக நமக்காக நம் தலை முறைக்காக உழைப்பதற்கு வானத்திலிருந்தா ஒருவன் குதித்து வர போகிறான், அவன் தேர்தலில் போட்டியிடும் போது மட்டும் நீங்களெல்லாம் ஒட்டு போடுவீர்கள் என்றால் ? ..கனவு காணாதீங்கய்யா. ஒன்னு நீங்க தேர்தல்ல நில்லுங்க அல்லது இருக்குற திருடன்ல கொஞ்சமா திருடுறவனை கண்டுபிடிங்க அடுத்த தடவையாவது கொஞ்சம் நல்லவன் கிடைப்பானான்னு பார்க்கலாமே. பிரச்சினைகளுக்கு குறை சொல்லுவது தீர்வல்ல.
06-ஏப்-2013 11:47:45 IST
நீங்க கிழிச்சீங்க. இரண்டு மீனவனுக்கு மலையாளிகள் உலகத்தையே இந்தியாவை நோக்கி திரும்ப வைத்தார்கள்.சவூதி அரேபியாவில் வேலை இழந்தவர்களுக்கு இலவச விமான சேவை. ரயில்வே,பிரதமர் அலுவலகம் எங்கும் வேலை வாய்ப்புகள்.தமிழகத்தின் அத்தனை முன்னணி கல்லூரிகள்,நாட்டின் சிறந்த தொழிற் கூடங்கள் எங்கும் இவர்கள் ஆதிக்கம்.டெல்லியில் ஒரு பெண் கற்பழிக்கப் பட்டதற்கு நாட்டின் சட்டத்தையே திருத்த வைத்தார்கள். இலங்கை தமிழனை கூட்டு சதி செய்து கொன்றது ஒருபுறம், இங்கே எத்தனை மீனவர்கள் சாவு,எத்தனை பெண் கற்பழிப்பு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது ? நாளுக்கு நாள் தரம் குறையும் கல்வி, எங்கேயும் தமிழனை ஏற்று கொள்ளாத மனநிலை. ஏன் இப்படி ?. எங்கே தவறு ? அடுத்த தலைமுறை தமிழனுக்கு அழிவு காத்திருக்கிறது.உலக நாயகனின் படங்களோ,சச்சினின் சதங்களோ இல்லை காங்கிரசோ ,கழகங்களோ இவர்களை காப்பாற்றுமா ?
04-ஏப்-2013 01:07:21 IST
குளத்திட்ட கோவிச்சிட்டு .... கழுவாம போனா நாறுவது யாரு ? விஷயம் தெரிஞ்சவனெல்லாம் ஒட்டு போட மாட்டேன் என்று வீட்டுக்குள் இருந்தால் நாட்டுல எல்லோரும் நல்லவனா மாறிடுவானா ? இல்ல ஒட்டு போடுற பாமர சனத்துக்கு நல்லவன் யாரு கெட்டவன் யாருன்னு புரிய வைச்சிடுவீங்களா ? யாரோ சிலர் ஐந்து பைசா லஞ்சம் வாங்காம ராத்திரி பகல்ன்னு பாராமல் இந்த நாட்டுக்காக நமக்காக நம்ம சந்ததிக்காக உழைக்கணும் ஆனால் அந்த மாதிரி ஆளை தேர்ந்தெடுக்க ஐந்து வருசத்துக்கு ஒரு முறை கொஞ்ச நேரம் வரிசையில் நின்னு ஒட்டு போட இத்தனை வக்கனை.ஏமாளியாய் இருக்கலாம் ஆனால் கோமாளியாய் இருக்க கூடாது.
30-மார்-2013 01:16:38 IST
யாரு இந்த ரங்கசாமி ஸ்ரீனிவாசன் ? இப்ப புரியுது. அமரிக்ககாரனை இந்தியன் ஏன் அண்ணாந்து பார்க்குறான்னு. யாரை கொண்டாடனும், யாரை தூர வைக்கனும்னு தெளிவா இருக்கான்யா. தானே ஒழுக்கம் கெட்டவனா இருந்தா கூட தலைமை ஒழுக்கமா இருக்கனும்முன்னு நினைக்கிறான் பாரு அவன் புத்திசாலிதானே.
