Advertisement
vidhuran : கருத்துக்கள் ( 539 )
vidhuran
Advertisement
Advertisement
டிசம்பர்
3
2016
பொது வங்கி கணக்கு துவங்க ஆதார் எண் கட்டாயமல்ல நிதி அமைச்சகம்
ஆதார் கட்டாயமா இல்லையா என்பது அல்ல விஷயம் தற்போதய நிகழ்வுகளை விட்டு ஒழியுங்கள். இரண்டு மூன்று வருஷங்களுக்கு முன் இந்த ஆதார் பற்றி ஆரம்பித்த போதே அது என்ன வென்றே தெரியாமல் தெருவில் இருந்து கொண்டு அதை குறை சொல்ல ( "இந்த கார்டு எல்லாம் இந்தியாவுக்கு செரியாவாத" பைத்தியகாரங்க ) என்றெல்லாம் ரயில் நிலையங்களிலும், பஸ் ஸ்டாப்பிலும் நிறைய பேர் இருந்தார்கள். அரசும் கொஞ்சம் கால அவகாசம் கொடுத்து, "நம் பணம் நம் கையில்"என்ற திட்டத்தை கொண்டு வந்தவுடன் இந்த அதி மேதாவிகள் சத்தமே இல்லாமல் ஓடி சென்று ஆதார் கார்டை பெற்று பதிவு செய்து கொண்டார்கள். இந்தியாவின் ஏழைகளை பற்றியே நினைத்து கொண்டு இருந்த எல்லா கட்சிகளும் தெருவில் நின்று பேசினாலும் அவ்வளவு கட்சி தொண்டர்களும் (ஒருவர் கூட பாக்கியில்லாமல்)ஆதார் கார்டை முன்னுரிமையில்)பெற்று கொண்டார்கள். அடுத்தது குடும்ப அட்டையுடன் ஆதார் கார்டை இணைக்கும் வேலை ஆரம்பித்த பொது இது ஒன்றும் சரியாகாது எல்லாம் வேஸ்ட் என்று சொன்னவர்கள், குடும்ப அட்டையுடன் ஆதார் கார்டுகளை இணைத்தால் தான் ரேஷன் பொருட்கள் கிடைக்கும் என்று நிர்பந்த படுத்தியவுடன் ஒரே மாதத்தில் எல்லா ரேஷன் கார்டுகளுடன் ஆதார் அட்டையை இணைத்தது எப்படி? இப்படி எதற்கும் கருத்தும், எதிரிப்பும் சொல்லும் உரிமை 130 கோடி பேருக்கும் உண்டு ஆனால் தனது சௌகர்யம் குறையும் பொது எல்லோருக்கும் அது குறைய கூடாது என்று ஏதாவது ஒரு வழியில் தனது வேலையை முடித்து கொள்வார்கள். அது போலத்தான் இந்த அறிவிப்பும். கொஞ்சம் கத்தி விட்டு எல்லாவற்றையும் செய்து கொள்வார்கள்.   05:07:43 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

டிசம்பர்
2
2016
அரசியல் வேண்டாம் ரேட்டிங் அரசியல் மோடிக்கு ராகுல் அட்வைஸ்
பிஜேபி சொம்புகள் என்று உங்களால் வர்ணிக்கப்படுபவர்கள் எல்லோரும் கொஞ்சம் புத்தி உள்ளவர்கள். ராகுல் காந்தி தன்னுடைய கருத்தை தேசபக்தியால் தான் கூறினார் என்று நினைத்து கொண்டு இருக்கும் ராஜவேலு பாவம் இந்த இளையராஜகுமாரன். அசிங்கமாக போட்டோ செஷனுக்காக ATM வாசலில் நின்றது உங்களுக்கு தெரியுமா? இந்த அசத்து, மோடி TRP ரேட்டிங்க்கு வேண்டி ருபாய் நோட்டை ஒழித்திட்டார் என்று கூறுவதை பைத்தியக்காரன் கூட ஏற்றுக்கொள்ளமாட்டான். உங்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.   12:04:53 IST
Rate this:
3 members
0 members
27 members
Share this Comment

