Advertisement
Snake Babu : கருத்துக்கள் ( 447 )
Snake Babu
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
28
2015
உலகம் நீச்சல் உடையில் விநாயகர் படம் இந்துக்கள் கடும் எதிர்ப்பு
அடுத்து ஆடி மாதத்தில் பச்சை அம்மன் தேர் ஊர்வலம், வழியில் இருக்கும் மரம் செடி கொடிகளை அகற்றி வழி விடுங்கள் என்று அறிவிப்பு தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. அதை தொடர்ந்து சிலர் வந்து மரத்தை வெட்டி சென்றார்கள். உண்மையில் பச்சை அம்மன் என்பது பச்சை இயற்கையை குறிக்கும்.அதை வணங்க வேண்டும் என்று தான் பச்சை அம்மன் என்று வழிபட ஆரம்பித்தார்கள். கடைசியில் வளர்ச்சி மரத்தை வெட்டும் நிலைக்கு தள்ளபட்டிருகிறது. உள் அர்த்தம் தெரிந்திருந்தால் மரத்தை அதிகமாக வளர்க வேண்டும் என்ற எண்ணம் வந்திருக்கும். மரத்தை வெட்டி இருக்க மாட்டார்கள். சிவா வாக்கியர் பாடல் தான் நினைவுக்கு வருகிறது "நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புஸ்பம் சாற்றியே சுற்றிவந்து முணுமுணுவென்று சொல்லும் மந்திரம் ஏதட. நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையிலே சுட்டு சட்டு சட்டுவம் கறிசுவை அறியுமோ" நன்றி வாழ்க வளமுடன்.   16:12:28 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

ஆகஸ்ட்
28
2015
உலகம் நீச்சல் உடையில் விநாயகர் படம் இந்துக்கள் கடும் எதிர்ப்பு
ஒரு சிறு வேண்டுகோள். எதிலும் உள் அர்த்தத்தை பார்க்காமல் வெளி தோற்றத்தில் பார்த்து அதிலேயே லயித்து நின்று விடுகிறோம். அதுவும் மதம் மற்றும் அதனை சார்ந்து எனும் போது ஒரே அடியாக கொந்தளித்து விடுகிறோம்.ஒரு ஊருக்கு செல்வதாக எடுத்துக்கொள்வோம்.வரைபடம் பார்த்து வழி தேடி செல்வோம்.அங்காங்கு வழிகாட்டி இருக்கும்.அது போவதற்கு வழியை காட்டும்.நம்முடைய வேலை அந்த வழிகாட்டியை பார்த்து வழிகளை தெரிந்துகொண்டு சேர வேண்டிய இடத்திற்கு போய் சேர வேண்டும். ஆனால் நடப்பதோ வழிகாட்டிக்கு மாலை போட்டு வழிபாட்டு கொண்டிருக்கிறோம். சிலைகள். இது போல வழியை காட்ட வந்தது. விநாயகர் தத்துவம் மிகவும் உன்னதமானது. உடம்போடு ஒட்டி இருந்த தலை தந்தையால் துண்டிக்கப்பட்டது. அது ஆணவத்தை குறிக்கும். ஆணவத்தை அழிக்க வேண்டும். ஆகையால் அதே தலையை வைக்காமல் வேறொரு தலையை வைத்தார்கள். கண் மிக சிறிதாக இருக்கும். பார்வை நுண்ணியமாக இருக்கும் காது பெரியது. கேட்பது அதிகமாக இருக்க வேண்டும். வயிறு மிக பெரியது. அது எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளும் அதை ஜீரணித்துவிடும். நின்ற கோலத்தில் பார்த்தால் ஒரு கால் பூமியில் படும் மற்றொரு கால் மேல் இருக்கும். ஒரு கால் உலக விசயங்கள் நாட்டத்தில் இருந்து மற்றொரு கால் மேலான விசயத்திற்கு நாட்டம் வேண்டும் என்று. எவ்வளவு பெரிய உருவம் ஒரு எலியின் மேல் நிற்கும்.எலி ஒவ்வொன்றையும் கொந்தி எடுக்கும். அது அஞ்ஞானத்தை குறிக்கும். இப்படி ஒரு தத்துவம் என்பதால் எல்லா செயலுக்கு விநாயகரை முதலாக வைத்து பூஜிக்க சொன்னார்கள். இவ்வளவையும் விட்டுட்டு வெறும் படத்தை வைத்துக்கொண்டு அகங்காரத்தை அழிப்பதை குறிக்கும் ஒன்றை கொண்டு அகங்காரமாக எவ்வளவு கோசங்கள்.இதன் உள் அர்த்தத்தை புரிந்து கொண்டால் இது போன்ற ஒரு புகார் வந்தே இருக்காது, மேலும் அடுத்த படிக்கு சென்றிருப்போம், ஆனால் நடப்பது என்னவோ வெறும் சண்டை தான். அதுவும் படத்தில் இருப்பது ஒரு யானை.நாம் மதத்தை போற்றுகிறோம் என்று கூறி கொண்டு தாழ்த்தி கொண்டிருக்கிறோம். நன்றி வாழ்க வளமுடன்.   14:11:09 IST
Rate this:
128 members
1 members
35 members
Share this Comment