03-பிப்-2013 00:12:41 IST
உடல் உழைப்பே வருமானம் என்ற கால கட்டத்தில் குழந்தைகளே செல்வமாய் இருந்தனர். பெரிய குடும்பம்,அக்கா,அண்ணன்,தம்பி,தங்கை,பாசம்,உழைப்பு,பெருந்தன்மை,விட்டுகொடுத்தல்,குடும்ப கௌரவம்,ஒற்றுமை என்று கொட்டி கிடந்த அத்தனை விசயங்களும், மூளையே வருமானம் சிறு குடும்பமே சிக்கன வாழ்க்கை என்றான பிறகு எங்கோ காணாமல் போய்விட்டன. கூட்டு குடும்பமாய் வாழ்ந்த காலத்தில் பிடிக்கிறதோ பிடிக்க வில்லையோ, பெரியவர்களுக்கு கட்டுப்பட்டு குடும்பம் நடத்திய போது பெரியவர்களின் வாழ்ந்த வாழ்க்கை அதில் கிடைத்த அனுபவங்கள் எல்லாம் தொட்டில் தொடங்கி சுடுகாடு வரை சுகமான துணையிருந்தது போய் PRIVACY என்று ஆசைப்பட்டு அனுபவங்களை முதியோர் இல்லத்திற்கு அனுப்பிவிட்டு தொட்டதெற்கெல்லாம் GOOGLE தேடும் நிலைக்கு போய்விட்டோம். மாமன்,மச்சான்,உறவு, உரிமைகள் சாதி சனம் என்றிருந்த காலத்தில் படிக்காவிட்டாலும் பெண்களுக்கு பாது காப்பு இருந்தது.எல்லாவற்றையும் பத்தாம் பசலித்தனம் என்று தூக்கி எறிந்துவிட்டு படிப்பு அந்தஸ்து பெண்ணுரிமை சம உரிமை எல்லாம் கிடைத்தும் இன்று நிலைமை என்ன ? பட்டறிவை விட படிப்பறிவே பெரிசு என்று பீத்தி திரிகிற கேரளாவில் பெற்ற தகப்பனும்,கூட பிறந்த தமையனும் பாலியல் பலாத்காரம் செய்யும் நிலைமையில் பெண்களிருக்கிறார்கள்.நாம் என்னதான் சாதித்தோம் ? ஒன்றை இழந்து மற்றொன்றை பெற்றது எப்படி சாதனை ஆகும் ?
பாலியல் பலாத்காரம் செய்பவருக்கு தூக்கு தண்டனை என்று சட்டம் கொண்டு வந்தால் கூட என்ன நடக்கும் ? குற்றவாளியை கண்டுபிடித்தால்தானே தண்டனை தர முடியும் ? இந்தியாவில் சட்டங்கள் சில அப்பாவி ஆண்களை பலி கடாவாக்க உதவுமே தவிர உணமையான் குற்றவாளிகளை பிடிக்க உதவும் என்பது சந்தேகமே.பாலியல் பலாத்காரம் என்ற பிரச்சினை பெண்கள் அதிக சுதந்திரம் அனுபவிக்கிற US,UK போன்ற முன்னேறிய நாடுகளில் கூட பெரும் பிரச்சினையாய் இருக்கும் போது பெண்ணுரிமை சமத்துவம் சட்டங்கள் எல்லாம் அர்த்தமுள்ளவையா என்பது கேள்விக்குறியே.
பெண்ணிற்கு அழகை தந்ததும் ஆணிற்கு அவள் மேல் மோகத்தை தந்ததும்,பலத்தை தாய்மையை பிரித்து கொடுத்ததும் மனிதன் இல்லையே.அது இயற்கையின் நியதி தலைமுறை கடந்து செல்லும் தந்திரம்.இதற்க்கு மனிதனோ மிருகமோ விதிவிலக்கல்ல.ஆறாம் அறிவு,அனுபவம் தந்த படிப்பினை கலந்து காலச்சாரம் மனிதனை கட்டுபடுத்தியது அதையும் சுக்கு நூறாக்கி விட்டோம்.
