Advertisement
Arvind Bharadwaj : கருத்துக்கள் ( 667 )
Arvind Bharadwaj
Advertisement
Advertisement
மே
22
2015
பொது சென்னை சாலைகளில் கட் அவுட் மயம் கோர்ட் உத்தரவு காற்றில் பறக்க விட்ட அவலம்
இதுமாதிரி கடவுட், பேனர்கள், போஸ்டர், கோஷம், கொடி ஆகியவற்றைக் கொண்டுதான் அந்தம்மாவை ஜெயிலில் தள்ளினர் ரத்தத்தின் ரத்தங்கள் இன்னும் அடங்க மறுப்பது தான் கொடுமை.   11:52:57 IST
Rate this:
88 members
0 members
80 members
Share this Comment

மே
16
2015
அரசியல் முதல்வர் கெஜ்ரிவால் - ஆளுனர் நஜீப் ஜங் இடையே மோதல் எதிர்ப்பை மீறி தற்காலிக தலைமை செயலர் பொறுப்பேற்பு
பாஜக என்பது காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக அமையும் என்ற நம்பிக்கையில்தான் ஓட்டளித்தனர் மக்கள். ஆனால், ஓட்டளித்த மக்கள் முட்டாள்கள் என்று சந்தேகமின்றி நிரூபிக்கத் துடிக்கும் பாஜகவுக்கும் அதன் தலைவர் மோடிக்கு ஜே. ஆளுனர் பதவி என்பது வேண்டாத கட்சிகள் ஆளும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசால் குடைச்சல் கொடுக்கவே உருவாக்கப்பட்டது என்று இனிமேல் யாருமே சந்தேகமே படமாட்டார்கள். ஒருவேளை பாஜக கடைபிடிக்கும் சனாதன தர்மம் என்பது இதுதானோ? பாஜக உடனடியாக தனது போக்கை மாற்றிக் கொள்ளாவிட்டால், காங்கிரஸ் கட்சிக்கும், ராகுல் காந்திக்கும் ஏற்பட்ட கதிதான் அதற்கும் ஏற்படும் என்பது திண்ணம்.   10:12:36 IST
Rate this:
13 members
0 members
27 members
Share this Comment

மே
11
2015
அரசியல் முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டு விட்டனவா? ஜெ., வழக்கு தீர்ப்பால் கருணாநிதி கோபம்
தலைவா. தர்மத்தை நிலைநாட்ட இந்த மாதிரி கோபமெல்லாம் போதாது. உனது பாணியில் அறிக்கைக் கணை தொடுக்க எடு தூவலை, தோடு கணையை. தமிழர்களே எல்லோரும் காதுகளை மூடிக் கொள்ளுங்கள். காரணம், என் தலைவன் அறிக்கை தொடுக்கப் போகிறான்.   10:22:32 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

மே
11
2015
அரசியல் வெற்று அவியலா? வெற்றி அரசியலா? தமிழக எதிர்க்கட்சிகளின் எதிர்காலம் என்ன?
தமிழகத்தில் திமுக & அதிமுக இரண்டைத் தவிர அனைத்துமே ஜீரோ. இதில் யார் யாருடன் சேர்ந்தாலும் மதிப்பு வந்துவிடப் போகிறதா என்ன?   21:47:57 IST
Rate this:
5 members
0 members
6 members
Share this Comment

மே
5
2015
பொது ஆம் ஆத்மியை களங்கப்படுத்த சில மீடியாக்கள் முயற்சி செய்கின்றன சொல்கிறார் கெஜ்ரிவால்
இந்த குமார் விஸ்வாஸ் எப்போது டில்லி தேர்தலில் ஓடியாடி பணிபுரிந்து கட்சியின் வெற்றிக்குப் பாடுபட்டாரோ அப்போதே அவருக்குக் குறிவைக்கப்பட்டு விட்டது. மக்கள் விரோத பாஜக, தேசவிரோத காங்கிரஸ் மற்றும் சமூக விரோத பத்திரிகைகளுக்கு மாற்றம் என்றாலே கை-கால் உதறல் எடுத்துவிடும். இதே காரணத்தால்தான் தமிழகத்தில் விஜயகாந்த் அடிக்கடி இவர்களின் வாயில் வீழ்வது கூட. இந்த லட்சணத்தில் பத்திரிக்கை தர்மம் பற்றி இந்த ஜந்துக்கள் பேசுகின்றன. கண்டிப்பாக இந்தக் கருத்து பிரசுரிக்கப் படமாட்டாது என்று நன்கே அறிந்துள்ளேன். இறந்தாலும் நாட்டுப் பற்றின் காரணமாகவே எழுத வேண்டியுள்ளது. Shame on you media .   21:55:53 IST
Rate this:
21 members
0 members
23 members
Share this Comment

