பிரதமரின் பேச்சு வெறும் பேச்சளவிலும், அறிவிப்பளவிலும் இருந்துவிடக்கூடாது. தொழிலாளர்களின் நலனில் அரசுத்துறையில் முன்னுதரானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். மெத்தப் படித்தவர்கள் பணிபுரிகின்ற தொழில் நுட்பத் துறையில் எந்த அளவிற்கு அடிமைப்பட்டு இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அதேபோல இன்றைய பெரும்பாலான தொழில் அதிபர்கள் அரசியல் கட்சியையும், அரசியல் கட்சித் தலைவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் தங்களிடம் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு போதுமான வசதிகளை செய்து கொடுத்து மடர்வர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கவேண்டும். அதை மத்திய மாநில அரசுகள் கண்கானித்தால் மட்டுமே பிரதமரின் இந்தப் பேச்சு உண்மையுள்ளதாக இருக்கும். லட்சக் கணக்கான ஊழியர்களை, ஒரே ஒரு கை எழுத்தில் பணி நீக்கம் செய்ததும் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் என்பது கடந்த கால வரலாறு. தமிழ் நாட்டை எடுத்துக்கொண்டால், தமிழ் நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் நலன் ஓரளவு பாதுகாக்கப்பட்டாலும், வெளி மாநில தொழிலாளர்கள் எந்த அளவிற்கு நசுக்கப்படுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. இது போன்ற தமிழ் நாட்டில் மட்டுமல்ல, பிற மாநிலத்து தொழிலாளர்கள் அடிமைகளாக நடத்தப்படுவது அனைத்து மாநிலங்களிலும் நடப்பதுதான். ஆக, பிரதமரின் பேச்சு வெறும் அறிவிப்பு என்ற அளவில் இருக்கக் கூடாது.....
18-மே-2013 09:28:59 IST
விலை ஏற்றத்தை தடுக்க 20 ரூபாய்க்கு அரிசி என்பதை விட இது போன்ற விலை குறைவான உணவகங்களால் நாளடைவில் விலை இறங்க வாய்ப்பு உள்ளது. அதே சமயம் தரம் என்பதை தவறாமல் கடைப்பிடித்தால்தான் இத்திட்டம் முழுமையாக வெற்றி பெரும். நடுத்தர மக்களும் அதிகமாகப் பயன்படுத்தினால் கண்டிப்பாக வெளிச் சந்தை அரிசியின் விலை கூடிய விரைவில் குறையும். ஊடகங்கள் பயன்படுத்திகின்ற "மலிவு" விலை உணவகம் என்று சொல்லாமல் "அம்மா" அரசு உணவகம் என்பதாக குறிப்பிடலாம். நடுத்தர மக்கள் பயன்படுத்த ஆரம்பித்தாலே பெரும்பால உணவுப் பொருட்களின் விலை கட்டுக்குள் வந்துவிடும். அரசின் நோக்கமும் முழுமை அடையும்.
16-மே-2013 07:36:50 IST
மத்திய கணக்காயம் தனது தணிக்கை அறிக்கையில் எத்தனையோ இழப்புகளை சொல்லி வருகிறது. சிறியதும் பெரியதுமாக சொல்லி வந்த கணக்காயம், 2ஜி தணிக்கையில் மிகக் கூடுதலாக லட்சம் கோடியில் சொல்லியது. அதை முழுவதுமாக விசாரிக்காமல், விளம்பரத்திற்காக பெரும்பாலான ஊடகங்கள் அதை பூதாகரப்படுத்தி எழுதின. உலக நாடுகளுக்கு இந்தியாவை மிகப் பெரிய ஊழல் நாடாகக் காட்டியது. இதோ திரு நவ மாயம் சொல்வது போல "இதைத்தானே ராஜாவும் சொல்லிக்கிட்டு இருக்கார்... மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் கொடுக்க கூடுதல் இணைப்புக்கள் கொடுக்க பட்டன, அது இழப்பு ஆகாது என்று.... ". நடந்த அத்தனை கலேபாரங்களும் ஊடகங்களுக்கு பரபரப்பு செய்தியாக ஆகிவிட்டதுதான் நடந்துள்ளது. ஊழல் நடந்துள்ளது... அதற்க்கான விசாரணை.. சட்ட நடவடிக்கை தேவைதான். அதற்காக மக்கள் நலனுக்காக கொண்டுவந்த ஒன்றை முற்றிலுமாக மறுத்து.....மறைத்து அதை ஊழல் என்பதாக முன் நிறுத்தி, ஊழலாக மட்டுமே காட்டியதை என்னவென்று சொல்வது. நல்லதிற்கு காலமில்லை என்பது உண்மைதானோ....