டிசம்பர்
3
2016
பொது ரயில் முன்பதிவு டிக்கெட் கவுண்டர்களில் வருகிறது ஸ்வைப் மெஷின் வசதி
தமிழன் என்ன? தெலுங்கன் என்ன? நடவடிக்கைகள் எல்லாம் வரவேற்கப்பட வேண்டியவைதான் ஆனால், செயல் முறையில் இவை ரயில்வே துறையினரால் அமல் படுத்த பட முடியுமா என்ற சந்தேகம் எனக்குள்ளது சாதாரண நாட்களிலேயே கிரெடிட் கார்ட் மற்றும் டெபிட் கார்டுகளை கொண்டு ரயில்வேயில் வரிசையில் நின்று நிம்மதியாக டிக்கெட் பெறுவதற்கு மிகவும் சிரமப்பட்டு இருக்கிறேன். நான்கு கவுண்ட்டர் இருக்கும் செயின்ட் தாமஸ் மவுண்ட் முன்பதிவு நிலையத்தில் ஒரே ஒரு கவுண்டரில் மட்டும் தான் கார்ட் பரிவர்த்தனை நடை பெரும். அதற்கு ரயில்வே ஊழியர்கள் காரணமா அல்லது ரயில்வே நிர்வாகமே காரணமா என்பது எனக்கு இன்று வரை புரியவில்லை. மேலும், ரயில்வே இதை (முன்பதிவை கார்டுகள் மூலம் செய்யும் போது அந்த கட்டணம் சேவை கட்டணங்களுக்குட்பட்டது இரண்டு விதமாக பயண கட்டண வேறுபாடு இருந்தால் பொது மக்கள் பணம் கொடுத்து டிக்கெட் பெறுவதையே விரும்புவார்கள். அதனால் கார்டு பரிவர்த்தனைக்குண்டான சேவை கட்டணங்களை ரயில்வே ரத்து செய்ய வேண்டும்.   11:59:22 IST
Rate this:
1 members
1 members
9 members
Share this Comment

டிசம்பர்
2
2016
அரசியல் மம்தாவின் குற்றச்சாட்டுக்கு ராணுவம் பதில்
அவர் லூசு மாதிரி செய்யவில்லை தெரிந்தே தான் அரசியல் செய்கிறார் இந்த மாதிரி இவர்களது லாவணிக்கெல்லாம் ராணுவமும் இழுக்கப்படுகிறது என்பது தான் வேதனை. அரசியல் ரீதியாக ஆயிரம் மற்றும் ஐநூறு ருபாய் நோட்டுகளை செல்லாததாக்கி விட்டதால், மோடியை எதிர்க்கவேண்டிய நிர்பந்தம் அவருக்கு இருக்கிறது அதனால் அவர் இதோடு நிறுத்த மாட்டார் வருமானவரி துறையை வம்புக்கு இழுப்பார் தபால் தந்தி துறையை வேண்டுமென்று வம்புக்கு இழுப்பார் இதையெல்லாம் ஓரளவுக்கு எதிர்பார்க்கலாம். நேற்றைய நாடகம் முடிந்தது அடுத்த நாடகம் ஆரம்பிக்கும். மக்கள் தான் இவரை மாதிரியானவர்களுக்கு வோட்டு போட்டதால் லூசு ஆகிவிட்டார்கள்.   16:06:00 IST
Rate this:
2 members
0 members
13 members
Share this Comment