மே
4
2015
எக்ஸ்குளுசிவ் 300 கி.மீ., தூரத்திற்கு மேல் இயக்கப்படும் பஸ்கள் மாற்றம் அரசு விரைவு போக்குவரத்து கழகம் தீவிரம்
நாடும், உலகமும் பெருமளவு மாறிவிட்டது. ஒரு தகர டப்பாவுக்கு மேல் நான்கு சோடா மூடிச் சக்கரங்களைக் கட்டியது போன்ற பேருந்துகளை வைத்து எவ்வளவு நாட்கள்தான் தமிழக அரசு ஒட்டிக் கொண்டிருக்கப் போகிறது. மற்ற மாநில அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கும், தனியாருக்கும் தான் என்றும் சளைத்தவர்கள் இல்லை என்று காட்டியிருக்கவேண்டும் இந்நேரம். பழமை என்பது மிகவும் போஷிக்கத்தக்க ஒன்று என்றாலும், பேருந்துகள் மற்றும் சாலைகளில் புதுமை இருந்தால்தான் மக்களிடம் எடுபடும். குண்டும் குழியுமான சாலைகளில், ஓட்டை உடைசல் வண்டியை ஓட்டினால் யாரும் விரும்ப மாட்டார்கள். சமீபத்தில் பெங்களூரில் இருந்து கோவை செல்ல அரசு விரைவுப் பேருந்தில் ஏறினேன். வண்டிக்குள் ஏறியவுடன் கிழிந்து போன இருக்கைகளும், ஓட்டை உடைசல் ஜன்னல்களுமே வரவேற்றான். நாற்றம் தாங்காமல் இறங்க வேண்டி இருந்தது. வழக்கமான முறையை விட்டுவிட்டு தொழில்நுட்ப வல்லுனர்களை வைத்து நிர்வாகத்தையும், தொழில்நுட்பத்தையும் அணுகினால்தான் விமோசனம். சென்னை-பெங்களூர் சாலை எனக்குத் தெரிந்தவரை சர்வதேசத் தரம் மிக்கது என்று எவரும் கூறுவார். அமேரிக்கா போன்ற நாடுகளில் இருக்கும் Expressway வைக் காட்டிலும் மிகச் சிறப்பானது. ஆனால், அரசுக் கழகங்கள் ஓட்டை உடைசல் வண்டிகளை இயக்கி அந்தச் சாலையின் மதிப்பைக் குறைத்து, அவமானப் படுத்துகிறது.   14:06:20 IST
Rate this:
1 members
0 members
32 members
Share this Comment

