Advertisement
தினமலர் முதல் பக்கம் » MOHAMED GANI அவரது கருத்துக்கள்
MOHAMED GANI : கருத்துக்கள் ( 142 )
MOHAMED GANI
Advertisement
மே
22
2013
அரசியல் தேர்தல் தேதி அறிவித்த பின் கூட்டணி பற்றி தி.மு.க., முடிவு ஸ்டாலின்
இருந்த காங்கிரஸ் கூட்டணியையும் அவசரப்பட்டு முறித்துவிட்டு இன்று கூட்டணிக்காக யாரைப் பார்ப்பது என்ற நிலைக்கு தி.மு.கவைத் தள்ளியுள்ளார் ஸ்டாலின். சட்டசபையில் தி.மு.க வின் குரலை ஓங்கி ஒலிக்கவேண்டிய இவர் ஊர் ஊராகச் சென்று புலம்புவது வேடிக்கையாக உள்ளது. கட்சியில் தன்னை முன்னிலைப்படுத்தவதிலேயே ஸ்டாலின் குறியாக இருப்பதுபோலத் தெரிகிறது. முதலில் சட்டசபையிலும், மக்கள் மன்றத்திலும் தி.மு.கவிக் கொண்டு செல்வதில் முனைப்பு காட்டவேண்டும்.   15:38:07 IST
Rate this:
4 members
1 members
13 members
Share this Comment

மே
8
2013
பொது வறட்சி நிவாரண பார்வையாளர் குழு கண்துடைப்பா? விவசாயிகள் குமுறல்
ஏற்கனவே மாநில அரசு சார்பில் சென்ற அமைச்சர்கள் குழுவும் கண்துடைப்பாக ஆங்காங்கே பார்வையிட்டு வந்ததோடு, என்ன பரிந்துரைகளை அளித்தது என்பதே தெரியாமல், தமிழக முதல்வர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கென இழப்பீட்டுத் தொகையை அறிவித்தார். ஆனால் அறிவிக்கப்பட்டபடி இழப்பீட்டுத் தொகையும் சரியான முறையில் வழங்கப்படவில்லை என்ற குமுறல் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மத்தியில் உள்ள நிலையில் மத்திய அரசின் குழுவும் கண்துடைப்பாக வந்து சென்றால், வறட்சி பாதிப்பினால் துவண்டு கிடக்கும் விவசாயிகளை யார் காப்பாற்றுவது???   13:42:27 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
13
2013
அரசியல் வாடா... போடா... எல்லாம் அகம்பாவம் பேசக்கூடாதுகருணாநிதி
இதுமாதிரி அறிவுரைகளையும், கண்டிப்புகளையும் கூறி தி.மு.க தொண்டர் அனைவரிடமும் பழகுவதால்தான் இன்றுவரை தி.மு.கவின் அசைக்கமுடியாத தலைவராக கருணாநிதி உள்ளார். அதுமட்டுமல்ல, ஆட்சியிலிருந்தாலும், இல்லாவிட்டாலும் தி.மு.க வை ஒரு கட்டுக்கோப்பான இயக்கமாக வளர்த்துகொண்டும் உள்ளார். எவ்வளவோ பேர் தி.மு.க வை அழிக்கவேண்டும் என்று முயற்சி செய்தாலும், அந்த முயற்சியில் அவர்கள் தோல்வியடைந்து, இன்றும் தி.மு.க தான் தொண்டர் பலம் உள்ள மக்கள் இயக்கமாக உள்ளது என்றால் அதற்குக் காரனமே கருணாநிதியின் அணுகுமுறை தான்.   13:37:08 IST
Rate this:
68 members
0 members
10 members
Share this Comment

