அம்மா, தயவுசெய்து இனி, மிக்சி, கிரைண்டர், டி, வி போன்ற இலவசப் பொருட்களை கொடுக்காமல் இது போல குறைந்த விலையில் உணவுப் பண்டங்கள் கிடைப்பதற்கும், பொழுது போக்கிற்காக ஆங்காங்கே குறைந்த விலையில் அரங்கங்களும், துணிகளை குறைந்த விலையில் சலவை செய்ய இடங்களும் அமைத்துத் தர வேண்டுகின்றோம். அதுபோல ஓரிடத்திலிருந்து மற்றோரிடம் செல்ல குறைந்த விலையில் வாகன வசதிகளையும் செய்து தரும்படி கேட்டுக் கொள்கிறோம். வேறு என்ன வேண்டும் எங்களுக்கு.. குறையொன்றுமில்லை உங்கள் ஆட்சியில்.
23-ஏப்-2013 13:49:23 IST
காங்கிரஸின் கைகூலிகள் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் கர்நாடக முன்னாள் முதல்வர் எடியுரப்ப. காங்கிரஸ் ஆங்கிலேயர் கையாளும் பிரித்தாளும் சூழ்ச்சியை செய்வதில் வல்லவர்கள். நாட்டை முன்னேற விடாமல் கொள்ளை அடிக்கும் காங்கிரஸ் மண்ணை கவ்வுவது நிச்சயம். இந்திய / தமிழக மக்களே, சிந்தியுங்கள், இந்திய வலிமையோடு முன்னேற "மோடி" அவசியம் இந்தியாவின் அடுத்த பிரதமராக வேண்டும். நல்ல தலைமை பண்புள்ளவர், மக்கள் தொண்டர், முன்னேற்றத்தின் முன்னணி அவர். நீங்கள் ஜாதி, மத, இனம் என்ற எல்லாவற்றையும் துறந்து, "திரு. நரேந்திர மோடிக்கு" வாக்களியுங்கள். வளர்ந்த இந்தியாவில் நீங்கள் வாழப்போவது உறுதி. உங்களை ஏமாற்றும் பழைய போலி அரசியல்வாதிகளை விரட்டி அடியுங்கள்.
16-ஏப்-2013 17:04:57 IST
இதுக்கெல்லாம் காரணம் அந்த சினிமா காரர்கள் தான். "தனுஷ்", "சிம்பு" படம் நடித்து கோடீஸ்வரனாக இந்த சமூகத்தை கெடுக்கும் பிழைப்பை செய்தார். அதுபோல இன்னும் பலரும் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த படங்களை திரை அரங்குகளிலும், சிடிக்களிலும், அதற்குப்பின்னர் பலமுறை சின்னத் திரையிலும் ஒளிபரப்பி கலைசேவை செய்து மக்களை ஏமாற்றுகிறார்கள். தகுந்த சட்டம் பிறப்பித்து இதுபோல படங்கள் வருவதற்கு தடை விதிக்க வேண்டும். ஏற்கனவே வந்த படங்களை கைப்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது மக்கள் மனம் வைக்க வேண்டும். இதுபோன்ற படங்களுக்கு யாரும் ஆதரவு தரக்கூடாது. பொழுதுபோக்கு என்பதற்காக எதையும் பார்கவோ, கேட்கவோ செய்யக்கூடாது. நம்முடைய ஆதரவினால் தான் இவர்கள் கோடீசுவரன் ஆகிறார்கள் என்பதை மறக்க கூடாது. இவர்கள் திருமணம் செய்வது இன்னொரு கோடீசுவரன் வீட்டுப் பெண்தான் என்பதை நினைவில் நிறுத்த வேண்டும்.
19-மார்-2013 00:36:38 IST
அன்புள்ள சகோதர சகோதரிகளே, உங்கள் அனைவரையும் இரு கரம் குவித்து வணங்கி வேண்டிகொள்வது என்னவென்றால் காங்கிரஸ் ஆட்சியில் இந்த நாடு படாத பாடு பட்டு விட்டது. பெட்ரோல், டீஸல் விலை உயர்வு, ஊழல என நம்மை சுரண்டி எடுத்து விட்டார்கள். தயவு செய்து உங்கள் உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் தெரிவித்து திரு. நரேந்திர மோடி பிரதமர் ஆவதற்கு நாம் வாக்களிக்க வேண்டும். நாமும், நம்முடைய எதிர்கால சந்ததியினரும் பாதுகாப்புடனும், உயர்வடையவும் இந்த செயல் மிகத் தேவையானது. வளமான பாரதம், பாதுகாப்பான பாரதம், நிஜமான தலைவர் தேவை அது திரு. மோடி அவர்களால் தான் முடியும்.
02-மார்-2013 14:55:26 IST
கலைஞர் வழக்கம் போல கடிதம் எழுதி கண்துடைப்பு நாடகம் நடத்தி தனது குடும்ப உறுப்பினர்களுக்கு மந்திரி பதவியை தக்க வைத்துக் கொள்வார். காங்கிரஸ் தலைவர்கள் 'பண வீக்கம்' வருத்தமளிப்பதாகக் கூறிக்கொண்டு வெளிநாடு சென்று விடுவார்கள். இங்கே இருக்கும் இந்திய மக்கள் வழக்கம் போல சீரியல் பார்த்துகொண்டு, இலவசங்களில் வாழ்க்கை நடத்துவார்கள். மொத்தத்தில், கூடிய விரைவில், ரேஷன் கடைகளுக்கு பதில், இலவச சிற்றுண்டி சாலை தொடங்கி தெருவுக்கு தெரு உள்ள மக்கள் வாழ வேண்டிய நிலைக்கு இந்த காங்கிரஸ், தி மு க கூட்டு மத்திய அரசு கொண்டுவந்து விடும். இனி வீட்டுக்கு வீடு மாட்டு வண்டி, குதிரை வண்டி, கழுதை வண்டி, ஒட்டக வண்டியென வைத்துக்க் கொள்ள வேண்டும். என்ன ரெடியாயிட்டீங்களா?
