Advertisement
nimmi : கருத்துக்கள் ( 299 )
nimmi
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
26
2016
சம்பவம் சுருங்குகிறது கரும்பு சாகுபடி பரப்பு விவசாயிகள் எதிர்காலம் கேள்விக்குறி
நாங்கள் சிறுவயதாக இருந்தபோது எங்கள் கிராமத்தில் பெரியவர்கள் கூறியதை கேள்விப்பட்டிருக்கிறேன். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் விவசாயிகளுக்கு பெரும் இடர் வந்தபோது, ஊரில் உள்ள விவசாயிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து, "மேழி சத்தியம் " செய்து உழாமல் நிலத்தை வெறுமனே போட்டிருந்தார்களாம். (ஏர் கலப்பையின் மேல் பகுதியை மேழி என்று கூறுவார்கள். வலது கையில் மேழியைப் பிடித்துக் கொண்டு, இடது கையில் ஏரில் பூட்டப்பட்டுள்ள காளைகளின் கயிற்றை பிடித்துக் கொண்டு உழுவார்கள்) . தாங்கள் ஏற்றுக்கொண்ட தீர்மானத்தின்படி, மேழிமேல் கைவைப்பதில்லை என்று சத்தியம் செய்து கொண்டதால், அரசு பணிந்தது என்றார்கள். அதுபோல, கரும்பு விவசாயிகள், தங்களுக்கு கிடைக்கவேண்டிய நிலுவைத்தொகையினை, சர்க்கரை ஆலைகள் தரவில்லையெனில், அடுத்து கரும்பு பயிரிட "முட்டுவலிச்" செலவிற்கு எங்கே போவார்கள். முன்பு போல, "மேழி சத்தியம்" செய்து விட்டால், சர்க்கரை மூலம் நாட்டிற்கு வரும் அன்னியச் செலாவணி குறைந்து விடாதா? அரசு சிந்திக்க வேண்டாமா?   14:42:48 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
26
2016
சம்பவம் மனைவியின் சடலத்தை 10 கி.மீ., சுமந்த கணவன்
அண்ணல் காந்தி அடிகள், நடு நிசியில் ஒரு பெண் அளவற்ற நகைகளை அணிந்து கொண்டு பயமின்றி செல்லும் நாள் தான் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த நாள் என்ற பொருள்பட சொன்னார். தொலைக்காட்சியில் அந்த பாமர ஏழைத் தகப்பன் இறந்த தன் மனைவியின் உடலைத் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு, தனது இளவயது மகள் உடன்வர சென்றதை பார்த்து நம் இதயம் கனக்கவில்லை, தாங்க இயலாமல் சிறிது நேரம் கண்ணீர் வடித்தேன். அண்ணலே, உண்மையில் எங்கள் இந்திய மக்களுக்கு சுதந்திரம் வரவில்லை தான். ஆயிரம் அரசாங்கங்கள் இருந்தென்ன, ஆயிரம் தலைவர்கள் இந்த நாட்டில் இருந்தென்ன. அல்லல் பட்டு ஆற்றாது நம் ஏழை மக்கள் கண்ணீர் வடிக்கும் நிலை ஏற்பட்டு விட்டதே.   14:24:27 IST
Rate this:
0 members
1 members
14 members
Share this Comment

ஆகஸ்ட்
24
2016
அரசியல் கருணாஸ் பாடல் ஜெயலலிதா ரசிப்பு
அந்தக் காலத்தில் மன்னர்கள் சபையில் 'விகடகவிகள்' இருப்பதுபோல, இந்நாளில் நமது சட்டமன்றத்திற்கு இவர்தான் விகடகவி போலும்.   14:02:48 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
22
2016
அரசியல் முன்னுதாரண முதல்வர் சபாநாயகர் பாராட்டு
