| E-paper

 
Advertisement
ராம.ராசு : கருத்துக்கள் ( 212 )
ராம.ராசு
Advertisement
Advertisement
பிப்ரவரி
14
2015
அரசியல் நான் ஏழை தான் ஆனால் தன்மானம் உள்ளவன்- நிதிஷ் குமாருக்கு மஞ்ஜி பதிலடி
அரசியலில் உள்ளிருந்து காய் நகர்த்துவது என்பது சாதாரணம். இங்கு பெரும்பாலனவர்கள் திரு மஞ்ஜி சொல்லும் விளக்கத்தை கண்டுகொள்ளவில்லை. ப.ஜ.க ஆதரவோடு ஆட்சியைப் பிடித்த திரு நிதிஷ், சூழ்நிலை காரணமாக முதல்வர் பதவியிலிருந்து விலகி, தலித் இனம் சார்ந்த திரு மஞ்ஜியை முதல்வராக்கிப் பார்க்கவேண்டும் என்ற ஆசையில் இருக்க முடியாது. தலித் மக்களின் ஆதரவைப் பெறுவதற்கும், பிற கட்சிகளின் குற்றச்சாட்டுகளை திசை திருப்புவதற்காகத்தான் இருக்க முடியும். திரு நிதிஷ் குமாருக்கு எதிராக செயல்படுவதால் எந்தவகையான விளைவுகள் ஏற்படும் என்பதை திரு மஞ்சி அறியாதவர் அல்ல. அதே சமயம் "அமைச்சர்களும், கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும், 'டம்மி முதல்வர், ரப்பர் ஸ்டாம்ப்' என, என்னை கேலி செய்தனர். இதனால், சுய மரியாதைக் காகவும், தன்மானத்துக்காகவும், சுயமாக செயல்பட முடிவு செய்தேன். ஏழைகளின் நலனுக்கான திட்டத்தை செயல்படுத்தினேன். இது, நிதிஷ் குமாருக்கும், அவரின் ஆதரவாளர்களுக்கும் பிடிக்கவில்லை" என்பதையும் தவறு என்று சொல்ல முடியாது. அவரது விளக்கத்தில் உண்மையும், நியாயமும் இருக்கும்பட்சத்தில், அவரின் முடிவு அரசியல் நிலைப்பாடு என்ற அளவில் சரியென்று சொல்வதில் தவறொன்றும் இல்லை.   10:03:07 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

பிப்ரவரி
11
2015
பொது அரசு நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்கவும், முதியோர் ஓய்வூதியம் பெறவும் ஆதார் கட்டாயம் "கிடுக்கிப்பிடி உத்தரவால் அதிர்ச்சி
கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட "ஆதார் அட்டை" திட்டம் மிகச் சிறப்பானது. முழுமையாகப் பயன்படுத்தினால்,அமல்படுத்தப்படுகின்ற திட்டங்கள் சரியான பயனாளிகளுக்கு கிடைப்பது எளிதாகவும், முழுமையாகவும் இருக்கும். ஆளும் இப்போதைய அரசு கடந்த ஆட்சியின் போது மிகப்பெரிய எதிர்ப்பை காட்டாமல், அதில் உள்ள நல்ல திட்டங்களுக்கு ஆதரவாக இருந்திருக்குமேயானால், கிட்டத்தட்ட நாட்டு மக்கள் அனைவருக்குமே அட்டை தரப்பட்டு இருக்கும். பொதுவாக பொதுமக்கள் அனைவரும் ஆதார் அட்டை பெறுவதற்கு தயாராகவே இருந்தார்கள். எதிர்கட்சிகளின் தவறான பரப்புரையால், மக்கள் குழப்பத்திற்கு ஆளாகிவிட்டார்கள். அதுமட்டுமல்லாமல், காங்கிரஸ் கட்சி அல்லாத மாநிலங்களில், அந்த அரசுகளின் முழு ஒத்துழைப்பு இல்லாமல் போனதும் இத்திட்டம் முழுமையடையாமல் போனதற்கு காரணம் என்றும் சொல்லலாம். எதிர்க்கட்சி என்பதால் எதிர்ப்பது ஒன்றையே குறிக்கோளாக, பாராளுமன்றத்தையே முடக்கிவிட்டு.. இப்போது அதன் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளது என்றுதான் சொல்லவேண்டும். ஆதார் அட்டை திட்டத்தால் தனிமனித விபரங்களை வெளிநாட்டினருக்கு விற்றுவிடுவார்கள் என்றெல்லாம் பரப்புரை செய்யப்பட்டதால், மெத்தப் படித்தவர்கள்கூட ஆதார் அட்டை பெறுவதற்கு முழு முயற்சி செய்யவில்லை. ஆனால், வெளிப்படையாக எதிர்ப்புக் காட்டிய எத்தனையோ பேர் ஆதார் அட்டையை, சத்தமில்லாமல் எடுத்துவிட்டார்கள் என்பது எதார்த்தத்தில் நடந்தது.