மே
3
2013
அரசியல் கனிமொழிக்கு தொடர்பில்லை கலைஞர் "டிவி நிர்வாகி சாட்சியம்
சம்பந்தமில்லாத ஒரு வழக்கில் கனிமொழி சிக்கவைக்கப்பட்டார் என்பதுதான் உண்மை. சிக்கவைத்தது யார், யாருக்காக சிக்கவைக்கப்பட்டார் என்பது விரைவில் வெளிச்சத்துக்கு வரும்.    10:54:04 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

மே
3
2013
அரசியல் கனிமொழிக்கு தொடர்பில்லை கலைஞர் "டிவி நிர்வாகி சாட்சியம்
2007-ம் ஆண்டு ஜூன் மாதம் கலைஞர் டிவி தொடங்கப்பட்டது. நிறுவனத்தில் இயக்குநர் பொறுப்பேற்ற 20 நாள்களிலேயே கனிமொழி பதவியை ராஜிநாமா செய்துவிட்டார். அதன் பிறகு நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு கூட்டத்தில் கனிமொழி பங்கேற்கவில்லை. அவர் பதவி விலகிய 18 மாதங்களுக்கு ( 2008-ஆம் ஆண்டு டிசம்பர்) பிறகுதான் சினியூக் நிறுவனத்தில் இருந்து கலைஞர் டிவி கடனுதவி பெற்றது. இந்த நிலையில் கலைஞர் டிவி யின் வர்த்தக நடவடிக்கைகளில் கனிமொழியை எப்படி சம்பந்தப்படுத்த முடியும்? ஆனாலும் சி.பி.ஐ இதில் உள்நோக்கத்தோடு செயல்பட்டது என்பது இன்று தெளிவாகியுள்ளது.   14:19:03 IST
Rate this:
58 members
0 members
9 members
Share this Comment

ஏப்ரல்
22
2013
அரசியல் ஜே.பி.சி., அறிக்கையில் அதிருப்தி: சாக்கோவை நீக்குங்கள் தி.மு.க., தனது வேலையை துவக்கியது
சாக்கோ தலைவரானதிலிருந்தே அவர் ஒருத‌ைலை பட்சமாகதான் நடந்துகொண்டு வருகிறார். ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் ராஜா தன் தரப்பு கருத்தை சொல்வதற்கு ஜே.பி.சி வாய்ப்பு அளித்து இருக்கலாம். ஆனால், வேண்டுமென்றே, புறக்கணித்துள்ளனர். ராஜாவை அழைக்க, குழுவின் தலைவரான சாக்கோ விரும்பவில்லை. இது தொடர்பாக குழு உறுப்பினர்களை கூட்டி விவாதிக்கவில்லை.இதன் மூலம், உண்மையை மூடிமறைக்க முயற்சி நடந்தது தெள்ளத் தெளிவாகிறது.   12:12:07 IST
Rate this:
1 members
0 members
11 members
Share this Comment

ஏப்ரல்
20
2013
அரசியல் 2ஜி விவகாரத்தில் பிரதமரின் ஆலோசனை படியே எல்லாம் நடந்தது:போட்டு உடைக்கிறார் ராஜா
2ஜி விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தெரிந்தே அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாகவும், அவரின் ஆலோசனைபடியே அனைத்தும் நடந்ததாகவும் முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ராஜா தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து பிரதமர் உரிய விளக்கத்தை அளிக்கவேண்டும். அதேபோல நிதியமைச்சரும் விளக்கம் அளிக்கவேண்டும். ஜே.பி.சி. முன் ஆஜாகி விளக்கம் அளிக்க ராஜாவிற்கு வாய்ப்பு அளிக்கப்படாததும், பிரதமர் இதுகுறித்து விளக்கம் அளிக்க முன்வராததும், ஜே.பி.சி யின் அறிக்கை ஒருதலைபட்சமானதாக அமைந்துள்ளதையே காட்டுகிறது.   12:38:40 IST
Rate this:
0 members
0 members
40 members
Share this Comment