உங்கள் கை உங்கள் முதுகில் எவ்வளவு தூரம் செல்லுமோ அதுவரை நீட்டி "பேஷ் பேஷ்" என நீங்களே தட்டிக் கொள்ளுங்கள். மக்கள் எள்ளி நகையாடுவது தங்களுக்கு கேட்கவில்லையா? அது கிடக்கட்டும், பூங்கொத்து கொடுக்க அவ்வளவு ஏன் குனிகிறீர்கள்?   14:55:17 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
21
2016
பொது நடிகர் கமலுக்கு செவாலியர் விருது
வாழ்த்துக்கள்.   13:31:22 IST
Rate this:
5 members
0 members
9 members
Share this Comment

ஆகஸ்ட்
21
2016
பொது போலீஸ் மானிய கோரிக்கைஅதிகாரிகளுக்கு உத்தரவு
நிழலோடு தான் (ஆளும் கட்சி மட்டுமே கொண்ட அவை ) இந்த ஆட்சி யுத்தம் செய்து கொண்டுள்ளது. அப்படி இருக்க, காவல்துறை அதிகாரிகள் தயார் நிலையில் இருக்கும்படி சொல்வது வீண் செயலே.   13:29:28 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
20
2016
அரசியல் துணை பொது செயலராக கனிமொழியை நியமிக்க திட்டம்
அதைத் தானே போன வாரம் வாசகர் கடிதத்தில் எழுதினேன்.   10:33:08 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
19
2016
பொது இதே நாளில் அன்று
திரு நாராயணமூர்த்தி அவர்களின் சுய சரிதத்தை படிக்கும் வாய்ப்பு எனக்கு கம்பியூட்டர் தொழில் நுட்பத்துறையில் பணியாற்றும் எனது புதல்வர் மூலம் கிடைத்தது. அவர் வளர்ச்சிக்கு உறுதுணையாகவும், ஊன்றுகோலாகவும் இருந்து பண உதவியும் செய்தவர் அவரது மனைவி என்று படித்த ஞாபகம். பின்னாளில் ஒருவேளை நண்பர்கள் உதவியிருக்கலாம்.   12:25:54 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
19
2016
அரசியல் சஸ்பெண்ட் பட்டியலில் சபைக்கு வராத எம்.எல்.ஏ.,
1991-ஆம் ஆண்டு அரசியல் நிர்பந்தம் காரணமாக திமுக ஆட்சியை கலைக்க அன்றைய குடியரசுத்தலைவர் திரு ஆர்.வெங்கடராமன் அவர்கள் Without applying his mind ஆட்சிக் களைப்பு உத்தரவில் கையெழுத்திட்டார் என காலஞ்சென்ற திரு வி.பி.சிங் போன்றவர்கள் குற்றம் சாட்டினர். அதுபோலத்தான் இந்த சட்டசபை நிகழ்விலும் சட்ட பேரவைத்தலைவர் நடந்து கொண்டிருக்க வேண்டும் எனத்தெரிகிறது. இந்த எண்ணிக்கை குளறுபடியே, சென்னை உயர்நீதி மன்றத்தில் திரு ஸ்டாலின் தாக்கல் செய்துள்ள வழக்கில் முக்கிய விவாதப் பொருளாக எடுத்துக் கொள்ளப்படும் என்றே எண்ணுகிறேன்.   12:16:53 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
19
2016
அரசியல் வழிநடத்த வேண்டியவர் வெளிநடப்பு செய்கிறார்
அம்மா அரசியலில் எல்லாமே வெளி வேசம்தான். தங்கள் சித்தப்பா சட்டமன்ற உறுப்பினரானால், பெரியவரிடம் வாழ்த்துப் பெற தங்கள் தந்தையும் உடன் செல்கிறார். என்ன காரணம்? அதற்கு உங்களால் விளக்கம் தர முடியுமா. அதுபோலத்தான் இதுவும். ஒவ்வொருவர் செய்கைக்கு பின்னாலும், அவர்களுக்கே தெரிந்த காரணங்கள் புதைந்திருக்கும்.   12:09:35 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment