இதில் புலன் விசாரணை செய்ய ஒன்றும் இல்லை... பாகிஸ்தான் தமிழகத்தில் பிரிவினையை தூண்ட இலங்கை தமிழர்களை பயன்படுத்துகிறது என்பது ஏற்கனவே தெரிந்த ஒன்று திருச்சியில் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழர் இந்திய ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த புகைப்படமும் வீடியோவும் சிக்கியது... பாகிஸ்தான் இலங்கை தமிழர்களை தேர்வு செய்ய காரணம் மொழி மற்றும் அவர்களால் தென் இந்தியாவில் பல பகுதிகளுக்கு தடையில்லாமல் செல்ல முடியும் என்பது இன்னொரு முக்கிய காரணம், இந்த நிலையில் யாசின் மாலிக் தமிழகம் வந்தது ஒன்றும் வியப்பு இல்லை, பாகிஸ்தான் விடுதலை புலிகள் காஷ்மீர் தீவிரவாதம் அனைத்திற்கும் ஒரே குறிக்கோள் நம் தேசத்தை நாசம் செய்வது மட்டுமே... தமிழகத்தில் பேச படும் பிரிவினை பேச்சுகள் எல்லாம் ஏதோ உணர்ச்சி வங்கத்தில் பேசப்படும் பேச்சு அல்ல அது எல்லாம் திட்டமிட்டு மிக தெளிவாகவே பிரிவினையை தூண்ட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு பேசப்படும் பேச்சுகள் இது... விடுதலை புலிகளும் அவர்களின் ஆதரவாளர்களும் நம் நாட்டிற்கு பல தீமைகளை செய்து இருக்கிறார்கள் அதில் இப்போது சர்வதேச தீவிரவாதத்தை தமிழகத்தில் கொண்டு வருவதும் ஒன்று... உண்ட வீட்டு ரெண்டகம் நினைப்பவர்கள் விடுதலை புலிகளும் அவர்களின் ஆதரவாளர்களும்.
21-மே-2013 00:23:27 IST
ஆரூர் ரங: இந்திய உளவு துறை விடுதலை புலிகளின் பாகிஸ்தான் தொடர்பை இப்படி பார்க்க வேண்டும் என்று நீங்கள் விரும்புவது நன்றாக தெரிகிறது. ஆனால் உண்மை அது அல்ல. இந்திய அரசின் விடுதலை புலிகளுக்கு எதிரான நிலைப்பாடு இன்றுவரையில் மாறாமல் இருக்க காரணம் விடுதலை புலிகளின் தவறான செயல்கள். அது பற்றி யாருக்கும் தெரியாது என்று நீங்கள் நினைத்து கொண்டு இருந்தால் அது தவறு. இந்தியாவிற்கு மட்டும் அல்ல மற்ற உலக நாடுகளுக்கும் அது தெரியும். அதனால் தான் உலக நாடுகள் விடுதலை புலிகளை இன்றுவரையில் தடை செய்யப்பட்ட இயக்கமாக வைத்துள்ளார்கள்.... தற்போது சீமான் ஏதோ இலங்கை தமிழர்களுக்கு நல்லது செய்வதாக நினைத்து கொண்டு இதை செய்தாரா அல்லது திட்டமிட்டு செய்தாரா என்று தெரியவில்லை. ஆனால் இம்மாதிரியான ஒரு செயல் மூலம் இலங்கை தமிழரின் பிரச்னைக்கு பெரிய தீங்கு செய்துள்ளார் என்பதை மட்டும் நிச்சயமாக சொல்லலாம். சீமானின் செயல் இலங்கை தமிழருக்கு மட்டும் அல்ல தமிழக மக்களுக்கும் பெரிய தீமையை கொண்டு வரும்.
20-மே-2013 09:54:45 IST
இலங்கை சுற்றுலா பயணிகளை விடுதலை புலி ஆதரவாளர்கள் தாக்குவதால் இழப்பு நமக்கு தான், இம்மாதிரியான காட்டுமிராண்டி செயல்களை பொது மக்களாகிய நாம் வன்மையாக கண்டிக்க வேண்டும் இல்லை என்றால் இவர்கள் தமிழகத்தை சுடுகாடாஆக்கி விடுவார்கள்.