நவம்பர்
29
2016
அரசியல் பார்லிமென்டில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளி...நீடிப்பு..! 10வது நாளாக இரு சபைகளும் நேற்றும் முடங்கின
மக்களாட்சி என்பதை தங்கை ராஜா தவறாக புரிந்து கொண்டு விட்டார் என்று நினைக்கிறேன். மக்களால் மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்படும் வரை தான் இது பொருந்தும். தேர்ந்தேடுக்கப்பட்ட பிறகு மக்களால்(தேர்ந்தேடுக்கப்பட்ட மக்களால்) தேர்ந்தேடுக்கப்பட்ட மக்களுக்காக மட்டுமே மக்கள் ஆட்சி நடைபெறுகிறது. "மக்கள்" என்பதற்கு அர்த்தம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே 10 நாட்களும் பாராளுமன்றத்தை நடத்த விடாமல் செய்த புண்ணியவான்கள் (அது ஆளுங்கட்சியாகட்டும் எதிர்கட்சியாகட்டும்) பாராளுமன்ற கேன்டீனில் சாப்பிடாமல் இருந்தார்களா சம்பளமும் படியும் வாங்காமல் இருக்க போகிறார்களா? கூட இருக்கும் அல்லக்கைகளுக்கு கூட இந்த சலுகைகளை பெற்று தராமல் இருக்க போகிறார்களா? வெட்கங்கெட்ட மனிதர்கள் வண்டி இழுப்பவனின் வரிப்பணத்தில், அவனை ஏமாற்றி ஓட்டு வாங்கி வெற்றி பெற்று அவனின் வரிப்பணத்தில் மானியத்தில் எல்லா சலுகைகளையும் உரிமையுடன் பெற்று வயிறு நிரப்பி கொள்ளும் மானங்கெட்ட ஜென்மங்களை தேர்ந்தேடுத்தற்காக ஒவ்வொரு குடிமகனும் (முக்கியமாக அன்றாடங்காய்ச்சியாக இருக்கும் குடிமகனும்) வருத்த படவேண்டும். இனிமேலும் இந்த மாதிரி பாராளுமன்ற நடவடிக்கைகளை முடக்கும் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்காமல் இருக்கும் முடிவை அந்தந்த பாராளுமன்ற தொகுதி மக்கள் எடுக்கட்டும்.   14:48:50 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
29
2016
சம்பவம் டாக்சி டிரைவர் வங்கி கணக்கில் ரூ.9,800 கோடி டிபாசிட்
எப்படி எப்படி? அலட்சியம் சரி. அது என்ன வேலை பளு? என்னுடைய தாத்தா ஒருவர் கூறுவார் " வீட்டில் இருக்கும் பொருளை வெளியில் வீசும் பைத்தியத்தை இருக்கிறாயா"என்று? உண்மையான வேலை பளுவை சந்திக்கும் வங்கி ஊழியர்களை நான் தினமும் பார்த்து கொண்டு தான் இருக்கிறேன். இந்த அதிகாரியின் செயல், செய்தியை படிக்கும்போது அவர் நேர்மை அற்றவராக தான் தெரிகிறார். உண்மையிலேயே வேலை பளுவை அதிகம் சுமக்கும் அதிகாரிகளின் பெயரில் இவரை போன்ற கருப்பு ஆடுகள் குளிர் காயிக்கின்றன.சந்தானம் சொல்வது போல " இவங்கள தூக்கி ஜெயிலில் போடுங்க சார்"   07:48:43 IST
Rate this:
2 members
0 members
17 members
Share this Comment

நவம்பர்
29
2016
உலகம் புலிகள் இயக்க மாஜி தளபதி கருணா கைது
மட்டக்களப்பு தமிழனை, மட்டமான தமிழனாக மாற்றிவிட்டார்கள் பிரபாகரனும், ராஜபக்சேவும். அதற்கு இடம் கொடுத்த கருணா, நல்லவனா, கெட்டவனா நேர்மையானவனா என்பதெல்லாம் இரண்டாம் பட்சம் ஆகிவிட்டது. கைது, கைதிற்கு பிறகு விசாரணை, தண்டனை என்றெல்லாம் போய் அவரை ஒன்றுமில்லாமல் ஆகிவிடுவார்கள்.   21:58:25 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
23
2016
பொது யார் சொன்னால் என்ன? தகவல் தானே முக்கியம்!
அது எப்படி சக்தி காந்த தாஸ் சார் மக்களுக்கு செய்தி தகவல் முக்கியம் என்றால், எங்களுக்கு (மீடியாக்களுக்கு) பரபரப்பு முக்கியம் எப்படி போட்டோம் பாருங்க தலைப்பை   00:50:25 IST
Rate this:
5 members
0 members
21 members
Share this Comment

நவம்பர்
22
2016
அரசியல் செல்லாத நோட்டு விவகாரம் மோடி நடத்தும் கருத்துக் கணிப்பு
வாசகர்கள் நிறைய பேர் தனது அறிவை முழுவதும் பாஜக வை விமர்சிப்பதில் செலவழித்து விட்டனர் . இந்த கருப்பு பணவிவாகரத்தில் எல்லோருக்குமே ஒரு விஷயம் யாருமே எதிர்க்க முடியாது எதிர்த்தால் கருப்பு பணத்தை ஆதரிக்கிறார் என்ற பழி வந்து விடும். எதிர்க்காவிட்டால் இருக்கிற முகவரி கூட போய் விடும். அதனால் எல்லாருக்குமே என்ன செய்வது என்று தெரியாமல் (ஊமை வெல்லம் தின்றது மாதிரி)முதல் சில நாட்கள் அமைதியாக இருப்பதாக காட்டிக்கொண்டார்கள் 10m தேதி வங்கிகள் திறந்த அன்று கூட யாருக்கும் ஒன்றும் சொல்ல விஷயம் இருக்கவில்லை இரண்டு நாட்கள் வங்கிகளில் பணம் வந்து விடும் என்று நினைத்தர்கள் அரசும் வங்கிகளும் விடுமுறை இல்லாமல் பணி செய்யபோகின்றன என்று அறிவித்தவுடன், எதிர்க்கட்சிகளுக்கு இன்னும் கலக்கம் வந்து விட்டது மூன்றாம் நாள் 11 ம் தேதிக்கு பிறகு தான் மம்தா ஆரம்பித்திட்டார்~(அவருக்கு என்ன கஷ்டமோ) அடுத்த நாள் ராகுல் 4000 ருபாய் எடுக்க 4000 செலவு செய்து வந்து கியூ வில் வந்து நின்று போட்டோ எடுத்தது கொண்டார் கலைஞர் பாமரனுக்காக குரல் கொடுத்தார் மோடிக்கு அறிவுரையும் கொடுத்திட்டார். பிரதமரின் நடவடிக்கைக்கு பொதுமக்களின் ஆதரவுடன் எல்லாம் நன்றாக முடிந்து விடுமா என்ற சந்தேகம் எதிர்க்கட்சிகளுக்கு வந்தது அதற்கேற்றார்க்குபோல பாராளுமன்ற கூட்டமும் தொடங்கியது இவர்களின் ஒப்பாரியை வெளியே வைத்து கொள்ள முடியாததால், பாராளுமன்றத்தை முடக்குகிறார்கள். இயற்கை மரணங்களை கூட வரிசையில் நின்றதால் இறந்ததாகவும், மன உளைச்சலால் இறந்ததாகவும் ஊளையிடுகிறார்கள். சரி இப்போது மோடி இதனை பின்வாங்கினால் என்ன சொல்வார்கள்? அதை கொண்டாடுவார்களா? அதற்கும் ஏதாவது சொல்லிக்கொண்டு தான் இருப்பார்கள் சரியோ தவறோ நடவடிக்கை இருக்கிற கறுப்புப்பணம் எல்லாம் தன்னிடம் இருப்பது கருப்பு பணம் என்றே தெரியாமல் வைத்து இருக்கும் படிக்காதர்வர்களின் பணம் எல்லாம் வங்கிக்கு வந்து விடும். நிறைய அவர்கள் அறியாமையால் தான் சம்பாதிக்கும் பணத்தை வீட்டிலேயே வைத்து இருப்பார்கள் அதனால் எவ்வளவு கஷ்டங்கள் வெளியில் இருக்கும் கருப்பு பணம்ர கணக்கிற்கு வந்தபிறகு மற்றவரிடம்(பணத்தை பதுக்கி இருப்பவரிடம் நிர்வாக நடவடிக்கை எடுத்தால்)முழு பயனும் கிடைக்கும் என்று நான் நினைக்கிறேன்.   07:41:26 IST
Rate this:
16 members
0 members
55 members
Share this Comment

நவம்பர்
22
2016
அரசியல் பெரிய தோல்வியை தழுவும் அ.தி.மு.க., ஸ்டாலின் ஆருடம்
அப்பாவை மிஞ்சிவிடுவார் போல இருக்கே, தோற்றாச்சு இல்லே. அப்புறம் என்ன செத்த குழந்தைக்கு ஜாதகம் பார்த்து கிட்டு.   17:09:38 IST
Rate this:
2 members
0 members
58 members
Share this Comment