ஆகஸ்ட்
28
2015
சம்பவம் குடிநீர் டேங்கர் வாங்கியதில் ரூ. 400 கோடி ஊழல் டில்லி மாஜி முதல்வர் மீது எப்.ஐ.ஆர்.
டெல்லி அரசு மற்றும் கேஜரிவாளுக்கு பாராட்டுக்கள்.......... கண்டிப்பாக அரசியல்வாதிகள் தண்டிக்க பட மாட்டார்கள். அவர்கள் தண்டனைக்கு அப்பாற்பட்டவர்களாக எழுதபடாத சட்டம் உள்ளது.மக்கள் மன்றத்தில் தண்டிக்க படுவார்கள். அதிலும் ஒரு குளறுபடி இருக்கிறது. தற்போது இருப்பவர்கள் முன்னே இருந்தவர் தப்பு செய்ததால் வந்தவர்கள். அதேபோல இப்போது இருப்பவர்கள் தவறு செய்தால் முன்னாள் இருப்பவர்கள் வருவதற்கு சந்தர்பம் இருக்கிறது. அதை நினைக்கும் போது தான் வருத்தம்.நீதியின் பரிபாலனம் சொல்லிக்கொள்ளும் படி இல்லை. பாப்போம். இது எப்படி போகிறது என்று. நன்றி வாழ்க வளமுடன்.   13:54:01 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

ஆகஸ்ட்
27
2015
அரசியல் அதிருப்தி அடைந்த அமித் ஷா!
முதல்வர் இரங்கசாமி அவர்களே பா ஜ கவிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவ்வளவு தான் சொல்ல முடியும்.... நன்றி வாழ்க வளமுடன்.   13:26:46 IST
Rate this:
9 members
0 members
15 members
Share this Comment

ஆகஸ்ட்
28
2015
பொது நீதிபதி குமாரசாமி மீது சொத்து குவிப்பு புகார்
சொத்து குவிப்பு, சொத்து குவிப்பு, ஏம்பா பணம் அளவுக்கு மீறி இருந்தா ஏதாவது நல்ல காரியம் பண்ணுங்கலப்பா, அளவுக்கு அதிகமாக வைத்துக்கொண்டு என்ன செய்ய போகிறீர்கள். எப்படியோ ஒரு நீதிபதி இந்த மாதிரி ஒரு குற்றச்சாட்டு ஏதேனும் வருத்தபடுவீர்களா??????? எங்களுக்கு வருத்தமாக இருக்கிறது. மற்றபடி sulochana kannan - sydney,ஆஸ்திரேலியா சொன்ன மாதிரி கம்முனு வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்க வேண்டியது தான். நன்றி வாழ்க வளமுடன்.   13:17:00 IST
Rate this:
1 members
0 members
155 members
Share this Comment

ஆகஸ்ட்
27
2015
பொது சீறிப்பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி.,டி-6 ராக்கெட்
வாழ்த்துக்கள். நன்றி வாழ்க வளமுடன் .............   18:58:14 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
27
2015
பொது முஸ்லீம் ராணுவ வீரருக்கு இந்து மருத்துவமனையில் பொருத்தப்பட்ட கிறிஸ்துவரின் கை
வாழ்த்துக்கள், இது தான் இந்தியா,............. ஒரு முறை யோகா வகுப்பில் ஒரு கலந்துரையாடல்.......... ஒருவர் கேட்டார். எல்லா மதமும் ஒரு கோட்பாட்டை வைத்துக்கொண்டு ஏன் சண்டை இட்டு கொண்டுள்ளனர் என்று. என்னுடைய முறை வரும் போது நான் கூறியது முதலில் கடவுள் அண்டத்தை படைத்தார், புல் பூண்டு பூச்சி என படைத்துக்கொண்டு மனிதனையும் படைத்தார். ஒரு பூரணத்துவமானது, முழுமையானது மனிதனை படைத்தது. அதன் படைப்பில் எந்த பேதமும் இல்லை. அதாது அதனுடைய வேலையை செய்துக்கொண்டிருந்தன. எந்த பிரச்னையும் இல்லை. வெகு நாள் கழித்து முழுமை அடையாத மனித இனம் கடவுளை படைக்க ஆரம்பித்தது. இதுவே முழுமையடையாதது அது முழுமையான ஒன்றை எப்படி படைக்க முடியும் அதனால் தான் இந்த சண்டை பிரச்சனைகள் என்று............. உண்மையில் பார்க்க போனால் முழுமை அடைவதற்காகவே இந்த கருத்துக்கள் படைக்க பட்டன. நாளடைவில் தனி மனித ஆதிக்கம், தனி சமுக அதிக்கம் அதிகரித்த போது அதிகாரத்திற்காகவும், ஆதயாதிர்காகவும் உண்மைகளை மறைத்து தன்னுடைய கருத்துகளை வழிமுறைகளாக படைத்ததனால் தற்போது நிலவும் பிரச்னை, சண்டைகள் எல்லாம். இவ்வளவு பிரச்சனையிலும் மதத்தை தாண்டி மனிதம் வளர்ந்து வரவதற்கு இதுவே சிறந்த உதாரணம். நன்றி வாழ்க வளமுடன்.   18:09:31 IST
Rate this:
0 members
0 members
21 members
Share this Comment

ஆகஸ்ட்
24
2015
பொது மாணவர்கள் சாப்பாட்டில் கை வைக்கிறது மத்திய அரசு
//மாணவர்கள் சாப்பாட்டில் கை வைக்கிறது மத்திய அரசு// அய்யா தயவு செய்து இதில் கை வைக்காதீர்கள். எல்லாரும் ஏழையின் மடியிலேயே கை வைக்கிறீர்களே..........பாவம் அய்யா குழந்தைகள். ஊழல் இருப்பது உண்மை,அதை களைய பாருங்கள். அதை விடுத்து இப்படி உணவில் கை வைக்காதீர்கள். இந்த திட்டத்தால் உண்மையில் நிறைய பிள்ளைகள் பயனடைகிறார்கள்.இது புண்ணிய செயல்.தயவு செய்து இதில் கை வைக்காதீர்கள்.நன்றி வாழ்க வளமுடன்.   14:44:27 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

ஆகஸ்ட்
24
2015
பொது தடையால் பிழைப்பு போச்சு ரிக்சா இழுக்கும் மேகி தொழிலாளர்கள்
என்னங்க J J இப்படி சொல்லிடிங்க //எது எப்படியோ எல்லாம் விதிப்படி தான் நடக்கும்... // நூடுலேஸ் வித்தவங்க விசத்தை கலந்துடாங்கனு தடை செஞ்சிட்டாங்க............அவங்களுக்கு நல்லா சொன்னிங்க........ கஞ்சாவ வேற உதாரணமா சொன்னிங்க........... விசத்தையையே வியாபாரமாக செய்பவர்களுக்கு - .டாஸ்மாக்க்குனும் போது பொசுக்குனு இப்படி சொல்லிடிங்களே........... நாங்களும் கொஞ்சம் கொஞ்சமாவது குறைங்கனுதான் கெஞ்சிகிட்டு இருக்கோம்.......... ஒரு உதாரணத்திற்கு பாப்போம் தொழிலாளர்கள் ஒரு லட்சம் பேருன்னு வச்சுப்போம், சும்மா வச்சுகங்க......... டாஸ்மாக் பயனாளினு பார்த்தா பல கோடிய நெருங்கும் இல்லையா........... அதுவும் இல்லாம டாஸ்மாக்ல லாபம்னு பார்க்கும் போது கடைமட்ட கூலி தொழிலாளி எண்ணிக்கை பார்த்தா பயனாளியோட எண்ணிக்கைக்கு சதா விகித பக்கமே வரமுடியாது. இதே ஆட்சி அதி மு க பதில் தி மு க இருக்கிறது என்று நினைத்து பார்த்து இப்படி நடக்கும் போது இதே கருத்தை போட்டிருபீர்களா? ஆம் என்றால் நான் உங்களை பற்றி நினைத்தது தவறு. மன்னிக்கவும்................. அய்யா மதுவின் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது தயவு செய்து சாக்கு போக்கு சொல்லாமல் எண்ணிக்கையை குறையுங்கள், நேரத்தை குறையுங்கள். நம் மக்கள் மகவும் தாழ்ந்த நிலைக்கு செல்கிறார்கள். அதுகாகவேனும் மது கொள்கையில் மாற்றம் வேண்டும். நன்றி வாழ்க வளமுடன்.   14:21:20 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஆகஸ்ட்
20
2015
அரசியல் தி.மு.க.,வில் மீண்டும் அழகிரி? ஸ்டாலினை சமரசப்படுத்த தீவிரம்
பின்ன எல்லாரும் evks - JJ வை மட்டுமே பேசிக்கொண்டு இருந்தால் எங்கள பத்தி யாரு பேசுறது. அதான் இந்த நியூஸ். நன்றி வாழ்க வளமுடன்.   14:26:04 IST
Rate this:
21 members
0 members
19 members
Share this Comment