ஏப்ரல்
18
2013
அரசியல் சபைக்கு வராமல் அறைக்குள் இருந்த ஸ்டாலின்
கடந்த காலங்களில் ஒன்றிரண்டு சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த போதும், பரிதி இளம்வழுதி போன்றவர்கள், தனி ஆளாக நின்று சட்டசபையில் தி.மு.கவின் குரலை ஓங்கி ஒலித்திருக்கிறார்கள். மு.க.ஸ்டாலின் சிறந்த பேச்சாளர், வாத திறமையாளர் என்றால் சட்டசபைக்குச் சென்று பேசி அல்லவா இருக்க வேண்டும். அது இவருக்கு சுத்தமா வராது. துரைமுருகன் பேசுகின்ற பேச்சில் இவருக்கு பாதிகூட கிடையாது. அதனால் தான் அவரை துணைக்கு வைத்து இருக்கின்றார். ஸ்டாலின் தன்னுடைய திறமையை வளர்த்துக்கொண்டு சட்டசபையிலும் செயல்படவேண்டும். அப்போதுதான் எதிர்காலத் தலைவராக உருவாகமுடியும்.   12:22:28 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
14
2013
அரசியல் அழகிரியை ஸ்டாலின் புறக்கணித்தது ஏன்? ஸ்டாலின் மீது கருணாநிதி வருத்தம்
ஸ்டாலின், அழகிரி சகோதரர்கள் இருவரும் செய்யும் பரபரப்பு, மோதல் அரசியலால் தி.மு.க விற்குதான் அவப்பெயர் ஏற்படுகிறது. ஆனால், கனிமொழியுடைய பேட்டி, அறிக்கை எல்லாமே கட்சிக் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு நிதானமாகவே உள்ளது. திண்டிவனத்தில் நடைபெறவிருந்த பொதுக்கூட்டத்தை பொன்முடியின் தலையீட்டால் பிரச்சினை ஏற்பட்டபோது, தான் விட்டுக்கொடுத்து, அக்கூட்டத்திற்கு செல்லாமல் ரத்து செய்தார் கனிமொழி. கலைஞர் டி,வி விவகாரத்திலும் கட்சியின் நலனுக்காக தான் சிறை சென்று வந்தாலும் அமைதியாக தன் பணியைக் கவனிக்கிறார் கனிமொழி. பாராளுமன்றத்திலும் அவருடைய செயல்பாடு நல்லபடியாக அமைந்துள்ளது. கனிமொழியை சரியான வகையில் பயன்படுத்திக் கொண்டால், தி.மு.க எதிர்கால வளர்ச்சிக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். அடுத்த தலைவராக வழிமொழியப்படும் ஸ்டாலின் தன்னுடைய தந்தையின் வழியில் கட்சியில் எல்லோரையும் அனுசரித்து நடந்தால் எந்தப் பிரச்சினைக்கும் இடமில்லை.   10:24:10 IST
Rate this:
79 members
2 members
86 members
Share this Comment

ஏப்ரல்
11
2013
பொது நெல்லையில் 7 அமைச்சர்கள் 2 மணி நேரத்தில் வறட்சி ஆய்வு
பெயரளவிற்குத்தான் அமைச்சர்கள் குழுவின் விசிட் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைந்துள்ளது. ஏற்கனவே வறட்சியால் பாதிக்கப்பட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில், தமிழக அரசு அறிவித்தபடி எந்த நிவாரணமும் ஒழுங்காக வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்துகொண்டே இருக்கும் நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் செல்லும் அமைச்சர்கள் குழு சும்மா பெயரளவில் மட்டும் ஆய்வு நடத்தியதாகக் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். நெல்லை மாவட்டத்தில் எடுத்துக்கொண்டால், தாமிரபரணி பாசனப் பகுதிகள்தான் மிகவும் முக்கியமான பகுதியாகும். அங்கு செல்லாமல் இக்குழு சென்றதே அமைச்சர்கள் குழுவின் அலட்சியத்திற்கு மிகச்சிறந்த உதாரணம்.   11:47:50 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment