மின்சாரத்தை பயன்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு மக்களுக்கு இல்லாமல் போனதும் அதை விளக்கி சொல்லாத அரசும் தான் இன்று மின்சரதட்டுபட்டிற்கும் விலை உயர்வுக்கும் காரணம். முதலில் அரசு மக்களுக்கு மின்சாரத்தை முறையாக எப்படி பயன் படுத்துவது என்பது தொடர்பாக விழிப்புணர்வை கட்டாயம் கொண்டுவரவேண்டும், பல இடங்களில் குறிப்பாக ஆளில்லா ரயில் நிலைய மின்விசிறிகள், பகல் நேரகளிலும் வீணாக சுடர்விடும் தெரு விளக்குகள், பல வீடுகளிலும் தேவையற்ற நிலையில் இயங்கிகொண்டிருக்கும் மின்சார சாதனங்கள் என்று இன்னும் பல அடுக்கிகொண்டே போகலாம். அனாவசியமாக மின்சாரம் வீணாவதை நாம் எல்லோரும் தினந்தோறும் கண்கூடாக பார்க்கிறோம் இருந்தும் போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தாலும் பொதுத்துறைகளின் மேல் அக்கறை மற்றும் பொறுப்பு என்பதே சிறிதளவும் நான் அனைவருக்கும் இல்லாமல் போனதே மின்சார பற்றாக்குறைக்கு பெரிதும் பங்குவகிக்கிறது. எனவே இனியாவது அரசாங்கம் மினசரத்தை முறையாக பயன்படுத்துவது பற்றி மக்களுக்கு தெளிவுபடுத்த உடனடியாக போர்கால அடிப்படையில் சொல்லாக மட்டுமின்றி செயல்வடிவில் செய்தாகவேண்டும் இல்லை எனில் எவ்வளுவ்தான் மின்சாரம் உற்பத்தி செய்தலும் பற்றாகுறை என்பது தீராத ஒன்றாகவே தொடரும்.... எனவே இனியாவது மக்களும் அரசுடன் ஒத்துழைத்து மின்சார தட்டுபடில்லாத தமிழகம்- முழுமையான தமிழகம்(அதுநாள் வரைக்கும் அரைகுறை தமிழ் நாடே) படைத்திட விளைந்திடுவோம். மனோஜ்.எந்திரவியல் பொறியியல். ஆம்பூர். வேலூர். தமிழ் நாடு.
31-மார்-2012 03:03:02 IST
Dear தினமலர்( நடு நிலை நாளேடு ),
வணக்கம். நகரத்தில் நடந்தவை எனும் தலைப்பை கொண்டு வரும் செய்தியானது அற்புதமானது, ஆனால் சென்னை, கோயம்புதூர் மற்றும் மதுரை ஆகிய நகரங்களோடு மற்ற பகுதிகளில் நடை பெரும் நிகழ்வுகளுகும் வாய்ப்பு கொடுக்கும்பட்சத்தில் இந்த பகுதி மேலும் பலன் பெரும் என்பது இந்த வாசகனின் விண்ணப்பம்.
31-மார்-2012 01:15:54 IST