10-மே-2013 17:38:02 IST
தென் ஆப்ரிக்காவில் காந்தியை நிறவெறியால் ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்டதாக, அது மிகப்பெரிய இன வெறி என்பதாக பள்ளிப் பாடப்புத்தகத்திலிருந்து படித்து வருகிறோம். ஆனால் நமது நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் சிறு சிறு சாதிப் பிரிவுகளுக்குள் வேறுபாடு என்பது மட்டுமல்ல அவர்களுக்குள் சண்டை சச்சரவுகள் என்பது அடிக்கடி நடப்பது முன்பை விட இப்போது அதிகமாக இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. அதற்கு காரணம் மக்களை மனதளவில் தங்களை மாற்றிக்கொள்ளவில்லை என்பது வேதனையானது. சாதியை அவ்வளவு எளிதாக மக்கள் மனதிலிருந்து சட்டப்படி எடுத்துவிட முடியாது. நம் நாட்டு அரசியலும் சாதியோடு கலந்துவிட்ட, தவிர்க்க முடியாத ஒன்று. அதைத் தடை செய்வது என்பது நடைமுறையில் சாத்தியபடாது. என்றாலும், கால மாற்றத்தில், சாதி மறுக்கப்பட்டக் காதல் திருமணங்களால் சாதி பார்க்காத புதிய தலைமுறையும் உருவாகிக்கொண்டுதான் உள்ளது. வரும் காலங்களில் அது இன்னும் அதிகரிக்கும். சாதி என்பது இருந்தாலும் சாதி வேறுபாடு பார்க்காத இந்திய சமுதாயம் உருவாகும் . அதற்க்கு இந்த சாதி அமைப்புகளே வழி ஏற்படுத்தித் தரும்.நம்புவோம்.நம்பிக்கைதானேவாழ்க்கை.
05-மே-2013 21:51:03 IST
இனத்திற்காக சிறை சென்றதாகக் காட்டிக்கொள்ளவே ராமதாஸ் வலிய வந்து கைதாகி இருக்கிறார். கண்டிப்பாக அவரது இனத்திற்குள் பொதுவான சிந்தனை கொண்டவர்கள் இதற்காக கண்டிப்பாக வருத்தப்பட மாட்டார்கள். எப்படியாவது தனது மகனை அரசியலில் ஜெயிக்க வைக்க படாதபாடுபடுகிறார் இவர். இதை அவர் சார்ந்த இனத்தவர்களே ஒதுக்கித் தள்ளிவிடுவார்கள். தமிழக அரசின் இந்த கைது நடவடிக்கை சட்டப்படியான, துணிச்சலான நடவடிக்கை.
01-மே-2013 14:26:56 IST
தேர்தல் கால அறிவிப்பு எல்லாம் அவ்வளவுதானா...? மின்வெட்டுதான் ஆட்சி மாற்றம் ஏற்படவே காரணமாக இருந்தது. ஆனால் மின்சாரத்தை மக்களே தயாரித்துக்கொள்ளவேண்டும் என்று சொல்வது ஆச்சரியமாக இருக்கிறது. அரசு தனக்கான பள்ளிக் கூடங்கள், அலுவலகங்கள், தொழிற்சாலைகளுக்கு சூர்ய சக்தியைப் பயன்படுத்தினாலே பொதுமக்களுக்கான மின்சாரத்தைக் கொடுக்க முடியும். வருமானத்திற்க்காக மது விற்பனைக்கு இலக்கு வைக்கும் அரசு, மக்கள் மிக அவசியமான மின்சாரத்தை தாங்களே ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்று சொல்வது பொறுப்பை மக்கள் மீது சுமத்துவதேயாகும். ஆனாலும் மக்கள் என்ன செய்ய முடியும். யாரோ ஒருவருக்கு வாக்குப் போடும் உரிமை மட்டுமே உள்ளது. மலிவு விலை உணவும், விலையில்லா மிக்சி, கிரைண்டர், மடி கணினி, தாராளமான மது வகைகள் போன்றவற்றைத் தரும்போது மின்சாரத்தைப் பற்றி மக்கள் எதற்காகக் கவலைப் படவேண்டும். அதுதான் கீதாசாரம் இருக்கிறதே.... "எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கின்றது....."
