நக்கீரன் : கருத்துக்கள் ( 2257 )
நக்கீரன்
Advertisement
Advertisement
செப்டம்பர்
18
2018
அரசியல் மோடி சொத்து மதிப்பு இவ்வளவு தான்
ஆஹா....நம்ப முடியவில்லை. இது உண்மை என்றால் மோடிக்கு ஒரு வணக்கம். இப்போது இங்கே இருக்கும் ஒரு கவுன்சிலரின் சொத்து மதிப்புக்களை அது சில நூறு கோடிகளை தொடும். என்னைய்யா பிரதமர் நீங்கள்?   14:54:57 IST
Rate this:
2 members
2 members
37 members
Share this Comment

செப்டம்பர்
18
2018
அரசியல் எச்.ராஜா மீது அவமதிப்பு வழக்கு அக்., 22ல் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு
ராஜா பேசுனது தப்புன்னாலும் உண்மை. ஏண்டா, நீதிபதிகள் எல்லோரும் நியாயவான்கள் போலவும், போலீஸ் எல்லோரும் உத்தமன்கள் போலவும் எதோ ராஜா பேசுனதுனால மாண்பே போச்சு என்று கூப்பாடு போடுவது வேடிக்கையானது. தமிழக போலீசுக்கும் நீதித்துறைக்கு மாண்பு என்ற ஒன்று இருந்தால் தானே போவதற்கு. இன்றைக்கு எத்தனை நீதிபதிகள் உண்மையாயிருக்கிறார்கள்?. லஞ்சம் வாங்காத போலீஸ் ஒரு சிலரே. அதனால் தங்கள் குட்டு வெளிப்பட்டு விட்டதே என்று குதிக்கிறார்கள். தமிழகத்தில் புரையோடிப்போய் இருக்கும் லஞ்ச ஊழல்களை உறைக்கிற மாதிரி சொன்னது பலருக்கும் பிடிக்கவில்லை. இங்கே உண்மையை பேசினாலே தப்பு. அதுவும் உரக்க பேசினால் மிகவும் தப்பு.   11:11:00 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
17
2018
கோர்ட் ராஜிவ் கொலையாளிகள் விடுதலையில் சிக்கல் தமிழக அரசு பரிந்துரையை எதிர்த்து வழக்கு
மறுபடியும் முதல்ல இருந்தா? மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். தமிழர்களின் கோபம் ஒருநாள் வெடிக்க போகிறது. அப்போது எவனும் முன்னால் நிற்க முடியாது.   11:00:36 IST
Rate this:
10 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
16
2018
பொது கண்துடைப்பு!சேலம், கடலூர், கோவை சிறைகளில் போலீஸ் சோதனை
ஒட்டுமொத்த அரசும் செயலிழந்து நிற்கிறது. ஜனநாயகம் கேலிக்கூத்தாகி இருக்கிறது. இப்படி பிரச்சனைகள் வெடிக்கும்போதெல்லாம், அது இப்போதுதான் நடந்தது போலவும், தங்களுக்கு இப்போதுதான் தெரிந்ததுபோலவும் முதல்வர் முதல் அதிகாரிகள் வரை நடிப்பது சூப்பர். வெறுமனே பிரச்சனையை நீர்த்து போகச்செய்வதற்காக சோதனை சென்று நடத்திவிட்டு பிரச்னை ஆறிய பின் மீண்டும் தங்களது சட்டத்திற்கு புறம்பான வேலைகளை தொடர்வார்கள். இதில் சிறைக்கண்காணிப்பாளர் முதல் அமைச்சர் வரை அனைவருக்கும் லஞ்சம். அதனால்தான் எல்லோரும் பதவிக்கு வர துடிக்கிறார்கள். மக்களுக்கு சேவை மட்டும்தான் செய்யமுடியும் என்றால் ஒருபய அரசியலுக்கு வர மாட்டான். மக்கள் தான் பாவம், இன்னும் சட்டமும் நீதியும் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்.   13:12:39 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