மே
1
2015
சம்பவம் விமான நிலையத்தில் 42வது முறையாக விபத்து
எடிட்டர் ஐயா. சென்னை ஏர்போர்டுல எப்ப பொன்விழா கொண்டாட்டம் ஏற்பாடு பண்ணியிருக்காங்கன்னு ஒரு நியூஸ் வெளியிடுங்களேன். இந்த ஏர்போர்ட் கட்டுன கான்ட்ராக்டருக்கு கையில காப்பு மாட்டுவாங்களா (அட நாமள்லாம் வீடு கட்டுனா கிரகப் பிரவேசம் அன்னிக்கு மேஸ்திரிக்கு தங்க மோதிரம் செஞ்சு போடுவோம்ல. அதே மாதிரி இது ரூ.400 கோடி திட்டம் இல்லியா அதுனா தங்கக்காப்பு கட்டாயம் போடனும்னு சொல்ல வந்தேன். யாரும் தப்பா நெனைச்சுக்கப் படாது)?   10:13:44 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
1
2015
பொது இந்தியாவுக்கும் வருது நிலநடுக்க ஆபத்துஎப்போ, எப்படி வரும் எனத் தெரியாது
மேலை நாடுகள் பெரும்பாலானவைகளும் இதுபோன்ற இயற்கைச் சீரழிவுகளில் இருந்து மக்களைக் காத்துக் கொள்வதற்காகத்தான் கான்கிரீட் பயன்பாட்டை விடுத்து மரங்களில் வீடுகளைக் கட்டுகின்றனர். மேலும் மரங்களில் வீட்டைக் கட்டுவதால் வெயில் காலங்களில் வெப்பத்தின் தாக்கம் வீட்டினுள் குறைந்து காணப்படும். இந்தியாவில் சிமெண்ட் நிருவனங்களின் முதலாளிகளுக்குத் தங்கள் வியாபாரம் படுத்துவிடும் என்ற அச்சத்தின் காரணமாக இவையெல்லாம் கனவில் மட்டுமே சாத்தியம்.   10:08:59 IST
Rate this:
2 members
0 members
14 members
Share this Comment

ஏப்ரல்
30
2015
பொது ரேஷன் கடைகளில் உணவு பொருட்கள் இல்லை அரசு கண்டுகொள்ளாததால் பொதுமக்கள் கடும் அதிருப்தி
அதிமுக ஆட்சியில் காசு, பணம், பொருட்கள் எல்லாமே கழகத்தின் ரத்தத்தின் ரத்தங்களுக்கு மட்டுமே சொந்தம். தனக்கு விசுவாசமாக இருந்து அடிமை சாசனம் எழுதித் தந்துள்ள உடன்பிறப்புகளுக்கு அம்மையார் இப்படித்தான் உதவி செய்வார். இன்னொரு உதாரணம். ஒரு ஆண்டுக்கு முன்னர் சென்னை சென்ட்ரலில் நடந்த குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட சுவாதி என்ற ஆந்திரப் பெண்ணின் பெற்றோருக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு அறிவித்த தமிழக அரசு இன்னும் ஒரு பைசா கூடத் தரவில்லை என்று அந்த பெற்றோர் கூறியுள்ளதே அதிமுக அரசின் யோக்கியதைக்குச் சிறந்த அத்த்ஹாட்சி. அனேகமாக இந்த ஒரு லட்ச ரூபாய் ஏதாவது கழகக் கண்மணியின் வீட்டில் டிவிஎஸ் அல்லது பஜாஜ பைக் வடிவில் நின்று கொண்டிருக்குமோ என்னவோ?   09:44:39 IST
Rate this:
0 members
0 members
88 members
Share this Comment

மே
1
2015
உலகம் மத சகிப்பு தன்மை அமெரி்க்கா குற்றச்சாட்டு மத்திய அரசு மறுப்பு
அமெரிக்காவின் பழக்கமே அடுத்த நாடுகளின் விவகாரங்களில் தானே மூக்கை நுழைத்து கருத்து தெரிவித்து அடுத்தவர்களை வெறுப்பேற்றுவது.இதில் கிடைப்பது ஒரு அல்பமான சந்தோஷம். ஈரானுடன் தனக்குள்ள அணு ஆயுத தாவாவைக் காரணமாக வைத்து மற்ற நாடுகளை ஈரானுடன் வியாபாரம் செய்ய விடாமல் தடுப்பதும் இதே உத்தி. ஆனால், வாரந்தோறும் ஏதாவது ஒரு அமெரிக்க நகரங்களில் கறுப்பின மக்கள் காக்கை, குருவியைப் போன்று சுட்டுக் கொல்லப்படுவதைப் பற்றி மட்டும் வாயே திறக்காது. நல்லா நடத்தராங்கடா அரசாங்கத்தை.   09:38:26 IST
Rate this:
6 members
1 members
51 members
Share this Comment