E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
S. MURALIDHARAN : கருத்துக்கள் ( 89 )
S. MURALIDHARAN
Advertisement
Advertisement
டிசம்பர்
19
2014
பொது வாத்ரா-டி.எல்.எப்., டீலிங் இரண்டு பக்கங்கள் மிஸ்சிங் விசாரணைக்கு உத்தரவு
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் நம்ம மாமியார் இருக்காங்கன்னு துணிஞ்சு ஊழல் பண்ணின இந்த ஆளு அன்னிக்கும் அரசு மாப்பிள்ளைதான் மறுபடியும் கூடிய சீக்கிரம் அரசு மாப்பிள்ளைதான் மாமியார் வீட்டுக்குத்தானே போகப்போறார் அப்போ எண்ணினது, ரூபாய் நோட்டு தம்பி இப்ப எண்ணப் போவது, கம்பி   23:18:36 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
17
2014
உலகம் கடைசி பயங்கரவாதியை ஒழிக்கும் வரை ஓய மாட்டோம் நவாஸ் அறைகூவல்
உலக மகா தீவிரவாதியான ஒசாமா பின் லேடன் தங்கியிருந்த இடத்தை அமெரிக்க 'சீல்' வீரர்களுக்குக் காட்டிக்கொடுத்தற்காக, தங்கள் நாட்டு டாக்டர் ஒருவரை சிறையிலடைத்து துன்புறுத்தி வரும் பாக் அரசு, இந்தியாவில் நாச வேலைகளை 20, 30 ஆண்டாக செய்து வரும் தாவூத் இப்ராஹிமை அரசு விருந்தினராகப் பாதுகாத்து வைத்திருக்கும் பாக் அரசு, தாங்கள் அனுப்பிய தீவிரவாதிகள் இந்தியாவில் செய்யும் கொலை வெறித் தாக்குதல்களுக்கு 'புனிதப் போர்' எனப் பெயரிட்டு பெருமிதம் கொள்ளும் பாக் அரசு, அமைதிக்கான நோபெல் பரிசு பெற்ற தங்கள் நாட்டு சிறுமி மலாலா தன் சொந்த நாட்டில் வாழ பாதுகாப்பு கொடுக்க விரும்பாத பாக் அரசு, தீவிரவாதத்துக்குத் தங்கள் இன்னுயிரை பலி கொடுத்த அந்த 135 பச்சிளம் குழந்தைகளின் தியாகத்துக்குப் பின்பாவது தன்னைத் திருத்திக் கொள்ளுமா? 'இந்நாட்டில் இனி ஒரு உயிர் கூட தீவிரவாதத்துக்கு பலியாகாது எந்த பாகிஸ்தானியனும் மற்றெந்த நாட்டிலும் தீவிரவாதத்தில் ஈடுபட பாக் அரசு உதவாது' என்று சபதம் எடுத்துக் கொள்ளுமா?   23:07:24 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

டிசம்பர்
17
2014
பொது மீண்டும் பூதாகரமாகிறது ஆவின் விவகாரம் ஆத்தூரிலும் ஆவின் ஊழல்
மோசடியில் முதல் மாநிலமாகி வருகிறது தமிழ் நாடு. உலக மகா மோசடியாக, ஊழல் வழக்கில் ஜாமீனில் வெளியே வந்திருக்கும் ஒருவரை, 'மக்களின் முதல்வர்' என்று பெயர் சூட்டி மகிழ்ந்து, அதையே கிட்டத்தட்ட ஒரு பதவியாக ஆக்கி விடுவார்கள் போலிருக்கிறது. இந்த மாதிரி ஊழலைக் கொண்டாடும் ஆட்சியில் மக்கள் பிரச்சினைகளைக் கவனித்து ஊழலை ஒழிக்க நடவடிக்கை எடுப்பதெல்லாம் கனவில் கூட நடக்காது. கிரானைட் மகா ஊழலை முறையாக விசாரிக்க சகாயம், ஐ.ஏ.எஸ். அவர்களை நீதிமன்றம் நியமித்தால், அதை தமிழ் நாடு அரசே எதிர்க்கிறது. போதாக்குறைக்கு 2ஜி நாயக, நாயகியர், ஏர்செல் மிரட்டல் மாறனார்கள் தமிழ் நாட்டு ஊழல் வரலாறுக்குப் பெருமை சேர்க்கிறார்கள் இந்த அழகில், தமிழ் நாடு எங்கே உருப்படும் தமிழ் நாட்டை யார் காப்பாற்றப் போகிறார்கள்?   21:56:01 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

டிசம்பர்
17
2014
உலகம் கடைசி பயங்கரவாதியை ஒழிக்கும் வரை ஓய மாட்டோம் நவாஸ் அறைகூவல்
'வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது' என்பது பாகிஸ்தான் விஷயத்தில் நிரூபணம் ஆகியுள்ளது காஷ்மீரைத் தன்வசமாக்கவும், இந்தியாவில் அமைதியைக் குலைக்கவும் பாகிஸ்தான் பாடுபட்ட வளர்த்த பயங்கரவாதம் விஸ்வரூபமெடுத்து, வளர்த்தவர்களையே ஒரு கை பார்க்கிறது. மற்றவரைத் தாக்கத் தீட்டிய கத்தி, தீட்டியவன் கையையே பதம் பார்க்கிறது. பாகிஸ்தான் அரசும், ராணுவமும் தங்கள் இந்திய விரோத எண்ணத்தினால், நாசகார புத்தியால், பெஷாவர் நகரில் நடந்த கொலைவெறித் தாக்குதலில், தங்கள் நாட்டுப் பச்சிளம் பிஞ்சுகளையே, பால் வடியும் பாலகர்களையே நூற்றுக் கணக்கில் தீவிரவாதத்துக்கு பலி கொடுத்துள்ளது. இனியாவது பாகிஸ்தான் 'தன் வினை தன்னைச் சுடும்' என்றுணர்ந்து பயங்கரவாதத்தை அடியோடு நசுக்கி, நல்லெண்ணத்தை வளர்த்து, இந்தியாவுடன் நட்பைத் தொடங்கி வளர்த்தால் தங்கள் நாட்டைக் காப்பாற்றலாம் இல்லாவிட்டால் பயங்கரவாதம் மேலும் பெருகி நாடே சின்னாபின்னமாகும்   21:33:39 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