இப்போதாவது அதைப் பெறுவதற்கான எளிய நடைமுறைகளைப் பயன்படுத்தி, நாட்டு மக்கள் அனைவருக்கும் கிடைப்பதற்கான முயற்ச்சியை மத்திய அரசு எடுக்க வேண்டும். மாநில அரசுகள், அரசியல் பாராது,முழு ஒத்துழைப்புக் கொடுத்தால் “ஆதார் அட்டை” இல்லை என்ற நிலை வராது. ஒவ்வொரு தனி மனிதருக்கும் வருமான வரி “நிரந்தர கணக்கு எண்” சாத்தியப்படும்போது இதுவும் சாத்தியப்படும்   12:50:36 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

பிப்ரவரி
9
2015
பொது தமிழகத்தில் 2000 அரசு பள்ளிகள் விரைவில் மூடல்? மாணவர் சேர்க்கை சரிவால் புது நெருக்கடி
அரசுப் பள்ளி ஆசிரியர்கள், தங்கள் வேலைக்கான முக்கியத்துவத்தை இன்னும் புரிந்துகொள்ளவில்லை. இவர்கள் மற்றவர்களுக்கு முன்னுதாரமாக இருக்க வேண்டும் என்பதை கண்டுகொள்வதேயில்லை. அரசுப் பணி வேண்டும் ஆனால் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க மாட்டார்களாம். தங்களது திறமை மீது நம்பிக்கை இல்லாதவர்கள் என்பதால்தான், குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்கிறார்கள். சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர்களுக்கு மேல் அரசுப் பள்ளி ஆசிரியைகள் இருக்கிறார்கள். இவர்களது குழந்தைகளை பள்ளிகளில் சேர்த்தாலே, அரசுப் பள்ளியில் படிப்பவர்களின் எண்ணிக்கை கூடும். ஓரளவு வசிதி உள்ளவர்களே தனியார் பள்ளிகளை தேடும்போது, பிறகு யாருக்கு இவர்கள் பாடம் சொல்லிக்கொடுக்கப் போகிறார்கள். தங்களது ஊதியத்திற்கு போராடும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள், தாங்கள் பணிபுரியும் பள்ளிகளுக்கு தேவையான வசைதிகளைப் பெறுவதற்கு, பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு போராட்டம் நடத்தினால், ஓரளவிற்காவது அரசு செவி சாய்க்கும். ஏதாவது சாக்குப் போக்குக் காரணங்களைச் சொல்லலாம். எப்போது அரசுப்பள்ளிகளில் சாதாரண நடுத்தர மக்களும் அரசுப் பள்ளிகளில் தங்களில் குழந்தைகளைச் சேர்க்கும் மன நிலைக்கு வருகிறார்களோ அப்போதுதான் அரசுப் பள்ளிகளின் குழந்தைகளின் எண்ணிக்கை கூடும். அது அரசுப் பள்ளிகள் ஆசிரியர்களின் மனமாற்றத்தில்தான் உள்ளது.   10:26:25 IST
Rate this:
2 members
1 members
31 members
Share this Comment

பிப்ரவரி
4
2015
பொது பஸ் கட்டணம் குறைப்பு விவகாரத்தில் தமிழக அரசு மவுனம் டீசல் விலை வீழ்ச்சிக்கு பின்பும் நஷ்டம் என புலம்பல்