தெரிந்தோ தெரியாமலோ ஆசைப்பட்டு பெரிய சிக்கலில் மாட்டியிருக்கிறோம் CAREER,PRIVACY என்று ஒன்றிமில்லாத விசயங்களை பின்னுக்கு தள்ளி பெற்றவர்கள்,பெரியவர்கள்,பக்கத்தில் குடியிருப்பவன் எல்லோரையும் மதித்து நேசியுங்கள்.புதிய தலை முறைகளுக்கு நல்ல விசயங்களை சொல்லி தருவோம்.வெட்டி நியாயம் பேசாமல் பொறுப்புள்ள குடிமகனாய் நல்ல வேட்பாளரை தேர்ந்தெடுப்போம்.தெருவிற்கு தெருவிருக்கும் மது கடைகளை மூடுவோம்.....இன்னும் சொல்ல நினைப்பவர்களை சொல்லட்டுமே.
06-ஜன-2013 05:45:48 IST
சினிமா பைத்தியங்களும் கிரிக்கெட் பைத்தியங்களும் இருக்கும் வரை இந்தியா அமெரிக்காவையும் சீனாவையும் அன்னாந்து பார்த்துக்கொண்டிருக்க வேண்டியதுதான்.நாட்டில் விலைவாசி,மின்சார தட்டுபாடு,ஊழல்,கற்பழிப்பு இத்யாதி இத்யாதி என ஆயிரம் பிரச்சினைகள் இருக்க. எதற்கும் கவலை படாத கூட்டம் எவனோ சம்பாத்தியம் பண்ணுவதற்காக கவலை படுகிறது. வியர்வை சிந்தி வேலை செய்தவனை மகிழ்விக்கவே சினிமாவும் விளையாட்டும் என்பது போய். சினிமாவும் விளையாட்டும் வாழவே நிறைய பேர் வேலை செய்கிறார்கள்
23-டிச-2012 18:30:17 IST
" குப்பை அள்ளுறவனையும், ஒரு ஜீவன் நேசிக்குதேன்னு நெனச்சேன்...... குப்பைல கிடைச்ச உறவை கூட, என்னால காப்பத்த முடியலையேன்னு நினைச்சி, நான் பல நாள் தூங்கவே இல்ல." இயல்பான உணர்வு அனுபவித்தால் புரியும் நேசமும் இழப்பும்.
23-டிச-2012 13:04:40 IST
நமக்கு தலைவர் படம் ரிலீஸ் ஆகுது அதற்க்கு பாலபிசேகம் பண்ண வேண்டும்.குத்தாட்டம் போடுறவங்களுக்கு கோவில் கட்டி ரெம்ப நாளாகுது. எந்த மெகா சீரியல்ல எத்தனை கள்ள காதல்ன்னு சரியாய் ஞாபகம் வைக்க முடிய வில்லை சொத்தை வித்து சிட்பண்டிலே போடணும். புதுசா யாரோ சாமியார் வந்திருக்காராம் அவரை போய் பார்க்கணும். இப்படி எத்தனையோ தலையாய பிரச்சினைகள் இருக்கும் போது காவேரி பிரச்சினை அது இதுன்னு சின்ன சின்ன பிரச்சினைக்கெல்லாம் ஒரு கொசுறு கூட்டம் இப்படி அலட்டிக்குது.
06-டிச-2012 01:57:25 IST
சினிமா மோகமும், கழகங்களின் ஆட்சியும் தமிழனுக்கு என்றென்றும் தலைகுனிவே. புதிய தலைமுறையிடமும் எந்த பெரிய மாற்றமும் இருப்பதாக தெரிய வில்லை என்பது மிகப் பெரிய வேதனை.
06-டிச-2012 01:08:56 IST