டிசம்பர்
6
2014
உலகம் பிசினஸ் வகுப்பில் பயணம் செய்வது எனது கனவு கெஜ்ரிவால்
'ஏழைக்கு சோத்துக்கு வழி பண்ணறேன்'னு அரசியலுக்கு வந்தவர், விமானத்தில் முதல் வகுப்பில் தான் பயணம் செய்த விஷயம் பெரிதானவுடன், 'சாதாரண மனிதனும் விமானத்தில் முதல் வகுப்பில் பயணம் செய்ய வேண்டும்' என்று தன் சௌகரியத்துக்காக அரசியல் குறிக்கோளையே மாற்றி விட்டார் இந்த மனுஷன் வெறும் பிதற்றல் சுத்த அபத்தம் ஏமாற்று வேலை   23:11:34 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

டிசம்பர்
4
2014
அரசியல் வீரமங்கையே ! மாதரசியே ! தாயே., சட்டசபையில் ஓ.பி.எஸ்., தேவாரம்
ஒரு பக்கம் மாதரசி என்கிறார் கூடவே திருநங்கை என்றும் சொல்கிறார். அதிகம் பேசினால், இப்படித்தான் அபத்தமாகும் சட்டசபையை கோவிலாக்கி, ஜெயலலிதாவை தெய்வமாக்கி, தன்னை பூசாரியாக்கி, அர்ச்சனை செய்து கொண்டிருக்கிறார் கேலிக்கூத்து   17:52:37 IST
Rate this:
14 members
2 members
157 members
Share this Comment

நவம்பர்
9
2014
கோர்ட் 2ஜி ஊழல் வழக்கில் முடிவு விரைவில் தெரியும்இறுதிகட்ட விசாரணை இன்று துவக்கம்
வழக்கை எப்படி 18 வருஷம் இழுக்கலாம்னு ட்யூஷன் படிக்க, ராசாவும், கனியும் மாறுவேஷத்துல போறாங்களாமே எங்க? தோட்டத்துக்குதான் அம்மா இப்போ பிரீதானே நல்லா சொல்லித்தருவாங்களே   22:32:24 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
9
2014
கோர்ட் 2ஜி ஊழல் வழக்கில் முடிவு விரைவில் தெரியும்இறுதிகட்ட விசாரணை இன்று துவக்கம்
கருணாநிதிக்கு வயது 90. சீக்கிரம் வழக்கை முடித்தால் அவருக்கு முடிவு தெரியும். சாதகமோ, பாதகமோ, வெற்றியோ, தோல்வியோ, இனிப்போ, கசப்போ, சிரிப்போ, அழுகையோ, எதுவானாலும் அவரது சஸ்பென்ஸ் ஒரு முடிவுக்கு வரும்   21:18:01 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

நவம்பர்
10
2014
அரசியல் பிரியங்காவால் மட்டுமே காங்கிரசை காப்பாற்ற முடியும் பரத்வாஜ்
'இந்த 120 கோடி மக்கள் நிறைந்த நாட்டில், காங்கிரசில் தலைமையை ஏற்க ஒரு குடும்பத்தை விட்டால், வேறு ஒருவர் இல்லை' என்ற கருத்து காங்கிரஸ்காரர்களின் மனதை விட்டு என்று அகலுகிறதோ அன்றுதான், காங்கிரஸ் உருப்படும். கட்சியையும், நாட்டையும் அதல பாதாளத்தில் தள்ளிய பின்பும், அந்தக் குடும்பத்தின் மீது காங்கிரஸ் கொண்டிருப்பது நம்பிக்கை அல்ல, கையாலாகாத்தனம். இதுவே சோனியா, ராகுல், பிரியங்காவின் பலம் அவர்களுக்கு வேறெந்த பலமும் இல்லை   19:14:52 IST
Rate this:
2 members
1 members
43 members
Share this Comment

அக்டோபர்
31
2014
சிறப்பு பகுதிகள் உமக்கெதற்கு பத்திரிகையாளர் பென்ஷன்... -ஐ.மா.பா.,வின் திடீர் சோகம்
பல கோடி ஊழல் செய்து சிறை சென்றவர் விடுதலை ஆக மக்கள் பூஜை, ஹோமம், ஆர்ப்பாட்டம் எல்லாம் செய்து, அமைச்சர்கள் அழுது, அவர் பெயிலில் வெளி வந்ததை ஊரே கோலாகலமாகக் கொண்டாடி மகிழும் இன்றைய சூழ்நிலையில், உண்மையான சுதந்திரப் போராட்ட தியாகி ஒருவரைப்பற்றி படிக்கும்போது மெய் சிலிர்க்கிறது கண்ணீர் பொங்குகிறது   23:12:07 IST
Rate this:
0 members
0 members
87 members
Share this Comment