E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
முருகவேல் சண்முகம்.. : கருத்துக்கள் ( 2759 )
முருகவேல் சண்முகம்..
Advertisement
Advertisement
அக்டோபர்
31
2014
அரசியல் தேவேந்திர பட்நாவிஸ் பயணம் கவுன்சிலர் முதல் முதல்வர் வரை
தேவேந்திர பட்நாவிஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.   16:56:04 IST
Rate this:
0 members
0 members
23 members
Share this Comment

அக்டோபர்
31
2014
அரசியல் மகா., முதல்வர் பதவியேற்பு விழா பிரதமர்- உத்தவ் பங்கேற்கின்றனர்
பட்நாவிஸ் அவர்களுக்கு மிகபெரிய சவால் காத்திருக்கிறது. மாநில கடன் இந்தியாவிலேயே அதிக அளவாக கிட்டத்தட்ட 4 கொடிகள் அளவுக்கு உள்ளது, அதை சமாளிக்க வேண்டும், சட்டம் ஒழுங்கை மேலும் சிறப்பாக மெருகேற்றவேண்டும், காவல் துறையை நவீன படுத்த வேண்டும்... மெஜாரிட்டி இல்லாத காரணத்தால் விளையும் சாவல்களை சட்டமன்றத்திலும், வெளியிலும் சமாளிக்க வேண்டும் , இந்த இளைஞர் எல்லாவற்றையும் சமாளித்து சாதனை படைக்கட்டும்.   16:00:13 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

அக்டோபர்
31
2014
அரசியல் மகா., முதல்வர் பதவியேற்பு விழா பிரதமர்- உத்தவ் பங்கேற்கின்றனர்
///மகா., முதல்வர் பதவியேற்பு விழா//மாகாவின் இளைய முதல்வருக்கு வாழ்த்துக்கள், தங்கள் தலைமையில் மராட்டியம், மேலும் வளர்ச்சியடையவும், மக்கள் சுபிக்ஷதொடு, இனிதே வாழ வாழ்த்துக்கள்.   15:57:19 IST
Rate this:
0 members
1 members
10 members
Share this Comment

அக்டோபர்
31
2014
அரசியல் இந்திரா நினைவுநாள் அனுஷ்டிப்பு காங்., இதுவரை சாதித்தது என்ன ?
///ஆரூர் ரங் - சென்னை ///அருமை, வரலாறு முக்கியம் என்பதை அருமையாக எடுத்துரைத்தீர்கள் தலைவரே அதை போல இன்றைய செய்தி நாளைய வரலாறு என்பதையும் தாங்கள் மறந்து விடகூடாது தலைவரே? நீங்கள் சொன்ன எல்லா உதரனகளுக்கும், ஆளை மாற்றி இடத்தை மாற்றி இங்கே மோடி அவர்களையும் உதாரணம் காட்டமுடியும். 1) மூத்த தலைவர்களை புறக்கணித்ததில் இந்திராவுக்கும் மோடிக்கும் என்ன வேறுபாடு, இவர் அத்வானி, முரளிமனோகர் ஜோஷி என்றும், 2) நீதிபதி விசயத்தில் முன்பிருந்த நீதிபதியுடன் மோதல் போக்கை கடைபிடித்த மோடி "தத்து " விசயத்தில் உடனடியாக அனுமதித்தார் வேண்டியபட்டவர் என்ற கருத்தும் உள்ளது.3) மேலும் உச்ச நீதிமன்ற நீதிபதி விசயத்தில் 2 G வழக்கில் ஆஜரானார் என்று சொல்லி தகுதி இல்லை என்றவர்கள், அமிட்ஷா வழக்கில் ஆஜரான வழக்கரிங்கருக்கு அந்த பதவி தரப்பட்டது.4) காங் கட்சிக்கு அம்பானி என்றால், மோடிக்கு அடானி...5) மேலும் குஜராத் கலவரத்தை தூண்டி ஆயிரக்கணக்கில் மக்கள் கொள்ளபடுவதர்க்கும், அதை வேடிக்கை பார்த்ததும் என்று இவர் மீது பல குற்றச்சாட்டுக்கள் உள்ளது, இவரின் இந்த ஆட்சியின் முடிவில் பாருங்கள் தலைவர் இந்திராகாந்தியை தாண்டி சாதனை படைப்பார்... பொறுத்திருங்கள் உங்களுக்கு தெரியும்...   15:52:13 IST
Rate this:
11 members
0 members
8 members
Share this Comment