25-ஏப்-2013 17:29:02 IST
ராஜ தந்திரம் என்று சொல்லிக்கொள்ளலாம். அஞ்சுகிறது என்றும் சொல்ல முடியாது. அதிரடி நடவடிக்கைகளால் ஏற்படும் விளைவுகளை சந்திப்பதற்கான மனப்பக்குவம் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ராணுவ பலத்தில் குறைவாக உள்ள பாகிஸ்தான் கார்கிலில் செய்த ஆக்கிரமிப்பு, அதன்பிறகான நடவடிக்கை தும்பை விட்டு வாலைப்பிடித்த கதையாகத்தான் இருந்தது. போதுமான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் இல்லாததால் பொருளாதார இழப்பு மட்டுமன்றி எத்தனை எத்தனை உயிர் இழப்புகள். மிகச் சிறிய நாடான இலங்கையின் கடற்படை தமிழக மீனவர்களை (இந்திய மீனவர்கள் என்று சொல்லலாமா வேண்டாமா என்று தெரியவில்லை) படுத்தும் பாட்டை தினம் தினம் செய்தியாகப் பார்க்கிறோம். ஆனால் நடப்பது கடலில். நமக்கும் மிகப்பெரிய திறமையான கடற்படை உண்டு என்று சொல்கிறார்கள். தற்போதுள்ள சீன ஆக்கிரமிப்புக் கூட ஒரே நாளில் நடந்து இருக்க முடியாது. படிப்படியாகவே செய்திருக்க முடியும். அவர்களால் அது முடிகிறது எனும்போது அதனைக் கவனிக்காமல் நமது ராணுவம் இருந்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். ஆக இப்போது தும்பை விட்டு வாலைப் பிடித்துள்ளோம் என்றுதான் சொல்லவேண்டும். உலகின் மிக அதிக அளவில் ராணுவத் தளவாடங்களை வாங்குபவர்களாகவும், உள்நாட்டில் ராணுவப் பொருட்களை உற்பத்தி செய்பவர்களாகவும் இருக்கிறோம். அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு வருடமும் ராணுவத்திற்கான நிதி ஒதுக்கீடும் அதிகப்படுத்திக்கொண்டே இருக்கிறோம். இவையெல்லாம் எதற்காக என்று தெரியவில்லை. அமைதியா விரும்பும் நாடு, போரால் எதையும் தீர்க்க முடியாது. பேச்சு வார்த்தையால் எதையும் தீர்த்துக்கொள்ள முடியும் என்றால், ராணுவத்திற்காக இவ்வளவு நிதியை செலவழிக்காமல் நாட்டின் மற்ற உபயோகமானத் திட்டத்திற்கு உபயோகப்படுத்தலாம். தினமலரின் இந்த அருமையான விவாத தளத்தில் பதிவு செய்வதால் எதாவது நன்மை உண்டோ இல்லையோ குறைந்த பட்சம் சாமானியனின் ஆற்றாமையை கருத்தாக்கி மனதைத் தேற்றிக்கொள்ளலாம். அதற்க்கு தினமலருக்கு நன்றி சொல்லியாகவே வேண்டும்.
25-ஏப்-2013 09:06:15 IST
மலிவு விலை இட்லி, 20 ரூபாயிக்கு அரிசி போன்ற அதிகப்படியான விளம்பரத் திட்டங்களால மின்வெட்டால் ஏற்படும் அவதிகள் திசை திருப்படுகின்றன. எத்தனையோ அரசு பொதுத்துறை நிறுவனங்கள் சரிவர இயங்காத நிலையில், அதனைச் சரிபடுத்தி வேலைவாய்ப்பை அதிகப்படுத்தினால் விலையில்லா பொருட்களும், மலிவு விலை உணவகங்களும் நடத்தி அரசு நஷ்டப்படாது. நல்ல திட்டமே என்றாலும் வேறு கட்சி ஆட்சி வருமேயானால் அத்திட்டம் ஓரங்கட்டப்படும் அரசியல் நிலை. ஒருபுறம் அரசு மது விற்பனையில், தங்களது வருமானத்தை இழந்து மயக்க நிலை. மற்றொருபுறம் மலிவிலையில் உணவகம். இதைத்தான் போட்டு வாங்குவது என்றுகூடச் சொல்லலாமல். முள்ளை முள்ளால் எடுப்பது போல மதுவின் வருமானத்தில் மலிவு விலை உணவகங்கள். வருமானம் இல்லாதவர்களுக்கு, குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு தொலைக் காட்சிப் பெட்டி, அரைக்கும் இயந்திரம், கலக்கும் இயந்திரம், மின்விசிறி என்பது இல்லாமல், மிக அதிகமான வருமானம் உள்ளவர்களுக்கும் தரப்படுகிறது என்கிறபோது "வாக்கு" மட்டுமே குறிக்கோளாக இருக்கிறது என்பதுதான் தெளிவாகத் தெரிகிறது. என்ன சொல்ல....
23-ஏப்-2013 08:38:49 IST
அந்தக் காலத்தில், ஒரு விபரமும் தெரியாத பருவத்தில், மிகச் சிறிய வயதிலியே திருமணத்தை நடத்தினார்கள். அதை பெற்றோர்களால் நடத்தப்பட்டதால் அது பெரிய தவறாகத் தெரியவில்லை. ஆனால் இப்போது பதினைந்து வயதிற்கு மேல் ஏறபடுகின்ற இயற்கையான பருவத் தூண்டுதலால் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கின்றன. அது முற்றிலும் தவறு என்று சொல்லிவிடமுடியாது. இது ஒவ்வொருவரின் தனிப்பட்ட எண்ணத் தூண்டுதல்கள். பெற்றோரால் ஓரளவே இதைக் கண்டுபிடித்து, உணரச் செய்ய முடியும். மற்றபடி இதுபோன்ற நிகழ்வுகள் இப்போதுதான் நடக்கின்றன என்பது போல காட்டப்படுகின்றன. உண்மையில் இது அக்காலம் தொட்டு நடந்து கொண்டுதான் உள்ளது. என்ன... இப்போது ஊடங்கங்களின் மிகப் படுத்தப்படும் செய்திகளால் மிக அதிகமாக இருப்பதாகத் தெரிகிறது. இப்போது இருக்கின்ற மக்கள் பெருக்கத்தில், தொலைகாட்சி, திரைப்படங்களில் காட்டப்படுகின்ற மிகைபடுத்தப் படுகின்ற காட்சிகளால் இந்த அளவிற்கே இது போன்ற நிகழ்வுகள் நடப்பது பரவாயில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஒன்று மட்டும் நிச்சயம் என்னதான் தடுத்தாலும் நடப்பது நடந்து கொண்டுதான் இருக்கும். அதுதான் கீதையும் சொல்கிறது... "எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது......". நடந்தது.. நடப்பது.... இனி நடக்கப்போவது அனைத்தும்.. எல்லாம் அவன் செயல்
22-ஏப்-2013 19:11:05 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment
ஜனவரி
1
1900
வெறும் நான்கு மணி நேர மின்வேட்டுதான் ஆட்சி மாற்றம் ஏறபடவே காரணமாக இருந்தது. அப்போது இருந்த தேர்தல் மக்களுக்கு ஆட்சி மாற்றம் செய்ய வாய்ப்பாக இருந்தது. படிப்படியாக மின்வெட்டைக் குறைத்து 2012 டிசம்பர் மாதத்திற்குள் முற்றிலுமாக மின்வெட்டு இல்லாமல் செய்யப்போவதாக இப்போதைய ஆளும் கட்சி உறுதி அளித்தது. 165 மாநகராட்சி அலுவலகங்களை சூர்ய சக்தி பெற ஏற்பாடுகள் செய்யப்படும் என்பதாகவும் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டது. ஆனால் நிலைமையோ தலைகீழாக உள்ளது. இப்போது நான்கு மணி நேரமே மின்சாரம் கிடைக்கும் என்ற நிலையில் உள்ளோம். மின்வெட்டு முற்றிலுமாக நீக்கப்படும் என்ற சொன்ன நிலை மாறி, மின்வெட்டிற்கு காரணமாக முந்தைய ஆட்சியையும், மத்திய அரசையும் காரணமாக இப்போதைய அரசு சொல்கிறது. அப்படிச் சொல்வது "சலித்துப்" போகும்போது மின் உற்பத்தி நிலையங்கள் சரியாக இயங்கவில்லை என்று இயற்கையைக் காரணமாகக் காட்டப்படுகிறது. போதுமான அளவிற்கு நீர் கிடைக்கவில்லையென்றால் விவசாயிகள் வேறு வேலைக்கு மாற்றம் செய்துகொள்ள வேண்டும் என்று நமது பிரதமர் சொன்னது போல, மின்சாரம் இல்லாமல் வாழப் பழகிக்கொள்ளவேண்டும் என்பதுதான் மக்களாகப் புரிந்து கொள்ளவேண்டும். ஏனென்றால் மின்வெட்டை தீர்க்க முடியாது என்று எந்த ஒரு அரசும் தைரியமாகச் சொல்லாது. மக்களாட்சி நாட்டில் தேர்தல் என்ற ஒன்றும் அதற்க்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற நிலைமை இருக்கிறதே. ஆக, மின்வெட்டு தீரும் என்று நம்புவது மூட நம்பிக்கை என்று கூட சொல்லலாம். ஏனென்றால் போராடினால் கூட அதற்க்கு பதில் அளிக்கக் கூட எந்த ஒரு ஆளும் கட்சியும் தயாரா இல்லை. போராட்டம் என்பது இப்போதைய சூழலில் "ஒரு ஆட்டம்", அரசியல் கட்சிகளுக்கு ஒரு மேடை. அவ்வளவே. வாழ்க மக்களாட்சி.
17-ஏப்-2013 11:05:04 IST