02-மார்-2013 00:00:55 IST
விலைவாசி மாத்திரம் நாளுக்கு நாள் விஷம் போல ஏறிக்கொண்டிருக்கிறது. இன்னமும் மூன்று லட்சம் விலக்கு என்பது ஏமாற்றுத்தனம். குறைந்தபட்சம் ஐந்து லட்சம் வரை வருமானவரி விலக்கு உடனடியாக அளிக்கப் பட வேண்டும். மேலும் ஆண்டுக்கு ஒருமுறை இதிலுருந்து விலைவாசி உயர்வுக்கேற்ப அளவீட்டை அதிகப்படுத்த வேண்டும். இப்போது நீங்கள் கேட்டுள்ள மூன்று லட்சம் என்பதை நிதி அமைச்சர் தேர்தலை முன்னிட்டு இரண்டு லட்சத்து ஐம்பதாய்ரம் என அறிவிப்பார். இது நிச்சயம். ஆனால் இது போதாது என்பது எல்லோருக்கும் தெரியும். இப்படி அறிவித்துவிட்டு சேவை வரியை எல்லாவற்றிகும் அறிவித்து மாத சம்பளக்காரர்களின் வயிற்றிலடிப்பார். ஏழைகள் மேலும் ஏழைகளாக, பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக மாறும் இந்த சித்தாந்தை யார் வந்துதான் மாற்றுவரோ? கடவுளே எங்களை காப்பாற்றும்.
14-பிப்-2013 00:46:48 IST
நல்லோர்களே
எல்லோரும் ஒரு விஷயத்தை மறந்துட்டாங்க. பெட்ரோல் / டீசல் நாம் அயல் நாட்டிலிருந்து தான் இறக்குமதி செய்றோம். அதற்குப் பதில் எல்லா பேருந்துகளையும் "சோலார்" "சூரிய ஒளி" மற்றும் டீசல் இரண்டின் மூலமும் இயங்குவதுபோல மாற்றினால், எரிபொருள் தேவை கணிசமாக குறையும். அரசுக்கும் நல்ல லாபம் கிடைக்கும், சுற்றுப்புறமும் பாதுகாக்கப்படும். எரிபொருளுக்காக யாரையும் கையேந்த வேண்டிய நிலை நமக்கு ஏற்படாது. எதிர்காலம் பிரகாசமாகும். சம்பத்தப்பட்டவர்கள் சிந்தித்து உடனடியாக நல்ல செயல் பாட்டினை அமல் படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நன்றி
28-ஜன-2013 17:50:33 IST
பாசத் தலைவனுக்கு "மானாட மயிலாட" பாராட்டு விழா எடுக்கலாம், காரணம் கின்னஸ் ரெக்கார்டையே மிஞ்சி கடிதம் எழுதிட்டார். அடுத்து "பவர் ஸ்டாரை" வெச்சி ஒரு படமும் எடுப்பார், அதற்கு முழு கதை வசனம், டைரக்ஷன், கவிதை, பாடல் என எல்லாம் அவரே. படம் இந்திய தொலைகாட்சிகளில் முதல் முறையாக ஒளிபரப்பப்பட்டு அதற்கும் ஒரு பாராட்டு விழா எடுக்கலாம். மற்ற எந்த மக்கள் பிரச்சனையாக இருந்தாலும் தைரியமாக கடிதம் எழுதும் ஒப்பற்ற தலைவனுக்கு பாராட்டு விழா எடுங்களேன். உங்களில் யாருக்காவது தேவை என்றாலும் உடனே தொடர்பு கொண்டால், அதற்கும் கடிதம் எழுதுவார். இந்திய தபால் அலுவலகமே அவரால் தான் இயங்குகிறது.
21-ஜன-2013 12:02:00 IST
தலைவரே, கடிதம் எழுதுங்கள். தமிழனுக்கு காதில் பூ சுற்றுங்கள் (டன் டனா டன்). மத்தியிலே மந்திரிகளாக யாரோதான் இருக்கிறார்கள், அவர்களுக்கும் மத்திய ஆட்சிக்கும் சம்பந்தமில்லை. தி. மு. க எம்பிக்கள் அமெரிக்க செனட் சபைக்குதான் தேர்ந்தெடுக்கப் படிருக்கிறார்களே ஒழிய இந்தியாவில் இல்லை. அதுபோல மந்திரிகளும் அண்ணன் ஒபமா அமைச்சரவையில் தான் அமைச்சர்களாக இருக்கிறார்கள். நாங்க நம்பிட்டோம். தமிழனுக்கு, நியாபக மறதி.
12-ஜன-2013 02:21:53 IST
அடுத்த முதல்வர் தளபதி ஸ்டாலின் துணை முதல்வராக விஜயகாந்த், மந்திரிகள் சபையில் பொதுப்பணி துறை அமைச்சர் பதவி சுதீஷ், நிதி அமைச்சர் பிரேமலதா விஜயகாந்த். மின்சாரத் துறை அஞ்சாநெஞ்சன் அழகிரி, சுகாதரத் துறை கனிமொழி, மக்கள் தொடர்பு துறை உதயநிதி, சுற்றுலாத் துறை துறை தயாநிதி, எப்படி இக்கு நம்ம கலைஞர் கணக்கு.
07-ஜன-2013 11:32:41 IST