அக்டோபர்
31
2014
அரசியல் தனி ஆவர்த்தனம் வாசிக்கும் ப.சிதம்பரம் விலகல் ஏன் என ஞானதேசிகள் விளக்கம்
கட்சி இந்த சோனியா மற்றும் ராகுலின் கையில் இருந்து, அதாவது so called காந்தி குடும்பத்திலிருந்து மாறுவதே நலம். ஆனால் இது சுதந்திரத்திற்கு பின்னர் அந்த வாய்ப்பு வரவே இல்லை. இடையில் நரசிம்ம ராவ், அதற்கான வேலைகளை செய்தார். ஐந்தாண்டு காலம் தனது கட்டுபாட்டுக்குள் வைத்திருந்தார். ஆனால் பின்னர் அது வழக்கம் போல் கை மாறி போனது. மீண்டும் அந்த காலம் வருவதற்கோ, மாற்று தலைகள் வேறு இடத்தில இருந்து வருவதற்கோ இப்போதைக்கு வாய்ப்பில்லை. அது காங் கட்சிக்கு மட்டுமல்ல, நாட்டிற்கும் கூட நல்லதில்லை, அதாவது மாற்று கட்சியோ அல்லது அணியோ இல்லாத பட்சத்தில் நாடும், ஆட்சியாளர்களும் சர்வாதிகார பாதையிலேயே செல்வார்கள்.   13:10:04 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

அக்டோபர்
31
2014
அரசியல் இந்திரா நினைவுநாள் அனுஷ்டிப்பு காங்., இதுவரை சாதித்தது என்ன ?
///ஆரூர் ரங் - சென்னை, தைரியம் மிகுந்த பெண்மணி என்றாலும் இந்திராவே ஒரு (1% கூட) ஜனநாயகவாதி இல்லை எதிர்கட்சிகளே இருக்கக் கூடாது என நினைத்தார் /அந்த பாதையில் தான் திருவாளர் மோடியும் பயணிக்க ஆரம்பித்திருக்கிறார், தனது ஆட்சிகாலமுடிவில் எப்படியும் இந்திராவை தாண்டிவிடுவார், தல பாருங்கள்.. இவரின் செர்யல்பாடுகள் சர்வாதிகாரத்தை தான் நினைவுபடுத்துகின்றன.   12:57:44 IST
Rate this:
13 members
0 members
11 members
Share this Comment

அக்டோபர்
31
2014
அரசியல் தனி ஆவர்த்தனம் வாசிக்கும் ப.சிதம்பரம் விலகல் ஏன் என ஞானதேசிகள் விளக்கம்
வெறும் சோனியா, ராகுல் என்று மட்டும் என்று சொன்னால் எப்படி மாநிலத்தில் கட்சியை வளர்ப்பார்கள். அந்தந்த மாநிலத்தில் உள்ள, இருந்த தலைவர்களையும் நினைத்து, அவர்கள் பெயரையும் சொன்னால்தானே, கட்சி வளரும். இதுதான் இந்த கட்சியின் அஸ்தமனத்திற்கு காரணம். இனியும் நான் திருந்த மாட்டேன், இப்படிதான் இருப்பேன் என்றால் இனிமேலும் கட்சிக்கு விடிவில்லை.ஏற்கனவே ராகுலுக்கு எங்கேயும் மதிப்பில்லை, தேர்தல் பிரச்சாரத்திற்கு இவர் செல்லவில்லை என்றால், கட்சி தோல்வியுறும் என்றும், சென்றால் மாபெரும் தோல்வியுறும் என்று கிண்டல் செய்யுமளவுக்கு உள்ளது இவரது செயல்பாடு,இந்த லட்சணத்தில், மேலும் இப்படி லோக்கல் தலைகளை வளரவிடாமல் செய்வது மேலும் ஆழ புதைகுழியில் தான் தள்ளும்.   12:54:41 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

அக்டோபர்
31
2014
அரசியல் தனி ஆவர்த்தனம் வாசிக்கும் ப.சிதம்பரம் விலகல் ஏன் என ஞானதேசிகள் விளக்கம்
ஆகா மூப்பனார் அணி என்று , வாசன் தனி கச்சேரியை ஆரம்பிக்க இருக்கிறாரா? தனி ஆவர்தனம் சரிப்படுமா? மூப்பனாரின் மறைவுக்கு பின் தனி ஆவர்தனம் சரிபடாது என்றுதானே, இவர் மீண்டும் காங் அணியில் இணைந்தார், பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.   12:50:09 IST
Rate this:
1 members
1 members
3 members
Share this Comment

