வேதனையான விஷயம் என்னவென்றால் கட்சி மாறும் பெரும்பாலான எம் எல் ஏக்கள் தனி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தலித்துகள். சாந்தி (சேந்தமங்களம் தனி) சுரேஷ் குமார் ( செங்கம் தனி )
30-மே-2013 15:03:30 IST
ஹா ஹா அவருடைய குடும்பத்தினர் மட்டும் ஹிந்தி படித்து தில்லியில் எம் பி ஆகலாம், ஒரு சாதாரண தமிழன் மேலே சென்றுவிடக்கூடாது என்பதில் தெளிவாக உள்ளார்
13-மே-2013 14:45:56 IST
இந்தியன் வங்கி ஏ டி எம் களின் சேவைத்தரம் அந்த அளவுக்கு மட்டமாக இருப்பதால் தான், பொதுமக்கள் கூட இந்தியன் வங்கியில் வாடிக்கையாளர் ஆகவும், பணியில் சேரவும் கூட தயங்குகின்றனர். செங்கத்தில் உள்ள ஒரு உயர் தொழில்நுட்பம் கொண்ட கை ரேகையால் இயங்கும் ஒரு இந்தியன் வங்கி ஏ டி எம் இயந்திரம், கடந்த ஒரு வருடமாக ஏறத்தாழ செயலிழந்து நிற்கின்றது, கடந்த ஒரு மாதமாக பூட்டி வேறு கிடக்கின்றது, இதனை கேட்பவர்கள் யாருமில்லை, இந்தியன் வங்கியில் சம்பள கணக்கு வைத்திருக்கும் என்னைப்போல் பலர், ௫ பண பரிவர்த்தனைகளுக்கு பின்னர், ஸ்டேட் பாங்கு அல்லது கரூர் வைஸ்யா வங்கி போன்ற மாற்று வங்கிகளின் ஏ டி எம் களில் ஒவ்வொருமுறையும் இருபது ரூபாய்களை இழக்கவேண்டியுள்ளது, இதற்கு இந்தியன் வங்கி என்ன பதில் சொல்லப்போகின்றது?
02-அக்-2012 12:47:31 IST
நல்ல ஒரு தகவல், ஆனால் ஜனவரி மாதம் வந்த அரசாணையை இவ்வளவு தாமதமாக மக்களுக்கு வெளியிடுவதன் காரணம் என்ன? அனைத்து மாணவர்களும் கஷ்டப்பட்டு கடன் வாங்கி கல்விக்கட்டணத்தினை கட்டிய பின்னர், இப்போது கட்டிய தொகையை தனியார் கல்லூரிகள் திருப்பி கொடுப்பார்களா? முனைவர்.சிவா...திருவண்ணாமலையிலிருந்து
17-ஏப்-2012 16:13:48 IST