20-மே-2013 00:54:17 IST
விடுதலை புலிகளும் அவர்களின் ஆதரவாளர்களும் இந்திய அரசுக்கு மிக வெளிப்படையாகவே எச்சரிக்கை விடுத்துள்ளனர், விடுதலை புலிகள் இந்தியாவிற்கு எதிரான தீவிரவாதிகளுடனும் பாகிஸ்தானோடும் தொடர்பு உள்ளவர்கள் என்று நம் உளவு துறை தான் இதுவரையில் சொல்லிவந்தது ஆனால் இப்போது விடுதலை புலிகளே வெளிப்படையாக இந்தியாவிற்கு எதிரான பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பிரிவினை தலைவர்களோடு தமிழகத்தில் மேடை ஏறியுள்ளனர்... இது தமிழகத்திற்கு ஏற்ப்பட போகும் அபாயத்தின் அறிகுறி தான்.... இந்த செயலின் மூலம் விடுதலை புலிகளும் அவர்களின் ஆதரவாளர்களும் நமக்கும் நம் நாட்டிற்க்கும் எதிரானவர்கள் என்பதை மிக வெளிப்படையாக சொல்லியுள்ளனர்... இவர்களை ஆதரிப்பது நமக்கு தான் ஆபத்து
20-மே-2013 00:50:50 IST
இன்று நடந்த பெங்களூர் சென்னை மேட்ச் பார்க்கும் போது கிரிக்கெட்டை விளையாட்டாக பார்க்க முடியவில்லை சென்னை அணி தோற்றதில் எதாவது சூது இருக்குமோ என்று நினைக்க வைத்தது காரணம் இதில் வெற்றி பெற்றாலும் சென்னை முதல் இடம் தான் கிடைக்கும் தோற்றாலும் முதல் இடம் தான் அதனால் பெங்களூர் அணிக்கு அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றியை கொடுக்க வேண்டும் என்று நினைத்து விளையாடியது போல் உள்ளது வெற்றி பெற வேண்டும் என்று விளையாடியது போல் இல்லை
19-மே-2013 01:13:34 IST
துக்ளக் பத்திரிக்கையில் வரும் இலங்கை தொடர்பான கட்டுரையை படிக்கும் போது இவர் சொல்லுவது உண்மை என்றேபடுகிறது இலங்கை தமிழர் எதிர் பார்ப்பது போல் நம் இந்திய அரசு சிங்கள மக்களோடு தமிழர்கள் சரி சமமாக வாழ உதவிகளை செய்ய வேண்டும் அதற்கு தமிழக அரசியல் தலைவர்களும் தங்களின் சுயநலத்தை பார்க்காமல் இலங்கை தமிழரின் நலத்தை மனதில் வைத்து அரசியல் தீர்வு கிடைக்க ஒத்துழைக்க வேண்டும்... வெளி நாடுகளில் வாழும் இலங்கை தமிழரும் மனசாட்சியோடு நடந்து கொள்ள வேண்டும் தங்களின் வசதியான வாழ்வுக்காக இலங்கையில் வாழும் தமிழன் சண்டை போட்டு சாக வேண்டும் என்று எதிர் பார்ப்பது நியாயம் அல்ல அவர்களும் உங்களை போல் தான். உங்களுக்கு மனசாட்சி மனதில் ஈரம் இருந்தால் அவர்களையும் உங்களை போல் வாழ விடுங்கள். இலங்கை பிரச்னைக்கு தீர்வு துப்பாக்கியாலும் பிரங்கியாலும் இல்லை சரியான அரசியல் தீர்வு மூலம் தான் இலங்கை தமிழனுக்கு நல்வாழ்வு கிடைக்கும் சிலர் சொல்லுவது தமிழன் வீரம் அது இது என்று நம்மை உசுப்பிவிட பேசுவது கேட்க சுகமாக இருக்கலாம் ஆனால் அவர்கள் உண்மையான வீரர்கள் கிடையாது இவர்களின் பொய்களை கேட்டு வீணாக போவதைவிட நம் வாழ்கையை பார்த்துகொள்வது நமக்கு நல்லது
19-மே-2013 01:02:34 IST
ஆங்கில பாட மொழியால் தப்பே இல்லை இவர்களை போன்ற அரசியல்வாதிகளின் பிள்ளைகளும், பேர பிள்ளைகளும் ஆங்கிலம் ஹிந்தி என்று கற்றுக்கொள்ளும் போது மக்கள் ஏன் ஆங்கிலம் கற்க கூடாது, தமிழக அரசின் நிலை மிக சரியே
17-மே-2013 00:47:15 IST
நேற்று ஒருவர் தனக்கு வந்த 1.9 கோடி ரூபாயை வாழ்க்கையில் நேர்மை தான் முக்கியம் என்று திருப்பி கொடுத்தார் அந்த செய்தியை படித்துவிட்டு இன்று இதை படிக்கும் போது ஒரு மாதிரியாக உள்ளது இத்தனைக்கு இந்த விளையாட்டு வீரர்களுக்கு ஏலம் என்று சொல்லி கோடி கோடியாக பணத்தை அள்ளி கொடுக்கிறார்கள் அதுவும் இல்லாமல் விளம்பரம், இவர்கள் அணியும் உடையில் உள்ள ஸ்டிக்கர் என்று எல்லாவற்றுக்கும் பணம் அப்படியும் இவர்கள் அடங்காமல் இவ்வாறு செய்யும் போது இந்த விளையாட்டு வீரர்களை மனிதர்களாக பார்க்க முடியவில்லை
17-மே-2013 00:38:23 IST
தினமலர் இம்மாதிரியான வாழ்வில் நம்பிக்கை தரும் செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், தினம் தினம் வன்முறை பிரிவினைவாதிகளின் பேச்சுகளை விட இம்மாதிரியான செய்திகள் ஆயிரம் மடங்கு உயர்ந்தது... சிவகுமாருக்கு என் வாழ்த்துகள், அவரை போன்றவர்கள் தான் இந்த நாட்டின் நம்பிக்கை நட்ச்சத்திரங்கள்
16-மே-2013 14:38:38 IST