மத்திய அரசு எரிபொருள் விலையை ஏற்றியபோது மாநில அரசுகளும் விற்பனை வரி மூலமாக வருமானத்தைப் பெற்றது. ஆனால் மறைத்துவிட்டு, மத்திய அரசு விலையை ஏற்றிவிட்டதாக, அதை மட்டுமே குற்றச்சாட்டாக வைத்து பேருந்துக் கட்டணத்தை தமிழக அரசு ஏற்றியது. ஆனால் தற்போதைய விலை குறைப்பால் மாநில அரசுகளின் வருமானமும் குறைந்துபோயிருக்கும்... விற்பனை வரி குறைந்ததால். ஆக அந்த வகையில் நஷ்டமே என்றாலும், உயர்த்தப்பட்ட கட்டணம் குறைக்கப்படவில்லை என்பதால் அது சரிசெய்யப்பட்டுவிடும். எனவே, போக்குவரத்துக் கழகம் நஷ்டம் என்பதற்குக் காரணம், எரிபொருள் விலையேற்றமோ, இறக்கமோ அல்லது ஊழியர்களின் ஊதியத்தாமோ காரணமாக இருக்க முடியாது. . பணியாளர்கள் நியமனத்திற்கு இவ்வளவு...விருப்பட்ட இடம் மாறுதல் செய்ய இவ்வளவு.. உதிரி பாகங்கள் வாங்கினால் இவ்வளவு... என்ற நிலை நிர்வாகத்தில் இருந்தால் கண்டிப்பாக நஷ்டம் என்பது இருக்கவே இருக்கும். ஆமாம்... மேலே குறிப்பட்டவைகள் அனைத்தும் நடைமுறையில் இருந்தால் மட்டுமே. ஒருவேளை அனைத்தும் உண்மை இல்லாதபட்சத்தில், சிலர் சொல்வதுபோல, போக்குவரத்துத் துறையை தனியார் மயமாக்கிவிடலாம்.   11:01:08 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

பிப்ரவரி
3
2015
அரசியல் பதவி ஏற்ற உடனேயே கடவுள் படங்களை நீக்க தி.மு.க. அரசு போட்ட ரகசிய உத்தரவு அம்பலம்
"மதச்சார்பற்ற ஆட்சி நாடு ஆகையால் - எந்த மதத்தைச் சார்ந்த சாமியார்கள், கடவுள்கள், பெண் கடவுள்கள் ஆகியவற்றின் படங்கள் - சிலைகள் முதலியவற்றை அரசாங்க அலுவலகத்தில் அல்லது அரசுக்குச் சொந்தமான இடத்தில் வைத்திருப்பது சரியல்ல என்று அரசாங்கம் கருதுகிறது" என்பதில் என்ன தவறு இருக்கிறது. கடவுள் நம்பிக்கை இல்லாத கட்சியாக இருந்தபோதும் பொறுப்பாக இதை கையாண்டுள்ளது அப்போதைய திமுக அரசு என்பதை "இந்த கட்டடங்களில் இப்போது இவைகள் இருக்குமாயின் அவற்றை படிப்படியாகவும் எந்த வித ஆடம்பரமில்லாமலும் பிறர் கவனத்தை ஈர்க்காத வகையிலும் அல்லது எவ்வித அசம்பாவிதம் நிகழாத வகையிலும் அகற்ற வேண்டும்." கடவுள் நம்பிக்கை உள்ளவர்களின் மனம் புண்படாதபடி குறிப்பானை பாராட்டும் ஒன்றுதானே. இதில் குற்றம் சாட்டுவது போல தினமலர் தலைப்பு செய்தியாகத் தந்து இருப்பது அக்கட்சியின் மீதான காழ்ப்புணர்ச்சி என்றுதான் சொல்லவேண்டும்.   14:16:44 IST
Rate this:
4 members
0 members
6 members
Share this Comment

பிப்ரவரி
2
2015
பொது ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்துக்கு மேல் இருந்தால் காஸ் மானியம் கட்
மத்திய அரசின் இந்த நடவடிக்கை மிகச் சரியானது. ஆனால் என்ன... கடந்த காங்கிரஸ் ஆட்சியின் பொது கொண்டுவரப்பட்ட இதுபோன்ற சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு பாராளுமன்றத்தையே முடக்கி, எதிர்ப்பு காட்டிய இப்போதைய ஆளும் ப.ஜ.க. அரசு, இப்போது முழுவதுமாக அமல்படுத்துவது, ஆட்சியை பிடிக்க எதுவும் செய்யலாம் என்று மற்ற அரசியல் கட்சிகளுக்கு கட்சிகளுக்குக் காட்டுவதாகவே உள்ளது. மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம் என்பது எவ்வளவு பொருத்தமாக உள்ளது. அதே சமயம் இதுபோன்ற நடவடிக்கைகளும் தேவையானதே என்பதையும் மறுக்க முடியாது. 50 ஆயிரம் வருமானம் உள்ளவரும், 10 லட்சத்திற்கும் அதிகமான வருமானம் உள்ளவர்களுக்கும் அதே அளவு மானியம் என்பது சரியாக இருக்கமுடியாது. மேலும் மானியம் இல்லாத எரிவாயு வாங்கும்போது, சிக்கனத்தை அனைவரும் கடைபிடிக்கவேண்டிய கட்டாய நிலைக்கு வந்துவிடுவார்கள். ஒரு இந்தத் திட்டத்தால் நாட்டு மக்களுக்கு பயன் கிடைக்குமென்றால், கண்டிப்பாக அது முந்தைய காங்கிரஸ் அரசுக்கும் முழுப் பங்குண்டு என்பதை மறுக்க முடியாது.   09:30:57 IST
Rate this:
4 members
1 members
15 members
Share this Comment

பிப்ரவரி
1
2015
பொது ஓராண்டில் மானியமில்லா காஸ் சிலிண்டர் விலை ரூ.600குறைந்தது
எரிபொருள் ஏற்றத்தத்தைக் காரணம் காட்டி பேருந்துக் கட்டணம், பால், மின்சாரக் கட்டணத்தை உயர்த்திய மாநில அரசு, கடந்த நான்கு மாதங்களில் குறிப்பிட்டு சொல்லும்படியாக எரிபொருட்களின் விலையைக் குறைத்தும், பேருந்து கட்டணம், பால் விலை, மின்சாரக் கட்டணத்தைக் குறைக்கவில்லை. மாறாக பால் விலையையும், மின்சாரக் கட்டணத்தையும் உயர்த்தியுள்ளது. அரசே, தனது கட்டுப்பாட்டில் உள்ள, மக்களுக்குத் அவசியத்தேவையானவைகளின் விலையை கட்டுப்படுத்தாதபோது, தனியாரை கட்டுப்படுத்துவது என்பது முடியாது என்றுதான் சொல்லவேண்டும். எரிபொருள் விலை, அரிசி உள்ளிட்ட சில பொருட்களின் விலைகள் குறைந்தாலும், உணவு விடுதிகளில் விலை ஏற்றத்திற்கு அவர்களும் சில பல காரணங்களைச் சொல்லுவார்கள். விலையைக் கட்டுப்படுத்த அரசு என்ன வகையான அளவுகோலை வைத்துள்ளது என்று தெரியவில்லை. பெரும்பாலான அரசியல் தலைவர்கள் தொழில் அதிபர்களாக இருக்கும்பட்ச்சத்தில், அரசால் விலை கட்டுப்படுத்தப்படும் என்று எதிர்ப்பார்க்க முடியாது. அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள துறைகளின் விலையைக் கட்டுப்படுத்தி, நியாயவிலைக் கடைகளில், நடுத்தர மக்களும் வாங்கும்படியாக, தரமான பொருட்களை விற்றால், தனியார் விற்கும் பொருட்களின் விலை கட்டுக்குள் வரும். ஆனால் அதற்கும் அரசுதான் முயற்சி எடுக்கவேண்டும்.   10:28:56 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
30
2015
அரசியல் காங்கிரஸ் கட்சிக்கு ஜெயந்தி நடராஜன் முழுக்கு ராகுல் மீது பரபரப்பு குற்றச்சாட்டு வெளிச்சத்துக்கு வரும் அடுத்த மெகா ஊழல்
அவ்வையார் மூதுரை எந்தக் காலத்திற்கும் பொருந்துகிறது. அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல் உற்றுழித் தீர்வா ருறவல்லர் – அக்குளத்தில் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே ஒட்டி யுறுவார் உறவு. விளக்கம்.: நீர் வற்றியதும், குளத்திலிருந்து நீங்கிவிடும் நீரில் வாழும் பறவைகளைப் போல துன்பம் வந்த போது நீங்கி விடுபவர்கள் சுற்றத்தார் ஆக மாட்டார்கள். அந்தக் குளத்திலுள்ள கொட்டிப்பூண்டையும், அல்லிக்கொடியையும், குவளைக் கொடியையும் போன்றவர்களாக சேர்ந்து, ( நீர் ஏற உயர்ந்தும், நீர் குறையத் தாழ்ந்தும் இருத்தல் போல ) இன்பத்தையும் துன்பத்தையும் ஏற்றுக் கொள்பவர்களே நல்ல சுற்றத்தவர் ஆவார்கள். ( கருத்து – இன்பக் காலத்தும், துன்பக் காலத்தும் இசைந்து சேர்ந்து இருப்போரே சிறந்த சுற்றத்தார் ஆவார் என்பதாம்.)   09:26:56 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

ஜனவரி
28
2015
பொது 15 ரூபாய் செலவில் உப்பு தண்ணீர் நன்னீராகிறது கல்லூரி மாணவிகள் கண்டுபிடிப்பு
எளிய கண்டிப்பில், மிகவும் எளிதான முறையில், உப்பு நீரை இப்படி நன்னீராக்க முடியுமென்றால் ஆட்சியாளர்கள் / அரசு நினைத்தால் பெரிய அளவில் இந்த முறையைப் பயன்படுத்தி கடல் நீரை நல்ல நீராக்க கண்டிப்பாக முடியும். மூன்றில் இரண்டு மடங்கு நீரைக் கொண்டுள்ள இந்தப் பூமியில், நல்ல நீருக்காக செய்வாய் கோளுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்யும் அரசுகள்... இதுபோன்ற கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கம் அளித்தால், நீரின் தேவையை மிக எளிதாக பூர்த்தி செய்துவிடமுடியும். நல்ல நீருக்காக நாடுகளுக்கிடையே சண்டை உருவாகவும் வாய்ப்பு ஏற்படலாம் என்பதெல்லாம் பொய்யாகிப்போகும். மாநில எடுக்கும் முயற்ச்சியில், மத்திய அரசின் உதவியால் சாத்தியப்பட வைத்துவிட முடியும். அரசுகள் நினைக்க வேண்டும்.....   18:08:41 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
23
2015
கோர்ட் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பொய் வழக்கு ஜெ., வக்கீல் இறுதி வாதம்
நண்பர் கேட்டுள்ள "1991 தேர்தலில் 2 கோடியே சொச்சம் தான் தன்னிடம் இருப்பதாக கணக்கு காட்டி உள்ளார்....அவர் ஆட்சியை விட்டு இறங்கும்போது அது எப்படி 66 கோடி ஆனது..32 கம்பெனிகள் எப்படி முளைத்தன..." என்பதிலும் "உங்கம்மா கூட சேர்றதுக்கு முன்னாடி வரைக்கும் பஞ்ச பராரியா இருந்த மன்னார்குடி கும்பல் அந்த 1991-1996இல் மிக பெரிய கோடீஸ்வரி/வரர்கள் ஆனது எப்படி?" என்பதிலும் நியாயம் இருப்பதாகவே தெரிகிறது. மக்களாட்சி நாட்டில் எவ்வளவு பெரிய அளவில் உணர்வுப் பூர்வமான மக்கள் செல்வாக்கு உள்ளது போன்ற தோற்றம் இருந்தாலும், சட்டப்படியான நீதிமன்றத்தின், ஆதாரத்துடன் கூடிய தீர்ப்புதான் விடிவானது. மக்கள் செல்வாக்கும், நீதிமன்றத்தில் திறமையாக வாதாடக்கூடிய, திறமையான வழக்கறிஞரை வைத்து வாதாடுவதற்கான வசதி வாய்ப்புகள் இருக்கும்போது, பொய் வழக்காக இருக்கும்பட்சத்தில் எத்தனை அரசியல் காழ்புணர்ச்சியில் புனையப்பட்ட வழக்காக இருந்தாலும், நீர்த்துப்போகும், வெற்றிபெறும். "சிலரை பலகாலம் ஏமாற்றலாம் பலரை சில காலம் ஏமாற்றலாம்... ஆனால் எல்லோரையும் எல்லாக் காலங்களிலும் ஏமாற்ற முடியாது" என்பது நம் அனைவருக்கும் தெரிந்த அழகான பழமொழி. பழமையான மொழி என்றாலும் எக்காலத்திற்கும் பொருந்துவது. நிதர்சனமான உண்மை. காலம் அனைத்திற்கும் பதில் சொல்லும்.   09:50:48 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment