உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகின்ற அனைத்து வகையான விழிப்புணர்வு தினங்களையும் அவற்றின் முக்கியத்துவத்தையும் பற்றி பள்ளி பாடப்புத்தகங்களில் இடம் பெறச்செய்தால் எதிர்காலத்தில் நல்ல பயனைத்தரும்.
24-மார்-2013 13:15:30 IST
தேர்ச்சி சதவீதத்தை அதிகரிப்பதற்காக சில இடங்களில் பள்ளி நிர்வாகமே காப்பி அடிக்க மாணவர்களை ஊக்குவிக்கின்றனர்.இதற்கு அதிகாரிகளும் துணைபுரிகின்றனர்.சதவீதத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை சற்று நேர்மைக்கும் கொடுக்க சம்பந்தப்பட்ட அனைவரும் முயன்றால் இது போன்ற ஒழுங்கீனங்களை ஒழிக்க முடியும்.
24-மார்-2013 13:07:34 IST
மின்சாரம்,தண்ணீர் கிடைக்குதோ இல்லையோ ஒவ்வொரு தேர்தலுக்கும் உணர்ச்சிவசப்பட்டு ஓட்டு போடுவதற்கு மட்டும் எங்கிருந்தோ ஒரு பிரச்னை கிடைத்துவிடுகிறது.
24-மார்-2013 12:40:51 IST
மாணவர்கள் விடையை காப்பி அடிப்பார்கள்.ஆசிரியர்கள் இங்கே வினாவை காப்பி அடித்திருக்கிறார்கள்.இரண்டுமே தண்டணைக்குரியதுதான்.இதற்கு தேர்வை திரும்ப வைத்து மாணவர்களை தண்டிக்க வேண்டிய அவசியமில்லை.
03-மார்-2013 17:08:08 IST
வாய்தா கேட்டு வழக்கை இழுத்தடிப்பது ஒரு ரகம்.வாதிடும் வக்கீலை மாற்றி மாற்றி நியமித்து இழுத்தடிப்பது இன்னொரு ரகம்.முடிவு ஆண்டவன் கையில்.
03-பிப்-2013 21:18:27 IST
பழமை விஞ்ஞான வளர்ச்சிக்கு வழிவிட்டு வெகு நாட்களாகிவிட்டது.பாரம்பரிய தொழில்கள் ,கலைகள் அழிந்து வருவதால்,பிழைப்புக்கு வேற தொழிலை நாடும் அதே வேளையில் கலையை பக்கத்தொழிலாக செயல்படுத்துவதை தவிர வேறு வழி இல்லை என்றே கூற வேண்டும்.
20-ஜன-2013 18:03:08 IST
மின்னணு சாதனங்களின் வளர்ச்சியும்,பயன்பாடும் வெகு வேகமாக அதிகரித்து வருவதால்,சைபர் குற்றங்களிலிருந்து பாதுகாப்பு குறித்த பாடங்கள் பள்ளி,கல்லூரி பாடத்திட்டங்களில் உடனடியாக இடம் பெறவேண்டியது காலத்தின் கட்டாயம்.
20-ஜன-2013 17:30:28 IST