அக்டோபர்
31
2014
அரசியல் தனி ஆவர்த்தனம் வாசிக்கும் ப.சிதம்பரம் விலகல் ஏன் என ஞானதேசிகள் விளக்கம்
இவர் சொல்வதில் பெரும்பாலும் நியாயமுள்ளது, காமராஜர் பேரினை போடுவதும் நியாயமே. ஆனால் மூப்பனார் படம் என்று வரும்போது சிக்கல்கள் வரத்தான் செய்யும். இங்கே பல காலமாக, பலவிதமான குரூப்கள் இருக்கின்றன. அது காமராஜர் காலமாக இருந்தாலும் சரி, மூப்பனார் காலமாக இருந்தாலும் சரி, ஆனால் மூப்பனார் காலத்தில்தான் குரூப்கள் வெளிப்படையாக இயங்க ஆரம்பித்தன. அதேபோல் கட்சியை வளர்ப்பதை விட தனது ஆதரவு குரூப்களை வளர்க்கவே பலரும் நினைத்தனர். இன்றைக்கு காங் கட்சியில் இருக்கும் பெரிய குரூப் என்றால் அது வாசன் ( கிட்டத்தட்ட 60% ) சிதம்பரம் ( 10 முதல் 15%, பெரும்பாலும் தலைகள் மட்டுமே ). அதுவும் தவிர இந்த சிதம்பரம் குரூப் என்பதே மூப்பனார் குரூப்பின் ஒரு பிரிவுதான். 2001 மூப்பனார், கருணாவின் பிஜேபி கூட்டணியை எதிர்த்து, ஜெயாவுடன் சேர்ந்ததை கண்டித்து சிதம்பரம், தனியாக பிரிந்து, இரு இடங்களில் திமுக கூட்டணியில் நின்றார் வென்றார். அங்கே ஆரம்பித்தது இந்த தனி அணி. இன்றைக்கும் இவர் அணியில் இருக்கும் பெரும்பாலோர் முன்னாள் மூப்பனார் அணியினரே.   12:47:58 IST
Rate this:
1 members
0 members
25 members
Share this Comment

அக்டோபர்
30
2014
அரசியல் பா.ஜ., ஆட்சி மகாராஷ்டிராவில் இன்று புது அரசு பதவி ஏற்பு
உத்தவ் தாக்கரேவை , பிஜேபி மற்றும் பிரதமரை விமர்சித்தமைக்காக. திரு "தல"மோடி மற்றும் அவரின் "தளபதி "அமிட்ஷாவிடம் மன்னிப்பு கோரசொன்னதாகவும், அப்போது தான் சிவா சேனாவை கூட்டணியில் சேர்ப்பது குறித்து பேசமுடியும் என்று செனாவிடம் பிஜேபி தலைவர் சொல்லிவிட்டதாக செய்திகள் தெரிவித்தன. இந்த செய்கை இன்றைய காலத்திற்கு வேண்டுமானால் சரியாகவும், சௌகர்யமாகவும் இருக்கலாம், ஆனால் நீண்டகால அடிப்படையில் இது சரிவராது, குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை, சேனா பிஜேபி கூட்டணி எனபது அடிப்படையில் வலுவானது, கொள்கைரீதியாகவும் சரியானதே. ஆனால் அடுத்துவரும் தேர்தல்களில் பிஜேபி இந்த அளவுக்கு வெற்றிபெறும் என்பதெல்லாம் நிச்சயமில்லை.மோடி அலை ஓய்ந்து போனால் மீண்டும் இந்த கூட்டணியைத்தான் தேடவேண்டி இருக்கும்,அப்போது அவர்கள் இதே மன்னிப்பை இவர்களிண்டம் கோரினால் என்னவாகும், அரசியலி நிரந்தர எதிரியோ நண்பனோ கிடையாது...பவாரை மோசம் போகாமலோ அல்லது ஊழல் புதைகுழியில் சிக்காமலோ இருந்தால் சரி...   12:12:07 IST
Rate this:
9 members
0 members
7 members
Share this Comment