செப்டம்பர்
17
2018
பொது மல்லையா வழக்கில் சிக்கும் வங்கி அதிகாரிகள்
இதில் மாட்டும் வாங்கி அதிகாரிகள் அனைவரையும் கிரிமினல் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அவர்களுடைய சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும். செய்வார்களா இந்த அரசியல் திருடர்கள்?   13:03:26 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

செப்டம்பர்
12
2018
பொது சந்தித்தேன் மல்லையா முழு பொய் ஜெட்லி
பண்ணுறதையும் பண்ணிட்டு, முகத்தை அப்பாவி போல் வைத்துக்கொண்டு நடிக்கும் நிதியமைச்சருக்கு ஒரு பெரிய ஆஸ்கர் விருதே தரலாம். பாவம் மோடி இவர்களை எல்லாம் வைத்துக்கொண்டு எப்படித்தான் அரசை நடத்துகிறாரோ என்று தெரியவில்லை.   12:59:16 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
17
2018
அரசியல் மோடிக்கு பிறந்தநாள் தலைவர்கள் வாழ்த்து
இந்திய தாயின் தலைமகன் பிரதமர் மோடி அவர்கள் நீண்ட ஆயுள் பெற்று நாட்டிற்கு சேவையாற்ற இறைவனை வேண்டுகிறேன். வாழ்த்துக்கள் மோடிஜி. வாழ்க வளமுடன்.   12:47:03 IST
Rate this:
4 members
1 members
55 members
Share this Comment

செப்டம்பர்
8
2018
சிறப்பு கட்டுரைகள் அழத்தான் வேண்டியுள்ளது!
இன்றைக்கு வெற்று பெண்ணுரிமை பேசி திரியும் புறம்போக்குகள் இதற்க்கு என்ன சொல்லப்போகிறார்கள் என்று தெரியவில்லை. இன்றைக்கு பெண்களை ஒன்றுமே சொல்ல முடிவதில்லை. சொன்னால், உடனே பெண்ணுரிமை பேச ஆரம்பித்து விடுகிறார்கள். தமிழ் சமூகம் சீரழிந்து கொண்டிருக்கிறது. எப்படி கரை சேரப்போகிறோமோ தெரியவில்லை.   11:00:52 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
15
2018
அரசியல் அழகிரி தனி அமைப்பு? மகன் தயாநிதி விளக்கம்
நல்ல இருக்குடா உங்க விளையாட்டு. ஆனா ஓரமா போய் விளையாடுங்க....போங்க.   10:51:19 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

செப்டம்பர்
14
2018
அரசியல் 18 எம்.எல்.ஏ., வழக்கு ஆட்சிக்கு ஆபத்து?
புலி வருது புலி வருது கதைதான். இன்றைக்கு மிகப்பெரிய சிக்கலே இந்த நிதியரசர்கள் தங்களின் (கேவலமான) நீதியை வழங்க காலக்கெடு எதுவும் இல்லாததுதான். மற்றவர்களை கேள்வி கேட்கும் அவர்களை யாரும் குறிப்பிட்ட காலத்திற்குள் கூட நீதி வழங்க கேட்கமுடியாது. இந்தியாவின் நீதிமன்றங்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டிய நீதிமன்றங்கள் தான்தோன்றித்தனமாக செயல்படுகின்றன என்பதுதான் உண்மை. இவர்களை கேள்வி கேட்க யாரும் இல்லை. அதனால்தான் மக்களின் கடைசி புகலிடமாக நீதிமன்றங்களும் இன்றைக்கு லஞ்ச ஊழல்களால் செல்லரித்து நிதிக்கு நீதி வழங்குகின்றன. இந்த வழக்கு இதற்க்கு ஒரே ஒரு உதாரணம்தான். இப்படியே இன்னும் கொஞ்ச நாள் இழுத்துக்கொண்டு போனால் 5 வருட ஆட்சியே முடிந்து விடும். அப்புறம் யாருக்கு இவர்கள் நீதி வழங்கப்போகிறார்கள்?   10:49:41 IST
Rate this:
0 members
0 members
20 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X