Advertisement
Aboobacker Siddeeq : கருத்துக்கள் ( 915 )
Aboobacker Siddeeq
Advertisement
Advertisement
ஏப்ரல்
16
2014
அரசியல் தி.மு.க., திட்டத்துக்கு அ.தி.மு.க., சொந்தம் பள்ளிபாளையத்தில் ஸ்டாலின் ஆவேசம்
அரியணையில் இருக்கும்போது கட்சி கொண்டுவரும் எந்த திட்டமும் மக்கள் நல திட்டமே.. இதில் உரிமை கொண்டாட என்ன வேண்டி கிடக்கிறது.? கட்சி நிதியில் இருந்து மக்களுக்கு தொண்டுகளை செய்துகொண்டு வேண்டுமானால் உரிமை கொண்டாடிக்கொள்ளுங்கள்..   06:26:34 IST
Rate this:
8 members
0 members
21 members
Share this Comment

ஏப்ரல்
16
2014
அரசியல் கருணாநிதிக்கு ஜெயலலிதா சவால் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா?பா.ஜ., மீது மீண்டும் விமர்சனம்
தமிழக சட்டமன்றம் கடந்த மூன்று ஆண்டுகளாக முதல்வரின் துதி பாடும் ஒரு கவி அரங்கமாகவே காட்சியளிக்கிறது. அதைவிடுத்து ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளோ மற்றகட்சியினரின் புகாரோ சரிவர கவனிக்கப்படாமல் இருந்து வருகிறது. மன்றத்திற்கு எதிர்கட்சியனரை மக்கள் தேர்ந்தெடுப்பதே ஆளும் கட்சியினரின் குறை நிறைகளை சொல்லவும் அதன் மீது பதில் பெறவும் தான். அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் சம வாய்ப்பு சபையில் வழங்காத வரை இம்மாதிரியான குறைகள் எழத்தான் செய்யும். இனியும் முதல்வர் அவர்கள் அனைத்து தரப்பினரது வாதங்களையும் செவிமடுத்து நல்லாட்சி தருவார் என எதிர்ப்பார்ப்போம்.   06:12:56 IST
Rate this:
8 members
0 members
24 members
Share this Comment

ஏப்ரல்
15
2014
அரசியல் அ.தி.மு.க., ஆட்சிக்கு நான் தான் எமன் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் ஆத்திரம்
அ. தி.மு.க கட்சிக்கு வேண்டுமானால் கேப்டன் எமனாக இருக்கலாம்... ஆனால் கேப்டனுக்கு எமன் டாஸ்மார்க் தான்....   18:20:36 IST
Rate this:
2 members
0 members
4 members
Share this Comment

ஏப்ரல்
15
2014
அரசியல் பா.ஜ.,வை ஜெயலலிதா விமர்சிப்பதால் தி.மு.க., உற்சாகம் சிதறும் ஓட்டுகளால் கட்சிக்கு லாபம் என கணக்கு
தனக்கு ஒரு கண் போனால் பரவாயில்லை... எதிரிக்கு இரண்டு கண்ணும் போகவேண்டும் என நினைக்கும் நயாவஞ்சக புத்தி இது..   18:18:13 IST
Rate this:
7 members
0 members
3 members
Share this Comment

ஏப்ரல்
14
2014
அரசியல் அ.தி.மு.க.,வை ஜெ., சிதைக்கிறார் கருணாநிதி கவலை
அண்ணா உருவாக்கிய தி.மு.க.வை கருணா சிதைத்தார்... எம்.ஜி.ஆர்., நெடுஞ்செழியன் , வை.கோ போன்றோரை கட்சியை விட்டு வெளியாக்கி இவருக்கே ஆப்பு வைக்கும் அளவுக்கு நடந்து கொண்டார்.. இப்போது இவரால் கட்டிக்காக்கப்படும் தளபதியின் தயவால் தி.மு.க.வை சிதைத்துக்கொண்டிருக்கிறார்.. வாரிசுகள் உருவாக உருவாக குடும்பத்தில் சொத்து பிரச்னை ஏற்ப்படுவது சகஜம் தான்..தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது ... குடும்ப உறுப்பினர்களை தவிர..எம்.ஜி ஆரால் உருவாகாப்பட்ட அ.தி.மு.க. தனித்தலைவரின் கட்டுப்பாட்டில் உள்ள கட்சி. வாரிசுகளின் ஆதிக்கம் இல்லை.   08:35:29 IST
Rate this:
2 members
0 members
27 members
Share this Comment

ஏப்ரல்
14
2014
அரசியல் கருணாநிதி அரவணைக்கும் காலம் வரும் அழகிரி ஆறுதல்
அஞ்சா நெஞ்சர் நோஞ்சான் நெஞ்சராக மாறிவிட்டார்... இவர் தான் அனைத்தையும் இழந்து நிற்கிறார் என்றால் இவரை நம்பி இருக்கும் தொண்டர்களையும் அம்போ என விடப்போவதை நினைத்து தான் பரிதாபமாக இருக்கிறது..   08:26:43 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
13
2014
அரசியல் தனி பெரும்பான்மையுடன் காங்., கட்சி வெற்றி பெறும் வாசன் நம்பிக்கை
இன்னுமா நம்புறீங்க? நம்பிக்கை வேண்டியதுதான். ஆனால் அதல பாதாளத்திற்குள் விழுந்த பின்னரும் தூக்கி விட கூட்டணி கட்சிகள் இல்லாத போதும் இந்த நம்பிக்கை வீண் தான்...   08:22:03 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

ஏப்ரல்
13
2014
சினிமா பா.ஜ., வில் எந்த பொறுப்பு கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வேன் : அத்வானி திட்டவட்டம்
பரிதாபத்துக்குரிய ஒரு தலைவர்... தகுதியுள்ள ஒரு பிரதமர் வேட்பாளர்.. சுற்றி இருக்கிறவர்கள் இவரின் தலையில் மிளகாயை அரைத்து இவரை பகடைக்காய் ஆக்கி விட்டார்கள். பிரதமர் கனவை காலம் காலமாய் கண்டுகொண்டு இருப்பவர்.. வாஜ்பாயை தவிர யாரிடம் தலைவணங்காத நல்ல நண்பர்..இப்போது தன்னை இழந்து ஒரு சாதாரண வேட்பாளராக களம் இறங்குகிறார்...   14:03:26 IST
Rate this:
27 members
3 members
23 members
Share this Comment

ஏப்ரல்
13
2014
அரசியல் மோடியுடன் ரஜினி இன்று சென்னையில் சந்திப்பு ஆதரவு அதிகரிப்பால் பா.ஜ., கூட்டணி உற்சாகம்
மோடி அலை என்பது இந்தியாவில் மற்ற மாநிலங்களில் வேண்டுமானால் இருக்கலாம்..ஆனால் தமிழகத்தில் அலைகள் எல்லாம் திரை உலகத்தை சார்ந்து தான். அரசியல் கட்சி தலைவர்களுக்காக உயிரையும் கொடுக்க துணியாத அப்பாவி மக்கள் தனது மனக்கவர்ந்த நடிகர் / நடிகையர்களுக்காக கோவில் கட்டுவதும், தீக்குளிப்பதும், உயிரை விடுவதும் தமிழகத்தில் சகஜம். இந்த பலவீனத்தை பயன் படுத்தி தான் திரை உலக பிரபலங்கள் அரசியல் புகழ் அடைந்தனர், ஆட்சியையும் ஒரு சிலர் கைப்பற்றினர். ரஜினிகாந்த் இன்றும் ஒரு மாஸ் ஹீரோ..ஆனால் இதுவரை வெளிப்படையாக எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் ஆதரவு தெரிவித்தது இல்லை. இனியும் தெரிவிக்க மாட்டார்.. அப்படி தெரிவித்தால் வர இருக்கும் கோச்சடையான் வசூல் அரசியல் படமாக மாறி ஒரு கட்சி சார்ந்த வசூலை மட்டுமே எதிர்பார்க்க முடியும். திரைப்படமும், திரை உலகமும் கட்சி சார்ந்து இல்லை. பொது ஜனமக்களை, ரசிகனை சார்ந்தே இருக்கிறது..ரஜினியின் வாய்ஸ் இப்போதைக்கு மவுனம் மட்டுமே...சந்திப்பு... மரியாதை நிமித்தம்.... ஆதரவு... ஓட்டளித்த பின்னர் தெரிவிப்பார்...   06:27:21 IST
Rate this:
24 members
0 members
54 members
Share this Comment

ஏப்ரல்
12
2014
அரசியல் தமிழகத்தில் நிலவும் மின்வெட்டுக்கு சதியாம் அதிருப்தியை சமாளிக்க ஜெ., புது குண்டு
ஓடிக்கொண்டிருந்த மின் உற்பத்தி நிலையங்களில் சரியான பராமரிப்பு இல்லை..அவ்வப்பொழுது பழுது ஏன்? சட்டசபை தேர்தலின் போது இதற்க்கு முன் ஆட்சியில் இருந்த தி.மு.க.வை குறை கூறியே பதவிக்கு வந்ததும், ஆட்சி ஏற்று மூன்றே மாதத்தில் மின் பற்றாக்குறையை தீர்ப்போம் என்று சொல்லியே ஆட்சியை பிடித்தீர்கள். ஆனால் இதுவரை எந்த மாற்றமும் இல்லை. மின்வெட்டின் நேரம் கூடிக்கொண்டிருக்கிறதே தவிர குறைந்த பாடும் இல்லை. தன்னிறைவு அடைந்த பாடும் இல்லை. மத்திய அரசாங்கத்தையும் இதற்க்கு முன் ஆட்சியில் இருந்தவர்களையும் தான் இது நாள் வரை குறை கூறி வருகிறார் தமிழக முதல்வர்..தி.மு.க.ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட சில திட்டங்களையும் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக திட்டங்கள் துரித கதியில் நடைபெற வழி செய்ய நடவடிக்கை எடுக்க வில்லை.. இனியும் காலம் தாழ்த்தாது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மக்கள் மாற்று கட்சிக்கு வோட்டளிப்பதை தவிர வேறு வழி இல்லை.   08:05:04 IST
Rate this:
0 members
0 members
38 members
Share this Comment